ஐக்கிய அரபு எமிரேட்கள்: இளைஞர்கள் ஒரு புதிதாக உருவெடுக்கும் தோட்டத்தின் மூலம் சமூக உணர்வைப் பேணுகின்றனர்


அஜ்மான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஒரு தன்மைமாற்றும் அண்டைப்புற முயற்சி அஜ்மானில் வேரூன்றி வருகிறது. பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் பங்கேற்று வருவதால் உத்வேகம் பெற்ற ஒரு இளைஞர் குழுவினர், ஒரு காலத்தில் பயன்படுத்தப்படாத ஒரு நிலத்தை ஒரு செழிப்பான சமூகத் தோட்டமாக மாற்றியுள்ளனர்.

“இந்தத் திட்டம் நமது சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதற்கான ஒரு முயற்சியை விட மேலானது — இது சமூக சேவை மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு துடிப்பான வெளிப்பாடு” என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சனா ரெய்ஹானி கூறினார்.

சமுதாய தன்மைமாற்றம் குறித்த பஹாய் போதனைகளை தங்கள் அண்டைப்புறத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்ட இந்த இளைஞர்கள், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குடியிருப்பாளர்களிடையே சமூக உணர்வு மற்றும் உடனுழைப்பின் ஆழமான உணர்வைப் பேணி வளர்க்கும் அதே வேளையில், தங்கள் பௌதீகச் சுற்றுப்புறங்களை மேம்படுத்துகின்றனர்.

அண்டைப்புற குடியிருப்பாளர்கள் தோட்டத் திட்டத்தில் ஒன்றாகப் பணிபுரிகின்றனர்.

கூட்டு நனவுணர்வு மற்றும் கடப்பாட்டைப் பேணி வளர்ப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுவதன் மூலம் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கினர். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் மேற்பார்வை மற்றும் தோட்டத்தின் நன்மைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் இணைய தளங்களைப் பயன்படுத்தினர், மற்றும் அனைத்து அண்டைப்புற குடியிருப்பாளர்களையும் இந்த முயற்சியில் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

பதில் உற்சாகமூட்டுவதாக இருந்தது. சேவை செய்வதில் அந்த இளைஞரின் அர்ப்பணிப்பைக் கண்டு அக்கம்பக்கத்தார் உந்தப்பட்டு, தங்கள் ஆதரவை வழங்க முன்வந்தனர். அவர்களுள் ஓர் அனுபவமிக்க விவசாயி தாமும் பங்களிக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்: “எங்கள் சுற்றுப்புறம் செழிப்புற அவர்களுக்கு அதரவளித்து பயனுள்ள விவசாய நடைமுறைகளை கற்பிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.”

குழுவினரின் வழிநடத்துனரான அய்மான் ரோஹானியான், திட்டத்தின் விரிவான தாக்கங்களைப் பற்றி பிரதிபலித்தார்: “இந்த முயற்சி எங்கள் உள்ளூர் சூழலின் அம்சங்களை புத்துயிர்பெறச் செய்துள்ளது மற்றும் சமூக உறுப்பினர்களிடையே உடனுழைப்பதற்கும் தங்கள் சொந்த குடும்பங்களுக்கு அப்பால் தங்கள் அக்கறையை விரிவுபடுத்துவதற்குமான கடமை உணர்வை ஊக்குவித்துள்ளது.”

இந்த திட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மிதமான முயற்சிகளிலிருந்து புதிய பரஸ்பரமான வடிவமுறைகள் எவ்வாறு உருவாக முடியும் என்பதைக் கண்டறிந்தனர். “நம்முடைய சிறிய முயற்சிகள் கூட சமூகத்திற்குள் ஒற்றுமையையும் சேவை மனப்பான்மையையும் வளர்க்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என ஓர் இளைஞர் குறிப்பிட்டார். மற்றொருவர், “பூக்களை நடவு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் இது எங்கள் அண்டைப்புறத்திலும் மகிழ்ச்சியை விதைக்கிறது.”

இளைஞர்கள் தலைமையிலான சமூகத் தோட்டத் திட்டம் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களைக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் ஆழமான முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் சனா ரெய்ஹானி, “தனிநபரின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சியுடன் எவ்வாறு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த முயற்சி அழகாக நிரூபிக்கின்றது, நம் சமூகத்தின் நலனுக்குப் பங்களிப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது.”

தோட்டம் ஒரு சமூக இடவெளியாக உருவாகியுள்ளது, இது அண்டைப்புறங்களிடையே அமைதியான தொடர்புகளைப் பேணி வளர்க்கிறது, அவர்கள் ஒன்றாகப் பேணி வளர்த்த பசுமையை கவனித்துக்கொள்ளவும் அனுபவிக்கவும் ஒன்றிணைகிறார்கள்.

அவர்கள் பணியின் பரந்த தாக்கத்தை உணர்ந்து, ஓர் இளைஞர் குறிப்பிட்டார், “நான் எனது அண்டைப்புறத்திற்கு மட்டுமல்ல, எனது நாட்டிற்கும் பங்களிக்கும் ஓர் இளம் விவசாயி என உணர்கிறேன்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1730/

ஐக்கிய அரசு: மறுசீரமைப்புத் திட்டம் அப்துல்-பஹாவின் அமைதிச் செய்தியின் நீடித்த தாக்கத்திற்கு மரியாதை செலுத்துகிறது


2 மே 2024

பிரிஸ்டல், யுனைடெட் கிங்டம் – ஐக்கிய இராஜ்யத்தின் பஹாய்கள் பிரிஸ்டலில் உள்ள 17 ராயல் யார்க் கிரசன்ட்டில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மறுசீரமைப்பை சமீபத்தில் நிறைவு செய்தனர், அங்கு ‘அப்துல்-பஹா தங்கி தமது பொது உரைகளை 1911-ஆம் ஆண்டிலும் மீண்டும் 1913-ஆம் ஆண்டிலும் மேற்கத்திய நாடுகளுக்கான அவரது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணத்தின் போதும் வழங்கினார்.

