Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

‘உடல்நலம்’ பகுப்புக்கான தொகுப்பு


கட்டுரையாளர் டாக்டர் சிந்த்தியா ஜெயசூரியா

மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும். ஆனாலும், இது மருத்துவ ஆய்வுகள் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தபோதும் இக்கிழங்கில் மிகைப்பட கிடைக்கும் ஒரு வைட்டமினான பி17 புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றது என கூறப்படுகிறது. நான் மூத்திரப்பை புற்று நோயால் அவதிபட்டு அதிலிருந்து நிவாரணம் பெற பி17 வைட்டமினின் பயனைப் பற்றி ஆய்வு செய்தது மட்டுமின்றி மரவள்ளியை முறையாக பயன்படு்த்தி நான் நல்ல நிவாரணம் கண்டுள்ளேன். ஆனால், நான் முதலில் பல நாடுகளில் புற்றுநோய்க்கு ‘கீமோதெராப்பியை’ விரும்பாத பலர் ‘ஏப்ரிகோட்’ எனப்படும் ஒருவகை பழக்கொட்டையை சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். இந்த ஏப்ரிகோட்டைச் சாப்பிடும் மக்களை புற்றுநோய் பீடிப்பதில்லை என்பதும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள ஒன்றாகும். இதைத் தொடர்ந்து என் ஆய்வின் மூலம் ஏப்ரிகோட்டில் உள்ள அதே மருத்துவ சத்து மரவள்ளியிலும் உள்ளதென்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டு மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என் கதை பின்வருமாறு:

நான் புற்றநோயால் அவதிப்பட்டதால், நான் உண்ணும் உணவு வகைகளில் பி17 வைட்டமின் உள்ள  உணவுவகைகள் குறித்து தெரிந்துகொள்ள முற்பட்டேன். இன்டர்னெட்டில் உலவி பி17 வைட்டமின் மரவள்ளியில் நிறைய இருப்பதைத் தெரிந்துகொண்டேன். பிறகு, ஒரு நாளைக்கு குறைந்தது 10 கிராம் என மூன்று வேளை மரவள்ளியைச் சாப்பிட்டுவந்தேன்.

மூத்திரப்பையில் எனக்குப் புற்றநோய் கண்டிருந்தது. ஒரு மாதகாலம் கிழங்கை உண்டு வந்தபிறகு என் மூத்திரப்பையை சோதனை செய்வதற்கு மருத்துவ நிலையம் சென்றேன். என்னை சோதித்தவர் முன்பு எனக்கு வைத்தியம் செய்த அதே சர்ஜன் ஆவார். என் மூத்திரப்பை முற்றிலும் சுத்தமாகவும் மாமூல் நிலைக்குத் திரும்பியுள்ளதையும் கண்டு அவர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். “பையோப்ஸி” செய்வதற்கு இடமில்லை” என அவர் கூறினார்.

மரவள்ளியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நான் சிறிது நலமடைந்தும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் பார்ப்பதற்கு நலமாக இருப்பதையும் கண்டார்கள்.

மூத்திரப்பையின் சோதனை முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என் நாட்டிலுள்ள புற்றுநோயாளிகளின் பயனுக்காக என் கதையைப் பகிரங்கமாக பிரசுரித்தேன்.

இதற்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான் மூத்திரப் பை சோதனைகளுக்கு அதே மருத்துவரிடம் சென்று வருகிறேன் மற்றும் ஒவ்வொரு முறையும் அது சுத்தமாகவே இருக்கின்றது. நான் இதுவரை மரவள்ளியைத் தவிர மருந்து ஏதும் உட்கொண்டதில்லை.

இந்த பி17 வைட்டமின் எப்படி செயல்படுகிறது என்பதை சற்று எளிமையாக விளக்கிட முற்படுகிறேன். பி17 வைட்டமினின் மருத்துவப் பெயர் ‘அமிக்டலீன்/Amygdaline’ ஆகும். புற்று நோய் உயிரனுக்கள் முதிர்ச்சியடையாத அனுக்களாகும் மற்றும் சாதாரன உயிரனுக்களில் உள்ள ‘என்ஸைம்களுக்கு’ மாறாக புற்றணுக்களில் உள்ள என்ஸைம்கள் வேறுபட்ட ‘என்ஸைம்களாகும்’.

பி17 வைட்டமின் சாதாரன என்ஸைம்களுடன் இணையும்போது அது 3 விதமான சர்க்கரைகளாக பிரிகின்றது, ஆனால் அது புற்றணுக்களுடன் இணையும் போது அது 1 சர்க்கரை, 1 பென்ஸால்டிஹைட் மற்றுமற் 1 ஹைட்ரோஸையனிக் அமிலமாக பிரிவுறுகிறது. என்ன நடைபெறுகின்றதென்றால் ஹைட்ரோஸையனிக் அமிலமானது உள்ளுக்குள்ளாகவே புற்றணுக்களைக் கொன்றுவிடுகிறது.

