Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

‘சரித்திரம்’ பகுப்புக்கான தொகுப்பு


“பதினாறு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு வயதையும் தாண்டிய மனமுதிர்ச்சியோடு தன் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவைத் தேர்ந்தெடுக்கின்றாள்.  இது “பதினாறு வயதினிலே” திரைக்கதை. ஆனால், 1982ல் வேறொரு பதினாறு வயதினிலே கதை நடந்தது. அக்கதையின் முடிவும் சோகம் நிறைந்தது ஆனால், நிறைவான ஒரு வாழ்க்கையை உள்ளடக்கியது.


மோனா மஹ்முட்நிஸாட்

அந்தப் பெண்ணுக்கும் பதினாறு வயது, அவளும் காதல் வயப்பட்டிருந்தாள், இறுதியில் அவளுடைய வாழ்க்கைப் பாடத்தின் அடிப்படையில் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஆனால், இந்தப் பெண் கொண்ட காதல் இறைவன் மீது கொண்ட தெய்வீகமான காதலாகும். இந்தக் காதலின் பயனாக அவள் தன் உயிரைத் துச்சமாக மதித்துத் தன் காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தாள். அவள் பெயர் மோனா மஹ்முட்நிஸாட். இன்று உலகம் முழுவதும் இந்தப் பெண்ணின் பெயரால் பல அறநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்மீகப் பார்வைப் பெற்றுள்ளனர். மோனா தான் வாழ்க்கையின் பயனாக “இரான் நாட்டின் தேவதை” எனும் பெயரையும் அடைந்தாள்.

இரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்…

கைது செய்யப்பட்ட பெண்களுள் தனது பதினாறாவது வயதை அடைந்திருந்த மோனாவும் இருந்தாள். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பேரார்வம் ததும்பும் குழந்தை முகம். அவளை எதற்காக கைதுசெய்திருந்தார்கள்? அவள் செய்த தவறுதான் என்ன? திருடினாளா? கொலை செய்தாளா? இல்லையில்லை, அதைவிட மிகவும் ‘மோசமான’ ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தாள். ஆம், ‘செய்யக்கூடாத’ ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டாள். குழந்தைகளுக்குக் கடவுள் அன்பையும் ஒழுக்கத்தையும் போதித்துவிட்டாள். உலகில் இதைவிட மோசமான ஒரு குற்றத்தை யாருமே செய்ததில்லை. கொலை கொள்ளை போன்ற சாதாரண குற்றங்களைச் செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு நன்னெறி பாடம் நடத்துவதா? அது ஒரு மாபெரும் குற்றம் அல்லவா.

சிறுவயதில் தாய்ப்பாலுடன் கடவுள்மீது அன்பையும் சேர்த்து அவளின் தாயார் ஊட்டியிருந்தார். மோனாவுக்கு வயதாக ஆக, இந்த அன்பு சற்றும் குறையாமல் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அவள் தன் குடும்பத்தாரின் மீது மட்டும் அவள் பாசம் கொள்ளவில்லை. உலகையே நேசித்தாள். தன் வழியில் குறுக்கிட்டோர் அனைவர் மீதும் அன்பு செலுத்தினாள். நன்கு பழக்கமானோரைத் திடீரெனக் கண்டால் கண்களில் நீர் வழிய அவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொள்வாள்.  பள்ளியில் அவள் அருகே இருந்தாலே போதும் என நினைக்கும் ஒரு சிநேகிதிகள் கூட்டம் அவளை எந்நேரமும் சுற்றியிருக்கும். இத்தகைய நற்பண்புகளால் “ஷிராஸ் நகரத்தின் தேவதை” எனும் பெயரும் அவள் பெற்றிருந்தாள். கல்விகேள்விகளில் தனிச்சிறப்பு, கலைத்திறன்கள், இனிமை நிறைந்த குரல்வளம் ஆகியவற்றை அவள் இயல்பாகவே பெற்றிருந்தாள். வயதுக்கு மீறிய விவேகமும் கடவுள் பக்தியும் அவளிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருந்தன. மானிடத்திற்கு சேவை செய்யவேண்டும் எனும் அவளின் அவாவிற்கு எல்லையே இல்லை.

மோனா உலகையே நேசித்தாலும், எல்லோரையும் விட அவள் அதிகம் நேசித்த ஒருவர் இவ்வுலகில் இருந்தார். அது அவளுடைய தந்தை. தந்தை, மகள் இருவருக்குமிடையில் இருந்த உறவு ஒரு மிகவும் விசேஷமான உறவு. தன் தந்தையின் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கி காதுகளால் கேட்க முடியாத, வார்த்தைகளுக்கு இடமில்லாத ஓர் உரையாடலில் மோனா ஈடுபடுவாள். மோனாவின் தந்தையும் மக்களின் சேவையில் சற்றும் சளைத்தவர் அல்ல. பலவிதமான சேவைகளில் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தவராவார். ஒரு காலத்தில் தமது பிறந்தகத்தை விடுத்து வேறொரு நாட்டிற்குச் சேவைச் செய்திட சென்றார். அங்குதான் அவரின் இரு பெண்களும் பிறந்தனர். அரசியல் நிலைமை சரியில்லாத நிலையில் அவர் தமது குடும்பத்தினரோடு மீண்டும் தமது தாயகத்திற்குத் திரும்பினார்.

மோனாவின் கடவுள் பக்தி அவள் குடும்பத்தினரின் சமய நம்பிக்கையின் பலனாக ஏற்பட்டதாகும். அவர்கள் தங்களின் தேசத்தின் அதிகாரபூர்வச் சமயத்தைச் சார்திருக்கவில்லை. கடவுள் அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாகவும், கோடிசூர்யப் பிரகாசராய் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் நிழலை அவர்கள் சரனடைந்திருந்தனர். பாரம்பரியத்தைச் சாராத நம்பிக்கைகள் எப்போதுமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, மாறாக, அத்தகைய சிறுபான்மை நம்பிக்கையினர் தங்களுக்கென சொந்த நம்பிக்கைகளைப் பெற்றிருக்கும் உரிமையை இழந்து பெரும்பான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையினை அவர்களும் பற்றிக்கொள்ளவேண்டுமென நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தவறினால் கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சமயங்களின் வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயமாகும்.

இரான் நாட்டின் சிறுபான்மை பஹாய் சமூகத்தினர் தங்கள் சமயத்தின் தோற்றத்திலிருந்து இத்தகைய கொடுங்கோண்மைகளுக்கு ஆளாகியே வந்துள்ளனர். இருபதிலிருந்து முப்பதாயிரம் விசுவாசிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்காகத் தங்களின் உயிரைக் கடவுளின் பாதங்களில் மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர். மோனாவின் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஹாய்களின் புனிதஸ்தலங்களுள் ஒன்றான பாப் அவர்களின் இல்லம் 1980களின் ஆரம்பத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சிறுபான்மையினரான பஹாய்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திடும் சமயவாத அரசாங்கத்தின் முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. நல்ல வேளையாக மோனாவின் குடும்பத்தினர் அதற்கு முன்பாகவே அத்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் புனிதயாத்திரையை நிறைவு செய்திருந்தனர். ஒரு நாள் தன் தந்தையாரோடு பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளைக் காணச் சென்றிருந்த மோனா, தன் இல்லம் திரும்பியதும் தன் தாயை விளித்து, “அம்மா, நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமா,” எனக் கேட்டாள். அதற்கு மோனாவின் தாயார், “இதென்ன திடீர் ஆசை,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா இன்று பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளிடையே நடந்து வந்துள்ளேன். என் காலனிகளில் அந்த இல்லத்தின் புனித மண் பதிந்துள்ளது. அதனால்தான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமாவென கேட்டேன்,” என்றாள். பிறகு கண்களின் நீர் வழிய தன் அறைக்குள் சென்று அன்றைய அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினாள்.

பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகரித்த போது, தனக்கும் தன் தந்தைக்கும் கடவுளின் விதி என்னவாக இருக்கும் என்பது குறித்து மோனாவுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றின. ஒருநாள் தானும் தன் தந்தையும் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்படப்போகின்றார்கள் என ஒரு கனவு கண்டாள். அதன் பிறகு மோனாவிடமிருந்த நற்பண்புகளோடு வேறொரு நற்பண்பும் சேர்ந்துகொண்டது, அது ‘பயமின்மையாகும்’.

இரான் நாட்டின் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுங்கோண்மைகள் சிறிது சிறிதாக அந்நாட்டு பாடசாலைகளையும் சென்றடைந்தது. குழந்தைகள்கூட தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு முறை சமய நம்பிக்கைக் குறித்து மோனாவின் வகுப்பினர் கட்டுரை எழுதிட பணிக்கப்பட்டனர். சமய நம்பிக்கைச் சுதந்திரம் பறிக்கப்படுவதை மனதில் வைத்து மோனா ஒரு கட்டுரை எழுதினாள்.

“உலகிலுள்ள ஒளிமிகு வார்த்தைகளுள் “சுதந்திரம்” எனும் வார்த்தையே பேரொளி மிக்க வார்த்தையாகும். மனிதன் என்றும், இன்றும், இனி என்றென்றும் சுதந்திரத்தையே விரும்புவான்.  ஆனால், அவனிடமிருந்து சுதந்திரம் பறிக்கப்படுவது ஏன்? மனிதனின் பிறப்பிலிருந்து அவனுக்குச் சுதந்திரம் இல்லாமல் போவது ஏன்? ஆரம்பத்திலிருந்தே வலிமைமிக்க ஆனால் அநீதியான மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக பலவிதமான அடக்குமுறைகளையும் கொடுங்கோண்மைகளையும்  பயன்படுத்திவந்துள்ளனர்…”

“இச்சமூகத்திற்கான எங்கள் குறிக்கோள்களை வெளிப்படுத்திடவும்; நான் யார் என்பதையும் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், என் சமய நம்பிக்கையை பிறருக்கு தெரிவிப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரமளிக்க ஏன் மறுக்கின்றீர்கள்; என் கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு எழுதவோ வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அதுபற்றி பேசுவதற்கோ எனக்கு சுதந்திரம் கொடுப்பீர்களா? ஆம், தன்னிச்சையென்பது ஒரு தெய்வீகக் கொடையாகும், அது எங்களுக்கம் உரியாதாகும், ஆனால் அதை எமக்கு மறுக்கின்றீர்கள். ஒரு தனிநபர் பஹாய் எனும் முறையில் என்னை சுதந்திரமாகப் பேச விடுவீர்களா? ஒரு புதிய வெளிப்பாடு தோன்றியுள்ளது, ஒரு பிரகாசமிகு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைக்கும் தடித்தத் திரைகளை அகற்றுவீர்களா?”

“ஒரு வேளை எனக்கு சுதந்திரம் இருக்கவே கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். கடவுள் மனிதனுக்கு இந்தச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அவர்தம் சேவகராகிய நீங்கள் அதை என்னிடமிருந்து பறிக்க முடியாது. கடவுள் எனக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். ஆகவே, “புனிதராகிய பஹாவுல்லாவே மெய்யராவார்”. கடவுள் எனக்குப் சொல் சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆகவே, “கடவுள் வெளிப்படுத்தியுள்ள அந்த ஒருவர் பஹாவுல்லாவே ஆவார்! அவரே பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் அவரது திருநூலே நூல்களுக்கெல்லாம் தாய் நூலும் ஆகும்.”

வெளிப்படையான இக்கட்டுரையின் விளைவாக மோனா அதுவரை பள்ளியில் பெற்றிருந்த சிறிதளவு பேச்சு சுதந்திரத்தையும் இழந்தாள்.

சாதாரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நமது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. அனுமானிக்கலாம் ஆனால், நிச்சயமாக எதையும் கூற முடியாது. மோனாவுக்கோ தன் எதிர்காலம் என்னவாகும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அவள் கண்ட ஒரு கணவின் வாயிலாக தன் எதிர்காலம் என்னவாகும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. இரான் நாட்டின் பஹாய்கள் பலரைக் கொள்ளைக்கொண்ட கொடுங்கோண்மைகள் ஒரு நாள் மோனாவின் இல்லத்திற்கும் வந்துக் கதவைத் தட்டின……

தொடர்ந்து கதையை வீடியோவில் காணவும்…

தொடர்பு கொண்ட பிற பதிவுகள்

பாப் அவர்கள்
பஹாவுல்லா
வெண்பட்டாடை (தாஹிரியின் மரணம்)
பாஹிய்யா காஃனும்
ஸைனாப்

முழு பதிவையும் வாசிக்க »


பிர்ஜந்த் மாநிலத்தின் குஸேஃப் நகரில் வாழ்ந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி எனும் பிரபல செல்வந்தர் அருட்பேரழகரான பஹாவுல்லவின் விசுவாசியாக வாழ்ந்து வந்தார். பஹாவுல்லாவை அவர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவரின் உறவினர்களும் கடவுளின் சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி பஹாவுல்லாவை தரிசிக்கும் பொருட்டு புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். சென்றடைந்தவுடன் அவர் முதல் நாள் மற்றும் மறுநாள் பிற புனிதயாத்ரீகர்களோடு பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்தார். ஆனால், விடுதிக்கு வந்தவுடன் தனது மனதிலும் ஆன்மாவிலும் பின்வருமாறு சிந்தனை செய்தார்: சில ஆசாதாரன மற்றும் தெய்வீக சம்பவங்களை கண்டுகழித்திடும் பொருட்டு இந்த ஆக்கோ நகரை வந்தடைய நான் ஆறு மாத காலம் கஷ்டங்களையும் சுமைகளையும் தாங்கி பிரயானம் செய்து வந்தேன். ஆனால், பஹாவுல்லாவோ மற்ற சாதாரன மனிதர்களைப்போலவே பேசுகின்றார் ஆணைகளையும் போதனைகளையும் வழங்குகின்றார். இங்கு ஒரு வேளை அசாதாரன சம்பவங்களும் அற்புதங்களும் கிடையாது என நினைத்துக்கொண்டார்.

நான் இவ்விதமான சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த போது மூன்றாம் நாள் ஒரு சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லா உம்மை தனியாகவும் யாருடனும் இல்லாமலும் சந்திக்க விரும்புகிறார் என அறிவித்தார். நானும் உடனடியாக அவரது முன்னிலைக்கு சென்று அவரோடு நெருக்கமுற அந்த அரையிலிருந்த திரைத்துனியை அகற்றினேன். உடனடியாக அவர் முன்னிலையில் நான் வணங்கி எழுந்த போது பஹாவுல்லாவை அதியற்புதமிக்க பிரகாசமான கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாக கண்டேன். அந்த ஒளியின் அனுபவத்தின் தீவிரத்தின் பயனாக நான் மயக்கமுற்று தரையில் சாய்ந்தேன். அவ்வேளை என் காதில் விழுந்ததெல்லாம்: “கடவுளின் பாதுகாப்பில் செல்வாயாக”, எனும் வார்த்தைகளே.

சேவகர்கள் என்னை தாழ்வாரத்திற்கு இழுத்துச் சென்றும் பிறகு யாத்ரீகர்கள் இல்லத்திற்கும் கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்குப் பின் இரண்டு நாட்கள் என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. என்ன நடந்ததென்றால், நான் சென்றவிடங்களில் எல்லாம் அவரது ஆட்கொள்ளும் பிரசன்னைத்தையே உணர்ந்தேன் மற்றும் மற்ற யாத்ரீகர்கள் அனைவரிடமும் அவர் இங்கிருக்கின்றார் இங்கிருக்கின்றார் என கூறிக்கொண்டிருந்தேன்.

என்னோடு இருந்த மற்ற யாத்ரீகர்கள் என் பிதற்றல்களால் பெரிதும் தொந்திரவு அடைந்து அப்துல் பஹாவிடம் அது பற்றி கூறி எனக்கு உதவிடுமாறு வேண்டிக்கொண்டனர். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அதே சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லாவின் முன்னிலைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவரது அன்மையை அடைந்தவுடன், அவர் என்மீது தமது அன்புக் கருணையையும் அருள்மிக்க வார்த்தைகளையும் பொழிந்தார். அவர் என்னை அமரும்படி கூறினார்.

பிறகு பஹாவுல்லா: ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் அவர்களே! தெய்வீக சாரத்தின் அவதாரங்கள் மனித உருவிலும் மேலங்கிகளிலும் வெளிப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். மறைவெனும் திரையின் பின் வதியும் அவர்களின் மெய்யுறு (உலகில்) தோற்றமளித்தால் உம்மைப்போன்ற மானிடர்கள் சுயநினைவிழந்தும் மயக்க நிலைக்கு சென்றுவிடுவர் என கூறினார். அவர் மேலும்: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத்தரப்படுகிறது என உமக்கு தெரியுமாவென விளவினார்”. அதற்கு நான் தலை வணங்கி எனக்குத் தெரியாதென கூறினேன்.

பஹாவுல்லா விளக்கினார்: “கிளியின் உரிமையாளர்கள் கிளியை ஒரு கூண்டுக்கள் அடைப்பார்கள். பிறகு அவர்கள் அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைப்பார்கள். அதன் பின் ஒரு மனிதன் அந்த கண்ணாடிக்குப் பின் மறைந்துகொண்டு சொற்றொடர்களையும் வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பார். தன் முன் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உரு கொண்ட வேறொரு கிளி பேசுகின்றது என எண்ணிக்கொண்ட அக் கிளியும் அது போன்றே தானும் பேச ஆரம்பிக்கும். மாறாக, உண்மையில் கண்ணாடிக்குப் பின்னால் உள்ள மனிதர் ஆரம்பத்திலிருந்தே தம்மை வெளிப்படுத்திக் கொண்டால், அக் கிளி பேச கற்றுக்கொள்ளப்போவதே இல்லை. அது போன்றே, தங்களின் விஷ்வரூபத்தில் தோன்றி மனிதர்களை பீதியடையச் செய்யாதிருக்க தெய்வீக அவதாரங்களும் மனிதர்களின் உருவிலும் உடையிலும் தோன்றுகின்றனர்.”

பஹாவுல்லாவின் தரிசனத்திற்கு பின் நாடு திரும்பிய இம்மனிதர் முற்றாக தன்மைமாற்றம் பெற்றவராகவும் தமது இறுதிநாள் வரை பிறருக்கு போதனை செய்தும் இவ்வுலக வாழ்வை தாம் எப்போது நீக்கப்போகின்றார் என்பது குறித்து ஆன்மீக அகவிளக்கமும் அடைந்தார்.

பாயாம் இ பஹாய்

முழு பதிவையும் வாசிக்க »


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.

முழு பதிவையும் வாசிக்க »


பஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

டால்ஸ்டாய்

டால்ஸ்டாய்


லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

லியோ டால்ஸ்டாய் முதன் முதலில் 1884ல் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் 22 அக்டோபர் 1903ல்:

“நான் நீண்ட நாட்களாகவே பாப்’யிக்கள் குறித்து அறிந்து வைத்து அவர்களுடைய போதனைகளின்பால் எப்போதுமே ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளேன். இந்த போதனைகள்… பிரிவினைகள் உண்டாக்கும் குழப்புகின்ற கசடுகளை நீக்கி, மனிதகுலத்தையே ஒரே பொது சமயத்தின் கீழ் ஒன்றிணைக்கும் இலட்சியமுடைய இப்போதனைகள், என்னைப் பொறுத்தவரை… மிகவும் சிறந்த எதிர்காலமுடையவை. ஆகவே, பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்தும் பழைய மூடநம்பிக்கைகளிலிருந்த புதிய பிரிவுகளை உருவாக்கக்கூடிய புதியனவற்றை ஸ்தாபிக்காமலும் இருக்கும் இந்த பாப்’யிக்களின் போதனைகள்… அவை சகோதரத்துவம், சமத்துவம், மற்றும் அன்பு குறித்த முக்கிய அடிப்படை கருத்துக்களை அவர்கள் சார்ந்திருப்பதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற்றிருக்கின்றனர்… ஆகவே பாப்’யி சமயம் மக்களுக்கு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையும், கடவுள் சேவையில் தங்கள் உலகவாழ்வையே அர்ப்பனிக்கவும் போதிப்பதால் நான் பாப்’யி சமயத்தின்பால் பெரிதும் அனுதாபம் கொண்டவனாவேன்.” மறுபடியும், 1908ல், டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: “இஸ்லாம் சமய பின்னனியிலிருந்து தோன்றியுள்ள பாப்’யிக்களின் போதனைகள் பஹாவுல்லாவின் போதனைகளால் சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு இப்போது மிகச் சிறந்ததும் மிகத் தூய்மையானதுமான சமய போதனைகளை நமக்கு வழங்குகிறது.”