ஐக்கிய அரசின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர்கள், கட்டிடக்கலை குழு மற்றும் அழைக்கப்பட்ட பிற விருந்தினர்களுடன், அடுக்குமாடிகூடத்தை அர்ப்பணிக்க ஒன்றுகூடினர். இவ்விடம் இப்போது வருகையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

தேசிய சபை உறுப்பினரான பேட்ரிக் ஓ’மாரா தமது வரவேற்புக் குறிப்புகளில், பஹாவுல்லாவின் போதனைகளை அப்துல் பஹா எவ்வாறு பல சமகாலப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தினார் என்பதை எடுத்துரைத்தார். “அவர்களின் வகுப்பு, இனம் அல்லது மதம் எதுவாக இருப்பினும், அப்துல்-பஹா தமது பாதையில் குறுக்கிட்ட அனைவருக்கும் பணிபுரிந்தார். தேவைகள் உடைய அனைவருக்கும் அவர் ஓர் அன்பான தந்தையாகவும், நண்பராகவும், ஒரு விவேகமிக்க ஆலோசகராகவும் அடைக்கலமாகவும் இருந்தார்.

புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட கட்டிடக்கலைக் குழுவை வழிநடத்திய ஜோனதன் லீஸ் கூறியது: “இந்த இடத்தில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. அது பால்கனியில் இருந்தாலும், குறிப்பாக இரண்டு அறைகளில் [‘அப்துல்-பஹா தங்கியிருந்த இடத்தில்] இருந்தாலும், நாங்கள் உண்மையிலேயே விசேஷமான ஏதோ ஒன்றைச் செய்கிறோம் என்னும் உணர்வு எப்போதும் இருந்து வந்தது. வரலாற்றுக்கும் இங்கே என்ன நடந்தது என்பதற்கும் ஒரு மரியாதை இருந்தது, மற்றும்.”

17 ராயல் யார்க் கிரசன்ட்-உடன் ‘அப்துல்-பஹாவின் தொடர்பு

1908-ஆம் ஆண்டில், ஒட்டமான் தலைநகரில் கொந்தளிப்பு இளம் துருக்கிய புரட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது பேரரசின் அனைத்து மத மற்றும் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வழிவகுத்தது. பல தசாப்தங்களான சிறைவாசம் மற்றும் நாடுகடத்தலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ‘அப்துல்-பஹா, புனித பூமியிலிருந்து மூன்று வருட பயணத்தைத் தொடங்கினார், அது ஒற்றுமை மற்றும் அமைதி குறித்த முகாந்தரத்தை ஊக்குவிப்பதற்காக எகிப்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வழியாக அவரை அழைத்துச் சென்றது.

‘அப்துல்-பஹாவின் பயணத்தின் போது பிரிஸ்டல் பல நிறுத்துமிடங்களில் ஒன்றாக இருந்தது. முன்பு எகிப்தில் அவரைச் சந்தித்த ‘அப்துல்-பஹாவின் அபிமானியான வெல்லஸ்லி டியூடோர் போல் இங்குதான் விருந்தோம்பல் செய்தார். 16 மற்றும் 17 ராயல் யார்க் கிரசென்ட் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள சொத்துக்களை டியூடோர் போல் வாங்கியிருந்தார்; இது விருந்தினர் மாளிகையாக திறக்கப்பட்டது. அவர் செப்டம்பர் 1911-இல் இங்கிலாந்து பயணத்தின் போது அந்த விருந்தினர் மாளிகையில் தங்கும்படி அப்துல் பஹாவுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரிஸ்டலில் தங்கியிருந்த போது, ‘அப்துல்-பஹா நவீன சமுதாயத்தின் நிலை குறித்து உரையாற்றினார். அவ்வுரையை அமைதி, பெண்கள் உரிமைகள், இன சமத்துவம், சமூக சீர்திருத்தம் மற்றும் தார்மீக வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கு அவர் அர்ப்பணித்திருந்தார்.

அப்துல்-பஹா அந்த சகாப்தத்தை “பெண்களின் காலம்” என வர்ணித்தார். மேலும், ஆண்களைப் போலவே பெண்களுக்கும், குறிப்பாக கல்வியில் சலுகைகள் மற்றும் வாய்ப்புகளைப் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.

தேசிய சபையின் மற்றோர் உறுப்பினரான ஒலிங்கா தஹ்சிப், ராயல் யார்க் கிரசண்டில் தங்கியிருந்தபோது அப்துல் பஹாவின் ஆழ்ந்த தொடர்புகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். திரு. தஹ்சிப், ‘அப்துல்-பஹா அவ்வீட்டின் ஒவ்வோர் அறையையும் மனிதகுலத்தின் சேவைக்காக அர்ப்பணித்ததை விவரித்தார், அந்த இல்லம் “கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு அமைதி மற்றும் ஓய்வுக்கான மையமாக” செயல்படும் என அப்துல்-பஹா அறிவித்திருந்தார், இது ஒற்றுமை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பிடத்தை அடையாளப்படுத்துகிறது.

ஜனவரி 1913-இல், ‘அப்துல்-பஹா வட அமெரிக்காவிலிருந்து புனித பூமிக்குத் திரும்பும் பயணத்தின் போது மீண்டும் பிரிஸ்டலுக்கு வந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில், விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்த சுமார் 150 பேரிடம் அவர் உரையாற்றினார், உலகளாவிய அமைதியின் அவசியம் மற்றும் இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையின் முக்கியத்துவம் உட்பட பல ஆழமான கருப்பொருள்களை விளக்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓர் உள்ளூர் செய்தித்தாள் பிரிஸ்டல் மக்களுக்கான அவரது செய்தி ஒன்றை வெளியிட்டது. அது, அவர்களுக்கான அவரது அபிலாஷைகளை வெளிப்படுத்தியது: “மனிதகுலம் முழுவதற்கும் அவர்கள் உதவுவார்கள் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் மனிதர்களின் குழந்தைகளிடையே நல்ல உறவை உருவாக்குவதற்கான வழிமுறையாக மாறட்டும்.” மறுசீரமைப்புப் பணி நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அந்த அடுக்குமாடியின் வரலாற்றை விளக்கும் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்களை முன்னிலைப்படுத்தும் அமைதி மற்றும் ஓய்வின் மையம் என்னும் தலைப்பில் தேசிய ஆன்மீக சபை ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளது.