மற்றவர்களின் அனுபவங்கள்

என்னுடைய முதல் கட்டுரை பிரசுரமானதிலிருந்து புற்றுநோயால் அவதியுறும் பலர் மரவள்ளி குறித்த தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்:

திரு … புரோஸ்டேட் புற்றுநோயால் அவதியுறுபவர். அவர் மனைவி அரசாங்க பொது மருத்துவமனைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றவராவார். திருமதி … என் கட்டரையைப் படித்துவிட்டு மரவள்ளி வைத்தியத்தை செய்து பார்க்க முடிவெடுத்தார். அதற்கான காரணம், பெரியவரின் மருத்துவத்திற்கான மருந்துகளின் செலவு அவர்களின் பொருளாதார தகுதியை பெரிதும் மீறியதாக இருந்ததே ஆகும்.

ஆரம்பத்தில் அப்பெரியவர் மருத்துவநிலைய மருந்துகளை உட்கொண்ட போதிலும் அவை அவரை மேலும் நோயுறச் செய்தமையால் அவற்றை சிறிது நாள்களுக்குப் பிறகு தவிர்த்துவிட்டார். இதன் பிறகு பெரியவரின் மனைவியும் மகளும் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்தத் தீர்மானித்தனர். இதன் பிறகு பெரியவர் மரவள்ளிக்கிழங்கை பயன்படு்த்த ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர் நலமடைவதற்கான அடையாளங்கள் தோன்றின. ஒரு மாதம் சென்ற பிறகு மருத்துவநிலையம் சென்று சோதனை செய்து சோதனையின் முடிவை தமது ‘ஒன்கோலோஜிஸ்டிடம்’ கொண்டு சென்றனர்.

புற்றுநோய் கண்டறியப்பட்டபோது அவரின் PSA சோதனை முடிவுகள் 280-290 ஆக இருந்தது, ஆனால் மரவள்ளி உட்கொண்ட ஒரு மாத காலத்தில் இதே சோதனை முடிவுகள் 5.89 ஆக இறங்கியிருந்தது. இப்பெரியவர் அச்சோதனை முடிவுகளை என்னிடம் கொண்டுவந்து காண்பித்தார். இன்றும் அவர் புற்றுநோய்க்கான அடையாளங்கள் ஏதுமின்றி இருக்கின்றார் மற்றும் என்னிடம் அடிக்கடி தொடர்புகொண்டு தமது சுகத்தையும் தெரியப்படுத்திவருகிறார்.

இதே போன்று வேறு சிலரும் மரவள்ளிக்கிழங்கு வைத்தியத்தினால் தங்கள் புற்றுநோயிலிருந்து நிவாரணம் கண்டு வருகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மருத்துவ செலவுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் என்னோடு தொடர்பு கொண்டு தங்கள் உடல்நலன் குறித்து பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இதுவரை எந்த மருந்து உற்பத்தியாளர்களும் மரவள்ளியிலுள்ள பி17 வைட்டமின் குறித்து எந்த ஆய்வும் செய்திட முன்வரவில்லை. செய்துபார்த்தால்தான் என்ன? பொருளாதாரம் குறைவாக உள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்குமே. இருந்தபோதும், இவ்வைத்தியத்திற்காக மரவள்ளிக்கிழங்கை தேர்வு செய்யும்போது பின்வரும் ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்:

அ. மரவள்ளி அப்போதுதான் அறுவடை செய்யப்பட்டிருக்கவேண்டும்.

ஆ கிழங்கை வேகவைக்கும்போது பாத்திரம் மூடப்படாமல் இருக்க வேண்டும். இது கிழங்கில் உள்ள சில வஸ்துக்கள் ஆவியாக வெளிப்பட உதவும்.

இ. கிழங்கை அதிக நீர் ஊற்றி வேகவைக்கவேண்டும். வெந்தவுடன் அதிகப்பட்ட நீரை வடித்துவிடவேண்டும்.

ஈ. மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு குறைந்தது எட்டு மணிநேரத்திற்கு சுக்கு அல்லது இஞ்சி சேர்ந்த எந்த பொருளையும் உட்கொள்ளப்படக்கூடாது.

முழு பதிவையும் வாசிக்க »

உடல்நலம் – கறிவேப்பிலை


கறிவேப்பிலையின் பயன்கள்

தென்னிந்திய சமையல்முறைகளில் கறிவேப்பிலையென்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆனால், பொதுவாகவே சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்துவிட்டே உணவை உண்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். ஏன்?

கறிவேப்பிலைக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அது ஜீரணத்திற்கான என்ஸைம்களைத் (enzymes) தூண்டிச் சுரக்கவைக்கின்றது மற்றும் இதனால் உணவு விரைவாக ஜீரணமாகின்றது. உணவு உண்டபின் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயமும் கறிவேப்பிலை இலைகள் சிலவும் கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லதாகும்.

- வாந்தி மற்றும் அஜீரணத்திற்கு நல்ல நிவாரணியாகும். கறிவேப்பிலைச் சாற்றில், சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சர்க்கரையும் கலந்து குடிக்கவும்.

- உடல் பருமன் குறைய தினசரி கறிவேப்பிலை இலைகள் சிலவற்றை மென்று சாப்பிடவும்.