மூலம்: The Promise of All Ages, Christophil (aka)
George Townshend அவர்கள் எழுதிய நூல், ப. 26
ருஷ்ய மொழியின் தற்காலிக மொழிபெயர்ப்பு:
“ருஷ்யாவில் பஹாய் சமயம்” by Nancy Ackerman & Graham Hassall, (Appendix II in the Russian edition of Hatcher & Martin அவர்களின் பஹயா சமயம் பற்றிய அறிமுக நூல்) ப. 259-262ல் உள்ள வரிகள் :

“ருஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாயின் கவனத்தையும் பாப்’யி சமயம் கவர்ந்தது, அவர் ஆரம்பத்தில் O.S. லெபதேவிடமிருந்து பாப்’யிக்கள் குறித்து தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவர் விண்ணேற்றம் அடைந்த வரை, சுமார் 16 ஆண்டுகளுக்கு அவர் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் குறித்து அவர் தமது தபால்களிலும் நாட்குறிப்பிலும் பல முறை எழுதியுள்ளார். அதே சமயம் அவர் கிரினெவ்ஸ்காயாவின் நாடகம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். (நாடக எழுத்தாளரான இசாபெல்லா கிரினெவ்ஸ்காயா பல நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் அவர் பாப் அவர்கள் பற்றியும் ஒரு முழு நாடகம் எழுதியுள்ளார். இந்த நாடகம் St. பீட்டர்ஸ்பர்க்கில் இரு வெற்றிகரமான அரங்கேற்றம் கண்டது. கிரினெவ்ஸ்காயா பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு, பல முறை அப்து’ல்-பஹாவையும் ஷோகி எஃபெண்டி எஃபெண்டியையும் சந்தித்துள்ளார்.) டால்ஸ்டாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் செய்து வரும் காரியங்கள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதில் மேலும்… பாப்’யி சமயத்தின் போதனைகள்… சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அன்பு குறித்த அஸ்திவார மற்றும் அடித்தல கருத்துக்களை நிலைநிறுத்துவதால் அவற்றுக்கு மகத்தான வருங்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். (1)

டால்ஸ்டாயின் இக்கடிதம் பிரசுரிக்கப்பட்டு ருஷ்யாவில் பஹாய் சமயத்தின்பால் பெரும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பெருகியது.

உண்மையான சமய நம்பிக்கைகளின் ஆதரவாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார், மற்றும் அவரது ஆன்மீக வேட்கை மற்றும் ஓர் அனைத்துலக சமயத்திற்கான உடனடி தேவை, உண்மையை தன்னிச்சையாக தேடுவது, சமயம் மற்றும் பகுத்தறிவுக்கிடையிலான இணக்கம், சமய சடங்கு சம்பிரதாயங்களை எளிமைப்படுத்துதல், அனைத்துலக கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகளோடு ஒத்திருந்தன. பஹாய் சமயத்துடனான அவரது உறவு சற்று சிக்கலானதாகவும், சில நேரங்களில் சமநிலையற்றும் இருந்தது உண்மையே: சமயத்தின்பால் அவர் வலியுறுத்திய பெரும் மதிப்பும் மற்ற நேரங்களில் அதன்பால் அவர் கொண்டிருந்த சிரத்தையின்மையும் குறைகூரல்களும் மாறி மாறி வந்தன. நம்பிக்கையான மூலாதாரங்கள் கிட்டாததால், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாயிக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இத்தகைய குறைபாடு நிறைந்த தகவல்களோடு அவர் தமது சொந்த தத்துவார்த்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த உள்ளார்ந்த முரண்பாடுகளும், அதன் நம்பிக்கைகள் அவரது கருத்துக்களோடும் இலட்சியங்களோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் சில வேளைகளில் அவர் பஹாய் சமயத்தை உதறித்தள்ளவும் உந்தப்பட்டார். ஆனால், அவர் பஹாய்களுடனான மற்றும் அதனை ஆய்வு செய்வோருடனான தமது தொடர்பிலும் கடவுளின் இயல்பு, தேசபக்தி, கடவுள் அவதாரங்கள், சமயங்களின் ஒற்றுமை, மற்றும் மனம் மற்றும் ஆன்மவுக்கிடையிலான தொடர்பு போன்ற தம்மை வாட்டி வந்த கேள்விகள் குறித்து ஆராயத் தவறியதில்லை: (2)

டால்ஸ்டாயின் கடிதங்களிலிருந்து சமயம் சம்பந்தமான கேள்விகளில் ஆர்வமுடையோரிடமிருந்து அவர் பல பஹாய் நூல்களைப் பெற்றிருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருடைய நாட்குறிப்பிலிருந்து கிடைக்கும் பாப்’யி மற்றும் பஹாய் சமயம் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் தெளிவாக இல்லை, ஆனால் அவற்றிலிருந்து பஹாய் சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை என்பது தெளிவு. டால்ஸ்டாய் பஹாய் சமயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் அப்து’ல்-பஹாவுக்கு தெரியும் மற்றும் ருஷ்ய பிரதேசங்களில் அடங்கியிருந்த பஹாய்கள் (பாக்குவைச் சார்ந்த அலி-அக்பர் நாக்ஜவானி உட்பட) டால்ஸ்டாயோடு தொடர்பு கொண்டு பஹாய் சமயம் குறித்த உறுதியான தகவல்களை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாக்ஜவானிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் பற்றி தாம் ஒரு நூல் வெளியிட விரும்புவதாக டால்ஸ்டாய் தெரிவித்திருந்தார். 1901ல் டால்ஸ்டாயிக்கு “அமைதி” எனும் தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பியிருந்த பாரசீக தூதருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்: உங்கள் தாய்நாட்டில் உள்ள பாப்’யிக்களைப் போன்று உலகம் முழுவதும் மக்கள் உள்ளனர். அவர்கள் உண்மையான சமயத்தை பின்பற்றியும், எங்கெங்கும் அவர்கள் தொடர்ந்தாற்போன்றகொடுமைகளை அனுபவித்தாலும், அவர்களின் கருத்துக்கள் அதிகரிக்கும் துரிதத்துடன் பரவி இறுதியில் அவை காட்டுமிராண்டித்தனத்தை வெற்றிகொள்ளவே செய்யும்…” (3)

1902 செப்டம்பரில், அப்து’ல்-பஹாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை அஸிஸுல்லா ஜஸாப் எனும் பெயர் கொண்ட இரான் நாட்டு பஹாய், டால்ஸ்டாயின் இல்லமான யாஸ்னாயா போலியானாவுக்கு கொண்டு வந்தார். அக்கடிதத்தில் “சமயங்கள் எனும் உலகில் உங்கள் பெயர் நல்லனவற்றை ஞாபகப்படுத்திட செயல்படுக. பல தத்துவ ஞானிகள் தோன்றியுள்ளனர், மற்றும் அவர்கள் தங்கள் கொடிகளை, ஐந்து மீட்டர் அளவுக்கு என கொள்வோம், உயர்த்தியுள்ளனர். நீரோ 10 மீட்டர் அளவுக்கு உமது கொடியை உயர்த்தியுள்ளீர்; ஒறுமைத்தன்மை எனும் சமுத்திரத்தில் உம்மை ஆழ்த்திக் கொள்வீராக அதனால் என்றும் நிலையான கடவுளின் துணை உமக்குக் கிட்டும்,” எனும் வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன. (4)

அந்த பஹாய் அன்பர், பஹாவுல்லா அவரது சமயம் மற்றும் டால்ஸ்டாயிக்கும் இடையில் என்னதான் தொடர்பு எனும் கேள்விக்கு டால்ஸ்டாய் பின்வருமாறு பதிலளித்தார்: “அதை (பஹாவுல்லாவின் செய்தியை) நான் எவ்வாறுதான் மறுக்கக்கூடும்?… இச்சமயம் நிச்சயமாகவே உலகையே தன்பால் வெல்லும்.” பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் இக்காலத்தின் உணர்வுகளோடு ஒத்திருப்பதால், அவை காலப்போக்கில், மானிடத்தின் நலனை உறுதி செய்யும் வகையில் உலகில் உறுதியாக நிலைநிறுத்தப்படும். (5)

தமது வாழ்வின் இறுதி நாட்களில், பஹாவுல்லாவின் படைப்புக்களில் பாப் அவர்களின் போதனைகள் அடைந்திருக்கும் மேம்பாடுகள், சமயங்களில் உள்ள மிக உயரிய மற்றும் தெளிவான விஷயங்களைப் பிரதிநிதிக்கின்றன எனும் முடிவுக்கு வந்தார். 1910ல் தமது மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அது மிகவும் ஆழம்மிக்கது. இத்தகைய ஆழம்மிக்க சமயம் வேறு எதையும் நான் அறியேன்.” (6)

1. Moojan Momen, The Babi and Bahá’í Religions, ப. 52
2. Luigi Stendardo, Leo Tolstoy and the Bahá’í Faith, Ch. 3-4
3. L. N. Tolstoy, Polnoye sobraniye sochinenii [Complete Works] v. 80, p. 102
4. Stendardo, ப. 2
5. Momen, ப. 30
6. Tolstoy, Complete Works, v. 78, ப. 306
7. D.P. Makovitskii, U Tolstogo: 1904-1910 Yasnopolyanskiye zapiski (With Tolstoy: 1904-1910, குறிப்புகள் from Yasnaya Polyana] Moscow, Nauka 1979, v. 4, ப. 255

முழு பதிவையும் வாசிக்க »

ஆசிய்யி காஃனும்


ஆசிய்யி காஃனும்
(பாஹிய்யா காஃனும் வாய்மொழிந்தவை)

திருமணம்

பஹாவுல்லாவுக்கு ஏறத்தாழ பதினைந்து வயதாகிய போது, அவரது மூத்த தமக்கையாகிய  சாரிஃ காஃனுமுக்கும், யால்ரூட் நகரை சார்ந்த மிர்ஸா இஸ்மாயில்-இ-வஸீரின் மகனாகிய மிர்ஸா மஹ்மூட்டுக்கும் திருமணம் நடந்தது. புதிய சமயத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மிர்ஸா மஹ்மூட்டுக்கு ஓர் இளைய தங்கை இருந்தார். அவருடைய பெயர், ஆசிய்யி காஃனும் என்பதாகும். இவர் கவர்ச்சிமிக்கவர், துடிப்புமிக்கவர், மற்றும் பெரும் அழுகுடையவர். இவர் பருவமடைந்ததும், சாரிஃ ஃகானும் தமது தந்தையை அனுகி ஆசிய்யி காஃனுமைத் தமது தம்பியாராகிய பஹாவுல்லாக்குப் பெண் கேட்கும்படி வேண்டினார். அப்போது பஹாவுல்லா பதினெட்டு வயதை அனுகிக்கொண்டிருந்தார். இவர்களுடைய திருமணம் 1835ம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது. இந்த ஆசிய்யி ஃகானுமே மாஸ்டராகிய அப்துல் பஹாவின் தாயார் ஆவார்.

பாஹிய்யா காஃனும் கூறியவை

அவர் மிர்ஸா இஸ்மாயிக்  எனும் ஒரு உயர்நிலை பாரசீக வஸீரின் ஒரே மகளாவார். இந்த வஸீரும் மிர்ஸா அப்பாஸ் புஸூர்க்காகிய என் பாட்டனாரும் பெரும் செல்வம் படைத்தவர்கள். என் தாயாரின் சகோதரர் என் தந்தையாரின் சகோதரியை மணந்தபோது, அந்த இரண்டு மேல்மட்ட குடும்பங்களின்  இரட்டை உறவு மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. “செல்வத்தோடு செல்வம் சேர்ப்பது இதுவென” மக்கள் பேசிக்கொண்டனர். ஆசிய்யி காஃணும் அவர்களின் சீர்வரிசைகள் அவருடைய குடும்பத் தகுதிக்கு ஏற்றவாறு மிக அதிகமாகவே இருந்தன. அவர் தமது கனவரின் வீட்டுக்கு வந்த போது நாற்பது கோவேறு கழுதைகளில் அவருடைய பொருள்கள் சுமந்துவரப்பட்டன.

ஆசிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டி ஆகியோரின் கல்லரைகள்

திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு பொற்கொல்லர் அவருடைய வீட்டிற்கு வந்து நகைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய உடைகளின் பொத்தான்கள் கூட தங்கத்தினாலும் வைரங்களாலும் ஆனவை. (இந்தப் பொத்தான்கள் பஹாவுல்லா நாடுகடுத்தப்பட்டு திஹரான் நகரிலிருந்து பாக்தாத் செல்லும் மிகக்கடுமையான பயணத்தின் போது ரொட்டிக்காக பண்டமாற்று செய்யப்பட்டன) நான் அவரை முதன் முதலில் கண்டது போல் நீங்கள் காண முடிந்தால்! அவர் உயரமாகவும், மெல்லிய தேகம் கொண்டவராகவும், மென்நயம்மிக்கவராகவும்,  கருநீலக் கண்களுடையவராகவும், பெண்டிரிடையே ஒரு முத்தாகவும், ஒரு மலராகவும் விளங்கினார்.

சிறுவயது முதற்கொண்டே அவருடைய விவேகமும் நுண்ணறிவும் தனிச்சிறப்பு மிக்கவையாக விளங்கியதாக நான் அறிந்துள்ளேன். என் சிறு வயது முதலான அவரைப் பற்றிய என் ஞாபகத்தில், அவர் தமது குணபாவத்திலும் வனப்பிலும் ஒரு ராணியைப் போல் விளங்கியே வந்துள்ளார். அனைவரைப் பற்றியும் அக்கறை கொண்டவராகவும், மென்மைமிக்கவராகவும், வியக்கவைக்கும் தன்னலமற்றவராகவும், இருந்தார். அவருடைய எந்த ஒரு செயலும் அவருடைய தூய்மையான இதயத்தை வெளிப்படுத்தத் தவறியது கிடையாது. எங்கெங்கு அவர் சென்ற போதும் நான்கு திசைகளையும் மென்மையான பணிவெனும் நறுமணத்தால் அரவணைக்கும், அன்பும் மகிழ்ச்சியும் மிக்க ஒரு சூழ்நிலையை அவருடயை பிரசன்னம் உருவாக்கியது.

என் பெற்றோர்கள், அவர்களுடைய திருமணத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே, அரசாங்க அலுவல்கள், சமூக சடங்குகள், பாரசீகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், பொருள்வளம் மிகுந்தவர்களும் கடைப்பிடித்து வந்த ஆடம்பர வாழ்வுமுறைகள் ஆகியவற்றில்  குறைந்த அளவே கலந்துகொண்டனர்; என் தாயாரும் அவருடைய மேன்மைமிகு கனவரும், இத்தகைய லௌகீக மகிழ்ச்சிகளை அர்த்தமற்றவை என கணக்கிட்டு, ஏழைகள், வாட்டமுற்றோர், துன்பமுற்றோர் ஆகியோருக்கு உதவுவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதையே விரும்பினார்கள்.
எங்கள் வீட்டு வாசலிலிருந்து எவருமே திருப்பியனுப்பப்பட்டதில்லை; வருகையளித்த எல்லாருக்குமே எங்கள் விருந்து மேஜை தயாராக இருந்தது. ஏழைப் பெண்கள் என் அம்மாவைக் காண அடிக்கடி வருவார்கள்; அவரிடம் தங்கள் சோகக் கதைகளைக் கூறுவார்கள்; அவருடைய அன்பான உதவியின் மூலமாக ஆறுதலும், தேறுதலும் பெற்றுச் செல்வார்கள்.

என் தந்தையை எல்லாருமே “ஏழைகளின் தந்தை” என அழைத்த அதே வேளை என் தாயை “ஆறுதலின் அன்னை,” என அழைத்தார்கள். அதிலும், என் தாயின் முகத்தைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே ஏறெடுத்துப் பார்த்ததுண்டு.

இவ்வாராக எங்களுடைய அமைதியான நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சில வேளைகளில் நாட்டுப்புறத்தில் உள்ள எங்களுடைய வீட்டுக்கு நாங்கள் செல்வதுண்டு; அங்கு என் அண்ணன் அப்பாஸும் நானும் அற்புதமான பூக்கள் மலர்ந்தும் பழுத்த பழங்களுமுடைய அழகான தோட்டங்களில் விளையாட மிகவும் விரும்புவோம்; ஆனால் என் இளவயதில் நடந்த இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் எனக்கு மங்கலாகவே இருக்கின்றன.

ஒரு நாள், எனக்கு அப்போது ஆறு வயதுதான் இருக்கும், நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது, ஒரு சில மூளை குழம்பிய பாப்‘இக்களால் ஷா மன்னர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது நியாவரானில் உள்ள தமது நாட்டுப்புற வீட்டிற்கு என் தந்தை சென்றிருந்தார். அஃது அவர் வசமிருந்த சொத்தாகும். அங்கு வசித்த கிராமவாசிகள் அனைவரும் என் தந்தையால் பராமரிக்கப்பட்டு வந்தவர்களாவர்.

திடீரென ஒரு சேவகன் என் அம்மாவைக் காண திகிலுடன் ஓடி வந்தார். “நமது யஜமானர், நமது யஜமானரைக் கைது செய்துவிட்டார்கள், நான் என் கண்ணால் கண்டேன்,“ என கூக்குரலிட்டான்.

அவர் பல மைல்கள் நடத்திவரப்பட்டுள்ளார்! ஐயோ, அவரை அவர்கள் அடித்துவிட்டிருக்கின்றார்கள்! அவர் பாஸ்டினாடோ சித்திரவதையை அனுபவித்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள்”. அவருடைய கால்களில் இரத்தம் வடிந்துகொண்டிருக்கின்றது. அவருடைய கால்களில் காலணிகள் இல்லை. அவருடைய தலைப்பாகையையும் காணவில்லை! அவருடைய மேலாடைகள் கிழிந்திருக்கின்றன! அவருடைய கழுத்தைச் சங்கிலிகளால் பிணைத்திருக்கின்றார்கள்!

பாவம், என் தாயாரின் முகம் சிறிது சிறிதாக வெழுத்து வந்தது. சிறார்களாகிய நாங்கள் பெரிதும் பயப்பட்டிருந்தோம்; எங்களால் உரக்க அழவே முடிந்தது. உடனடியாக எல்லாரும், எங்கள் உறவினர்கள், நண்பர்கள், சேவகர்கள் உள்பட அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து ஓடிவிட்டார்கள். இஸ்ஃபாண்டியார் எனப்படும் ஒரே ஒரு சேவகரும் ஒரு பெண்ணும் மட்டும் ஓடிப்போகவில்லை.

எங்கள் மாளிகை, மற்றும் அதனைச் சுற்றிய சிறிய வீடுகள் அனைத்தும் சூரையாடப்பட்டன. அவற்றில் இருந்த மரச்சாமான்கள், பொக்கிஷங்கள், யாவுமே மக்களால் திருடப்பட்டன. எங்கள்பால் எப்போதுமே அன்பாக இருந்த எங்கள் தந்தையின் தம்பியாகிய மிர்ஸா மூசா, என் தாயாரும் அவருடைய மூன்று குழந்தைகளும் தப்பிச் சென்று மறைந்துகொள்ள உதவினார். என் தாயார் தமது திருமண சீர்வரிசைகளிலிருந்து ஒரு சிலவற்றை பாதுகாப்பாக மறைத்துவிட்டிருந்தார். எங்களுடைய பரந்த சொத்துக்களில் மீதமிருந்தவை இவை மட்டுமே.

இவை விற்கப்பட்டன; அந்தப் பணத்தைக்கொண்டு சிறையில் இருந்த என் தந்தைக்கு என் தாயார் சிறைக்காவலர்களின் மூலம் உணவு கொண்டுசெல்லப்பட வழி செய்தார்; மற்ற செலவுகளை ஈடு செய்யவும் வழி வகுத்தார். இப்போது நாங்கள் சிறைக்கு அருகாமையிலிருந்த ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம். மிர்ஸா யாஹ்யா (ஸூப்-இ-அஸால்) பேரச்சத்துடன் மாஸிந்தரான் ஓடிச் சென்றார்; அங்கேயே அவர் மறைந்தும் இருந்தார்.

ஆகா, அந்த நேரத்தில் என் தாயார் அனுபவித்த பெரும் துயரத்தை என்னவென்றுதான் சொல்வது! குழந்தைப் பேற்றை எதிர்நோக்கிய (இதை நான் இதற்குப் பிறகே அறிய வந்தேன்) எந்த ஒரு பெண்ணும் எதிர்நோக்கக்கூடியதற்கும் அதிகமானதுதான் அந்தத் துயரம். என் தந்தை அடைக்கப்பட்டிருந்து சிறை மிகவும் பயங்கரமானது; பூமிக்குக் கீழே ஏழு தளங்கள் இரங்கவேண்டும்; கனுக்கால் அளவு கஸ்மலம் நிறைந்தும், புழுப்பூச்சிகள் பரவியும், விவரிக்கமுடியாத துர்நாற்றமுமாக அந்த இடம் இருந்தது.