பால்கனி மறுசீரமைப்பு படங்கள்.
அப்துல்-பஹா உரைகள் வழங்கிய அறையின் புதுப்பிப்பு
அப்துல்-பஹாவின் வருகையின் போது இருந்த அடுக்குமாடிகூடத்தின் தோற்றம் முடிந்தவரை அதே போன்று இருப்பதை இந்த மறுசீரமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. அறைகளின் வரலாற்று புகைப்படங்களில் காணக்கூடிய கூறுகளால் தெரிவிக்கப்பட்ட அசல் தரை பலகைகள் மற்றும் ஜன்னல்கள் மீட்டெடுக்கப்பட்டன, மேலும் புதிய சுவர் தாள்கள் மற்றும் தரைவிரிப்புகள் உருவாக்கப்பட்டன.
மீட்டெடுக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஜன்னல்கள், ஷட்டர்கள் மற்றும் கதவுகளின் காட்சி.
இடது: ‘அப்துல்-பஹா தங்கியிருந்த அறையின் மறுசீரமைப்புப் படங்கள். வலது: அவர் அணிந்திருந்த அங்கி, காப்பகக் காட்சிப் பெட்டியில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்படும்.
சிறப்பு கட்டடக்கலை குழு அசல் பிளாஸ்டர் கார்னிஸின் எச்சங்கள் மற்றும் உட்கூறை ரோஜாக்களின் அடையாளங்களைக் கண்டறிந்தது, இப்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது அல்லது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்பு நிகழ்வில் ஐரோப்பாவில் உள்ள கண்ட ஆலோசகர் குழுவின் உறுப்பினரான வர்கா காடெம் பேசுகின்றார்.
அர்ப்பணிப்பு விழாவில் பங்குபெற்ற விருந்தினர்கள்
பிரிஸ்டலில் உள்ள 17 ராயல் யார்க் கிரசன்ட்டில் புதுப்பிக்கப்பட்ட அடுக்குமாடி கூடத்தின் அர்ப்பணிப்பு விழாவில் ஐக்கிய இராஜ்யத்தின் பஹாய் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்கள், கட்டிடக்கலை குழு மற்றும் பிற விருந்தினர்களின் குழு புகைப்படம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1729/

உரையாடலில்: வழிபாடு மற்றும் சேவைக்கு இடையே உள்ள இயக்க ஆற்றல்மிக்க உறவுகளை பாட்காஸ்ட் ஆராய்கிறது


25 ஏப்ரல் 2024

பஹாய் உலக மையம் – பஹாய் உலகச் செய்திச் சேவையின் இந்த போட்காஸ்ட் அத்தியாயம், ஆன்மீக வாழ்வின் இரண்டு அடிப்படை அம்சங்களான, வழிபாடும் மனிதகுலத்திற்கான சேவையும் ஒருவர் மற்றவரை எவ்வாறு பலப்படுத்துகிறது, மேலும் அமைதியான மற்றும் இணக்கமான சமூகங்களை உருவாக்க வழி வகுக்கிறது என்பதை ஆராய்கிறது.

பஹாய் உலக மையத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனையில் பாட்காஸ்ட் விருந்தினர்களும் பங்கேப்பாளர்களாக இருந்தனர். இது, பஹாய் வழிபாட்டு இல்லங்கள் எவ்வாறு ஆர்வநம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக நிற்கின்றன என்பதை ஆராய்ந்து, அனைத்துப் பின்னணியிலிருந்தும் மக்களை அவர்கள் தங்கள் சக குடிமக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என சிந்திப்பதற்கு வரவேற்றனர். .

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விருந்தினரான சாரா க்ரீடி, பிரார்த்தனையின் சக்தியைப் பற்றிப் பேசினார், அது “நம் வாழ்க்கையையும், நம் இதயங்களையும், நமது நோக்கங்களையும் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை” என குறிப்பிட்டார். நமது ஆன்மீக இயல்பின்பால் நாம் நம் கவனத்தைத் திருப்பும்போது, பிறருக்குச் சேவை செய்யவும் உதவவும் வேண்டும் என்னும் உள்ளியல்பான ஏக்கத்தை நமக்குள்ளேயே காண்கிறோம் எனவும், தாராள மனப்பான்மை, அன்பு ஆகிய குணங்கள் இயல்பாகவே நம் இதயங்களிலிருந்து வெளிவருகின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் செய்யும் சேவையைத் ஒரு தனிப்பட்ட விஷயமாக நாங்கள் பார்க்கவில்லை. சேவை நமது காரியங்கள் அனைத்தையும் வரையறுக்கின்றது. இது நாம் ஈடுபடும் அனைத்து விஷயங்களுக்கும் வடிவத்தையும் நோக்கத்தையும் தருகிறது,” என்றார் திருமதி க்ரீடி.

கேமரூனில் உள்ள சில சமூகங்களில், அதிகரித்து வரும் பக்தி மனப்பான்மை எவ்வாறு ஆழ்ந்த கூட்டுத் தன்மைமாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை கேமரூனைச் சேர்ந்த நேத்தலி என்கோ நியெம் விவரித்தார். முழு கிராமமும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும்போது, “600-க்கும் மேற்பட்டோர் அதில் கலந்துகொண்டிருப்பர்.

“அத்தகைய சமூகத்தில் சவால்கள் இருக்கும்போது… இனி நீங்கள் தனியாக இருப்பது போல் இருக்காது… சமூகம் உங்களுடன் ஒன்றாக உள்ளது, இப்போது நீங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசனை செய்யலாம் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம், என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1728/

“மனிதகுலத்திற்கு ஓர் ஆறுதல்”:இந்திய பஹாய்கள் நூற்றாண்டு விழாவை தாமரைக் கோவிலில் கொண்டாடுகின்றனர்.


18 April 2024

புது டில்லி – இந்தியாவின் பஹாய் தேசிய ஆன்மீகச் சபையின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் அரசு அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் ஒன்றுகூடினர்.

பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பெறப்பட்ட செய்தி, கூட்டத்தின் போது வாசிக்கப்பட்டது. அதில், கடந்த நூற்றாண்டில் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் அந்நாட்டின் பஹாய்களின் பங்களிப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

“பாலின சமத்துவம், சர்வலோகக் கல்வி மற்றும் அடித்தட்டு சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம், பஹாய் சமூகமானது சமுதாய முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு நிலையான ஆதரவுக்குரலாக உருவெடுத்துள்ளது” என அந்தச் செய்தி கூறுகிறது.

சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் புது டில்லியில் உள்ள பஹாய் கோயில் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்கை எடுத்துக்காட்டி, அந்த அறிக்கை “உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக தன்மைமாற்றத்தின் சின்னமாக அது உருவெடுத்துள்ளது. தாமரை கோயில் உள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் உள்ளது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

சிறப்பு விருந்தினர்களில் இந்திய அறக்கட்டளையின் தலைவர் ராம் மாதவ், மனிதகுல ஒருமைப்பாடு மற்றும் இந்திய மரபுகளுடனான அதன் ஒத்திசைவு, குறிப்பாக “ஒரே குடும்பமாக வாழ்வது” என்னும் பஹாய் கொள்கையில் தனது தனிப்பட்ட பிரதிபலிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

டாக்டர். மாதவ் மேலும் கூறுகின்றார்: “இதுதான் இந்த மாபெரும் சமயத்தின் மையச் செய்தி என நான் நினைக்கிறேன். வரும் ஆண்டுகளில் இந்தச் செய்தி வெகுதூரம் பரவ வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான நஸ்னீன் ரோவ்ஹானி தமது கருத்துகளில், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் பஹாய் சமயத்தின் ஆரம்பகால வரலாற்றை விவரித்தார் மற்றும் மனிதகுல ஒருமை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், இனம், பாலினம் அல்லது ஜாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த மேன்மை மற்றும் மனித சமுதாயத்தின் ஒழுங்கமைப்பில் நீதியின் பங்கு போன்ற பஹாய் போதனைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்தார்.

சமயத்தை “மனிதகுலத்திற்கான ஆறுதல்” என விவரித்த மகாத்மா காந்தி போன்ற முக்கிய இந்தியத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுடனும் சமூகத்தின் அர்த்தமுள்ள பரஸ்பர தொடர்புகளை அவர் விவரித்தார். பஹாய் போதனைகள் இந்தியா முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி, விவசாயம் மற்றும் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளை எவ்வாறு ஊக்குவித்துள்ளன என்பதை திருமதி ரௌஹானி விவரித்தார். “அரசியல் அதிகாரம் அல்லது அபரிமிதமான பொருளாதாரச் செல்வம் இல்லாத மிகவும் அடக்கமான மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள், மனித ஆவியின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றன,” என அவர் கூறினார்.

இந்தியாவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் அரசாங்க அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கூடினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர்
இந்தியாவில் பஹாய் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும், ஒற்றுமை சார்ந்த கொள்கையை மேம்படுத்துவதற்கும், கூட்டுறவுப் பிணைப்புகளை வளர்ப்பதற்கும், சமத்துவம் மற்றும் தார்மீகக் கல்வியை வளர்ப்பதற்கும் கடந்த நூற்றாண்டில் அதன் முயற்சிகளைக் கண்டறியும் காட்சியைக் காண விருந்தினர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இசைக்கலைஞர்கள் இசை வழங்குகின்றனர்
ஜமாத்-தே இஸ்லாமி ஹிந்தின் தேசியத் துணைத் தலைவர் முஹம்மது சலீம் பொறியியலாளர் (நடுவில்) உள்ளிட்ட வருகையாளர்கள் கலந்துகொண்டனர்.
புது தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் மைதானத்தில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பங்கேற்றோர்.
மற்ற விருந்தினர்களுடன் பிரம்மாகுமாரி சகோதரி ஹுசைன் (இடது-நடுவில்) சமூக மேம்பாட்டிற்குப் பங்களிக்க இந்திய பஹாய் சமூகத்தின் 100 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளை எடுத்துக்காட்டும் காட்சியைப் பார்வையிட்டனர்.
நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவில் பஹாய் சமயத்தின் ஆரம்பகால வரலாற்றின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இடமிருந்து வலமாக: ரோஜர் டேவிட் கிங்டன், கல்வியாளர்; கீதா காந்தி, லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்; ராம் மாதவ், தலைவர், இந்தியா அறக்கட்டளை; Nazneen Rowhani, இந்திய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர்; அலோக் பன்சால், இயக்குனர், இந்தியா அறக்கட்டளை; ஜெய்தீப் மஹாலதி, பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர்.
இக்கூட்டத்தில் வழிபாட்டு இல்லத்தில் ஒரு பக்தி நிகழ்ச்சி இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து கோவில் மைதானத்தில் விளக்கங்கள் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1727/

அப்துல்-பஹா நினைவாலயம்: மின் மற்றும் இயந்திர முறைமைகளை அமைத்தல், வெளிப்புற மேற்பரப்புகளில் வேலை ஆரம்பம்


11 ஏப்ரல் 2024

பஹாய் உலக மையம் – ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டமைப்பு கூறுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் இப்போது இறுதி வேலைகள் குறித்த சிக்கலான விவரங்களை மையமாகக் கொண்ட ஒரு கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த அடுத்தக் கட்டமானது, வெளிப்புறப் பரப்புகளைத் தயாரிப்பதில் இருந்து மின் மற்றும் இயந்திர அமைப்புகளை ஒருங்கிணைத்தல் வரை பலவிதமான செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். இவை அனைத்தும் நினைவாலயத்தின் இயற்பியல் வடிவத்தை அதன் கற்பனையான சிறப்பிற்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பஹாய் உலகச் செய்திச் சேவையுடன் பேசிய கோஸ்ரோ ரெசாய், பொறியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய பலதரப்பட்ட குழுவுடன் இணைந்து திட்ட மேலாளர், வழங்கல் மற்றும் பொருட்கள் உற்பத்தியில் ஏற்படும் தாமதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் குழு எவ்வாறு புத்தி கூர்மை மற்றும் சுறுசுறுப்புடன் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது என்பதை விவரித்தார். “நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும், கற்றலின் தருணமாகவும், ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் சக்தியைக் காணும் வாய்ப்பாகவும் ஆகிடும்,” என அவர் கூறினார்.

திரு. ரெசாய் மேலும் கூறியது: “இந்த மீள்ச்சித்திறம் மற்றும் படைப்பாற்றல் திட்டத்தை முன்னோக்கி செலுத்துகிறது, ஒவ்வொரு முன்னேற்றமும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இதயங்களால் கற்பனை செய்யப்பட்ட ஒரு கனவை நனவாக்க ஒரு படி நெருக்கமாக உள்ளது.”