- கறிவேப்பிலை கண்பார்வையைத் தெளிவாக்கும், ஆகவே உணவு உண்ணும்போது கறிவேப்பிலையைத் தூக்கியெறிந்துவிட வேண்டாம். கறிவேப்பிலை கண்களில் காட்டராக்டை (cataract) தடுக்கின்றது.

- முடியின் வளர்ச்சிக்கும் நிறத்திற்கும் கறிவேப்பிலை நல்லதாகும். அதை அப்படிய சாப்பிடுவது சிரமமாக இருந்தால் இப்போது கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைத் தூளை வாங்கி தோசை அல்லது சாதத்துடன் உண்ணலாம். கறிவேப்பிலையை நீங்கள் வீட்டிலேயே தூள் செய்து உண்ணலாம், அது முடியில் நறை விழுவதைத் தடுக்கும்.

- அல்லது நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகளைக் கலந்து அடுப்பில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை தலையில் தேய்ப்பது முடியை நலமாக வைத்திருக்க உதவும்.

கறிவேப்பிலை குறித்த உடல்நல குறிப்புகளுள் இவை சில மட்டுமே. கறிவேப்பிலையை இப்போதிருந்தே உணவில் கலந்து சாப்பிடுங்கள்.

- கறிவேப்பிலை மரம் வீட்டருகே இல்லாதவர்கள் கடையில் வாங்கும் கறிவேப்பிலை இலைகளை உருவி ஈரமில்லாமல் ஒரு பிலாஸ்டிப் டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியின் உறையறைக்குள் வைத்து அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இலைகள் நீண்ட நாள்களுக்கு வாசம் போகாமல் இருக்கும்.

முழு பதிவையும் வாசிக்க »


சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஓரினக் காதல் குறித்த ஒரு சட்டம் திருத்தப்பட்டது. இதன் தொடர்பில் அங்கு பல ஒரினக் காதலர்கள் உடனடியாக திருமணம் செய்துகொண்டார்களாம்.
பார்க்க: http://www.bbc.co.uk/news/world-us-canada-14270593

முன்னுறை

பஹாய் சட்டம் திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதிகளுக்கிடையே மட்டும் பாலுறவை அனுமதிக்கின்றது. திருமண பந்தத்திற்கு வெளியே பஹாய் விசுவாசிகள் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அதே வேளை, பஹாவுல்லாவின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதோர் மீது பஹாய்கள் தங்கள் விதிமுறைகளை தினிக்க முயலமாட்டார்கள். பாலியல் அல்லது வேறு எந்த விஷயம் குறித்தும் மேன்மையான நடத்தையை எதிர்பார்க்கும் அதே வேளை, மனித குறைபாடுகளை மனதிற் கொண்டு பொறுமை மற்றும் புரிந்துகொள்ளலை பஹாய் போதனைகள் அறிவுறுத்துகின்றன. இக்கருத்தில், ஒரினக்காதலர்களை தப்பெண்ணத்தோடு பார்ப்பது பஹாய் போதனைகளின் உணர்விற்கு எதிர்மாறானதாகும்.

ஒரினக்காதல் குறித்த சில பஹாய் கருத்துக்களின் ஆய்வு

உலக வரலாற்றின் கால ஏடுகளில் ஒரினக்காதல் நடவடிக்கைகள் குறித்து ஆங்காங்கே காண முடிகிறது. 1951ல் ஓரினக்காதல் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இ்ந்த ஆய்வு எழுபத்து ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 விழுக்காடு நாடுகளில் ஓரினக்காதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் ஒரின பாலுறவு என்பது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவும் இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் சிவப்பிந்திய சமூகத்தினர், பசிபிக் சமுத்திரத்தில் சில தீவுகள், ஆஸ்திரேலிய பூர்வகுடியினரிடையே இது பழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அதே போன்று அக்காலத்தில் கிரேக்கர்கள், செல்ட்டியர்கள், ரோமானியர்கள், அராபியர்கள், சூஃபீக்கள், ஜப்பானியர் மற்றும் இந்தோ-ஐரோப்பியரின் சமய ரீதியான வழக்கமாம் இது காணப்படுகின்றது. இதில், பிரபஞ்சத்தின் படைப்பு, மானிடத்தின் ஆண்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் இலிங்கம் (phallic) சம்பந்தமான சமயப் பிரிவுகள் மற்றும் கருவள(fertility) சம்பிரதாயங்கள், புராணம், மற்றும் ஆவி, வித்து மற்றும் ஆன்மாவோடு தொடர்பு கொண்டுள்ள சமயம் சார்ந்த மற்றும் சடங்கு அடிப்படையிலான ஒரின பாலுறவியல் நிகழ்கின்றது