இவற்றோடு சேர்ந்து அந்தக் கொடுமையான இடத்தில் சிறிது கூட ஒளி கிடையாது. அதனுள் நாற்பது பாப்‘இக்கள் அடைக்கப்பட்டிருந்தனர்; கொலைகாரர்களும் வழிப்பறிக்கொள்ளையர்களும் அங்கு நிறைந்திருந்தனர். என் மேன்மைமிக்க தந்தை இந்தத் கரிய அறைக்குள் தள்ளப்பட்டிருந்தார்; கனமான சக்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்; அவரோடு வேறு ஐந்து பாப்‘இக்களும் சங்கிலிகளால் இணைக்கப்பட்டிருந்தனர்; இங்கு அவர் நான்கு மாதங்கள் இருந்தார். இப்பயங்கரத்தை நீங்களே கற்பனை பன்னிப்பாருங்கள்.

சிறிது நகர்ந்தாலும் சங்கிலிகள் சதையை மேலும் ஆழமாக வெட்டின. ஒருவரை மட்டும் அல்ல, மற்ற ஐவருக்கும் இவ்வாரே நடந்தது. சிறிதும் தூங்கமுடியாது; உணவு கொடுக்கப்படவில்லை. மிகுந்த சிரமங்களிடையேதான் அந்த பயங்கர சிறைக்குள் என் தாயார் என் தந்தைக்கு உணவும் நீரும் அனுப்பி வைக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்த நிலையிலும், பாப்‘இக்களின் உற்சாகம் சிறிதும் குறையவில்லை.

உயிர்த்தியாகிகளின் ஜீவமகுடமாகிய துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்த்துறப்பதென்பதே, அவர்களுடைய நோக்கமும் தீவிர ஆவலுமாக இருந்தது. அவர்கள் இரவும் பகலும் பிரார்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு காலை வேளைகளிலும் இந்த மனோதைரியமும் அர்ப்பண உணர்வும் மிக்க நண்பர்களில் ஒருவரோ பலரோ பல வழிகளில் சித்திரவதை செய்யப்படவும் பிறகு கொல்லப்படவும் வெளியே கொண்டு செல்லப்படுவர்.

இந்த பாப்‘இக்களுக்கு நடந்தது போல நாஸ்திகர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அல்லது பலரின் மீது சமய தீவிரவாதம் தூண்டிவிடப்படும்போது, அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொலைஞரால் கொல்லப்படுவதில்லை, மாறாக, மக்களில் பல்வேறு பகுதியினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். கசாப்புக் கடைக்காரர்கள் சித்திரவதை செய்வதற்கு தங்களுக்கென பிரத்தியேக முறைகளை வைத்திருந்தனர்; ரொட்டி செய்பவர்களும் அவ்வாரே தனி முறைகளைக் கையாண்டனர்; காலனி தைப்பவர்களுக்கும், கொல்லர்களுக்கும் அவ்வாறே வெவ்வேறு சித்திரவதை முறைகள் இருந்தன. பாப்‘இக்கள் மீது இவர்கள் அனைவரும் தங்களுடைய பட்சாதாபமற்ற சத்திரவதைகளை செயல்படுத்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கொடும்பாவிகள் பாப்’இக்களின் தணிக்கவியலா ஆன்மவுணர்வைக் கண்டு மேலும் அதிக கோரத்தனமாக நடந்துகொண்டனர். பாப்‘இக்களும் அதற்குத் தகுந்தாற்போல், தங்களுடைய இறுதி மூச்சு வரை சிறிதும் அசராமலும், பிரார்த்தனைகளைப் பாடியும், தங்களைச் சித்திரவதை செய்வோருக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், இறைவனை வாழ்த்திக்கொண்டும் இருந்தனர். இத்தகைய பயங்கர காட்சிகளைக் காண கூட்டங்கள் கூடியும், சபித்துக்கொண்டும் இருந்தனர். இவையெல்லாம் நடக்கும் போது மேளம் ஒன்று சப்தமாக தட்டப்படும். இந்தக் கொடூர சப்தங்கள் எனக்கு நன்கு ஞாபம் இருக்கின்றது. நாங்கள் மூவரும் என் தாயாரை இருகக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்போம். அவரோ, அங்கு பலியாகிக்கொண்டிருப்பது, தமது அன்புக் கணவரா அல்லவா என்பது தெரியாமல் கலங்கிக்கொண்டிருப்பார்.

என் தகப்பனார் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதை என் தாயார் அன்று நல்லிரவு வரை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தார். அதுவும், தமது உயிரைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் வெளியே சென்று விசாரித்த பிறகே அவர் தெரிந்துகொண்டார். அக்கொடூரங்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் என பாகுபாடு பார்க்கவில்லை. என் தம்பி மிர்ஸா மிஹிடிக்கு அப்போது இரண்டே வயதுதான் இருக்கும். நான் என் தம்பியை என் மடியில் உட்கார வைத்துக்கொண்டு என் பலமே இல்லாத என் கைகளால் அவனை இருகப் பிடித்துக்கொண்டு கும்மிருட்டில் பேரச்சத்தால் நடுநடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருப்பேன். அப்போது நடந்த கொடுமையான செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்திருந்தன. என் தாயாரும் அக்கொடும்ைக்காரர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒன்றும் செய்ய இயலாத நிலையில் என் தாயாரின் வருகைக்காக நான் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

அப்போது ஒளிந்த வண்ணம் இருந்த என சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா, என் தாயார் என்ன செய்தி கொண்டுவந்துள்ளார் என்பதை அறிய வருவார். இந்த துயர்மிகு காரியங்களின் போது என் அண்ணன் அப்பாஸும் என் தாயாரோடு செல்ல நேர்ந்தது. என் சிற்றாப்பாவிடம் என் தாயார் தெரிவித்த விஷயங்களை நாங்களும் ஆர்வத்தோடு செவிமடுப்போம். இச்செய்திகள் யாவும் என் தாத்தாவின் சகோதரி ஒருவரின் வாயிலாகவே கிடைத்தது. அவர் மிர்ஸா யூசிஃப் எனும் ஒரு ருஷ்ய பிரஜையை மணந்திருந்தார். மிர்ஸா யூசிஃப் தெஹரானில் உள்ள ருஷ்ய தூதரின் நண்பராக இருந்தார்.

என் தாத்தாவின் மைத்துனரான இவர், விசாரனைகள் நடக்கும் போதெல்லாம் சென்று என் தகப்பனார் பற்றிய செய்திகளை அறிந்து வருவார். யார் யார் அன்று கொல்லப்படப்போகிறார்கள் என்பதை அறிந்து அக்கொடுமையான நாட்கள் கடந்துசெல்லும் வரை என் தாயாரின் துயரத்தைக் கலைவதற்கு வழி செய்தார். மிர்ஸா யூசிஃப் அவர்களே என் தகப்பனாருக்கு உணவு கொண்டுசெல்லப்பட என் தாயாருக்குப் பெரிதும் உதவினார். அவர்தான் எங்களையெல்லாம் சிறைச் சாலைக்கு அருகே இருந்து இரண்டு சிறிய அறைகளுக்கு இடம் பெயர உதவிசெய்தார். அங்குதான் நாங்கள் மறைவாக தங்கியிருந்தோம்.

இக்காரியங்களைச் செய்வதில் அவர் பெரும் அபாயங்களுக்கும் தம்மை உட்படுததிக்கொண்டார். அவர் ருஷ்ய பிரஜை எனும் முறையில் ருஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பைப் பெற்றிருந்ததால் இந்த அபாயங்களின் கடுமைகள் சிறிது தனிவாக இருந்தன. அந்த நாட்களின் போது என் தாயாரை வந்து சந்திக்க எங்கள் நண்பர்கள், உறவினர்கள் எவருக்குமே, தைரியமில்லை. ஆனால், என் தகப்பானாரின் அத்தையாகிய மிர்ஸா யூசிஃபின் மனைவி மட்டுமே எங்களை வந்து கண்டு சென்றார்.

ஒரு நாள் மிர்ஸா யூசிஃப் என் தகப்பனாரின் எதிரிகளான கொலைகார முல்லாக்கள் அவரைக் கொல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதை அறிந்தார். மிர்ஸா யூசிஃப் ருஷ்ய தூதரைச் சந்தித்தார்; பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அந்த நண்பரும் இத்திட்டம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமென தீர்மானித்தார். மரண தண்டனைகள் விதிக்கப்படும் நீதிமன்றத்தில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு நிகழ்சி நடந்தது. ருஷ்ய தூதர் நீதிமன்றத்தில் அச்சமின்றி எழுந்து நின்று: “நான் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்! நான் மிகவும் முக்கியமான விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கப்போகின்றேன்” (அவரடைய குரல் சப்தமாக ஒலித்தது. நீதி மன்றத் தலைவரும், அதிகாரிகளும் பதலிளிப்பதற்குக்கூட முடியாமல் பிரமித்து நின்றனர்.) “நீங்கள் இதுவரை பலிவாங்கியதெல்லாம் போதாதா? அடிப்படையற்ற பொய்க்குற்றச்சாட்டுகளென நீங்களே நன்கு அறிந்துள்ள இக்குற்றச்சாட்டுகளின் விளைவாக, ஒன்றுமறியா மக்கள் பலரை நீங்கள் இதுவரை கொலைசெய்துள்ளீர்கள். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த இதுவரை நீங்கள் இயற்றிய இக்கொலைகாரக் கொடுமைகள் போதாதா? ஷா மன்னரை சுடுவதற்கு இம்மேன்மைமிகு கைதி தான் அந்த முட்டாள்தனமான திட்டத்தைத் தீட்டினார் என உங்களால் எப்படித்தான் சிந்திக்க முடிகின்றதென என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

“அந்த இளைஞர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த வெற்றுத் துப்பாக்கி ஒரு குருவியைக் கூட கொன்றிருக்க முடியாதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், அவ்விளைஞன் வெளிப்படையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிந்ததே. இக்குற்றச்சாட்டு பொய்யானதுமட்டுமல்ல, அது ஐயத்திற்கிடமில்லாமல் முட்டாள்தனமானதும் கூட. இதற்கெல்லாம் ஒரு முடிவேற்பட வேண்டும்.

இக்குற்றமற்ற மேன்மகனுக்கு ருஷ்ய நாட்டின் பாதுகாப்பை வழங்குவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன்; இது உங்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை! இக்கணத்திலிருந்து அவரது சிரசிலிருந்து ஒரு முடி பாதிப்படைந்தாலும், உங்கள் நகரத்தில் குருதி வெள்ளமாகப் பாயும்.

“இவ்விஷயத்தில் என் எச்சரிக்கையை நீங்கள் செவிமடுப்பது உங்களுக்கு நல்லதென்றே நினைக்கின்றேன். இவ்விஷயத்தில் என் நாடு எனக்கு முழு பக்கபலமாக இருக்கின்றது.” இவ்விஷயம் மிர்ஸா மூசா அவர்களால் என் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.

என் தம்பியும் நானும் அங்கு நடந்ததை எவ்வளவு ஆர்வத்துடன் செவிமடுத்தோம் எனவோ, நாங்கள் எல்லாரும் வடித்த ஆனந்தக் கண்ணீரையோ இங்கு நான் அறிவிக்க வேண்டியதில்லை.

அந்த எச்சரிக்கையின் விளைவாக என் தந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால், அவரும் அவரது குடும்பமும் பாரசீகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் விதியின் பேரிலேயே அவர் விடுவிக்கப்ட்டார்.

நாங்கள் அனைவரும் பத்தே நாட்களில் தெஹரானைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் தந்தை அப்போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் எங்கள் இரு சிறிய அறைகளுக்கு வந்தார். அவரது வருகையால் நாங்கள் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை!

ஜமால்-இ-முபாரக் (என் தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர்) தாம் அந்த பாதாளச் சிறறையிலல் அனுபவித்த அந்த நான்கு மாத கொடுமையான சிறைவாசத்தைப் பற்றி வெகு குறைவாகவே பேசினார். அவர் அனுபவித்த கொடுமைகளின் சின்னங்களை நாங்கள் பார்த்தோம்; அவருடைய மென்மையான தோலை, குறிப்பாக அவரது கழுத்தில், சங்கிலிகள் வெட்டிய இடத்தைப் பார்த்தோம், பாஸ்டினாடோ சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த அவருடைய கால்களை நாங்கள் கண்டோம். எங்கள் தாயாரோடு சேர்ந்து நாங்கள் வடித்த கண்ணீரை என்னவென்று சொல்வது.

நாங்கள் பத்து நாட்களில் மேற்கொள்ளவேண்டிய பயணத்திற்கு வேண்டிய வலுவை என் தகப்பானார் பெற வேண்டும் என்பதற்காக என் தாயார் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனால், காலமோ மிகவும் கடியதாக இருந்தது. என்தாயார் எவ்வாறுதான் ஏற்பாடுகளைச் செய்ய போகின்றார்?

பரிதாபத்திற்குரிய அப்பெண்மனி தமக்கு சீர்வரிசைகளாக வழங்கப்பட்ட, கிட்டத்தட்ட, எல்லா பொக்கிஷங்களையும் விற்றார். அவற்றுள், ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட துனிகள், நகைகள், மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் விற்றார். அவை அனைத்திற்கும் அவருக்குக் கிடைத்தது 400 டூமான்களே. இப்பணத்தைக் கொண்டு அக்கொடுமையான பயணத்தின் வழிசெலவுகளை அவர் சரி செய்ய முடிந்தது. (அவர்கள் நாடுகடத்திய எவருக்கும் அரசாங்கள் உதவி எதையுமே வழங்கவில்லை.)

பயணம் விவரிக்க முடியாத கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. என் தாயாருக்கு எந்த அனுபவமும் கிடையாது, வேலைக்காரர்கள் இல்லை, உணவுப் பொருட்கள் கிடையாது, செலவுக்கு பணமும் மிகவும் குறைவாகவே இருந்தது. என் தந்தையார் சிறைவாசத்தின் கொடுமைகளிலிருந்து இன்னமும் மீளாது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நாங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது விடைகூறுவதற்கு, எங்கள் உறவினர்களும், நண்பர்களும்  பயந்துகொண்டு வரவில்லை. என் தாயாரின் வயதான பாட்டி ஒருவர் மட்டுமே வந்நார்.

எங்களோடு இருப்பதற்கு சிறிதும் பயப்படாத இஸ்ஃபாண்டியாரும், நீக்ரோ பெண்மனி ஒருவரும் மட்டுமே எங்களுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால், குழந்தைகளாகிய நாங்கள் மூவரும் மிகவும் சிறிய வயதினராக இருந்தோம், என்ன அண்ணனுக்கு எட்டு வயதும், எனக்கு ஆறு வயதும்  ஆகியிருந்தன. மிகவும் பலவீனமாகவும், குழந்தையாகவும் இருந்த மிர்ஸா மிஹ்டியை தெஹரானிலேயே, என் தாயாரின் பாட்டியோடு விட்டுச் செல்ல என் தாயார் சம்மதித்தார். ஆனால், அவனை விட்டு பிரிவது தாங்க முடியாததாக இருந்தது.

இறுதியில், நான்கு வாரங்கள் பிடித்த அந்த பிராயாணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்; அது கொடிய குளிர்காலம், தரையெங்கும் வெண்பனி விழுந்து கிடந்தது. பாக்தாத் செல்லும் வழியில் நாங்கள் ஒரு சில வேளைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத பிரதேசங்களில் நாங்கள் தங்கவேண்டியிருந்தது. ஆனால், அந்த டிசம்பர் மாதத்தில் குளிர் மிகவும் பயங்கரமாக இருந்தது; நாங்கள் அக்குளிருக்குத் தயாராகவும் இல்லை. பாவம் என் தாயார்; பயணம் முழுவதும் அவர் பெரும் இம்சைக்குள்ளானார். அவர் கோவேறு கழுதைமேல் ஏற்றப்பட்ட ஒரு பல்லக்கில் பிரயானம் செய்தார்! அதுவும், அவர் மகப்பெற்றை எதிர்நோக்கியிருந்த ஆறு வாரங்களுக்கு முன்பாக இத்துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது!

ஆனாலும், அவர் ஒரு வார்த்தைகூட இதைப்பற்றி முறையிடவில்லை. அவர் எல்லா வேளைகளிலும் மற்றவர்களுக்கான உதவிகளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவர் எல்லாருடைய இன்னல்களின்போதும் தமது எல்லையற்ற கருணையை வழங்கத் தயங்கியது கிடையாது.

அவர் கூறிய கதையைக் கேட்ட என் கண்களில் வழிந்ததது: “அது மிகவும் சோகமான காலம். அதைப் பற்றி நான் கூறினால் நான் உன்னை மேலும் சோகத்திற்குள்ளாக்க நேரிடும்.” “ஆனால், அன்பிற்கினிய ஃகானும், உங்கள் சோகம் அனைத்திலும் நானும் மானசீகமாகப் பங்குகொள்ள விரும்புகின்றேன்,” என நான் கூறினேன். “என் சோகம் மிகுந்த நாட்களில் நான் என் சிந்தனைகளில் வாழ்ந்ததைத் தவிர என் வாழ்வில் வேறு எதுவும் கிடையாது. சோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஆனால், இறைவனின் பாதையில் சோகத்தை அனுபவிக்கும் போது, அதுவே உண்மையான ஆனந்தமாகும்!”

பிரயாணத்தின்போது நாங்கள் ஏதாவது ஒரு பட்டனத்திற்கு வந்தோமானால், என் தாயார் துணிகளையெல்லாம் எடுத்துச் சென்று பொது குளியலறைகளில் துவைத்து வருவார்; நாங்கள் அங்கு குளிப்போம். அவர் சில்லிட்ட ஈரமான துணிகளை தமது கைகளில் ஏந்தி வருவார் — அவற்றைக் காய வைப்பது பெரும்பாலும் முடியாத காரியமாகவே இருக்கும்; அத்தகைய காரியங்களில் சிறிதும் அனுபவமற்ற அவருடைய கைகள் வலியெடுத்துப்போகும்.

ஒரு சில வேளைகளில் நாங்கள் ஏதாவது சத்திரத்தில் தங்க நேரிடுவதுண்டு. அவ்விடங்களில் ஒரு குடும்பத்திற்கு ஓர் அறைதான் வழங்கப்படும், அதுவும் ஒர் இரவுக்கு மட்டுமே. இரவில் ஒளி கிடையாது, படுக்கைகளும் கிடையாது. சில நேரங்களில் எங்களுக்குத் தேநீர் கிடைக்கும், அல்லது முட்டைகள், சிறிது உறை பாலேடு, கரடுமுரடான ரொட்டி போன்றவையும் கிடைக்கும். என் தந்தையார் இருந்த நிலையில் அவரால் அத்தகைய கரடுமுரடான உணவை உட்கொள்ள முடியவில்லை. மிகவும் விசனமுற்ற என் தாயார் வேறு ஏதாவது உணவு கிட்டுமாவென சிந்தனை செய்தார். என் தந்தை நல்ல உணவு கிடைக்காமல் அதிகரிக்கும் பலவீனத்திற்குள்ளானார்.

இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் என் தாயாருக்கு சிறிது கோதுமை மாவு கிடைத்தது. ஒரு சத்திரத்தை நாங்கள் அடைந்தபோது, அவர் என் தகப்பனாருக்கு இனிப்பான கேக் ஒன்று செய்ய நினைத்தார். ஆனால், அந்தோ! – துரதரிஷ்டவசமாக, இருளில் சீனிக்குப் பதிலாக, அவர் உப்பைக் கொட்விட்டார். அந்த கேக் உண்ணமுடியாமல் போயிற்று!

தெஹரானின் கவர்னர், நாட்டின் எல்லை வரை எங்களோடு சில இராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தார். எல்லையில் எங்களை துருக்கிய வீரர்கள் சந்தித்து பாக்தாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு முதலில் ஒரு சிறிய வீடே கிடைத்தது; என் தந்தைக்கு ஒரு சிறிய அறையும், என் தாயாருக்கு ஒரு சிறிய அறையுமாக அமைந்திருந்த சிறிய வீடது. நானும், என் அண்ணனும் குழந்தையும் என் தாயாருடன் அந்த சிறிய அறையிலேயே தங்க வேண்டியிருந்தது. எங்களைக்காண அராபிய பெண்மனிகள் வந்த போது இந்த சிறிய அறையே வரவேற்பறையாக செயல்பட்டது. இந்த அராபிய பெண்கள் எங்களைக் காண வந்ததற்குக் காரணம், தாஹிரிஃ பாக்தாத்திற்கு வருகையளித்த போது அவர் அப்பெண்மனிகளுக்குச் சமயத்தைப் போதித்திருந்ததே ஆகும்.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மனி வருகை தந்திருந்த போது, சமோவாரைத் தயார் செய்யும்படி நான் பணிக்கப்பட்டேன். அது மிகவும் கனமான சமோவாராக இருந்தது. என் கைகளிலும் அவ்வளவாக பலமில்லை. மேல்மாடிக்கு அதை நான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. என்னைப் பார்த்து அந்த மூதாட்டி: “பாப்’இ போதனைகள் மிகவும் அற்புதமானவை என்பதற்கு ஆதாராமாக, ஒரு சிறிய வயது பெண் சமோவார் சேவை செய்கிறாள் என்பதே உள்ளது,” என்றாள். என் தந்தை அதை வேடிக்கையாக எண்ணினார். அவர் பிறகு, “உண்ணுடைய சமோவார் சேவையில் வாயிலாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பெண்மனி இதோ,” என கூறுவார்.