கட்டுமானத் திட்டத்தில் சமீபத்திய முன்னேற்றத்தின் வரிசையான படங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

நீர்ப்புகா ஓர் அடுக்கைத் தொடர்ந்து, கான்கிரீட்டின் புதிய பாதுகாக்கும் அடுக்கு மத்திய பிளாசா தரையில் பயன்படுத்தப்படுகிறது.
கான்கிரீட் மேற்பரப்பை அழுத்தி கழுவி மணலூதை (sandblast) செய்த பிறகு, தொழிலாளர்கள் கான்கிரீட் மேற்பரப்பில் ஈரப்பதத்தை ஊடுருவிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளிலிருந்து பாதுகாக்க ஈரத்-தடுப்பு அடுக்கைப் பூசுகின்றனர்.
இப்போது முழுமையான குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி அமைப்பில் உள்ள திறப்புகள் வழியாக அதிகாலை ஒளி ஊடுருவுகிறது. கான்கிரீட் மேற்பரப்பில் ஈரத்-தடுப்பு அடுக்குப் பூசப்பட்டுவிட்டது.
இடதுபுறம்: கறை படிந்த கண்ணாடியைப் பெறும் உலோகச் சட்டகம் மத்திய கட்டிடத்தின் நெடுவரிசைகளில் இணைக்கப்பட்டுள்ளது. வலது: இறுதியில் மரக் கதவுகள் கட்டிடத்திற்குள் திறக்கும் சட்டகம்.
கனடாவின் டொரொண்டோவில், கைவினைஞர்கள் கட்டிடத்திற்கான கதவுகளைச் செய்கின்றனர்.
சன்னதிக்கு அடியில் உள்ள இயந்திர வழித்தடங்களில், கட்டிடத்தின் மின் மற்றும் பிற அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
மேற்கு பெர்மில், ஒரு சூரிய ஒளி வடிவத்தை நிறைவு செய்யும் அலங்கார பாதைகள் கட்டப்படுகின்றன.
கிழக்கு பெர்மின் மேற்பரப்பில் கூடுதல் அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன.
கிழக்கு பெர்மின் ஒரு காட்சி
‘அக்கா வருகையாளர்’ மையத்தின் வெளிப்புறம் முடிவடையும் தருவாயில் உள்ளது; உட்புறத்தின் சுவர்கள் மற்றும் தளங்கள் இப்போது மூடப்பட்டுவிட்டன, இது குழுவினர் நுண்ணிய வேலைகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது.
அக்காநகர் வருகையாளர் மையத்தின் மற்றொரு காட்சி
மடிப்புச் சுவர்கள், நுழைவாயில் சுவர்கள், ஆலைகள் மற்றும் சன்னதியின் தளம் ஆகியவற்றை அலங்கரிக்கும் கல் உள்ளூர் குவாரிகளில் இருந்து வெட்டப்பட்டது.
உள்ளூர் கல் தளத்திற்கு வருகிறது, மேலும் அவற்றைத் தொங்கவிடப் பயன்படுத்தப்படும் ஒட்டுகின்ற அமைப்பை உறுதிபடுத்த நிபுணர்களால் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய பிளாசாவின் மேற்கு மடிப்புச் சுவர்களில் திறந்த ஒளிச்சாளரம் ஒன்றின் வழியாக ஒளி பாய்கிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1726/

CSW: பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் ஸ்தாபனங்களின் முக்கிய பங்கு


5 ஏப்ரல் 2024

BIC நியூ யார்க் — பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (CSW) 68-வது அமர்வில், பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) சமூகத்தில் பெண்களின் முழு பங்கேற்புக்கான தடைகளை அகற்றுவதில் ஸ்தாபனங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த யோசனை BIC-யின் சமீபத்திய அறிக்கையின் மைய கருப்பொருளாக உள்ளது, மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த BIC-யின் உலகளாவிய சொல்லாடலுக்கான அதன் நீண்டகால பங்களிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கிறது.

ஆணையத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்வில், நியூ யார்க் அலுவலகத்தின் BIC பிரதிநிதி லிலியன் ன்குன்ஸிமனா, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கையால் வழிநடத்தப்படும் ஸ்தாபனங்கள் எவ்வாறு சமூக மேம்பாட்டைப் பேணி வளர்க்க முடியும் என்பது பற்றி ஜாம்பியாவிலிருந்து ஒரு விவர அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த சமூகத்தில், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை ஒரு முன்முனைப்பான பாத்திரத்தை வகித்து, கிராமத் தலைவர்களுடனான உடனுழைப்புடன், பெண்கள் மேம்பாட்டை ஆய்வு செய்திட, பல்வேறு சமயப் பின்னணிகளைக் கொண்ட சுமார் 120 பெண்கள் அடங்கிய ஓர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தது. உள்ளூர் சபையின் ஆண் உறுப்பினர்களும் சமூகத்தில் உள்ள பிற ஆண்களும் உணவு தயாரித்தல் உட்பட அனைத்து தளவாட ஏற்பாடுகளுக்கும் பொறுப்பேற்றதன் மூலம், சபையின் பெண் உறுப்பினர்களையும் பிற பெண்களையும் ஒன்றுகூடலில் முழுமையாக ஈடுபட உதவியது — இந்த ஆதரவு அவர்கள் சமூகத்தின் வரலாற்று சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமென பலரால் விவரிக்கப்பட்டது.

விளைவு ஆழமான தாக்கம் கொண்டதாக இருந்தது: இந்த நிகழ்ச்சி பெண்களுக்கான கல்வியறிவு வகுப்புகள், உள்ளூர் விவசாய திட்டங்களுக்கான ஆதரவு மற்றும் வருமான உருவாக்கத்திற்காக உள்ளூர் சேமிப்பு வங்கியை உருவாக்குதல் போன்ற முயற்சிகளைத் தூண்டியது.

நியூயார்க் அலுவலகத்தின் மற்றொரு பிரதிநிதியான டேனியல் பெரெல், சமத்துவக் கோட்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார், அது அந்தஸ்தில் வெறும் சமத்துவத்திற்கும் அப்பாற்பட்டது என குறிப்பிட்டார். “இது ஒரு புதிய மெய்நிலையை உடனுழைப்புடன் வடிவமைப்பது பற்றியது, நாம் இன்னும் முழுமையாக கற்பனை செய்யாத ஒன்று,” என அவர் கூறினார்.

ஆணையத்தின் ஒரு வார கால அமர்வின் போது, BIC எட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, 570-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது. உறுப்பு நாடுகள், ஐ.நா செயலாண்மைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் அடங்குவர். இது பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள் இடையே உடனுழைப்பு மற்றும் கலந்துரையாடல் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டியது.

திருமதி ந்குன்சிமனா, திரு பெரெல் மற்றும் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட பிற பிரதிநிதிகளை உள்ளடக்கிய BIC தூதுக்குழு உலகளாவிய பஹாய் சமூகத்தின் பரந்த அனுபவங்களைப் பிரதிநிதித்தது. இந்தக் குழுவில் அடிஸ் அபாபா, கெய்ரோ, ஜெனீவா மற்றும் நியூயார்க்கில் உள்ள BIC அலுவலகங்களின் உறுப்பினர்களும், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரேசில், கனடா, ஜெர்மனி, ஓமான், துனிசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராஜ்யம், அமெரிக்கா ஆகிய தேசிய பஹாய் சமூகங்களின் உறுப்பினர்களும் அடங்குவர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1725/

CSW68 இல் BIC இன் பங்கேற்பின் காட்சிகள்

ஆணைய மன்றங்களில் BIC பிரதிநிதிகளின் பங்கேற்பு மற்றும் BIC நடத்தும் தொடர்புடைய நிகழ்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பம்சங்களின் படங்கள் கீழே உள்ளன.