ஆனால், சில கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களின் ஒரினபாலுறவு குறித்த சடங்குபூர்வமான விஷயங்களுக்கு எதிராக, செமிட்டிக் (semitic) மதங்கள் ஒரினபாலுறவை வன்மையாக கண்டித்துள்ளன. இணக்கம் கொண்ட இரு ஆண்களிடையே ஒரினபாலுறவு நடவடிக்கைகள் அருவருக்கத் தக்கவை மற்றும் மரண தண்டனைக்கு உட்பட்டவை என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தால்முட் (talmud) எனப்படும் யூத சாஸ்திரங்கள் மரண தண்டனை போக தன்னைத் தானே கசையால் அடித்துக்கொள்வது, பெண்கள் ஒரிணக்காதல் ஆகியவற்றையும் உட்படுத்தி கண்டிக்கின்றன. யூத மதகுரு சாஸ்திரங்கள் ஒரினக்காதலுக்கு எதிரான வன்மையான தடை குறித்து பல காரணங்களை வெளியிட்டுள்ளன. தீர்க்கதரிசியான நோவாவின் (Noah) வாரிசுகளின் ஏழு கட்டளைகளிடையே இத்தடை ஓர் அனைத்துலக சட்டமாக கருதப்படுகிறது. மனித மேன்மையினை இழிவுபடுத்தும் இயற்கைக்கு எதிரான ஓர் முறைகேடு. இத்தகைய செயல்கள் இயல்பான பாலுறவின் இனப்பெருக்க நோக்கத்தினை முரியடிக்கின்றன மற்றும் ஒரினக்காதலன் மனைவியை கைவிடுவதன் வாயிலாக குடும்ப வாழ்வு அழிகின்றது. யூத சட்டங்கள் அன்பு(காதல்) எனும் கருத்தில் புறமண பாலுறவு அல்லது முறையற்ற கலவி போன்றவை என்னதான் இருபாலரின் இணக்கத்திலும் தூய அன்பெனும் அடிப்படையிலும் நிகழ்ந்தாலும் அது எப்படி சட்டபூர்வமானது ஆகாதோ அதேபோன்று ஒரினக்காதலை எவ்வித உடல்சார்ந்த களிப்பின் அடிப்படையிலும் ஆதரிக்கவில்லை.

என்னதான் கிருஸ்தவர்களின் மனப்பான்மைகள் காலத்தால் மாறியிருந்தாலும் கிருஸ்தவ சமயத்தில், ஒரினக்காதல் மற்ற பாலுறவு தீயொழிக்கங்களோடு சேர்த்து வன்மையாக கண்டிக்கப்படுகின்றது. திருக்குரான் ஒரினக்காதலை “தெய்வநிந்தனையான” செயல் என குறிப்பிடுகின்றது. அதே போன்று ஹதீஸ்களில் (hadith) ஒரினக்காதலர்கள் இருவரும் கொல்லப்படவேண்டும் என குறிப்பிடுகின்றன. இவ்வுலகில் தனது பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் ஒழிய, மற்றொரு மனிதனிடம் ஒரின உறவு கொள்ளும் ஒருவன் மறுவுயிர்த்தெழுதல் (resurrection) நாளன்று நிலையான நரகவாசத்திற்கு ஆளாவான்.

பஹாவுல்லாவும் ஒரினக்காதலை தடை செய்துள்ளார். அவரது சட்ட நூலான அக்டாஸ் திருநூல் அதை தடை செய்துள்ளது. பின்வரும் கருத்துக்கள் இத்தடை குறித்த ஆய்வாகும்.

இங்கு பயன்படுத்தப்படும் சில சொற்பாங்குகளை ஆலோசித்தல் சற்று பயன்மிக்கதாக இருக்கும். ஒரினபாலுறவு எனும் வார்த்தை இரு குறுகிய கருத்துக்களை உள்ளடக்கிட சற்று விரிவான நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. முதலாவதானது ஓரினபாலியல்பாலான  கவர்ச்சியாகும். இது, தன்னியல்பாகவும் தூண்டுதல் இல்லாமலும் தன்னினத்தின் மீதே கவர்ச்சிகொள்ளும் மற்றும் தன்னினத்தை உள்ளடக்கிய பாலியல் மன கற்பனை கொள்ளும் ஓர் ஆண் அல்லது பெண் குறித்த மனோநிலையை அல்லது உளநிலையை குறிப்பதாகும்.இரண்டாவது, ஒரினபாலுறவு நடத்தை, அதாவது தன்னினத்தோடு, ஓர் ஆண் மற்றோர் ஆணோடு அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு உடலுறவு கொள்ளுதல். முதலாவது நிலை, சரியாக புரிந்துகொள்ளப்படாத சக்திகளினால் மற்றும் அச்சக்திகளின்மீது அக்குழந்தைக்கு எவ்வித அடக்குந்தன்மையும் இல்லாத நிலையில் குழந்தைப் பருவகால வளர்ச்சியின் போது அடையப்படுகின்றது அல்லது வெளிப்படுகின்றது. இரண்டாவது நிலை, ஒரின உறவில் சுயநினைவோடு ஈடுபடும் மற்றும் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு நடத்தை குறித்ததாகும். ஒரு மனிதன் ஒரினபாலியல் மனநிலையால் பாதிக்கப்பட்டவனாக ஆனால், அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கக்கூடும் மற்றும் ஒரு மனிதன் ஒரினபாலுறவு மனநிலை இல்லாதவனாக ஆனால் ஓரினபாலுறவில் ஈடுபடுபவனாகவும் இருக்கக்கூடும்.