மிர்ஸா மூசாவுக்கும் அவரது மனைவிக்கும் பஹவுல்லாவின்பால் எப்போதுமே பக்தி அதிகம். என் சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா அவர்கள், எங்களுடைய தேசப்பிரஷ்டத்தில் தானும் பங்குகொண்டார். அவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் உதவி செய்வார். ஒரு முறை முழு சமையலையும் அவரே கவனித்துக் கொண்டார். அவர் சமயல் கலை நன்கு அறிந்தவர் ஆவார்; அவர் துணிகளை அவ்வப்போது துவைக்கவும் உதவினார்.

என் தாயார் மிகவும் பலவீனமானவர். அவருடைய பலமெல்லாம் அவர் அனுபவித்த கொடுமைகளால் பெரிதும் நலிவுற்றிருந்தன. ஆனால், அவர் தமது ஆற்றலுக்கும் மீறிய நிலையிலேயே செயல்பட்டார்.

என் தாயாருக்கு உதவியாக, அந்த மேல்வர்க்கத்துப் பெண்மனிக்கு அவ்வித வேளைகள் பழக்கமில்லாதவையாகவும், சிறமமானதாகவும் இருந்ததனால், ஒரு சில வேளைகளில் என் தந்தையாரே சமையல் வேலையில் உதவிகள் புரிவார். அவர் அனுபவித்த சிரமங்களைக் கண்டு அவருடைய தெய்வீகக் கணவரும், அவருடைய பிரபுவுமாகியவரின் மனம் பெரிதும் சோகமடைந்திருந்தது. இத்தகைய உதவிகளை அவர் சுலைமானிய்யா வாசத்திற்கு முன்பாகவும் அதற்குப் பின்பாகவும் புரிந்தார்.

பஹாவுல்லா சுலைமானிய்யாவை நாடிச் செல்வதற்கு சுப்-இ-அஸால் எனப்படும் பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பியின் நடத்தையே காரணமாக இருந்தது. அவருடைய நடத்தையினால் பாக்தாத் பாப்’இக்களுள் பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. நம்பிக்கையாளர்கள் தமக்கும் தமது தம்பிக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும், பிளவுக்குக் காரணமாக தாம் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் தமது குடும்பத்தையும் சமூகத்தையும் விட்டு யாருக்கும் தெரியாமல் சுலைமானிய்யாவுக்கு சென்றுவிட்டார். அவ்வாறு அவர் சுலைமானிய்யா செல்வதற்கு முன்பாக பாப்’இக்கள் அனைவரும் மிர்ஸா யாஹ்யாவை நல்லவிதமாக நடத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். மிர்ஸா யாஹ்யாவுக்குத் தமது இல்லத்திலேயே குடியிருக்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். திடீரென்று ஒரு நாள் பஹாவுல்லா எங்களையெல்லாம் விட்டுச் சுலைமானிய்யா சென்றுவிட்டார். ஆனால் அப்போது அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால் பெரிதும் ஆனந்தமடைந்தது மிர்ஸா யாஹ்யாவே.

அதற்குப் பிறகு மிர்ஸா யாஹ்யா எங்கள் வீட்டு நிலையான விருந்தினராகிவிட்டார். சாப்பாடு சரியில்லையென அவர் எங்களுக்குப் பெரும் துன்பங்கள் கொடுத்தார். அதுவும், எங்கள் வீட்டின் மிகச் சிறந்தவை யாவும் அவருக்கே கொடுக்கப்பட்டன.

அதே வேளை தாம் கைது செய்யப்பட நேரலாம் எனும் பயம் அவரை இப்போது வாட்ட ஆரம்பித்தது. அவர் வீட்டினுள் மறைந்துகொண்டு, எந்நேரமும் கதவை பூட்டியே வைத்திருந்தார். யாராவது கதவைத் திறந்தால் போதும், உடனடியாக அவ்வாறு செய்தவர் மேல் சீறிப் பாய்வார்.

என்னைப் பொறுத்த வரையில் நான் தனிமைமிக்க ஒரு வாழ்வே வாழ்ந்தேன் எனச் சொல்லவேண்டும். மற்ற பிள்ளைகளோடு நட்புகொள்ளவேண்டுமெனும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், சுப்-இ-அஸால் அதற்கு அனுமதிக்கமாட்டார். என் வயதுடைய குழந்தைகளை அவர் வீட்டினுள் அனுமதிப்பதில்லை, அதே வேளை என்னையும் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்!

என் பக்கத்து வீட்டில் என் வயதுடைய இரு பெண்கள் வசித்தனர். நான் அவ்வப்போது அவர்களைப் பார்ப்பேன்; ஆனால் எங்கள் வீட்டு விருந்தாளி கதவைத் திறந்ததற்காக என்னைப் பார்துக் கத்துவார்; உடனடியாக கதவையும் மூடிவிடுவார். கைது பயம் அவரை எப்போதும் வாட்டியது, அவர் தமது பாதுகாப்புத் தவிற வேறு எதைப் பற்றியும் அக்கறை கொண்டவர் இல்லை.

இந்த காலகட்டத்தில் எங்கள் வாழ்வு மிகுந்த சிறமத்திலும், அதே வேளை தனிமையிலுமாக கழிந்தது. நாங்கள் ஹம்மாம் சென்று குளிப்பதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டிற்குள் வந்து உதவி செய்யவும் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டு வேலை பெரும் சிறமம் மிக்கதாக இருந்தது. தினசரி வீட்டினுள்ளே இருந்த ஒரு ஆழமான கிணற்றிலிருந்து, நின்றுகொண்டு, மணிக்கணக்காக நான் நீர் இரைத்துக்கொண்டிருப்பேன்; கயிறு மிகவும் கடினமானது, நீர் இரைக்கும் வாளியோ மிகவும் கனமாக இருந்தது. என் தாயார் எனக்கு அவ்வப்போது உதவி செய்வார், ஆனால் அவரும் பலவீனமானவர், என் கைகளும் வலுவற்றவைகளாக இருந்தன. எங்கள் வீட்டு விருந்தினர்கள் உதவியதே இல்லை.

இக்கொடிய மனிதனுக்கு உதவி செய்ய வேண்டுமென என் தகப்பனார் கூறிச் சென்றுவிட்டார். நாங்களும் எங்களால் இயன்றவரை முயன்றோம், ஆனால், அது சுலபமாக இல்லை, அம்மனிதர் எங்கள் வாழ்க்கைகளை பெரும் சோகமிக்கவைகளாகச் செய்தார். இவ்வேளையில்தான் என் அருமைக் குட்டித் தம்பிக்கு மோசமான நோய் கண்டது. எங்கள் விருந்தினர் ஒரு டாக்டரோ, எங்கள் அண்டைவீட்டாரோ வந்து எங்களுக்கு உதவிபுரியக்கூட அனுமதிக்கவில்லை.

என் குட்டித் தம்பி இறந்த போது என் தாயார் மனமுடைந்து போனார்; என் தம்பியின் பூவுடல் யாரோ ஒரு மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் என் தம்பியை எங்கு கொண்டு சென்றான் எங்கு புதைத்தான் என்றே எங்களுக்குக் கடைசி வரை தெரியாது போயிற்று. அந்த நாட்களின் சோகம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது.

சில காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம். நல்ல வேளையாக தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ எனப் பயந்த மிர்ஸா யாஹயா எங்களோடு வரவில்லை. எங்க் வீட்டிற்குப் பின்புரம் இருந்த ஒரு சிறிய வீட்டில் அவர் மறைந்துகொண்டார். அவருக்கும், வரிவடைந்திருந்து அவருடைய குடும்பத்தினருக்கும் இப்போதும் நாங்கள் தினமும் உணவு அனுப்பி வந்தோம். அவர் எங்கள் வாழ்க்கையில் இப்போது நேரடியாக குறுக்கிடாததால் எங்கள் வாழ்க்கை இப்போது சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது எங்கள் கவலையெல்லாம் ஜமால்-இ-முபாரக் எங்குள்ளார் என்பதைப் பற்றியே இருந்தது. அதுவரை என் தாயாரும், மிர்ஸா மூசாவும் தங்களால் இயன்றவரை விசாரித்தே வந்தனர். தன் தந்தையின் பிரிவினால் என் அண்ணனின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியதாக இருந்தது. ஒரு நாள் இரவு என் அண்ணன் ஒரே பிரார்த்தனையை, ஒரே நோக்கோடு, எங்கள் தகப்பானார் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென நினைத்து, பிரார்த்தித்தார்.

சின்னாட்களுக்குப் பிறகு எங்கள் தந்தையாரைப் பற்றி எங்களுக்கு செய்தி கிடைத்தது. அவரை அழைத்து வர எங்களுடைய விசுவாசமிக்க நண்பர் ஒருவரும், மற்றொரு நம்பிக்கையாளரும் சென்றனர். எங்கள் உள்ளங்கள் அவர்களோடு சென்றன என்பதைக் கூறவேண்டியதில்லை. அவர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் எங்களுடைய பிரார்த்தனைக்கு முடிவே இல்லை. எங்கள் எதிர்ப்பார்ப்பு இருண்ட எங்களுடைய வாழ்வின் இருண்ட பகுதிகளுள் ஒளியை வீசியது.

எதிர்ப்பார்ப்புமிக்க அந்த நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எங்கள் நம்பிக்கையும், எதிர்ப்பார்பும் அதிகரிக்கவும் வளரவும் செய்தன. வரப்போகும் நாட்களில், மிக அருகாமையில் உள்ள நாட்களில், வழிப்போக்கரான எங்கள் தந்தை, எங்களோடு மீண்டும் ஒன்று சேரப்போகிறார். “திர்மி” எனப்படும் ஒரு வகை சிகப்புத் துணியினால் என் தாயார் என் தந்தைக்கு ஒரு வித மேற்சட்டை தைத்தார். இத்துணியை இதற்கென்றே தமது திருமண பொக்கிஷங்களிலிருந்து பாதுகாத்து வைத்திருந்தார். என் தந்தையார் அனிந்துகொள்வதற்கு அஃது இப்போது தயாராக இருந்தது. இறுதியில், இறுதியில், என் தாயாரும், அணணனும் நானும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்த வேளையில், காலடியோசை கேடடது. ஒரு துறவி. ஆனால், அந்த உருவத்தின் பின்னனியில் எங்கள் நேசத்திற்குறியவரின் ஒளியைக் கண்டோம். நாங்கள் அனைவரும் அவரைக் கட்டிக் கொண்ட போது எங்கள் ஆனந்திற்கு அளவே கிடையாது.

என் தாயார் இப்போது மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கக் கண்டேன், என் அண்ணன் என் தந்தையாரின் கைகளை, இனி என்றுமே தன் பார்வைக்கு அப்பால் விடப்போவதில்லை என்பது போல் இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த துறவியின் அருவருப்பான மாறுவேட உடையில் கிட்டத்தட்ட மறைந்தே விட்டிருந்தான். மனதைத் தொட்டதும், மகிழ்ச்சிமிக்கதுமான அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது;

பாஹிய்யா ஃகானும் கூறியபடி லேடி ப்லொம்ஃபீல்ட் உரைத்தது

பாக்தாத் வாசகாலத்தின் போது, அதிப்புனித இலையாகிய பாஹிய்யா ஃகானுமே தமது தாயாரின் அன்பான உதவியாளராக இருந்தார். பல்வேறு வீட்டு வேலைகளை பொருத்த வரையில் அவர் தமது சக்திக்கும் மீறிய அளவிலேயே செயல்பட்டுவந்தார். குழந்தைத்தனமான பொழுபோக்குகளோ, சினேகிதர்களோ அவருக்குக் கிடையாது. எப்போதும் தமது தாயாரின் மீதே அவர் கண்ணாக இருந்தார், தன் தாயாருக்குக் களைப்பேற்படுத்தும் எதையும் அவர் விட்டுவைத்ததில்லை, தமது தாயாருக்கோ, தந்தைக்கோ அவர் ஏதாவது செய்ய இயன்ற போது அவர் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியடைவார்.
“என் தாயார் சில வேளைகளில் என் அண்ணன் அப்பாஸுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்; மற்ற வேளைகளில் மிர்ஸா மூசா சொல்லிக் கொடுப்பார், பிற நேரங்களில் அப்பாஸுக்கு என் தந்தையாரே பாடம் சொல்லிக் கொடுப்பார்.”

டூபா ஃகானும் வாய்மொழிந்தது

என் அன்பான பாட்டி ஆசிய்யா ஃகானுமை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது. அவர் மறைந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். பஹாவுல்லா அவரை “நவ்வாப்” என்றுதான் அழைப்பார். பாரசீக பிரபுக்கள் தங்கள் மனைவிமார்களை இவ்விதமாகத்தான் அழைப்பார்கள். அது மிகவும் மரியாதையும் பனிவும் மிக்க ஒரு பெயராகும். அவர் மிகுந்த அழகுடையவர், அன்பானவர், மென்மை குணம் படைத்தவர். பிரச்சனையுள்ள எவருமே அவரைத்தான் நாடிச் செல்வார்கள். ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர்தான் அவர்களைப் பேணுவார், ஆறுதலளிப்பார், பார்த்தும் கொள்வார்.

ஆக்கா சிறைச்சாலையில் நாங்கள் இருந்தபோது சலவைத் தொழிலாளிகள் யாருமே அங்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஃகாணும் அவர்கள்தான் பெரும்பாலான சலவைக் காரியங்களைக் கவனித்துக்கொள்வார். சமயல் வேலைகளையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். அவருக்கு என் அத்தையார்தான் (பஹிய்யா ஃகானும்) உதவி செய்வார்.

அங்கிருந்த ஒரேயொரு ஊழியரான ஒரு கருப்பினப் பெண்மனியினால் எல்லா வேலைகளையும் செய்ய இயலவில்லை. அச்சேவகி கலைப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக என் பாட்டியும், இளம் வயதினராகவிருந்த ஃகானுமும்தான் பெரும்பாலான கடின வேலைகளைச் செய்வார்கள்.

குடும்பத்தினரின் துணிகளை அவர்கள்தான் தைத்தும், ஒட்டுப்போடவும் செய்வார்கள். அவ்வேலை மிகவும் கடினமான வேலையாகும். பஹாவுல்லா சுலைமானிய்யாவிலிருந்து திரும்பியவுடன் அவருக்காக அவர்கள் இருவரும் அற்புதமான மேலுடுப்பு ஒன்றை எவ்வாறு தைத்தார்கள் என்பதை எனக்குக் கூறியிருக்கின்றனர். அன்புகலந்த அக்காரியத்திற்காக அவர்கள் சிறு சிறு துண்டுகளாலான சிகப்பு திர்மி துணியைப் பயன்படுத்தினர். பாட்டியின் திருமண பொக்கிஷங்களில் காணாமல் போன அனைத்திலும் அது மட்டும் எப்படியோ பாதுகாக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் சுமார் ஆறு மாத காலமாக அதை வெட்டி தைத்தார்கள். அதன் பயனாக மிகவும் அழகிய மேற்சட்டை ஒன்று உருவாகியது. மிகவும் தேவையான ஒரு மேலாடையாகவே அது விளங்கியது. அக்காலத்தில் பாக்தாத்தில் புதிய மேலுடுப்பு வாங்குமளவுக்கு அவர்களிடம் பணம் கிடையாது. ஆசிய்யா ஃகானும் அவர்கள் ஆக்கா சிறைச்சாலையிலிருந்து அருகிலிருந்து வாடகை வீட்டுக்குச் செல்லும் வரை உயிர்வாழ்ந்திருந்தார். அவரது சிறிய அறை வெற்று அறையாகவே காட்சியளித்தது. மிகவும் குறுகலான வெள்ளைப் படுக்கை, அது பகல்வேளைகளில் திவானாகவும் பயன்படுத்தப்பட்டது.

அறையிலிருந்த ஒரு சிறு மேஜையில் அவரது பிரார்த்தனை புஸ்தகமும் பிற நூல்களும், அவரது “ஃகலாஐ-தான்” எனப்படும் எழுதுகோல் வைக்கும் பெட்டியும், எழுதவதற்கான தாள்களும் இருந்தன; அவரது ஜெபமணிமாலையும் அதன் மேல்தான் இருந்தது; சில வேளைகளில் ஒரு ஜாடியில் மலர் இருக்கும், மற்றும் ஒரு பழைய வர்ணம் பூசப்பட்ட பெட்டி ஒன்று, அதனுள் அவருடைய உடைகள் இருந்தன.

பஹாவுல்லாவுக்கு இரண்டே மேலுடுப்புகள்தான் (கோட்) இருந்தன. அவை பாராக் எனப்படும் பாரசீக கம்பளியினால் நெய்யப்பட்டவை. அந்த இரண்டு மேலுடுப்புகளும் அடிக்கடி கிழிந்து போகச் செய்தன. அவற்றை ஒட்டுப்போடுவதிலும், தைப்பதிலும் அவருடைய பெரும்பாலான நேரங்கள் செலவழிந்தன. பஹாவுல்லாவின் காலுறைகளையும் அவர்தான் ஒட்டுப்போடுவார்.

என் கண்களுக்கு, நீல வர்ண மேலுடையிலும், அவருடைய தலையில் வெள்ளை “நிஃகாப்புமாகவும்,” அவரது சிறிய பாதங்களில் கரு நிறத்திலான மெல்லிய செருப்புமாகவும், மெய்மறந்த நிலையைக் குறிக்கும் முகபாவத்தோடு, அவர் தமது இனிய குரலில் பிரார்த்தனைகளைப் பாடுவதுமாகவுமே அவர் தெரிகின்றார். ஒரு நாள் என் பாடங்கள் முடிந்து நான் வீடு திரும்பிய போது அனைவரும் பெரிதும் சலனத்தோடு ஒன்றுகூடி நிற்பதைக் கண்டேன். “என்ன விஷயம்?” என வினவினேன்.

“உன் பாட்டி மிகவும் நோய்வாய்ப்ட்டுள்ளார்கள்,” என பதில் வந்தது. அவருடைய அறைக்குள் பஹாவுல்லா சென்றார்; சில நேரங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்தார்; என் பாட்டி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்; இவ்வுலகையும் தமது சோகமும் துயரமும் நிறைந்த நாட்களை விட்டு அவர் மறைந்துவிட்டார். நாங்கள் அழுத அழுகையை என்னவென்றுதான் விவரிப்பது! அவர் இல்லாமல் அனைத்துமே வெறிச்சோடிப் போனது; மாறாத அவருடைய அன்புக்கருணையை இழந்து நின்றோம்; அவருடைய பூரண தன்னலமின்மை எங்களையெல்லாம் ஆட்கொண்டு விட்டிருந்தது. வசீகரமும் பாசமும் மிகுந்தவர், நற்பண்பும் நேர்த்தியும் மிக்கவர், கூறிய அறவுத்திறமும், உடல்பலத்தைவிட பண்புநலன்களின் பலம் பெற்றவர் அவர். நிறைந்த நகைச்சுவைப்பண்புடையவர். அவர் பட்ட சிரமங்களும், வாழ்வின் துயர்களும் அவருடைய உடல்நலத்தை பெரிதும் பாதித்திருந்தன; அவர் என்னதான் இயலாதபோதும், தமது முழு பலத்தையும் அவர் பிரயோகிக்கத் தவறியவே இல்லை.

ஆக்கா சிறைச்சாலைவாசத்தின் போது பட்ட துன்பங்களும் கொடுமைகளும் போதாதென மனதையே சுக்கு நூறாக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. ஆம், “அதி தூய்மையான கிளை” என பஹாவுல்லாவால் அழைக்கப்பட்ட மிர்ஸா மிஹ்டி ஒரு நாள் சிறைச்சாலையில் கூறையின் மீது தமது பிரார்த்தனைகளைக் கூறிக்கொண்டிருக்கும் போது தவறுதலாக காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்து ஓர் இடைவெளியின் வழியாக கிழே விழுந்துவிட்டார். அவருடைய வயிற்றில் பயங்கரமான அடி பட்டிருந்தது; தொடை நைந்துபோய்விட்டது; வாயிலிருந்து இரத்தம் பெருகியது. இதன் விளைவாக மிர்ஸா மிஹ்டி மரணமடைந்தார். சிறைவாசத்தின் கடுமையின் காரணமாக இரகசியமாகவும், ஏழ்மையிலும், அவசரமாகவும் அதி தூய்மையான கிளை அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய தாயாராகிய ஆசிய்யி ஃகானும் இதனால் பெரும் விசனமுற்று நிற்காது அழுதுகொண்டே இருந்தார். இதையறிந்த பஹாவுல்லா, அவரிடம் வந்து அவர் அழத்தேவையில்லை எனவும், நம்பிக்கையாளர்கள் தம்மை வந்து காண்பதற்கான வழிகள் திறக்கப்படுவதற்கு மட்டுமின்றி மனிதனின் புத்திரர்கள் அனைவரும் ஒன்றுபடுத்தப்படுவதற்கும் அவர் தம் மகனை பிணையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் எனவும் ஆறுதல் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அப்புனித ஆன்மா பெரிதும் ஆறுதலுற்று தமது பேரிழப்பின் துக்கத்தை மறந்தார்.