ஆணையத்தில் BIC பிரதிநிதிகள்
BIC இன் நியூயார்க் மற்றும் ஜெனீவா அலுவலகங்கள் இணைந்து ஒரு நிகழ்வை நடத்தியது, இது எங்கள் கதை ஒரு பிரச்சாரம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்த தனிப்பட்ட மற்றும் சமூக அளவிலான நடவடிக்கைகளின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது.
உலகெங்கிலும் சமத்துவத்திற்கான பயணம் இனம் மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது என்று கென்யாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கதோனி வமுச்சோம்பா வலியுறுத்தினார். அவர்களின் சவால்களின் உலகளாவிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார் மற்றும் சமத்துவத்தை நோக்கிய கூட்டுப் பயணத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த உணர்வை எதிரொலிக்கும் வகையில், முன்னணி நேர்மையின் தலைவரும், அமைதிக்கான மதங்களின் முன்னாள் பொதுச் செயலாளருமான அஸ்ஸா கரம் கூறினார்: “எங்கள் கதை ஒன்றுதான், எங்கள் போராட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். உலகில் எங்கும் பெண்களின் இயக்கங்களைச் சிறப்பித்துக் காட்டிய ஒன்று இருந்தால், பெண்கள் எங்கும் பெண்களாக இருப்பதால், ஒருவரோடு ஒருவர் தோளோடு தோள் நின்று நிற்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
மற்றொரு பேச்சாளர், மெட்டாவின் மேற்பார்வைக் குழுவின் அறங்காவலர் கிறிஸ்டினா அரியாகா கூறினார்: “நமது தோலின் நிறம், பாலினம் மற்றும் எந்த நாட்டில் பிறந்தோம் என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் மனித கண்ணியத்துடன் பிறந்துள்ளோம்.”
BIC கென்ய அரசாங்கத்தின் பெண்களின் உரிமைகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகரின் அலுவலகத்துடன் இணைந்து, ஆப்பிரிக்காவில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான ஸ்தாபனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
அரபு மண்டலத்தில் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் ஸ்தாபனங்கள் மூலம் அதிகாரமளித்தல்: பாலின சமத்துவத்திற்கான ஒரு கூட்டு அணுகுமுறை என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை கூட்டினர்.
பஹாய் போதனைகளில் உள்ள ஓர் உருவகத்திலிருந்து உத்வேகம் கொண்டு, பஹ்ரைன் பெண்கள் சங்கத்தின் நிறுவனரும் துணைத் தலைவருமான வஜீஹா அல்-பஹர்னா, “பெண்களும் ஆண்களும் ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போன்றவர்கள், இருவரின் முயற்சியின்றி சமூகம் முன்னேற முடியாது. .”
BIC மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள வெளிவிவகாரங்களுக்கான பஹாய் அலுவலகங்கள், மோதலில் இருந்து ஒத்துழைப்பு வரை: பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனங்களை மாற்றுதல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை கருத்தில் கொண்டு, ஐ.நா.வுக்கான உலகளாவிய வலையமைப்பு நைஜீரியாவின் முதன்மை பிரதிநிதி இஃயின்வா ஒஃபாங் உடன் இணைந்து ஒரு நிகழ்வை BIC நடத்தியது, இதில் பங்கேற்பாளர்கள் பெண்களின் சம நில உரிமைகளைப் பாதுகாப்பதில் தனிநபர்கள் மற்றும் ஸ்தாபனங்களின் பங்கு பற்றி விவாதித்தனர். பரம்பரைச் சட்டங்களை உருவாக்குவது முதல் செயல்படுத்துவது வரையிலான இடைவெளியைக் குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடன் சிவில் சொசைட்டி டவுன் ஹாலில் BIC கலந்துகொண்டது.
துனிசியாவில் இருந்து BIC தூதுக்குழுவின் உறுப்பினர், மொஹமட் பென் மௌசா, எத்திகல் பிசினஸ் பில்டிங் தி ஃபியூச்சர் (EBBF) இணைந்து நடத்திய நிகழ்வில் – வேலை மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தார்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை ஆராயும் பஹாய்-ஈர்க்கப்பட்ட சங்கம்.
கென்யாவிலிருந்து BIC பிரதிநிதி Atieno Mboya, UK CSW சங்கம் நடத்திய நிகழ்வில், வறுமை, செல்வம் மற்றும் தற்போதைய பொருளாதார நெறிமுறைகளுக்கு இடையேயான உறவை உலகளாவிய தெற்கின் கண்ணோட்டத்தில் ஆராய்கிறார்.
BIC பிரதிநிதிகள் CSW68 இளைஞர் மன்றத்தில் கலந்து கொண்டனர், அங்கு உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் பாலின-சமத்துவ சமூகங்களை உருவாக்குவதற்கு தாங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தனர்.
நியூயார்க் அலுவலகத்திலிருந்து BIC பிரதிநிதி, சிசிலியா ஷிர்மிஸ்டர்,
ஐ.நா.வுக்கான யுகே ஆணையத்தின் இளைஞர் குரல்கள் நிகழ்வில்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம்: பஹாய்கள் தொடர்பாக “மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” ஈரான் நாடு இழைத்து வருகிறது


ஜெனேவா–4 ஏப்ரல் 2024–

பஹாய் சமய சிறுபான்மையினர் மீதான ஈரானிய அரசாங்கத்தின் 45 ஆண்டுகால திட்டமிட்ட ஒடுக்குமுறை, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் என்னும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கு சமமானதாகும் என புகழ்பெற்ற மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்ட ஒரு முன்னோடி அறிக்கை கூறுகின்றது.