ஓரினக்காதல் மனநிலை குறித்து பஹாய் போதனைகள் ஒருவிதமான மனப்பான்மையையும், ஒரின பாலுறவு பழக்கம் குறித்து வேறுவிதமான மனப்பான்மையையும் வலியுறுத்துகின்றன. முதலாவதானது அனுதாபம் மற்றும் இரக்க உணர்வை வருவிக்கவேண்டும்: “இவ்விதமாக பாதிக்கப்படுவது ஒரு மனச்சான்றுக்கு உட்பட்ட ஆன்மாவிற்கு பெரும் சுமையாகும்”. ஆனால், மற்றது பஹாய் திருவாக்குகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஓரினக்காதல் மனோநிலையை பொறுத்தவரை, அது “மனித இயல்பின் பிறழ்ச்சி” மற்றும் “இயற்கைக்கு மாறான” ஒன்று என பஹாய் திருவாக்குகள் கூறியபோதிலும் அத்திருவாக்குகள் ஒரினக்காதலுக்கான காரணங்களை குறித்துக் காட்டவில்லை. அறிவியல் சமூகத்தினரிடையே ஓரினக்காதல் குறித்து எவ்வித இணக்கமும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இப்போது மரபியல் கூறு சம்பந்தமான சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பஹாய் நிலையோடு எவ்விதத்தில் இயைபுறும்?

இயற்கை குறித்த பஹாய் கருத்துப்படிவம் (concept) நோக்கியலானதாகும் (teleological); அதாவது, இறைவனால் மனித இயல்பிற்கு சில பண்புகள் குறிக்கோளாக கொள்ளப்பட்டுள்ளன, மற்றும் இப்பண்புகளோடு இணக்கப்படாத பிற பண்புகள் “இயற்கைக்கு மாறானவை” என வருணிக்கப்படுகின்றன. அதற்காக பஹாய் திருவாக்குகளின் கண்டிப்பிற்கு ஆளாகும் சில நடத்தைகள் இயற்கையின் செயல்பாட்டினால் விளையவில்லை என பொருள்படாது. மதுப் பித்து ஒரு நல்ல உதாரணமாகும். அது மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம் என ஆதாரங்கள் காட்டுகின்றன. அந்த ரீதியில் அது இயற்கை காரணங்களால் விளைகின்றது, ஆனால், அதற்காக ஒரு மனிதன் மதுப்பித்தனாக இருப்பது இயல்பான ஒன்றென அர்த்தப்படாது. ஒரினக்காதல் மரபியலான, பௌதீக ரீதியிலான, அல்லது மனோவியல்பான காரணங்களால் விளைந்தபோதிலும், அது மனித இயல்பிற்கு நோக்கமாக கொள்ளப்பட்ட ஒரு பண்பு அல்லவென பஹாய் போதனைகள் தெளிவுபடுத்துகின்றன. ஏனில்லை? இதற்கான பதில் ஒரினக்காதல் சமுதாயத்தின் மீதும் தனிமனிதர் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளில் காணப்படலாம். ஒரினக்காதல் தனிநபரை பொருத்தவரை, 1981ல் ஒரு பஹாய் எழுத்தாளர் மனோவியல்பு குறித்த இலக்கியங்களின் சுருக்கத் தோகுப்பு ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ஒரினக்காதலர் குறித்த நான்கு திடுக்கிடச் செய்யும் பண்புகளை அவை வெளிப்படுத்துவதாக உணர்ந்தார். முதலாவதாக பீதி உணர்வின் பங்கு – ஆண் ஓரினக்காதலருக்கு பெண்கள்பால் ஏற்படும் பெரும் பயத்தினால், ஒரு மனோதத்துவ நிபுணர் கூறுவது போன்று, அவர் ஆண்கள் நிறைந்த ஓர் உலகிற்குள் ஒளிந்துகொள்கின்றார். இரண்டாவது, உளஞ்சார்ந்த வலியில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை (psychic masochism) – அதாவது தன்னிரக்கம், மனம் புண்படுதல், அநியாயங்களை உள்ளத்தில் பதியவைத்துக்கொள்ளுதல் ஆகியவை. மூன்றாவது எதிர்மறையான பண்பு, மன ஆழத்தில் பதிந்துள்ள போதாத அல்லது நிலைகுறைவு உணர்வினால் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மை. இறுதியாக ஒரினக்காதலர்கள் வாழ்வில் பாலியலின் ஆதிக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது என்பது நோய்நிவாரண சிகிச்சையாளர்களின் கருத்து. இதன் பயனாக, பல சமுதாய காரணங்களின் பங்கு இதில் இருந்தபோதிலும், மதுப்பித்தின் அதிகரிப்பு, சோர்வுமனப்பான்மை, வேதனையில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. சராசரி 30 வயதிற்கு உட்பட்ட அமெரிக்க ஓரினக்காதலர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களுள் 26 விழுக்காட்டினர் சுமார் 1000 வேறுபட்ட நபர்களோடு பாலுறவு கொண்டுள்ளனர், மற்றும் சந்திக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் 50 விழுக்காடு நேரம் அவர்கள் முன்பின் தெரியாதோரிடமே பாலுறவு கொண்டதாக கூறியுள்ளனர். இத்தகைய புள்ளி விவரங்கள், ஒரினக்காதல் வாழ்வுமுறை அமைதி நிறைந்தது மற்றும் மனநிறைவானது என்பதற்கு எதிர்வாதங்களாகும். அதற்கு மாறாக அது நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்வுமுறையாகும். அடிக்கடி நிகழும், தற்செயல் பாலுறவுகள் ஒரினக்காதலுக்கு எதிரான (மற்றும் எத்தகைய பால்தன்மையூட்டும் உறவுக்கும் எதிரான) குற்றச்சாட்டாகும். இத்தகைய பாலுறவுகள் அதன் பின்விளைவான அபாயங்கள் (நோய்கள், உடல் வதை, அச்சுறுப்பு) குறித்து கவனமின்றியிருந்து, அது ஏதோ ஒரு பழக்கப் பித்தாக செயல்பட்டு, மனநிறைவு காணமுடியாத ஒன்றாகவும் செயல்படும்.