ஷோகி எஃபெண்டியின் 21 டிசம்பர் 1939 எனும் கடிதத்திலிருந்து.

இத்தகைய ஒரு தாயார் யார்? அவர், கடவுளின் பாதையில் யாவற்றையும் துறக்க மனமுவந்த தெய்வீகமும், விசுவாசமும் வாய்ந்த ஒரு பெண் மட்டுமல்ல. ஆனால், புனித பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஐசையாவின் 54வது பகுதி அவரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

“ஏனெனில் உம்மை உருவாக்கியவர் உமது கணவரே ஆவார்; தேவகணங்களின் பிரபு என்பது அவரது பெயர்; உம்மை விடுவிப்பவர் இஸ்ரேலின் தெய்வீக புருஷராவார்ஆ; அவர் உலகம் முழுவதின் இறைவன் என அவர் அழைக்கப்படுவார்…”

அவருக்கு பஹாவுல்லா பின்வருவனவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்:

“எம்மை மீண்டும் செவிமடுப்பாயாக, இறைவன் உன்மீது பெரிதும் திருப்பதிகொண்டுள்ளார்… அவருடைய உலகங்கள் ஒவ்வொன்றிலும் நீயே அவரது துணையாக இருக்கச் செய்தும், அவரது நாமமும், அவரது நினைவும், அவரது அரசும், அவரது சாம்ராஜ்யமும் நிலைத்திருக்கும் வரை அவரது அருகாமை, முன்னிலை ஆகியவற்றைக்கொண்டு உணக்கு ஊட்டமளித்துள்ளார்.”

அவர் மேலும் ஒரு நிருபத்தில் கூறுவது:

“ஓ நவ்வாப்! எமது விருட்சத்திலிருந்து உதித்தும், எமது துணையாகவும் இருந்துவந்துள்ள இலையே! எமது மகிமையும், எமது அன்புக் கருணையும், எல்லா ஜீவன்களையும் விஞ்சியுள்ள எமது இரக்கமும் உன்னைச் சாரட்டுமாக. உனது கண்களை இன்புறச் செய்யக்கூடியதையும், உனது ஆன்மாவிற்கு உறுதியளிப்பதையும், உனது உள்ளத்தை மகிழ்சியுறச் செய்யக்கூடியதையும் யான் உனக்கு அறிவிக்கின்றேன். மெய்யாகவே, உனது பிரபு கருணைமிக்கவர், சர்வ-கொடைாளி. இறைவன் உன் மீது திருப்திகொண்டுள்ளார், திருப்தி கொள்ளவும் போகின்றார்; அவருக்குச் சேவை செய்திட, அவர் உன்னை அவருக்கென தேர்தெடுத்தும், பகல் வேளையிலும், இரவு நேரத்திலும், அவருக்குத் துணையாக நியமித்துள்ளார்.”

முழு பதிவையும் வாசிக்க »


என் நினைவை விட்டகலா வியத்தகு பஹாய் போதகர்
ஆ. ஆந்தோனிசாமி

ஒரு நாள் சில நண்பர்களுடன் போதனைப் பயணம் மேற்கொண்டபோது தென்னமெரிக்காவிலுள்ள பொலிவியா மலைத்தொடர் பகுதியில் கால் நடையாக ஒரு போதகர் பலமணி நேரம் நடந்து கொண்டிருக்கின்றார். போய்ச் சேரவேண்டிய ஊர் கண்ணில் தெரிந்தபாடில்லை. கொட்டும் மழையும் ஆரம்பித்துக்கொண்டது. அந்நேரத்தில், அசதியின் காரணமாக தரையில் உட்கார்ந்து, “வேறு வழியில்லை, எனது போதனை இலட்சியங்களை அப்ஹா உலகிற்கு கொண்டு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும்,” என புலம்புகின்றார். அப்படி புலம்பினாலும், இறைசேவையின் பாதையில் பல்லாயிரக்கணக்கான போதனைப் பயணங்களை நிகழ்த்திவிட்டு மங்காப் புகழுடன் மறைந்து விட்ட தெய்வ சமயத்திருக்கரம் டாக்டர் முஹாஜர் அவர்களே என்னால ஃமறக்க முடியாத பஹாய் போதகராவார். நினைக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி நெஞ்சிலே மறக்க முடியாமல் போதின்றவர்கள் வீரர்கள், விவேகிகள், தீரர்கள், தியாகிகள் மட்டுமல்ல நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அந்த சுடர் விளக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய தியாகச் சுடர்களில் ஒருவர்தான் முஹாஜர்.

தியாகத்தின் விலாசம்

1923ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4ம் தேதி ஈரான் நாட்டில் ஹஃபிசுல்லா காணுக்கும், இஸ்மாட் கானும் அம்மையாருக்கும் எழுவர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக ரஹ்மத்துல்லா முஹாஜராக பிறந்தார். இவரது பாட்டனார்கள் பஹாய் சமயத்தை 1850ம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டவர்கள். இவரது பாட்டனார்கள் புனித பூமிக்கு யாத்திரிகராக சென்று பஹாவுல்லாவின் கருணை மழையில் நான்கு மாதங்கள் திளைத்திருந்த வேளையில் அப்துல் பஹா அவர்கள் இவர்களுக்கு ஒரு நிருபம் எழுதியபோது அவர்களை முஹாஜிரான் என்று அழைத்தார். அன்றிலிருந்துதான் குடும்பப் பெயர் முஹாஜிர் ஆனது.

முஹாஜிருக்கு ஒன்பது வயது இருக்கையில் தெஹ்ரான் நகருக்கு இவரது பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். இவரது தெஹ்ரான் இல்லத்தில் சமய சிறு விளக்கக் கூட்டம் இடைவிடாது நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக திரு. புஃருத்தானும் மற்ற பிரபல பஹாய் ஆசிரியர்களும் கலந்து கொள்வர். முஹாஜிருக்கு பதினைந்து வயதிருக்கையில் அவரது தந்தையார் மாரடைப்பினால் காலமானார். முஹாஜிர் பதினாறு வயது பருவத்தில் தமது நெருக்கிய தோழர்களான உஸ்மான பாத்தியாஸம், டாக்டர் அபாஸியன், கடிமி முதலிய நண்பர்களுடன் உதயத்தை வென்றவர்கள் எனும் சரித்திர நூலின் பிரசித்திப்பெற்ற இடங்களான மாஃகு சிறைச்சாலையையும், இதர புனித இடங்களையும் சுற்றிப்பார்த்து சமயத்தினுள் தம்மை இறுக்கமாக இணைத்துக் கொண்டார். 1944ல் தெஹ்ரான் மருத்துவத பல்கலைக்கழகத்தில் மாணவராக தம்மை பதிந்து கொண்டார். 1946ம் ஆண்டு அக்டோபர் முதல் 1950ம் ஆண்டு ஜூலை வரை 45 மாத கால போதனைத் திட்டத்தை ஷோகி எஃபெண்டி ஈரானிய பஹாய்களுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் பல பஹாய்கள் அயல் நாடுகளுக்கு, குறிப்பாக, அராவிய நாடுகளில் முன்னோடிகளாக சேவையாற்றினர். அப்படி முன்னோடியாக பயணத்தை தொடங்கும் நம்பிக்கைாளர்களுக்கு முன்னோடி குழுவின் செயலாளராக சேவையாற்றி முஹாஜிர் பிரியாவிடையின்போது விருந்தளிப்பார். அப்படி விருந்தளித்த நிகழ்ச்சி ஒன்றின்போது அராபிய நாட்டிற்கு முன்னோடிய க செல்லவிருந்த திரு கோல்மாமுடியா என்பார் தம்மிடம் கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றார். மறுநாள் கொட்டும் வெண்பனி குளிரில் பஸ்நிலையத்தில் அவர் தமது பயணத்தை தொடங்கியபோது முஹாஜிர் அவரைச் சந்தித்து தம்மிடம் இருந்த ஒரே பஹாய் நூலான அக்டாஸை பரிசளித்து, “இது என்னிடம் இருப்பதை விட ஒரு பஹாய் முன்னோடியிடம் இருப்பதுதான் சிறந்தது” என்றார். குறிப்பாக, பஹாய் முன்னோடிகளின் தேவையை முன்னறிந்து தீர்த்து வைப்பதில் முஹாஜர் அக்கறை காட்டி வந்தார்.

இல்வாழ்க்கை

1951ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் ஈரான் என்ற மங்கை நல்லாஐ மனைவியாக கரம்பிடித்தார். தெய்வ சமயத்தின் திருக்கரம் அலி புஃருட்டான் அவர்களின் திருநிறைச் செல்விதான் குமாரி ஈரான். திருமணம் முடிந்த சில மாதங்களில் தமது மருத்துவக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். ஷோகி எஃபெண்டியிடமிருந்து ஆசியும், அனுமதியும் கிடைத்த பிறகுதான் திருமணமே நடந்தது.

சேவைப்பாதையில்

1953ல் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் பத்து வருட உலகத் திட்டத்தை ஆரம்பித்தார். அந்தத் திட்டத்தின் கீழ் எந்த நாட்டிற்காவது முன்னோடியாக செல்ல வேண்டும் என்று டாக்டர் முஹாஜிர் பெரும் ஆவல் கொண்டார். இந்தோனீசியாவின் மெந்தாவாய் தீவுகளுக்கு ஒரு முன்னோடியை அனுப்புவதற்கு சரியான போதர் தேவை என அப்போதைய ஆஸ்திரேலியா தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் திரு கொல்லிஸ் ஃபெதர்ஸ்டன் ஈரான் நாட்டு முன்னோடிக் குழுவிடம் தெரிவித்தார். அதையறிந்து டாக்டர் முஹாஜர் அக்குழுவிடம் தமது ஆவலை வெளிப்படுத்தினார். தற்போதுதான் திருமணம் ஆகியுள்ளது. இளம் மனைவி என காரணம் சொல்லி அக்குழு அந்த ஆவலுக்கு தடை போட்டது. மனம் தளராத முஹாஜர் ஈரான் தேசிய சபையை சந்திக்க முடிவெடுத்தார். ஆத்மீக சபையை சந்திக்க ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த இரவில் கனவொன்று கண்டார். தெஹ்ரான் வீதியொன்றில் பஹாவுல்லா ஓர் அழகிய கம்பளத்தின் ஒரு முனையை தமது தோளில் சுமந்தவாறு நடப்பதை முஹாஜர் கண்டவுடன் ஓடிச் சென்று கம்பளத்தின் மறுமுனையை தனது தோளில் சுமந்தார். அதைக் கண்ட கருணை பஹாவுல்லா திரும்பிப்பார்த்து புன்முறுவலுடன் “எமது சுமையை சுமப்பதில் நீர் எமக்கு உதவியதில் யாம் மகிழ்ச்சியடைந்தோம்,” என மொழிந்தார். அந்தக் கனவைக் கண்ட பிறகு தமது இலட்சியக் கனவு எப்படியும் நிறைவேறிவிடும் என்பதில் உறுதியாக இருநதார். மறுநாள் ஆத்மீக சபை தனது அனுமதியை வழங்கியது. மெந்தாவாய் தீவைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத நிலையில் உற்றாரும் பெற்றோரும் கண்ணீர் மல்க பிரியாவிடை கூற, 1954ம் ஆண்டு ஜனவரி மாதத்து கடுங்குளிர்கொண்ட ஒரு பிற்பகலில் தனது இளம் மனைவியுடன் தெஹ்ரான் விமான நிலையத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, பாகிஸ்தானின் கராச்சி வழியாக ஜாக்கார்த்தா சென்றடைந்தார். பல சிரமங்களுக்குப் பிறகு அவருக்கு மெந்தாவாய் தீவில் அரசாங்க மருத்துவர் வேலை கிடைத்தது.

மெந்தாவாய் தீவினிலே

அந்தக் காலத்தில் மெந்தாவாய் தீவுகளின் ஜனத்தொகை 25,000ம்தான், நாகரிகக் காற்று வீசாத பிரதேசம் அது. காட்டுவாசிகளே அங்கு நாட்டுவாசிகள், பண்டமாற்று வியாபாரமே நடைமுறை வாழ்க்கை. வசதிகளற்ற அந்த வனாந்திரத்தில்தான் முஹாஜர் சமயப்பணியாற்றினார். அவரை அங்கு “துவான் டாக்டர்” என்றுதான் அழைப்பார்கள். காட்டுக்குச் சென்றால் வீடு வந்து சேர பல நாட்கள் ஆகும். ஒத்தையடிப் பாதையும், காட்டு மரங்களடர்ந்த சூழலும், படகுப் பயணங்களுமே அவரது அன்றாட காட்சிகள். ஒருமுறை தனது மனைவி சுகவீனமடைந்து கூட தாம் அறிந்திராத நிலையில் நடுகாட்டில் போதித்துக் கொண்டிருந்தார். ஒருசில நாட்கள் சென்ற பிறகுதான் அவருக்குச் செய்தி கிடைத்து திரும்பி வந்தார். அத்தகைய பயணங்களின்போதுதான், அமாத்தா சினாங்கா எனும் படகோட்டி சி பாய் பஜெட் என்ற கிராமத்தில் சமயத்தை ஏற்றுக்கொண்டார். அவர்தான் மெந்தாவாய் தீவின் முதல் பஹாய் நம்பிக்கையாளராவார். அன்றைய தினமே 25 நண்பர்கள் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டனர். படிப்பறிவற்ற அப்பகுதியில் சமயத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவோரை முஹாஜர் தங்களது கைகளை மட்டுமே உயர்த்த சொல்வார். படிப்படியாக முஹாஜர் மெந்தாவாய் மொழியான இந்தோனீசிய மொழியை நன்கு கற்று அம்மொழியிலே சமயத்தைப் போதிக்கலானார்.

கடிதப் போக்குவரத்து, தபால் சேவை என்பதெல்லாம் இங்கு மிக அரிது. கப்பல் தீபா எனும் தபால் கப்பல் மாதம் ஒரு முறை அங்கு வந்து தபால்களை பட்டுவாடா செய்யும். அப்படித்தான் அவரது கடதங்கள் வந்தன. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷோகி எஃபெண்டி இவருக்குத் தெய்வச் சமயத்தின் திருக்கரம் எனும் நிலையை வழங்கிய செய்தி கூட இவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது. அந்த செய்தி கிடைத்தவுடன் அந்த மாபெரும் பட்டத்தை சுமக்க தமக்கு தகுதி உள்ளதா என நினைத்து நீர் மல்கிய கண்களுடன் பல மணி நேரம் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார். இப்படி சமயப்பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அகால மரணமடைந்தார் எனும் சோகச் செய்தி பஹாய் உலகை உலுக்கியது. அந்த சோகத்திற்கிடையில் பாதாகாவலரது வேண்டுகோளுக்கிணங்க ஒரு வட்டார பஹாய் மாநாடு ஜாக்கார்த்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிநேர எதிர்ப்பு காரணமாக அம்மாநாடு கடைசி நிமிடத்தில் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டது.

சேவைப்பாதைக்கு புதிய திறப்பு

தெய்வச் சமயத்தின் திருக்கரம் எனும் ரீதியில் சேவைப்பாதையில் செல்ல வேண்டியதால் அவர்தமது மனைவியுடன் மெந்தாவாய் தீவை விட்டு புறப்பட வேண்டியதாயிற்று. அப்பொழுது மெந்தாவாய் தீவில் 9,000 பஹாய்களுடன், எட்டு பஹாய் பள்ளிகளும் இருந்தன. புனித பூமியில் தங்கி சமயத்தை நிர்வகித்து வந்த தெய்வச் சமயத்தின் திருக்கரங்கள் மெந்தாவாய் தீவை விட்டு உலக ரீதியில் சேவையாற்றுமாறு முஹாஜரை வலியுறுத்தினர். அதன் காரணமாகவே அவர் இந்தோனீசிய எல்லைகளை விட்டகன்றார்.

மலாயாவுடன் நெருக்கம்

“இருக்கின்ற பஹாய் சமூகங்களிலேயே ஓர் அழகிய ஆபரணமாகத் திகழவல்ல சமூகத்தை தெரிவு செய்யும் பொறுப்பை முஹாஜரிடம் விட்டிருந்தால் அவர் மலேசியாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்,” என ஒரு முறை அவரது மனைவி ஈரான் கூறியுள்ளார். 1961ம் ஆண்டு ஆரம்பத்தில்தான் அவருக்கு மலேசியாவைப்பற்றி அணுக்கமாக தெரிந்திருக்கின்றது என்பதை அவரது டைரியின் 13, பிப்ரவரி எனும் நாள்செய்தி காட்டுகின்றது. சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய பஹாய் மாநாடுகளின்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இவர் மலாயா வரத்தொடங்கினார். இவரது பயணத் தோழராக வந்தது மலேசியாவின் முதல் நம்பிக்கையாளரான யாங்கி லியோங்தான். மலேசியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு போன பெருமை டாக்டர் முஹாஜரையே சாரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி முஹாஜர் மலேசியா வருவார். இருபெரும் உத்திகளை டாக்டர் முஹாஜர் எப்போழுதுமே தனது ஆயுதமாக கையாண்டு வந்தார். ஒன்று, பண்பர்களை ஊக்குவித்து மலேசியாவின் குறிக்கோள்களை உயர்த்திக்கொண்டே போனார். மற்றொன்று, அயல்நாடுகளில் முன்னோடிச் சேவையின்பால் தண்பர்களது கவனத்தை ஈர்த்தார். உதாரணத்திற்க, ஒன்பது வருட திட்டத்தில் 63 புதிய உள்ளூர் சபைகளை ஸ்தாபிக்கும் குறிக்கோளைத் தாண்டி 93 உள்ளூர் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இதையறிந்த முஹாஜர் அந்த குறிக்கோளை 135 ஆக மாற்றி மலேசியாவை புகழேனியின் உச்சிக்க உயர்த்தினார். இவரது ஊக்குவிப்பால் ஒரமுறை தேசிய சபை உறுப்பினர்கள் முன்னோடிகளாக சேவை செய்ய முன்னெழுந்ததால் எதிர்பாராத இடைத்தேர்தல் வந்தது.

இறுதி நேரம்

1979ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ஒரு பஹாய் மாநாட்டிற்காக தென்னமெரிக்கா போய்ச் சேர்ந்த வேளையில்தான் டிசம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை குயிட்டோ சென்றடைந்தார். மறுநாள் சனிக்கிழமை பஹாய் நிலையத்தில் பயணபோதகர்கள் சந்திப்புக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய முஹாஜர் 1980ம் ஆண்டினை பயணபோதனை ஆண்டாக அறிவித்து 10,000 புதிய ஆன்மாக்களை சமயத்தின்பால் ஈர்க்கும் இலட்சியத்தையும் அறிவித்தார். அந்நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள அமெரிக்கானா அட்வெண்டிசா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பாட்டார். சிகிச்சை பலனளிக்காமல் போகவே காலை மணி 11.20க்கு அப்ஹா இராஜ்ஜியத்திற்க சிறகடித்து பறந்துவிட்டார்.

மிதமிஞ்சிய துக்கத்தையோ, மிதமிஞ்சிய மகிழ்ச்சியையோ அப்படி அப்படியே விவரித்து விடுவதற்கு நமது சொந்த மொழிகூட ஒத்துழைப்பு நல்குவதில்லை. சேவையின் ஆடையையே தனது நிரந்தர ஆடையாகத் தரித்திருந்த இப்போதகரின் மறைவு ஏற்படுத்தியது சொல்லொன்னா துயரம். இருப்பினும் ஆண்டுகள் பல ஆனாலும், நமது நெஞ்சம் விட்டகலா போதகர் முஹாஜரே ஆவார்.

முழு பதிவையும் வாசிக்க »


ஹாஜி முல்லா இஸ்மாயில்

ஹாஜி முல்லா இஸ்மாயில்-யி-கூஃமி, பஃராஹானைச் சேர்ந்தவராவார். அவரது இளமையிலேயே தாம் மிகவும் சிரத்தையுடன் அறிந்துகொள்ள முயன்ற உண்மையைத் தேடி அவர் கர்பிலாவுக்குச் சென்றார். நாஜாஃப் மற்றும் கர்பிலாவைச் சேர்ந்த முக்கிய உலாமாக்கள் பலரோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார். சையிட் காசிம் அவர்களின காலடியில் உட்கார்ந்து அவர் அறிவும் ஞானமும் பெற்றிருந்தார். பின்னாளில், சில வருடங்களுக்குப் பிறகு, அவர் ஷராஸில் இருந்த போது, பாப் அவர்களின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்த அறிவும் ஞானமும் வழிவகுத்தன.