“என் கழுத்தில் (பூட்ஸ்) காலணி: இரானில் பஹாய்களுக்கு எதிரான இரானிய அதிகாரிகளின் துன்புறுத்தல் குற்றம்(இணைப்பு வெளிப்புறமானது)” என்னும் தலைப்பிலான புதிய 49 பக்க அறிக்கை, நாட்டில் பஹாய்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கு இரானிய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பாரபட்சமான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நம்பமுடியாத அளவிற்கு விரிவாக ஆவணப்படுத்துகிறது. தன்னிச்சையான கைதுகள் மற்றும் அரசாங்க செயலாண்மைகளால் சிறையில் அடைக்கப்படுதல், சொத்துகள் பறிமுதல் செய்யப்படுதல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகல் மறுப்பு மற்றும் பஹாய் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்ப கண்ணியமான (சவ) அடக்கங்களைத் தடுத்தல் வரை பஹாய்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வோர் அம்சத்திலும் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.

“இரானிய அதிகாரிகள் பஹாய்களுடைய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றனர். இது அவர்களின் செயல்களால் அல்ல, மாறாக ஒரு சமயக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மட்டுமே,” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க துணை இயக்குநர் மைக்கேல் பேஜ் அறிக்கையின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் கூறினார். “மனிதகுலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் (அரசாங்கத்தின்) மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது.”

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையைத் தயாரிப்பதில் விரிவான ஆய்வுகளையும் விரிவான ஆவணப்படுத்தல்களையும் செய்தது. இதற்கு, இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பாக ஏறத்தாழ 12,000 ஆவணங்களை வெளியிட்டுள்ள இரான் நாட்டில் பஹாய் துன்புறுத்தல் பற்றிய பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஆவணக்காப்பக இணையதளத்தை அது அதன் பிரதான ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்படுத்தியது. அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பஹாய்களுடனான நேர்காணல்கள், ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும், மே 2022 மற்றும் மார்ச் 2023-க்கு இடையில் பயன்படுத்தப்பட்டன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில், இஸ்லாமியக் குடியரசு பஹாய்கள் மீதான அதன் ஒடுக்குமுறையை சட்டம் மற்றும் கொள்கையில் குறியீடாக்கி, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மூலம் அவற்றின் அமலாக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது என கூறியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு ஆய்வாளர்களுக்கும் ஈரானிய பஹாய்களுக்கும் இடையிலான விவாதங்களையும் இந்த அறிக்கை விவரிக்கிறது. அவர்களுள் சிலர் பெயரிடப்பட்டனர் மற்றும் சிலரின் அடையாளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மறைக்கப்பட்டன, அத்துடன் அவர்கள் அனைவரும் ஈரானிய அதிகாரிகள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் சீர்குலைக்க அல்லது அழிக்க வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கின்றனர்.

“இந்த விதிவிலக்கான அறிக்கையின் வெளியீட்டையும் அது முன்வைக்கும் சக்திவாய்ந்த ஆதாரங்களையும் பஹாய் அனைத்துலக சமூகம் ஆழமாக பாராட்டுகிறது,” என ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான பி.ஐ.சி பிரதிநிதி சிமின் ஃபஹந்டேஜ் கூறினார். “இந்த அறிக்கை, இரான் நாட்டில் பஹாய்கள் திட்டமிடப்பட்டு துன்புறுத்தப்படுவது தொடர்பான பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை ஒன்றிணைத்து, சர்வதேச சட்டம் மற்றும் உடன்படிக்கைகளின் கீழ் அதன் மனித உரிமைகள் கடமைகளை ஈரான் அப்பட்டமாக புறக்கணிப்பது குறித்து தெளிவான கவனத்தை ஈர்க்கிறது. பஹாய் சமூகத்திற்கு எதிராக நீண்டகாலமாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஈரானிய அரசாங்கத்தை உலகம் பொறுப்பேற்க வைக்கும் என்பதும், இந்த திட்டமிடப்பட்ட துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தேவையான அனைத்து சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதும் எங்கள் உண்மையான எதிர்ப்பார்ப்பாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1724/

மனித உரிமைகள் கண்காணிப்பகம்: பஹாய்கள் தொடர்பாக “மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” ஈரான் நாடு இழைத்து வருகிறது


ஜெனேவா–1 ஏப்ரல் 2024–

பஹாய் சமய சிறுபான்மையினர் மீதான ஈரானிய அரசாங்கத்தின் 45 ஆண்டுகால திட்டமிட்ட ஒடுக்குமுறை, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் என்னும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கு சமமானதாகும் என புகழ்பெற்ற மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்ட ஒரு முன்னோடி அறிக்கை கூறுகின்றது.

“என் கழுத்தில் (பூட்ஸ்) காலணி: இரானில் பஹாய்களுக்கு எதிரான இரானிய அதிகாரிகளின் துன்புறுத்தல் குற்றம்(இணைப்பு வெளிப்புறமானது)” என்னும் தலைப்பிலான புதிய 49 பக்க அறிக்கை, நாட்டில் பஹாய்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கு இரானிய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பாரபட்சமான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நம்பமுடியாத அளவிற்கு விரிவாக ஆவணப்படுத்துகிறது. தன்னிச்சையான கைதுகள் மற்றும் அரசாங்க செயலாண்மைகளால் சிறையில் அடைக்கப்படுதல், சொத்துகள் பறிமுதல் செய்யப்படுதல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகல் மறுப்பு மற்றும் பஹாய் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்ப கண்ணியமான (சவ) அடக்கங்களைத் தடுத்தல் வரை பஹாய்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வோர் அம்சத்திலும் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.

“இரானிய அதிகாரிகள் பஹாய்களுடைய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றனர். இது அவர்களின் செயல்களால் அல்ல, மாறாக ஒரு சமயக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மட்டுமே,” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க துணை இயக்குநர் மைக்கேல் பேஜ் அறிக்கையின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் கூறினார். “மனிதகுலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் (அரசாங்கத்தின்) மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது.”