ஆன்மீக ரீதியில், பின்வரும் வகையில் அதன் விளைவுகள் பெரும் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சில பஹாய் எழுத்தாளர்கள் வாதித்துள்ளனர்: ஓர் ஓரினக்காதலரின் உள்மன பய உணர்வு நேரடியாக எதிர்கொள்ளப்படாததால், அத்தகைய நபர் சோதனைகளை நேர்முகமாக எதிர்கொள்வதால் கிடைக்கும் ஆற்றல் மேம்பாட்டை இழந்துவிடுகிறார். ஆகையால் அந்த நபரின் உளநோய் நிலையாக தொடர்ந்து, தற்காப்பு உணர்வு மிகு ஒரு கொடிய வட்டத்தை உருவாக்கியும், இறுதியில் பாதிக்கப்பட்ட நபரின் தன்னகமே தனக்குத் தானே பலியாகின்றது. ஆன்மீக ரீதியில் வளர்ச்சியுறாமல், அதற்கு மாறாக, அத் தனிநபர் தனது உணர்வெழுச்சிகள் மற்றும் வீண் கற்பனைகளின் சுமை மற்றும் ஆதிக்கத்திற்கு ஆளாகின்றார்.

வியாதிகளின் பரவலால் மட்டும் சமுதாயம் துன்புறவில்லை, அதற்கு மேல் தன்னைச் சுற்றியுள்ளோரை பாலியல் பொருள்களாக கருதுவதன் காரணத்தால் அந்த நபர் ஏற்படுத்தக்கூடிய நுண்ணய மற்றும் தவிர்க்கவியலா தாக்கங்களாலும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. பயம் மற்றும் வெறுப்புணர்வு நிறைந்த தனிநபர்கள் சமுதாய ஐக்கியம் நிறைந்த ஒரு முழுமையான சூழ்நிலைக்கு பங்காற்ற முடியாது. மற்றும் மிக முக்கியாமாக, ஓரினக்காதலர்கள் குடும்பங்களை உருவாக்கும் செயற்பாட்டை விழிப்புணர்வுடனேயே தவிர்த்துக்கொகின்றனர்.

பஹாவுல்லாவின் சட்டங்கள் தரிசானதும் மனிதத்தன்மையற்றதுமான ஒரு சட்டமுறையை பிரதிநிதிக்கவில்லை, மாறாக அவை தெய்வீக அறிவுரைகளாகும், மற்றும் இப்பூவுலகின் ஆற்றல்களோடு இணக்கத்துடன் வாழ்வதற்கு எவ்விதம் இயற்கையின் விதிமுறைகளை ஒழுங்காக மதித்துணர்வது உதவுகின்றனவோ, அதே போன்று அவை உண்மையான சுதந்திரம் மற்றும் ஆன்மீக களிப்புணர்வை அடைந்திட ஒரு தனிநபர் செயல்படுவதற்கான ஒரு வரைமுறையும் ஆகும். பாலியல் குறித்த பஹாய் போதனைகள் பாலியல் தூண்டுசக்தியின் தெய்வீகத்தையும் மற்றும் ஆற்றலையும் அங்கீகரிக்கின்றன, மற்றும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகின்றன, மற்றும் பஹாவுல்லாவின் சட்டம் திருமண உறவு குறித்த வெளிப்படுத்துதல்களோடு மட்டுமே தன்னை உட்படுத்திக்கொள்கின்றது. இனப்பெருக்கமே பாலியலின் அடிப்படை குறிக்கோளாகும். பாலியலின் வாயிலாக தனிநபர் களிப்புறுகிறார் என்பது இறைவனின் கொடைகளுள் ஒன்றாகும். காதல் முதல் திருமணம் வரை, குழந்தைப் பேறு, குழந்தைகளை பேணி வளர்த்தல், மற்றும் இரண்டு ஆன்மாக்களிடையே இவ்வுலக வாழ்விற்கும் அப்பால் நிலைக்கக்கூடிய பரஸ்பரமாக ஆதரிக்கப்படும் உறவினை ஸ்தாபிக்கும் ஒரு நீண்ட செயற்பாட்டில் பாலுறவின் பங்கு  ஒரு கணநேரமே ஆகும்.