அவர் தமது நம்பிக்ககையின் திடத்தினாலும், தமது அழ்ந்த பக்தி விசுவாசத்தினாலும் தனிச்சிறப்படைந்திருந்தார். அனைவரும் கூராசானுக்கு விரைந்து செல்லுமாறு பாப் அவர்களின் ஆணையை அவர் செவிமடுத்ததுமே, மிகுந்த உற்சாகத்துடன் அவர் அதற்கு அடிபனிந்தார். பாதாஷ்ட்டை நோக்கி சென்ற அன்பர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். அங்கு அவர் சிர்ருல்-வுஜுட் எனும் நாமமும் பெற்றார். அந்த அன்பர்களின் சகவாசத்தினால் சமயம் பற்றிய அவரது அறிவு மேலும் ஆழமடைந்தது. சமயத்தை மேலும் மேம்பாடடையச் செய்ய வேண்டும் எனும் அவரது அவாவும் அதே விகிதத்தில் அதிகரிக்கவும் செய்தது.

அவர் பற்றுறுதியின் மறு உருவமாகவே ஆனார். தமது சமயம் அவருக்கு அளித்த உற்சாக உணர்வைத் தகுந்த முறையில் வெளிப்படுத்திடுவதற்கு அவர் பெரிதும் ஆவலுற்றார். திருக்குர்’ஆனின் வாசகங்களின் அர்த்தங்களையும், இஸ்லாமிய மரபுகளையும் விளக்குவதில் அவர் வெளிப்படுத்திய நுண்ணறிவுக்கு இனையாக வெகு சிலரே இருந்தனர். பேச்சாற்றலுடன் அவற்றின் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியதானது அவரது சக சிஷ்யர்களின் போற்றுதலை பெற்றது.

பாப் அவர்களின் சிஷ்யர்களுக்கு தபார்சி கோட்டையே ஒன்றுகூடும் மையமாக விளங்கிய நாட்களின் போது, அவர் படுத்தபடுக்கையாக நோய்வாய்ப்பட்டு அல்லலுற்றிருந்தார். அவரால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கு உதவிடவோ அதற்குத் தமது பங்கை ஆற்றிடவோ முடியவில்லை. அவர் உடல் சௌகர்யம் அடைந்தவுடன், அந்த நினைவில் நிற்கும் முற்றுகை ஒரு முடிவிற்கு வந்திருப்பதைக் கண்டார். அதில் அவரது சக சிஷ்யர்கள் பெரும் அழிவுக்கு ஆளாகியிருந்தனர். சமயம் அடைந்திருந்த அந்த பெருத்த நஷ்டத்திற்கு அவர் தமது சுயத்தியாகமிக்க உழைப்பால் ஈடுகட்டும் எண்ணத்துடன் அவர் மேலும் அதிகமான உறுதியுடன் முன்னெழுந்தார். இந்த உறுதி, அவரை உயிர்த்தியாகமெனும் களத்திற்கு இட்டுச் சென்றும், அதன் மகுடத்தை அவருக்கு ஈட்டித் தரவும் செய்தது.

சிரசைத் துண்டிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்காக காத்திருந்த வேளை, தம்மை முந்திக்கொண்டு சிரம் துண்டிக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருக்கவும் செய்த அந்த இரு உயிர்த்தியாகிகளையும் அவர் கண்ணுற்றார். அவர்களின் இரத்தம் தோய்ந்த சிரங்களை நோக்கியவாறு, “நன்கு செய்தீர்கள் அன்புத் நண்பர்களே,” என முழங்கினார். “தெஹரானையே சுவர்க்கலோகமாக மாற்றிவிட்டீர்,” எனக் கூவினார். “நான் உங்களை முத்திக்கொள்ள முடியவில்லையே!” தமது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காசை எடுத்து, தமது சிரச்சேதம் செய்யப்போகும் காவலாளிக்கு அதைக் கொடுத்து, அவர் தமது வாயை இனிப்பாக்கிக்கொள்வதற்கு ஏதாவது வாங்கி வருமாறு வேண்டினார்.

அதில் சிறிதை தாம் அருந்தி மற்றதை காவலாளியிடமே கொடுத்தார். கொடுத்துவிட்டு, “உனது செய்கையை நான் மன்னித்துவிட்டேன்; எம்மை அனுகி எமது சிரசைச் துண்டிக்கலாம், என்றார். முப்பது வருட காலமாக இந்தப் புண்ணியநாளுக்காக நான் ஏங்கியிருந்துள்ளேன். எங்கே எனது இந்த ஆசை நிறைவேறாமலேயே நான் எனது சவக்குழிக்குச் சென்றுவிடுவேனோ என பயந்திருந்தேன்,” என மேலும் கூறினார். விண்ணை நோக்கியவாறு, “இறைவா, எம்மை ஏற்றுக்கொள்வீர்,” எனக் கூவினார். நான் தகுதியற்றவனான போதிலும் “தியாகமெனும் பலிபீடத்தில் தங்கள் உயிர்களை காணிக்கையாக்கியுள்ள அந்த அந்த அமரர்களின் சுருள்சுவடியில் எழுதிட, முயலுகின்றேன்,” என்றார். அவர் தமது வழிபாட்டைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, அவரது வேண்டுகோளின் பேரில் காவலாளி அவரது வழிபாட்டை பாதியிலேயே துண்டித்

முழு பதிவையும் வாசிக்க »

தாஹிரி ஜம்ஷிட்


தாஹிரி ஜம்ஷிட்

ஓல்யாவின் கதை எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

இரான் நாட்டில் இன்று பல பஹாய்கள் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் ஒரே குற்றம் உலகசீர்த்திருத்தம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட்டதே ஆகும். ஆம், இவர்கள் பஹாய்கள் ஆவர். அதுதான் அவர்கள் இழைத்த குற்றம்.
தாஹிரி சீயாவுஷீயை ஷிராஸில் வஹ்டாட்களின் இல்லத்தில் 1977-இல்தான் முதல் முதலில் சந்தித்தேன். அடுத்து நாங்கள் இருவரும் சந்தித்தது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேப்பா சிறைச்சாலையின் இருண்ட சில்லிட்ட அறை ஒன்றில் தாஹிரி என்னை அன்புடன் கட்டித் தழுவிய போதே. தாஹிரியும் அவளது கனவரான ஜம்ஷிட் இருவரும் ஒன்றாகவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக அனுபவித்த கொடுமைகளைப் பின்வருமாறு தாஹிரி விவரித்தாள்:

1977-இல், ஜம்ஷிட்டும் நானும் யசூஜிற்கு நகர முடிவெடுத்தோம். 1978 இரானிய புரட்சியின் ஆரம்பத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். எங்கள் வீடு, உடமைகள் மற்றும் ஜம்ஷிட்டின் புதியக் கடை அனைத்தும் அபகரிக்கப்பட்டன. நான் தாதி வேலை செய்து வந்த மருத்துவ மையத்திலிருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டேன்.

அதன் பிறகு கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் ஷிராஸ் திரும்பினோம். கையில் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை மறுபடியும் அமைக்க ஆரம்பித்தோம். சிறிது காலத்திற்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆனாலும் இருந்ததைக் கொண்டு மனநிறைவு அடைந்தோம். நான் பல மருத்துவ நிலையங்களில் வேலைத் தேடினேன். என் சேவைத் தேவைப்பட்டபோதும், நான் பஹாய் எனும் காரணத்தினால் அங்கு என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. ஜம்ஷிட்டும் துனிக் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு, நான்கு வருடங்களாகச் சொந்த வீடு இல்லாத நிலைக்குப் பிறகு சொந்தமாக ஒரு இடத்தைப் பெறும் நிலையில் இருந்தோம். போன வாரம்தான் ஒரு குளிர்சாதனப் பெட்டி, படுக்கை, மற்றும் சிறு சிறு பொருட்கள் என சிலவற்றை வாங்கினோம். ஆனால் இந்த சிலவற்றைக் கூட நாங்கள் பெற்றிருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். இப்போது நாங்கள் இருவரும் இங்கு சிறையில் இருக்கின்றோம். அக்டோபர் மாத இருதியில், இரவு நேரத்தில், வீதியில் ஜம்ஷிட் கைது செய்யப்பட்டு நேராக சேப்பா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் 10 மணியளவில் அவர் எங்கள் வீட்டிற்குக் கொண்டுவரப்பாட்டார். அவரைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அவர் வெடவெடவென்று நடுங்கி, நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அவரை அவர்கள் என்ன செய்துவிட்டனர் என்பதை அறிய அவர் அருகே விரைந்தேன், ஆனால் அவர்கள் எங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனராகையால் நான் அவரிடம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. அவர்கள் பஹாய் பதிவேட்டிற்கும், பஹாய் நிதிகளைப் பறிமுதல் செய்வதற்காகவும் வந்திருக்க வேண்டும் என யூகித்தேன். ஜம்ஷிட் பதிவேடு மற்றும் நிதி இரண்டையும் தமது கையில் வைத்திருந்தார் ஆனால் புரட்சிக் காவலர்களிடன் அவற்றை ஒப்படைக்க மறுத்துவிட்டார். மற்ற பஹாய்களின் பெயரைப் பெற அவரை அவர்கள் நிச்சயமாகச் சித்திரவதை செய்திருக்கவேண்டும். எங்கள் இருவரையும் பயமுறுத்த எங்கள் இருவரையும் பிரித்து என்னை ஒர் அறையில் அடைத்து வைத்தனர். அவர்கள் ஜம்ஷிட்டிடம், “பதிவேட்டையும் பணத்தையும் கொடுக்கப்போகிறாயா அல்லது இங்கேயே உன்னைக் கொல்ல வேண்டுமா?” என பயமுறுத்துவது எனக்குக் கேட்டது. நான் பெரும் பீதிக்குள்ளானேன்; அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நான் அலறியவாறு கதைவைக் கைகளால் பலமாகத் தட்டினேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கும் பொருட்டு அவர்கள் கதவைத் திறந்து என்னை வேளியே விட்டனர்.

அவர்களின் தாக்குதலை எதிர்க்கவேண்டும் எனும் தீர்மானம் ஜம்ஷிட்டின் முகத்தில் நன்குத் தெரிந்தது. ‘அதாஹிரி, நான் அஹமதுவிடம் அந்த பதிவேட்டைக் கொடுத்தேன் ஆனால் அவர் எங்கு வைத்துவிட்டாரோ தெரியவில்லை,’ என்றார்
உண்மையில் அந்த புத்தகத்தை ஜம்ஷிட் பாதுகாப்பாக வைத்திருந்தார். தம் உடன்பிறந்தவரிடம் அதை ஒப்படைத்தும், அப்படித் தாம் கைது செய்யப்ப்டடால் அதை எடுத்து நம்பிக்கையான ஒருவரிடம் அதை ஒப்படைக்கும்படியும் கூறியிருந்தார். இதன் மூலம் பஹாய்களின் பெயர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மிகுந்த வேதனையோடு பெருமூச்சு ஒன்றை விட்டார். அவர் தமக்குள் நடத்திய போராட்டத்தினால் அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. ஒரு புரம் உள்ளூர்ப் பஹாய்களைப் பாதுகாத்திடும் பொருட்டு அவர் சிறையில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும், மறுபுறம் அவர் நேர்மையாக இருக்கவேண்டும் எனும் நம்பிக்கையினால் பொய் சொல்ல அஞ்சினார். காவலர்கள் முன்னிலையில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவலர்களின் முன்பாகவே ஜம்ஷிட்டை நோக்கிச் சென்றேன். அவரது கையைப் பற்றி அவர் நடப்பதற்கு உதவி செய்தேன். ஒரு பார்வையிலேயே பதிவேடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதையும் அஹமது நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதையும் தெரிவித்தேன்.

பதிவேட்டை காண முடியாத காவலர்கள் ஜம்ஷிட்டை மறுபடியும் சிறைக்கே கொண்டு சென்றனர். ஒரு மாதம் கழித்து, அவர்கள் திரும்பி வந்து என்னையும் கைது செய்தனர். என் மேல் சாற்றப்பட்ட குற்றச் சாட்டு நான் பஹாய்ப் பதிப்பகக் குழுவில் அங்கம் வகித்தேன் என்பது.

தாஹிரிக்கும் அவளது கனவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்தன. அவ்விருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். தாஹிரிக்கு முப்பது வயதும் ஜம்ஷிட்டுக்கு முப்பத்தி நான்கு வயதும் ஆகியிருந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. சிறையில் தாஹிரி சதா ஜம்ஷிட்டின் பெயரை உச்சரித்து அவருக்காக ஏங்கி அழுது கொண்டிருப்பாள். பல மணி நேரங்கள் அவ்விருவருடைய உறவைப் பற்றியும் ஜம்ஷிட்டின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருப்பாள். ‘ஓல்யா,’ என என்னை அழைத்து, ஜம்ஷிட்டை கொலை செய்து விடுவார்கள் என எனக்குப் பயமாக இருக்கின்றது, அவர் இல்லாமல் என்னால் வாழ இயலாது,’ என்றாள்.

அவள் தன் உயிரைத் தன் கணவனுக்காகத் தியாகம் செய்ய விரும்புவதாக எப்போதும் கூறிக்கொண்டிருப்பாள். தாஹிரியின் தியாக உணர்வும் அன்பும் பிரமிக்கச் செய்வதாக இருந்தது. அந்த மோசமான நிலையிலும் அவள் எல்லோரையும் கவனித்தும் எல்லோருக்கும் தன்னாலான உதவிகளையும் செய்து வந்தாள்.

சிறையில் பலர் அடிக்கடி நோய் வாய்ப் பட நேர்ந்தது. ஆனால் அங்கிருந்த வசதிக் குறைவுகளினால் ஒரே தட்டிலிருந்து கைகளாலேயே உண்ண வேண்டியிருந்தது. ஒரு நோயாளியோடு ஒரே தட்டிலிருந்து உண்ணுவது எனக்குக் குமட்டலை ஏற்படுத்தும் என்பதை தாஹிரி உணர்ந்திருந்தாள். அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவள் என்னைப் பார்த்து, ‘ஓல்யா, நாம் இருவரும் இடம் மாற்றிக் கொள்ளலாமே?’ என்பாள்

நாங்கள் குளிக்கும் போது அவள் எங்கள் துணிகளைத் துவைப்பதற்கு முன்வருவாள். முதல் சில வாரங்களில் எங்களுக்குப் போட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு உடை மட்டுமே இருந்தது. பல நாட்ளுக்குப் பிறகே எங்கள் குடும்பத்தினர் எங்களுக்கு மாற்று உடை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தாஹிரி தான் கைது செய்யப்பட்ட போது மிகவும் சமயோசிதமாக ஒரு மாற்று உடையைத் தன்னோடு கொண்டு வந்திருந்தாள். அன்றிரவு காவலர்கள் அவளுடைய வீட்டிற்கு வந்த போது மாற்று உடைகளும் குளியல்பொருட்கள் சிலவற்றையும் அவள் முன்யோசனையுடன் ஒரு பையில் எடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் என் (ஓல்யா) நிலையோ, நான் கைது செய்யப்பட்ட நாளன்று சிறைக்குள் எனக்குத் தேவையான பொருட்களை என்னுடன் கூட எடுத்த வருவதற்கு அனுமதி கேட்ட போது காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அதுவும் பல முறை கெஞ்சிக் கேட்ட பிறகே, என் கனவர் எனக்குத் தேவையான சில பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அந்த வேளைகளில் நான் குளித்து என் உடையைத் துவைக்கும் போது தாஹியிரியின் உடையையே உபயோகப் படுத்த வேண்டியிருந்தது. எங்கள் விசாரணைகளின் போது நாங்கள் மொத்தமான காலுறைகளும், காற்சட்டைகளும், நீண்ட தளர் மெய்யங்கிகளும், முக்காடும், சடுர் எனப்படும் கறுப்பு உடையும் தரித்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் கைது செய்யப்பட்டபோது சாதரண உடைகளே போட்டிருந்ததால் காலில் சாதரண மெல்லிய காலுறைகளே அனிந்திருந்தோம். தாஹிரி இரண்டு ஜோடிக் காலுறைகள் வைத்திருந்தாள். முதல் வாரத்தில் நாங்கள் அவளுடைய காலுறைகளேயே அனிந்து செல்வோம். ஒரு முறை நான் திடீரென விசாரனைக்காக அழைக்கப்பட்டேன். அப்போது தாஹிரி தான் அனிந்திருந்த காலுறைகளைக் கலற்றி என்னிடம் கொடுத்தாள். அப்போது நான், “ஒரு வேலை உன்னை அவர்கள் திடீரென அழைத்தாள் நீ என்ன செய்வாய். காலுறைகள் இல்லாமல் நீ அவதிப்படுவாய்,” என்றேன்.
‘பரவாயில்லை, நீ இதை இப்போது அனிந்த செல்,’ எனத் தாஹிரி கூறினாள்.’

விசாரனை முடிந்து திரும்பியவுடன் நான் தாஹிரியின் காலுறைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கள் விசாரனைக் குறித்தும் நாங்கள் படும் அவஸ்தைக் குறித்தும் பேசினோம். அப்போது தாஹிரி திடீரென என்னிடம் ‘ஓல்யா, இந்த காலுறைகளை நான் உன்னிடமே கொடுக்கப்போகின்றேன் எனக் கூறினாள்.’

‘தாஹிரி, எப்போதாவது ஒரு நாள் நான் இங்கிருந்து வெளியேறினால், நீ கொடுக்கும் இவற்றை உன் ஞாபகார்த்தமாக நான் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் என்றேன். நமது துன்பம் நிறைந்த இந்த நாட்களையும், உன்னுடையத் தியாங்கள் அனைத்தையும் அவை எனக்கு ஞாபகப்படுத்தும். அந்த நேரத்தில் நான் விடுதலையாவேனா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால், இப்போது தாஹிரி கொடுத்த அந்த காலுறைகளை நான் பொக்கிஷங்களாக மதிக்கின்றேன்.
தாஹிரியின் விசாரனை எங்களுடன் சேர்த்துச் செய்யப்படவில்லை. ஒரு நாள், அவள் விசாரனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள், ஆனால், மீண்டும் அறைக்குக் கொண்டுவரப்படவில்லை. அவளுக்கு என்னவாயிற்றோ என நாங்கள் கதிகலங்கிப்போனோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அரசியல் கைதி ஒருவர் எங்கள் அறைக்குக் கொண்டு வரப்பாட்டார். அவர், தாஹிரி தனியறைச் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எங்களைப் பயப்படுத்துவதற்குச், சிறைக் காவலர்கள் எங்களில் யாரையாவது எங்கள் பொது சிறையறையிலிருந்து கொண்டு போய் தனியறைச் சிறையில் அடைப்பதுண்டு. பத்துத் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தாஹிரியை மறுபடியும் எங்கள் அறையிலேயே கொண்டு வந்த அடைத்தனர். அந்ந நாட்களில் தான் மிகவும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தாஹிரி தெரிவித்தாள். ஆனாலும், ஜம்ஷிட்டைப்பற்றியும் தன்னைப்பற்றியும் தவிர வேறு எவரைப்பற்றியும் தான் எவ்விதத் தகவலையும் அவர்களுக்கு வெளியிடவில்லையென தாஹிரி தெரிவித்தாள்.

முடிந்தபோதெல்லாம், எங்கள் அறைக்குள் நாங்கள் ஒன்றுகூடி, மனவேதனைகளை மறந்திருக்க வேடிக்கையாக எதையாவது பேசியும், சிரித்துக்கொண்டும், இருப்போம். கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது இருக்கும். குறிப்பாக, தாங்கள் கொலையுறப்போவது குறித்து அனைவருமே எதையாவது சொல்வார்கள். தாஹிரி அதைப்பற்றி வேடிக்கையாக எதையாவது கூறுவாள். “யா பஹாவுல்லா, தயவு செய்து என்னை மட்டும் இதற்குத் தேர்ந்தெடுக்காதீர்கள். நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. நான் ஒரு பஹாயாக இருந்து உயிர் வாழவே விரும்புகிறேன்.” அவ்வாறு கூறிவிட்டு மெல்லச் சிரித்து, “யா அப்துல் பஹா, நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. அது வலுக்கட்டாயமானது இல்லை தானே?  ஜம்ஷிட்டின் கரத்தை என் கரத்தில் வைத்து எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ விடுவீர்கள் என்பதே என் ஆசை. நாங்கள் இருவரும் ஒன்றாகவும் பஹாய்களாகவும் இருக்கும் வரை, தெருவோரத்தில் குடிசையில் வாழ்வதானாலும் பரவாயில்லை.” என வேண்டிக்கொள்வாள்.
எங்கள் மரணச் செய்தி கேட்டு நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு பதபதைப்பார்கள் என்பதை ஒரு சில அன்பர்கள், நடித்துக்காட்டி எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள். ஆனால் தாஹிரி மட்டும் சிரிக்க மாட்டாள். “இந்த வெறி பிடித்த மனிதர்கள் நம்மேல் வைத்துள்ள தப்பபிப்ராயத்தால் நம் எல்லோரையுமே கண்டிப்பாக கொல்லப்போகின்றனர்.” தாஹிரிக்குத் தான் கொல்லப்படப்போவது ஆரம்பித்திலிருந்தே தெரிந்திருந்தது போலும். ஆனால், அவள் சிரித்துக்கொண்டே, “கேளுங்கள், அவர்கள் நம்மை தூக்கிலிடும்போது நமது நாக்குகள் தொங்கிப்போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருக்கும். ஆகவே, வாயை நன்கு மூடிக்கொண்டு புன்னகைத்த வண்ணமாக இருங்கள்.” என்றால்.