பல மாநகரங்கள் மற்றும் நகரங்களில் பஹாய் கல்லறைகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. நஜஃபாபாத் அருகே உள்ள பஹாய் இடுகாட்டில் உள்ள இந்த கல்லறைகள் முழுவதுமான புதைகுழி புல்டோசர் செய்யப்பட்ட போது குவியல் குவியலாக விடப்பட்டது. © தனியார்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையைத் தயாரிப்பதில் விரிவான ஆய்வுகளையும் விரிவான ஆவணப்படுத்தல்களையும் செய்தது. இதற்கு, இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பாக ஏறத்தாழ 12,000 ஆவணங்களை வெளியிட்டுள்ள இரான் நாட்டில் பஹாய் துன்புறுத்தல் பற்றிய பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஆவணக்காப்பக இணையதளத்தை அது அதன் பிரதான ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்படுத்தியது. அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பஹாய்களுடனான நேர்காணல்கள், ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும், மே 2022 மற்றும் மார்ச் 2023-க்கு இடையில் பயன்படுத்தப்பட்டன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில், இஸ்லாமியக் குடியரசு பஹாய்கள் மீதான அதன் ஒடுக்குமுறையை சட்டம் மற்றும் கொள்கையில் குறியீடாக்கி, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மூலம் அவற்றின் அமலாக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது என கூறியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு ஆய்வாளர்களுக்கும் ஈரானிய பஹாய்களுக்கும் இடையிலான விவாதங்களையும் இந்த அறிக்கை விவரிக்கிறது. அவர்களுள் சிலர் பெயரிடப்பட்டனர் மற்றும் சிலரின் அடையாளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மறைக்கப்பட்டன, அத்துடன் அவர்கள் அனைவரும் ஈரானிய அதிகாரிகள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் சீர்குலைக்க அல்லது அழிக்க வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கின்றனர்.

“இந்த விதிவிலக்கான அறிக்கையின் வெளியீட்டையும் அது முன்வைக்கும் சக்திவாய்ந்த ஆதாரங்களையும் பஹாய் அனைத்துலக சமூகம் ஆழமாக பாராட்டுகிறது,” என ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான பி.ஐ.சி பிரதிநிதி சிமின் ஃபஹந்டேஜ் கூறினார். “இந்த அறிக்கை, இரான் நாட்டில் பஹாய்கள் திட்டமிடப்பட்டு துன்புறுத்தப்படுவது தொடர்பான பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை ஒன்றிணைத்து, சர்வதேச சட்டம் மற்றும் உடன்படிக்கைகளின் கீழ் அதன் மனித உரிமைகள் கடமைகளை ஈரான் அப்பட்டமாக புறக்கணிப்பது குறித்து தெளிவான கவனத்தை ஈர்க்கிறது. பஹாய் சமூகத்திற்கு எதிராக நீண்டகாலமாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஈரானிய அரசாங்கத்தை உலகம் பொறுப்பேற்க வைக்கும் என்பதும், இந்த திட்டமிடப்பட்ட துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தேவையான அனைத்து சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதும் எங்கள் உண்மையான எதிர்ப்பார்ப்பாகும்.”

மூலாதாரம்: https://www.bic.org/news/human-rights-watch-iran-committing-crime-against-humanity-regarding-bahais

இளைஞர்: சமுதாய தன்மைமாற்றத்தில் இளைஞர்களின் இன்றியமையா பங்கினை BIC எடுத்துக்காட்டுகின்றது.


29 மார்ச் 2024

BIC பிரஸ்ஸல்ஸ் – பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் (BIC) சமூக முன்னேற்றத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘ஓர் ஐரோப்பிய ஒன்றிய இளைஞர் யுக்தி: சில பரிசீலனைகள்’ என்னும் தலைப்பில் அறிக்கை, கல்வியின் பங்கு மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்துதல், சமூக வாழ்க்கையை வலுப்படுத்துதல், தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளைப் பேணி வளர்த்தல் மற்றும் முக்கியத்துவம் மிக்க முடிவெடுக்கும் செயல்முறைகளை உருவாக்குவதில் பங்கேற்றலைச் செயல்படுத்துவதன் மூலம் மாற்றத்திற்கான ஊக்கியாக இளைஞர்களின் திறனைப் பேணி வளர்ப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.

இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த அறிக்கை இளைஞர் கொள்கைக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள கலந்துரையாடல்களுக்கு தகவலூட்ட முயல்கிறது. அறிக்கையின் வெளியீடு பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய இளைஞர் வியூகத்தின் (2019 – 2027) நடுப்பகுதியைக் குறிக்கும் ஒரு முக்கிய சந்திப்புக்கு இணைவாக வருகின்றது.

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் பிரதிநிதியான ரேச்சல் பயானி, பஹாய் உலகச் செய்திச் சேவையுடன் பேசினார்: “இன்றைய சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு தனித்துவமான திறன் உள்ளது. ஏனெனில், அவர்கள் யார், உலகில் தங்களின் இடம் என்ன என்பதைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கின்றனர்.”

அவர் மேலும் கூறினார்: “குறிப்பாக அவர்களின் கல்விப் பயணத்தில், ஊக்குவிக்கப்பட்டும் உடன்வரும் போதும், கேள்வி கேட்கும் அத்தருணம் அவர்கள் தங்கள் சமுதாயத்தை மறுபரிசீலனை செய்யும் திறனை அவர்களுக்கு அளிக்கின்றது.”

தனிநபர் மேம்பாடு, கூட்டு நலன் ஆகிய இரண்டிற்கும் தங்கள் திறமைகளை வழிப்படுத்த இளம் தனிநபர்களுக்கு சக்தியூட்டுவதில் கல்வியின் தன்மைமாற்றும் திறனை அவர் வலியுறுத்தினார்.

சமுதாயத்திற்குச் சேவை செய்யும் திறனை உருவாக்கும் பஹாய் கல்வித் திட்டங்களின் அனுபவங்களில் இருந்து உத்வேகம் பெறும் இந்த அறிக்கை, தன்னலம் என்னும் கண்ணிடியின் வழி இன்றி சமுதாய நல்வாழ்வுக்கு பங்களிக்கும் சக்திவாய்ந்த ஒரு வழிமுறையாக, இளைஞர்கள் அர்த்தமுள்ள பணியில் ஈடுபடுவதைக் காண தூண்டுவதில் கல்வி முறைமைகளின் பங்கை கற்பனை செய்கிறது.

இது சமுதாயத் தேவைகள் பற்றிய பகுப்பாய்வு சிந்தனையைப் பேணி வளர்க்கும், தார்மீகப் பொறுப்புணர்வைத் தூண்டும் மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய இளைஞர்களுக்கு அவர்களின் அறிவைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் கல்வி முறைமைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு குழுக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வளர்ப்பதில் இளைஞர்களின் ஈடுசெய்ய முடியாத பங்கை BIC எடுத்துக்காட்டி, மனிதநேய ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர்கள் அடித்தட்டு மட்டத்தில் புதிய, உள்ளடக்கிய உறவுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் என கூறுகிறது.

இந்த அறிக்கையை இங்கு பார்க்கலாம். அது BIC-யின் பல்வேறு பரிமாணங்களிலான சமுதாய மேம்பாடு பற்றிய சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் மீது கட்டமைக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1723/