சில தம்பதிகள் குழந்தைப் பேறு அடையமுடியாமல் தவிக்கின்றனர். அது தன்னிலையாக ஒரு பாதிப்பே ஆனாலும், திருமண உறவின் பிற கொடைகள் அனைத்தையும் இவ்விஷயம் செல்லாதவையாக்கிடவில்லை. சிலர் பலவித காரணங்களால் ஒரு துணையை பெற முடியாது போகின்றனர், அல்லது தனியாக வாழ்ந்திட தீர்மானிக்கின்றனர்; இவர்கள் பிற வழிகளில் தங்கள் நற்பண்புகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரினக்காதலர்கள் குழந்தைகள் பெற முடியாத ஈரினதம்பதியினர் போன்று தாங்களும் பரஸ்பரம் ஆதரவாகவும் ஒருவருக்கு ஒருவர் துணைபோகவும் நிலையான உறவுகளை ஸ்தாபித்துக்கொள்ளவும் முடியும் என நாம் முடிவுசெய்ய முடியும். இத்தகைய முடிவிற்கே சில கிருஸ்தவ சமூகங்களும் அரசாங்கங்களும் வந்துள்ளன. ஆனால் பஹாவுல்லா, மனித இயல்பு குறித்த தெய்வீக ஞானம் பெற்ற காரணத்தினால், இத்தகைய உறவு அனுமதிக்கப்படவில்லை அல்லது ஓரினக்காதலரின் நிலைக்கு அது பயன்மிக்க தீர்வும் அல்ல என குறிப்பிடுகின்றார். ஈரினதிருமணத்துள் ஈடுபட முடியாத அளவிற்கு ஓர் ஓரினக்காதலர் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை எனும்போது அவர் தனிக்கட்டையாக இருந்தும், எவ்வித உடலுறுவிலும் ஈடுபடாதிருக்கவும் வேண்டும் (என்பது அறிவுரை). திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஓர் ஈரின பாலியலருக்கும் இதுவே விதியாகும்.
ஒரினக்காதல் குறித்த ஓர் அனுகுமுறையை சுருக்கமாக ஆலோசித்ததில், ஓரினக்காதலர்பாலான பஹாய் மனப்பாங்கின் சில அம்சங்கள் யாவை? பஹாய் சமயத்தைச் சாராத ஓரினக்காதலர் ஒருவர்பால் கொள்ளும் அதே மனப்பான்மையே குடிப்பழக்கத்திற்கு ஆளான பஹாய் சமயத்தைச் சாராத ஒருவர்பாலும் கொள்ளப்படுகின்றது. இது குறித்த பஹாய் விதிமுறைகளை அவர் பின்பற்றிட எவ்வாறு பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாதோ அதே போன்று அவர்கள் குடிப்பழக்கத்தை விடுவார்கள் எனவும் பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாது. ஒரினக்காதலராக ஒரு பஹாய் இருப்பின், அதற்கான பல கருத்துக்கள் உள்ளன. பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி பின்வருமாறு எழுதியுள்ளார்: “மற்ற ஆன்மாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகு கடுமையாக நுண்ணாய்வு செய்திடும் அளவிற்கு நன்னெறி பூரணத்துவத்தின் ஒரு கட்டத்தை பஹாய்கள் நிச்சயமாகவே அடைந்திடவில்லை, மற்றும் ஒவ்வொரு தனிநபரும் அவரது சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கப்பட வேண்டும், மற்றும் தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான தூய விருப்பமும் வேண்டும். தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்ந்திட பல பஹாய்கள் முயலுகின்றனர், ஆனால், அவர்கள் அதில் தனிமையையும் ஒதுக்கப்பட்ட நிலையையும் மற்றும் துணையற்றநிலையையும் நம்பிக்கையின்மையும் அனுபவிக்கின்றனர், ஏனெனில் அவர்கள் தங்களின் ஓரினக்காதல் குறித்த விஷயத்தால் தாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெறுக்கப்படுவோம் எனும் பயமே காரணம். அதே சமயம், தங்களின் பிரச்சினையை சமாளிப்பதற்கும் தீர்ப்பதற்குமான முயற்சியில் உதவிக்கு எங்கு திரும்புவது என தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இத்தகைய ஆன்மாக்களின்பால் பஹாய் சமூகங்கள் பெரும் கருணையையும் ஆதரவையும் காண்பிக்க வேண்டும். இவ்வுலகில் கடவுளின் மகிமையையும் பண்புகளையும் பிரதிபலிக்கும் முயற்சியில், தவித்துக்கொண்டிருக்கும் எல்லாவிதமான ஆன்மாக்களுக்கும் பஹாய் சமூகம் ஒரு சரனாலயமாகவும் புகலிடமாகவும் இருக்கவேண்டும். இதை அடைவதற்கு ஆதரவு மிக்க ஒரு சிந்தனையும் உணர்வும் மிகுந்த சூழ்நிலை, ஊக்குவிக்கும் மற்றும் தேவைகளை புரிந்துகொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். ஒரு நிலையில் பார்க்கும் போது, உலகம் தான் சுமந்துகொண்டிருக்கும் மானிட பிரச்சினைகளை கொண்டுவர வரவேற்கும் ஒரு பணிமனையாக அல்லது ஆய்வுமனையாக பஹாய் சமூகம் இருக்கவேண்டும் மற்றும் சக பஹாய்களுடன் சேர்ந்து, நம்பிக்கையுடன் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் கருவிகளை பயன்படுத்தி முழு முயற்சியுடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் இக்குழப்பங்களுக்கான நிவாரணம் காணவும் முயலவேண்டும். பிரார்த்தனை, தியானம், கலந்தாலோசனை, பஹாவுல்லாவின் விதிமுறைகள் வழங்கும் ஆன்மீக வழிகாட்டல் ஆகியவை இக் கருவிகளாகும். இப்பணிமனை ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, ஆதரவு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கவும் வேண்டும்.