பல நேரங்களில் நான் சிறிது மறந்திருந்தாலும் அவள் எனது தற்போதைய ஆசீர்வாதங்களை ஞாபகப்படுத்துவாள். ‘நாம் இனி கவலைப்படத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்த புரட்சிப் படையினர் எப்போது நமது வீட்டுக் கதவைத் தட்டி நம்மை கைது செய்வார்களோ எனும் பதபதைப்பு இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது நமக்கு அந்த பயம் இல்லையல்லவா.’ என்பாள்.

வருகையாளர்கள் தினங்கள் தாஹிரிக்கு மிகவும் சிறமமிக்க நாட்களாக விளங்கின. ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவாள். அவளது கனவனின் சகோதரராகிய அகமது, கர்ப்பமான தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு ஷிராஸ் நகரைவிட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தப் பெண்மனி தனது இரு குழந்தைகளோடும் கையில் பழங்கள் நிறைந்த பைகளுடனும், துணிகளுடனும், பணத்துடனும், தாஹிரியையும் அவளது கனவரையும் சந்திக்க வருவாள். அங்கு சிறை வாசலில் 7 அல்லது 8 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். காவலாளிகளின் ஏச்சையும் பேச்சையும் திட்டல்களையும் கொச்சை வார்த்தைகளையும் செவிமடுக்க வேண்டும். அதுவும், கண்ணாடித் தடுப்பின் வழி அந்த 10 நிமிடங்களுக்கும் குறைவான நேர சந்திப்பிற்காகவே. இது ஒவ்வொரு முறையும் தாஹிரியின் இதையத்தைக் கசக்கிப் பிழிந்துவிடும். ‘அந்தப் பெண்ணின் தியாகமும் தன்னலமின்மையும் என்னை நானிக் குறுகச் செய்கின்றன’ என அவள் கூறுவாள்.

ஜம்ஷிட் ‘சமாரிட்டான்’ குழுவின் அங்கத்தினர் எனவும், அவர் ஜோர்தானில் பிறந்தவர் எனவும் காவலர்கள் அறிந்த போது, அவரைப் பிறரைக்காட்டிலும் அதிகமாக துன்புறுத்தவாரம்பித்தனர். அவரை எழுபது நாட்கள் சேப்பாவில் தனிச்சிறை வைத்தனர். தாஹிரியும் ஜம்ஷிட்டும் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் உயிரையே வைத்திருந்து காவலர்களுக்குத் தெரியும். இதை அவர்கள் உபயோகப்படுத்தி ஒருவரிடம் மற்றவர் சமயத்தைத் துறந்துவிட்டதாகப் பொய் சொல்வார்கள். ஆனால், அது எப்போதுமே வேலை செய்ததில்லை. தாஹிரியிடம் இந்தக் கதையைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் அவள், ‘நான் பஹாய்’ என்பாள்.

நீ அவரது மனைவி அல்லவா?’ என அவர்கள் வினவுவார்கள்.

‘நம்பிக்கை என வரும்போது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாவுக்கு அவர்களே பொறுப்பாளிகள்’ என தாஹிரி கூறிவிடுவாள்.
விசாரனை செய்பவர், தாஹிரியின் மனோ தைரியத்தினால் மிகவும் சினமுற்று விசாரனை அரைக்கு அவளைக் கொண்டு சென்று, ‘நீ உன் சமயத்தைத் துறக்காவிடில் ஜம்ஷிட்டைச் சாகும் வரை துன்புறுத்த ஆனையிடுவேன்’ எனக் கூறுவார்.
‘நான் பஹாய். சாகும் வரை நான் அவ்வாறே இருப்பேன்,’ என அவள் தைரியமாக பதிலளிப்பாள். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் என் சமயத்தைத் துறக்கப்போவதில்லை.’

‘உன் ஜம்ஷிட்டை நாங்கள் என்ன செய்துவிட்டிருக்கிறோம் என்பதை மட்டும் நீ அறிந்தால். அவரை நீ இப்போது பார்த்தால் அடையாளமே தெரியாது. உனக்கு உன் ஜம்ஷிட் சிறிது கூட மீதமில்லாமல் செய்துவிட்டோம்’ என விசாரனை செய்யும் காவலர் கூறினார்.
ஜம்ஷிட் மீது உயிரையே வைத்திருந்த தாஹிரி, அது கேட்டு ஜம்ஷிட்டின் நிலை குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு காவலாளியைக் கெஞ்சினாள். அப்போது அவர்கள் ஜம்ஷிட்டை அந்த அரைக்குள் கொண்டுவந்து அவர்கள் இருவரையும் 15 நிமிடங்கள் சந்திக்க விட்டனர். அதன் பின் அவள் சிறைக்குத் திரும்பி வந்தாள். வரும்போது மேனியெல்லாம் நடுங்க அழுதுகொண்டே வந்தாள்.

அவர்கள் ஜம்ஷிட்டைத் கைத்தாங்கலாக அறைக்குள் கொண்டுவந்தனர். அவரைப் பார்த்தவுடன் நான் அலறிவிட்டேன். அவர் வெறும் எலும்பும் தோலுமாகப் பேயைப் போல் நின்றார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவரது கால் நகங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் ஆன்மா திடமாகவே இருந்தது. அவர் என்னைத் தேற்றியவாறு, ‘தாஹிரி, என்னைப்பற்றி கவலைப்படாதே. நான் உயிர்வாழ்வேன்,’ என்றார்.

நான் அதற்கு, ‘ஜம்ஷிட் உம்மை அவர்கள் கொன்றுவிட்டால் நாம் அடுத்த உலகில் சந்திப்போம். அங்கு நாம் ஒன்றாக இருக்கலாம்.’ அப்போது, ஜம்ஷிட் ஏதோ என்னிடம் சொல்ல விரும்புவதாக உணர்ந்தேன். ஒருவேலை நான் விடுதலையாகி வெளியே சென்றால், அவர் கூறக்கூடிய விஷயங்களைத் தேசிய ஆன்மீக சபையிடம் தெரிவிக்கவேண்டும் என விரும்பியிருக்கலாம். அவர் தமது சட்டையின் பின்புறத்தைத் தூக்கித் தமது முதுகைக் காண்பித்தார். அவர் வாங்கியச் சாட்டை அடிகள் அவரது முதுகெலும்பைப் புறையோடச் செய்திருந்தன. விசாரனைச் செய்பவர் முன்னிலையிலேயே, ‘தாஹிரி, நான் எழுபது நாட்கள் சித்திரவதைகளும் எழுபது நாட்கள் தூக்கமின்மையையுைம் அனுபவித்துவிட்டேன். இதற்கு மேலும் இச்சகோதரர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றே தெரியவில்லை. பகலில் என்னைச் சித்திரவதை செய்கிறார்கள். இரவில் என்னைத் தூங்கவிடுவதில்லை. ஷிராஸ் நகரப் பஹாய்களின் பெயயர்ப் பதிவேடும் அவர்கள் விலாசங்களும் வேண்டுமெனக் கேட்கின்றார்கள், முக்கியமாக உள்ளூர் ஆன்மீகச் சபை அங்கத்தினர்களின் பெயர்களையும் விலாசங்களையும் கேட்கின்றார்கள். என்னைத் தவிர சபை அங்கத்தினராக இருந்த வேறு எவரையும் எனக்குத் தெரியாது எனக் கூறினாலும் நம்ப மறுக்கின்றனர். வறிய நிலையில் இருந்த பஹாய்களுக்கு நான் உதவி செய்ததாகவும், அப்படி நான் செய்யாதிருந்திருந்தால் அவர்கள் இந்நேரம் இந்த நாட்டின் சமயத்தைத் தழுவியிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். சண்டையிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட எல்லா சமய சகோதரர்களுக்கும் பஹாய்கள் வழங்கிய நான்கு லாரி உதவிப் பொருட்களுக்கான ரசீதை இவர்களிடம் கொடுத்துவிட்டேன். இதிலிருந்தே நாம் தேவைப்படுவோர் யாருக்கும் பேதமில்லாமல் உதவுகின்றோம் என்பது தெரிந்திருக்கும். நிற, சமய வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவவேண்டும் என்பது நமது நம்பிக்கையல்லவா. இவர்களிடம் ஒரு துளி நீதி இருந்திருந்தாலும் அது நாம் குற்றமற்றவர்கள் என்பதை அவர்களுக்கு நிரூபித்திருக்கும்.

அப்போது ஒரு காவலாளி, ‘நீர் பொய் கூறவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது உம்மைச் சிறிது நேரம் வெளியே தூய்மையான காற்று படும்படி கொண்டுசெல்கிறோம்,’ என்றார்.

தனி அறைச் சிறைக் கைதிகள் காற்றுப் புகாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தூய்மையான காற்றுக்கு ஏங்கிய போதிலும், சிரமமில்லாவிடில், ஜம்ஷிட், தாம் பொதுச் சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமது தோழர்களைச் சந்திக்கவே விரும்புவதாகக் கூறினார். அதுவே தமக்குப் பெரும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நான், ஜம்ஷிட்டின் கைகளிலும் கழுத்திலும் ஆழமானக் காயங்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். அவை என்னவென நான் வினவினேன். அதற்கு காவலாளி ஒருவர், ‘ஜம்ஷிட் கெட்ட பையன், அவன் இருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினான்,’ எனக் கூறினார்.

‘தாஹிரி,’ என என்னை ஜம்ஷிட் விளித்தார், ‘என்னை மன்னித்துவிடு, ஆனால், தனிச் சிறையடைப்பில் இவ்வளவுச் சித்திரவதைகளையும், உடல் மற்றும் மனோ ரீதியில் நான் பட்ட கொடுமைகளையும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் இவ்வளவு காலம் சென்றும் நமக்குக் குழுந்தைகள் இல்லையென்பது குறித்து என்னை மிகவும் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தனர். ‘இந்த நிலைக்குக் காரணம் நீயா அல்லது நானா எனவும் கேட்கின்றனர்.’ அல்லது நடு இரவில் என்னை எழுப்பி அவர்களோடு சென்று பஹாய்களின் இல்லங்களைச் சுட்டிக் காட்ட வெண்டும் எனவும் கூறுகின்றனர்.’

அடுத்த நாள் அவர்கள் ஜம்ஷிட்டை அழைத்துக்கொண்டு தாஹிரியைக் காண வந்தனர். இம்முறை அச்சந்திப்பிற்குப் பிறகு தாஹிரி புன்னகைத்தவாறு வந்தாள். ‘இங்கிருந்து ஜம்ஷிட்டுக்கு நான் ஏதாகிலும் கொண்டு செல்ல முடியுமா?’ எனக் களிப்புடன் விசாரித்தாள். நேற்று நடந்ததில் காவலாளிகளுக்கு ஜம்ஷிட் மேல் சிறிது கருணை பிறந்துள்ளது என நான் நினைக்கின்றேன். அவரைத் தனி அறையிலிருந்து பொது அறைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தனிச் சிறையில் இருந்தவரை அவர் பழங்கள் எதையுமே காணததால் நான் அவருக்குப் பழங்கள் ஏதும் கொண்டுச் செல்லலாம் எனவும் கூறினர்’ என்றாள்
நல்ல வேளை, அன்று எங்களிடம் பழங்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஜம்ஷிட்டைக் காண தாஹிரி சென்றாள். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், பழங்களோடு திரும்பி வந்தாள். ‘இக்காவலாளிகள் நம்மோடு விளையாடுகிறார்கள். நாம் இவர்களின் கைப்பொம்மைகள். நம்மைச் சித்திரவதைப்படுத்தி அவர்கள் மகிழ்கின்றார்கள். அவர்களின் தயவின் கீழ்தான் நாம் இருக்கின்றோம்,’ என மனம் வெதும்பிக் கூறினாள்.

அதற்குப் பிறகு, அடிலபாட் சிறைக்குத் தாஹிரி மாற்றலாகி சென்று இரண்டு வாரங்கள் கழித்து, அவள் தனது இறுதிச் சுற்று விசாரணைக்குச் சென்ற நாள் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. அன்று மாலை அவள் சிறைக்குத் திரும்பியபோது, அறைக்குள் அவள் மிகுந்தச் சாந்தத்துடனும் கம்பீரமாகவும்  நடந்து வந்தாள். களிப்பு நிறைந்த முகத்தில் புன்னகை தவழ்ந்தது. முகம் பிரகாசித்தது. ‘தாஹிரி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றாய்?’ என நான் வினவினேன்.
அவள் மிகவும் சாந்தத்துடன், ‘இவ்வளவு நாட்கள் அவர்கள் ஜம்ஷிட்டை மட்டுமே கொல்லப்போகின்றார்கள் என நான் நினைத்துவந்தேன். ஆனால், இன்று நீதிபதி என்னையும் சேர்துக் கொல்ல ஆணை பிறப்பித்துவிட்டார். எனது இப்பயணத்தில் நான் என் கணவருடன் சேர்ந்தே செல்லப்போகின்றேன்.’ என்றாள் தாஹிரி.

அந்த நாளுக்குப் பிறகு அவள் அழுதோ கவலைப்பட்டோ நான் பார்க்கவில்லை.
அவளது இறுதி ஆசையும் சிறிது நாட்களில் நிறைவேறியது. அப்ஹா இராஜ்ஜியத்தில் அவளும் அவளது கனவனும் ஒன்றிணைந்தனர்.

முழு பதிவையும் வாசிக்க »


அமாத்துல் பஹா ருஹியா கானும் (1910-2000)

ruhiyyih-khanum

கடந்த 19-1-2000ல் நமது இதயமெல்லாம் கொள்ளை கொண்ட அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்கள் காலமானார். இதனைத் தொட்டு மதிப்புக்குரிய உலக நீதி மன்றம் அன்னவருக்கான நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தும்படி உலக பஹாய்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. உலக அளவில் பல நினைவாஞ்சாலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் அமாத்துல் பஹா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களில் இருந்து சிலவற்றைக் காண்பது பொருத்தமாகும்.

தெய்வ சமயத் திருக்கரம்
அமாத்துல் பஹா அவர்கள் நமது மதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய பாதுகாவலரின் துணைவியார் மாத்திரமல்லர். அவர் புனிதக் குடும்பத்தின் கடைசியானவரும் கூட. அதோடு அவர் தெய்வச் சமயத் திருக்கரமும் கூட. இந்த தெய்வச் சமயத் திருக்கரங்களைப் பற்றி பஹாவுல்லா இவ்வாறு கூறுகிறார்.

“எவரின் வாயிலாக ஆழ்ந்த துன்பம் எனும் ஒளி ஜொலித்ததோ, சக்தியுடையோனும், வல்லமையுடையோனும், சுதந்திரமுடையோனுமாகிய இறைவனால் அதிகாரம் எனும் பிரகடனம் நிரூபிக்கபட்டதோ; மற்றும் எவரின் வாயிலாக வழங்குதல் எனும் கடல் அசைந்து, மனித குலத்தின் பிரபுவாகிய கடவ,ளின் சகாயம் எனும் தென்றல் வீசப்பட்டதோ, அந்த தம்முடைய சமயத்தின் திருக்கரங்களின்மீது ஒளியும், மகிமையும், வாழ்த்தும் போற்றுதலும் குடிகொள்ளட்டுமாக.”

பஹாவுல்லாதான் தெய்வ சமயத் திரக்கரங்கள் எனும் ஸ்தாபனத்தை உருவாக்கினார். அவர் பாரசீக நம்பிக்கையாளர்களின் மத்தியில் இருந்து நால்வரை தெய்வ சமயத் திருக்கரங்களாக நியமித்தார். அப்துல் பஹா நேரடியாக தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமிக்காவிட்டாலும் கூட, அவர் பஹாவுல்லாவின் மற்ற நான்கு நம்பிக்கையாளர்களையும் தெய்வச் சமயத் திரக்கரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அப்துல் பஹாவின் உயிலும் மரண சாசணமும் என்ற ஏட்டின்படி, தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமிக்கின்ற அதிகாரம் பாதுகாவலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தின்படி பாதுகாவலர் மொத்தம் 42 தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமித்தார். அதன்படி, பஹாய் சமயத்தில் மொத்தம் 50 தெய்வச் சமயத் திருக்கரங்கள் நியமிக்கப்பட்டனர்.அமர்த்துல் பஹா அவர்களின் நியமனம் 1952ம் ஆண்டு மாரடச் மாதம் 26ம் தேதி செய்யப்பட்டது. (அமாத்துல் பஹா அந்த நியமனத்தை எவ்வளவோ மறுத்தும் கூட பாதுகாவலர் அந்த மறுப்பை ஏற்பதாக இல்லை)

பாதுகாவலர் இந்த தெய்வச் சமயத் திரக்கரங்களை “பஹாவுல்லாவின் கரு வடிவிலான உலகப் பொதுநல அரசின் பிரதான பராமரிப்பாளர்கள்” எனவும் “அதன் உயர் ஸ்தானம் கொண்ட அலுவலர்கள்” எனவும் வருணிக்கிறார். அவர்களின் பொதுவான பணிகள் இரண்டு. முதலாவதாக சமயத்தைப் போதித்தல், அடுத்தது சமயத்தைப் பாதுகாத்தல் ஆகும். பாதுகாவலர் தெய்வ சமயத் திருக்கரங்களை 1951ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரைக்கும் அவர்கட்கு நேரடியான வாழிகாட்டுதலைக் சில அளவு கோல்களை வைத்திருந்தார். சமயத்திற்கு சேவை செய்வதில் அவர்கள் காண்பித்த அர்ப்பணம் மற்றும் திறமையாற்றலைக் கொண்டு அவர்களை பாதுகாவலர் நியமித்தார். அந்த வகையில், அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களை தெய்வ சமயத் திருக்கரமாக நியமித்த போதும்கூட, அன்னவரிடம் இருந்த அர்ப்பணம் மற்றும் திறமையாற்றலை பாதுகாவலர் உணராமல் இல்லை. அமாத்துல் பஹா வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் ஆற்றிய சோவைகளையும் காணும் போது பஹாய் உலகமே வியப்பில் மூழ்கும். அமாத்துல் பஹாவின் சேவைகளைக் காலக் கறையான்கள் அரித்திடப் போவதில்லை, அவற்றை பஹாய் உலகமும் மறதிக்கடலில் கறைக்கப்போவதில்லை.

பிறப்புப் வளர்ப்பும்

மே எல்லிஸ் போல்லிஸ் என்பவர்தான் ருஹியா கானும் அவர்களின் தாயார். அவர் சமயத்தின் தொடக்ககாலத்து சேவகிகளில் ஒருவரான லுவா கேட்சிங்கரின் வழியாக சமயத்தை ஏற்றுக்கொண்டார். 1898ம் ஆண்டில் சில பஹாய்கள் ஒன்று கூடி அக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களின் மே எல்லிஸ் போல்லிஸ் அவர்களும் அடங்கினார். அவர்கள் யாவரும் 1898ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் அக்கா நகர் வந்து சேர்ந்தார்கள். புனித யாத்திரை முடிந்தபின்னர் அந்த அம்மையார் பிரஞ்சு நாட்டின் மாநகரில் தங்கினார். 1902ம் ஆண்டிலே கேனடா நாட்டின் வில்லியம் சதர்லாண்டு மேக்ஸ்வெல் என்ற கட்டிடக் கலைஞரை மணந்தார். திரு வில்லியம் அவர்கள் கிறித்துவ சமயத்தின் கத்தோலிக்கப் பிரிவின் பாதிரி ஆவார். திருமணம் புரிந்த போதெல்லாம் மே எல்லிஸ் போல்லிஸ் அவர்கள் சமயத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும்கூட திரு வில்லியம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வமே இல்லை. 1909ம் ஆண்டில் அந்த அம்மையார் இரண்டாவது முறையாக அக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். இந்த முறை தம் கணவரும் உடன் வந்தார். அப்போது அவர்கள் பாதுகாவலரை குழந்தையாகக் கண்டனர். அப்போது எல்லிஸ் போல்லிஸ் அவர்கள், அப்துல் பஹாவிடம் தமக்கு குழந்தைச் செல்வம் கிடையாது என முறையிட்டார். அப்துல் பஹாவும் அவருக்காக பஹாவுல்லாவின் புனித கல்லறையில் பிரார்த்தனைக் கூறினார். அதன் பிரகு திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் அமெரிக்கா திரும்பினார். அங்கு நியூ யார்க் நகரில் 1910ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைதான் மேரி மேக்ஸ்வெல் ஆவார். அதாவது நமது அன்பிற்குரிய ருஹியா கானும் அவர்கள்.