முழு பதிவையும் வாசிக்க »


பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமுமான பஹாவுல்லாவின் எழுத்துக்களை சுமார் 100 நூல்களாக தொகுக்கலாம். பல நூல்களையும், ஆயிரக்கணக்கில் நிருபங்களையும் அவரது 40 வருட சமயப் பணிக்காலத்தில் அவர் படைத்துள்ளார். பெரும்பாலான அவரது எழுத்துக்கள் இதுவரை மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று “மருத்துவருக்கான நிருபம்” என்பதாகும். உடல் நலம் குறித்து ஓர் அன்பரின் வினாக்களுக்கான பதிலாக இந்த நிருபம் வரையப்பட்டது. இந்த நிருபம் இதுவரை அதிகாரபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை ஆனால், அதன் சில பகுதிகள் தற்காலிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்:

பௌதீக குணப்பாடு

பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து, உடல்நலத்திற்கான சில கோட்பாடுகள்.

கடவுளே! அதிவுயர் அறிவாளரே! தொன்மையான நா மருத்துவர்கள் இல்லாத நிலையில் விவேகமிக்கவர்களை மனநிறைவுறச் செய்யக்கூடியதை உரைக்கின்றது.

மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.

வெற்று வயிறாக இருக்கும்போது உடற்பயிற்சி நன்மைபயக்கும்; அது தசைநார்களை வலுப்படுத்துகிறது. வயிறு நிறைந்திருக்கும்போது அது தீங்குமிக்கதாகும்.

தேவைப்படும் வேளையில், மருத்துவ உதவியை புறக்கணிக்காதீர்கள், ஆனால் உடல் நலமடந்தவுடன் போது அதை கைவிட்டுவிடுங்கள்

ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.

நோயை முதன்மையாக உணவுமுறையைக் கொண்டே குணப்படுத்துங்கள், மற்றும் மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலத்திற்கான நிவாரணம் ஒரே ஒரு மூலிகையில் நீங்கள் காணமுடிந்தால் பல்கூட்டான மருந்துவகைகளை பயன்படுத்தாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைகளை விட்டுவிடுங்கள், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே அதை பயன்படுத்துங்கள்.

வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…

நீங்கள் உணவு உண்டபின் அந்த உணவு படிவுற சற்று நடக்கவும்

(பற்களால்)அரைபட கடினமானவை விவேகமிக்கவர்களால் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறாகவே அதிவுயரிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகிறது.

காலையில் எளிய உணவு உடலுக்கு ஒளி போன்றது.

தீங்குவிளைவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்த்துவிடுங்கள்: அவை உலகில் துயரத்தை விளைவிக்கின்றன.

நோய்களுக்கான காரணங்களை கண்டறியுங்கள். இவ்வாக்கே இவ்வாய்மொழிதலின் முடிவாகும்.
(Star of the West, தொ. 13, எண். 9, டிசம்பர் 1922, ப. 252)

ஆண்டவரிலேயே நமது நம்பிக்கை இருக்க வேண்டும். குணப்படுத்துபவர், அறிவாளர், உதவுபவர் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை… மண்ணுலகு அல்லது விண்ணுலகில் உள்ள எதுவுமே கடவுளின் கைப்பிடிக்கு அப்பாற்பட்டதல்ல.

மருத்துவரே! நோயுற்றோரை குணப்படுத்துவதில், முதலில் தீர்ப்பளிக்கும் நாளுக்கு உடையவரான, கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள், பிறகு கடவுளால் தமது படைப்பினங்களின் குணப்பாட்டிற்கென விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்துங்கள். என் வாழ்வின் மீது ஆணையாக! எமது அன்பெனும் மதுவை அருந்திய மருத்துவர் (எவரோ), அவரது வருகை குணமளிக்கக்கூடியது, அவரது மூச்சு கருணையும் நம்பிக்கையும் ஆகும். உடல்கட்டமைப்பின் நலனுக்கு அவரையே பற்றிக்கொள்ளுங்கள். தமது சிகிச்சைமுறையில் அவர் கடவுளால் உறுதிபடுத்தப்படுகிறார்.
(Star of the West, தொ. 21, எண். 5, ஆகஸ்ட் 1930, ப. 160)

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.