1912ம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்றபோது கேனடா நாட்டின் மோண்ட்ரீல் மாநகரில் ருஹியா கானும் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது ருஹியா கானும் அவர்கட்கு வயது இரண்டு. அந்த வேளையில் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள்அப்துல் பஹா தமக்காக பஹாவுல்லாவின் புனித கல்லறையில் பிரார்த்தனைக் கூறி, அதன் வழியாக தமக்குப் பிள்ளைச் செல்வம் கிடைத்ததை நன்றிப்பெருக்கோடு அப்துல் பஹாவுக்கு நினைவுபடுத்தினார். பிள்ளைச் செல்வமே கிடைக்க வழி இல்லை என மருத்துவர்களே கைவிரித்த பின்னர் பஹாவுல்லாவின் திருவருளால் பிறந்தவர் ருஹியா கானும் அவர்கள். அதோடு திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கட்கு வயது 40 இருக்கும் போது தம் உடல் நிலை நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டிருந்த போது ருஹியா கானும் பிறந்தார்.

1921ம் ஆண்டில் அப்துல் பஹா காலமனபோது, அதனைக் கேள்விப்பட்ட திருமதி மே மேக்ஸ் வெல் அவர்கள் மிகுந்த வேதனைப்பட்டு, அதனால் அந்த அம்மையாரின் உடல்நிலை இன்னும் பாதிப்புக்குள்ளாகியது. அந்த அம்மையார் தொடர்ந்து உயிர் வாழ்வாரோ மாட்டாரோ என்ற ஐயம் தம் கணவர் வில்லியம் மேக்ஸ்வெல் அவர்கட்கு ஏற்பட்டது. ஒரு வேளை புனித நிலத்திற்கு மீண்டும் யாத்திரை மேற்கொண்டு, அப்துல் பஹாவின் வாரிசான ஷோகி எபெண்டி அவர்களைக் கண்டால் மனதுக்கும் உடலுக்கும் ஒரு வேளை ஆறுதல் கிடைக்கலாம் என திரு வில்லியம் மேக்ஸ்வெல் கருதினார். அதன்படி 1923ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களும் 13 வயது நிரம்பிய ருஹியா கானும் அவர்களும் புனித நிலத்திற்கு வருகைத்தந்தனர். அப்பொழுது திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் சக்கர வண்டியில் தான் நடமாடினார். அந்த அம்மையாருக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றியவர் ஷோகி எபெண்டி. பாதுகாவலரின் அன்பு கனிந்த வார்த்தைகளினாலும் பரிவான கவனத்தினாலும் அந்த அம்மையாரின் உடல் நிலை பெரிதும் தேறியது.

அந்த ஆண்டில் பாதுகாவலர் அவர்கள் புனித பாப் அவர்களின் புனித கல்லறையைச் சுற் றி பூங்காக்களை அழகிய முறையில் எழுப்பிக்கொண்டிருந்தார். மே மாதம் 28ல் பஹாவுல்லாவின் மறைவு தினத்தை அனுசரிப்பதற்காக திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களும் ருஹியா கானும் அவரிகளும் அக்கா நகரில் உள்ள பஹாவுல்லாவின் புனித கல்லறைக்குச் சென்றன. திரும்பும் போது அவர்கள் இருவரும் பாதுகாவலரோடு அவரின் காரின் வந்தனர். அந்தக் காரின் கூறை திறந் மடிக்கப்பட்டிருந்தது. இருக்கையின் மீது அமராமல் அந்தக் மடிக்கப்பட்ட கூறையின் மீது அமர்வதாக ருஹியா கானும் பிடிவாதம் செய்தார். அவ்வாறு அமர்ந்தால் விழுந்திடும் வாய்ப்பு உண்டு என பாதுகாவலர் ருஹிா கானும் அவர்கட்கு எச்சரித்தார். ஆனால் தாம் விழாமல் பார்த்துக் கொள்வதாக ருஹியா கானும் நம்பிக்கையோடு சொன்னார். அந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலர் கேனடா நாட்டின் மலைப் பிறதேசங்களை காணத் துடிப்பதையும் மலை ஏறுவதை விரும்புவதாகவும், அவர்கள் இருவரிடமும் தெரியப்படுத்தினார். இந்த முதல் சந்திப்பின் போது இந்த இருவரும் அவ்வளவாகப் பேசக்கிடையாது. இந்தப் பயணத்தின்போது திருமதி மே மெக்ஸ்வெல் அவர்கள் பாதுகாவலரைக் கண்டது முதல் அவர் தம் சேவைகளை பாதுகாவலருக்கே அர்ப்பணம் செய்தார்.

1926ம் ஆண்டில் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களின் தோழிகளோடு ருஹியா கானும் தம் இரண்டவது யாத்திரையை புனித நிலத்திற்கு மேற் கொண்டார். அடுத்தப்படியாக ருஹியா கானும் அவர்களும் அவர்தம் தாயாரும் ஐரோப்பாவில் இண்டு ஆண்டு காலம் அயராது சேவை செய்தனர். அதன் பிறகுதான் 1937ம் ஆண்டில் ருஹியா கானும் அவர்களும், தம் பெற்றோர்களும் புனித நிலத்திற்கு வருகைப் புரிந்தனர். இந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலருக்கும் ருஹியா கானும் அவர்கட்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்
மதிப்புக்குரிய பாதுகாவலரை மணக்க வேண்டும் என ஏங்கியோர் பலர். ஆனால் அவர் ருஹியா கானும் அவர்களைத் திருமணம் புரிவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்ல. அமர்த்துல் பஹாவை மணக்க வேண்டும் என்று முடிவை பாதுகாவலர் எடுத்திருந்தாலும் கூட, அது பற்றி அவர் எவரிடத்திலும் சொல்லக் கடையாது.. பாதுகாவலர் சதா திருவொப்பந்தத்தை மீறியவர்களினால் சூழப்பட்டதனால், இந்த ரகசியம் வெளியே வந்தால் அவரது திருமணத்திற்கும் இடையூறு ஏற்பட்டுவிடும் என அவர் அஞ்சினார். அதனால் அது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. அதிபெரிய புனித இலையாகிய பஹியா கானும் அவரகள் ஷோகி எபெண்டி அவர்கட்கு ஒரு மோதிரத்தைக் கொடுத்திருந்தார். பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களை திருமணம் செய்வதாக முடிவெடித்த அன்று, அவர் அந்த மோதிரத்தை ருஹியா கானும் அவர்களிடம் கொடுத்து, அதனைத் தம் கழுத்தின் சங்கிலியில் கோர்த்து மாறைத்துவைக்கும்படிக் கூறிவிட்டார். ருஹியா கானும் அவர்களும் அவ்வாறே செய்தார். இந்த விஷயத்தை இருவரும் வேறு எவரிடமும் சொல்லவில்லை.

1937ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ருஹியா கானும் அவர்கள் மூன்றாவது முறையாக புனித நிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தின்போதுதான் இந்த வலராற்றுபூர்வத் திருமணம் நடைபெற்றது. அப்துல் பஹாவுக்கும் முனிரி கானும் அவர்கட்கும் இடையிலான திருமணம் எவ்வளவு எளிமையாக நடைபெற்றதோ, அதுபோலத்தான் பாதுகாவலருக்கும் ருஹியா கானும் அவர்கட்கும் இடையிலான திருமணமும் அவ்வளவு எளிமையாக நபைெற்றது. 1937ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் நாள் பிற்பகலில் பாதுகாவலரும் அமாத்துல் பஹா அவர்களும் காரில்அமர்ந்திருக்க காரோட்டி அவர்களை ஹைபா நகரில் இருந்து அக்கா நகருக்கு ஓட்டிச் சென்றார். அங்கே பஹாவுல்லாவின் புனித கல்லறைக்கு – அதாவது பூமியில் உள்ள அதி புனிதமான ஸ்தலத்திற்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஊரின் கலாச்சாரத்தின் படி பெண்கள் வெளியே புறப்படுவதாக இருந்தால் கறுப்பு உடையில்தான் புறப்படுவார்கள். அமாத்துல் பஹாவும் கறுப்பு உடையும் வெள்ளை ரவிக்கையும் அணிந்து உள்ளுர் பெண்ணைப் போல உடன் சென்றார். இது பாதுகாவலரின் விருப்பமாகவும் இருந்தது.

பாஹ்ஜியில் சென்றவுடன் இருவரும் பஹாவுல்லாவின் புனித கல்லறைக்குள் புகுந்தனர். உடனே பாதுகாவலர் முன்பு ருஹியா கானும் அவர்களிடம் கொடுத்துவைத்திருந்த மோதிரத்தைக் கேட்டார். தன் கழுத்துச் சங்கிலியில் இருந்து ருஹியா கானும் அவர்கள் அதனைக் கழற்றி பாதுகாவலரிடம் கொடுத்தார். அதனை பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் வலது கரத்தின் மோதிர விரவில் அணிவித்தார். அதன் பிறகு பாதுகாவலர் அந்தப் புனிதகல்லறையின் உள் அறைக்குள் புகுந்தார். அங்கு காய்ந்து உதிர்ந்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் சேகரித்து தன் கைக் குட்டையில் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் நேர்வு விருபத்தை ஓதினார். அதன் பிறகு இருவரும் புறப்பட்டு ஹைபா நகருக்கே திரும்பினார்கள். ஹைபா நகரில் உள்ள அதிபெரிய புனித இலையாகிய பஹியா கானும் அவர்களின் அறையில்தான் அவர்களின் எளிமையான திருமணம் நடைபெற்றது, அங்கு திருமண விழா இல்லை, பூவலங்கரிப்பு இல்லை, விசேஷமான சடங்கு சம்பிரதாயமில்லை, திருமண உடையுமில்லை, விருந்துபசரிப்பும் இல்லை. இந்த திருமணம் பற்றி உற்றார் உறவினருக்கும் கூட அதிகமாகத் தெரியாது. இந்த திருமணம் நடைபெறப்போவதை பாதுகாவலரின் பெற்றோர்களும், ஹைபாவில் தங்கியிருந்த அவர்தம் சகோதர் ஒருவரு இரண்டு சகோதரிகளும், அமாத்துல் பஹாவின் பெற்றோர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பஹியா கானும் அவர்களின் அறையில், திருமணத்திற்கான சான்றிதழில் பாதுகாவலரின் பெற்றோர்கள் கையொப்பம் இட்டனர். அப்பொழுது ருஹியா கானும் அவர்களின் பெற்றொர்கள் மேற்கத்திய யாத்திகர் இல்லத்தில் இருந்தனர். அந்த திருமண சான்றிதழில் கையொப்பம் இடப்பட்டதும் ருஹியா கானும் அவர்கள் சாலைக்கு அப்பால் உள்ள மேற்கத்திய யாத்திகர் இல்லத்துக்குச் சென்று தன் பெற்றோர்களிடம் சேர்ந்து கொண்டார். ஷோகி எபெண்டி அவர்கள் தம் வழக்கமான பஹாய்ப் பணிகளை கவனிப்பதற்காகப் போய்விட்டார்.

இரவு விருந்து வேளையில் பாதுகாவலர் அந்த மேற்கத்திய யாத்திரிகர் இல்லத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களுக்கு தம் அன்பையும், நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் புலப்படுத்தினர் எவருக்கும் கிடைக்காத பேறு ருஹியா கானும் அவர்களின் குடும்பத்திற்குக் கிடைத்தல்லவா, அதற்காக! முன்பு பஹாவுல்லாவின் புனித கல்லறையின் உள் அறையில் சேகரித்து தம் கைக்குட்டையில் வைத்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் அன்னையின் கரங்களில் ஒப்படைத்தார். பிறகு ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் திருமணப் பத்திரத்தில் கையொப்பம் இட்டனர். இரவு விருந்து நடைபெற்ற வேளையில், புஜித்தா ( ஜப்பானில் இருந்து புனித நிலத்திற்கு வந்து தோட்டக்காரராகப் பணியாற்றியவர்) அமர்த்துல் பஹாவின் பெட்டிகளை பாதுகவலரின் இல்லத்திற்குத் தூக்கிச்சென்றார். இரவு விருந்துக்குப் பிறகு பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் தங்கள் இல்லத்திற்குப் புறப்பட்டனர். பாதுகாவலரின் குடும்ப அங்கத்தினர்களுடன் சற்று நேரம் உறையாடி விட்டு, பிறகு எற்கனவே மாபெறும் புனித இலையாகிய பஹியா கானும் அவ்கள் பாதுகாவலருக்காக மாடியில் கட்டியிருந்த இரண்டு குடியேறினர் அறையில். இதுவரைக்கும் மேரி போல்லீஸ் சுதர்லாந்து மேக்ஸ்வெல் என அறியப்பட்டுவந்த அவர், திருமணத்திற்குப் பின் ருஹியா ரப்பானி என வழங்கப்பட்டார். பிற்காலத்தில் அன்னவருக்கு பாதுகாவலர் “அமாத்துல் பஹா ருஹியா கானும்” என பட்டப் பெயர் கொடுத்தாதர்.

பாதுகாவலரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றாலும், அது முக்கியத்துவம் அற்றது என எண்ணிடப்படக் கூடாது. அத்திருமணம் பற்றி பாதுகாவலர் வரைந்து, தம் தாயாரின் பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தந்தி ஒன்றே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி காட்டுகிறது. அந்த தந்தி இப்படி வாசிக்கிறது : “அன்புக்குரிய பாதுகாவலரின் திருமணக் கொண்டாட்டம் பற்றி சபைகளுக்கு அறிவிக்கிறேன். பஹாவுல்லாவின் பணிப்பெண்ணாகிய ருஹியா கானும் என்ற குமாரி மேரி மேக்ஸ்வெல் அவர்களின்மீது அளவிட முடியாத கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பஹாவுல்லாவினால் பிரகடனப் படுத்தப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கின் இணைப்பு பினைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு பாதுகாவலரின் தாயாராகிய சியாபா.”

இது போன்றதோர் இன்னொரு தந்தி பாரசீகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பாதுகாவலரின் திருமணம் என்பது நீண்ட காலமாக பஹாய்களினால் எதிர்பார்க்கப்பட்டது. திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானதும் பாதுகாவலர் உலகம் முழுதும் இருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெறத்தொடங்கினார். அமெரிக்கா மற்றும் கேனடாவின் தேசிய சபையிடம் இருந்து கிடைத்த வாழ்த்துக்களுக்கு ஷோகி எபெண்டி இவ்வாறு பதில் எழுதினார்:

“உங்கள் செய்தியினால் ஆழமாக உள்ளம் நெகிழ்ந்துள்ளேன். பஹாய் சமயத்தின் இரட்டை ஸ்தாபகரானவர்களோடு கொண்ட அங்கபந்த தொடர்பின் வழியாக மேன்மைப்படுத்தப்பட்டுவிட்ட பஹாவுல்லாவின் சமயத்தின் நிர்வாக முறையின் பிரயதான அடிக்கல்லாகிய பாதுகாவலர் எனும் ஸ்தானம் மேற்கோரு, குறிப்பாக பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையைக் கொண்டுருவதை தங்கள் ஆன்மீக விதியாகக் கொண்டுள்ள அமெரிக்க நம்பிக்கையாளர்களுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வழியாக இப்பொழுது மேலும் மறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. என் பங்காக, தங்கள் சமயத்தின் இவ்வளவு வளமான ஓர் அங்கத்தோடு அவர்களை வலுவாகப் பினைத்துள்ள ஓர் பந்தத்தைப் பெற்றமைக்காக அமெரிக்க நம்பிக்கையாளர்களின் சமூகத்தைப் பாராட்டுவதற்கு ஆவலுறுகிறேன்.” இப்படியாக பாதுகாவலர் ஏராளமான வாழ்த்துக்களுக்கு பதில அனுப்பிக்கொண்டிருந்தார். பாதுகாவலிரின் திரமணத்தின் சாரமே, அது கிழக்கையும் மேற்கையும் ஒன்றுபடுத்தியது என்பதாகும். இந்த திருமணத்தின் வழியாக கிழக்கும் மேற்கும் இனைந்தன, பாரசீகமும் (பாதுகாவலர்) அமெரிக்காவும் (ருஹியா கானும்) இணைந்தன எனவும், பிரிட்டிஷ் மக்களுக்கும் அது கொளரவாமாகும் ( ருஹியா கானும் அவர்களின் தந்தை ஸ்காட்லாந்தைச் சார்ந்தவர்) என்ற பொருளில் பாதுகாவலர் அமெரிக்கா சபைக்கு ஒரு தந்தி அனுப்பினார். இந்த திருமணம் அமெரிக்காவில் ஆழ்ந்த ஆன்மீக அலைகளை எழுப்பிற்று. அப்பொழுது அங்கே 71 உள்ளுர் ஆன்மீக சபைகள் இருந்தன. சபை தோறும் தலா 19 அமெரிக்க டாலரை அந்த தேசிய சபை பாதுகாவலருக்கு திருமாண பரிசாக அனுப்பியது. ” அமெரிக்க பஹாய்களை பாதுகாவலர் எனும் ஸ்தானத் தோடு பினைத்துள்ள புதிய பந்தத்தை உடனடியாக வலுபடுத்துவதற்காக “என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின்மீது பாதுகாவரின் திருமணம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கியது. அமெரிக்காவின் விதி பஹாவுல்லாவின் நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவது என்பது முன்பே எழுதப்பட்ட தீர்பமாகும். அதற்கு இந்திருமணம் மேலும் அடித்தளத்தை அமைத்தது!

ருஹியா கானும் அவர்கள் மட்டும் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களின் புதல்வியாக இல்லாது போயிருந்தால் பதுகாவலர் அவரை மணந்திருக்கப் போவதில்லை என பாதுகாவவரே ருஹியா கானும் அவர்களின் கூறினார். அதுபோல் “மே மேக்ஸ்வெல் அவர்களின் தோழமை ஒருவருடைய அன்மாவை எழுச்சியூட்டி வளர்க்கிறது ” என அப்துல் பஹாவும் எழுதியுள்ளார். அப்படியானால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் ஆற்றிய பணியை நாம் காண வேண்டும்.

பெற்றோர்களின் பெரும் பணி

ருஹியா கானும் அவர்களின் தாயாராகிய மே எல்லிஸ் போல்லிஸ் அவர்கள் இளைய பருவத்திலேயே லுவா கேட்சிங்கரின் வழியாக பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டவர் ஆவார். சமயத்தை ஏற்றுக்கொண்ட நாள் தொடங்கி அவர் தம்முடைய வாழ்வை சமயத்திக்காக அர்ப்பணம் செய்தார். நிறைய விவேகம் உள்ளவராகவும் சமயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும் அவர் திகழ்ந்துவந்தார். 1898ம் ஆண்டில்தான் முதன் முதலாக மேற்கத்திய நாடுகளில் இருந்து அக்கா நகருக்கு புனித யாத்திரை மேற் கொள்ளப்பட்டது. அந்த முதல் குழுவில் மே எல்லிஸ் போல்லிஸ் இடம் பெற்றார். அங்கே அப்துல் பஹா அந்த அம்மையாருக்கு என ஒரு விசேஷமான பணியைக் கொடுத்தார். பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் மாநகரில் தங்கி சேவை செய்யுமாறு அப்துல் பஹா மே எல்லிஸ் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அந்த அம்மையார் பாரிசுக்குப் போனார். ஒரு சில மாதங்களுக்குள் அந்த அம்மையார் பாரிஸ் மநகரில் முதல் பஹாய் நிலையத்தை நிறுவினார். அதுவே ஐரோப்பிய கண்டத்திற்கான முதல் பஹாய் நிலையமாகும். “ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய்” என்ற பெருமையும்கூட இவரையே சாரும். அப்துல் பஹாவின் முதல் சில சீடர்களில் இவரும் ஒருவராவார். பாரிஸ் மாநகரில் ஓர் ஆங்கிலேயரை சமயத்தில் உறுதிபடுத்திய முதல் பஹாயும் இந்த அம்மையார்தான். முதல் பிரந்சு பஹாய் அன்பரான ஹிப் போலிட் என்பவரை உருவாக்கியவரும் கூட இந்த அம்மையார்தான். இந்த அம்மையார் வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் என்ற கேனடா நாட்டு கட்டிடக் கலைஞரை 1902ம் ஆண்டில் மணந்து, இருவரும் அந்த நாட்டின் மொண்ட்ரீல் நகரில் குடியேறினார்கள்.

1912ம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்ற போது அவர்கள் இல்லத்திற்கு பல முறை சென்றுள்ளார். சமயத்தை ஏற்ற காலம் தொட்டு அந்த அம்மையார் அயராது சமயத்திற்காக பாடுபட்டுள்ளார். குறிப்பாக போதிப்பதிலும் சமய விவாகரங்களை நிர்வகிப்பதிலும் அவர் திறம்டச் செயல்பட்டார். அமெரிக்க கண்டத்தில் பலருக்கும் பஹாவுல்லாவின் செய்தியைக் கொடுத்தார். பஹாய் சமயத்திற்காக இவ்வளவு உதாரணத்துவ சேவைகளை வழங்கிவந்த போதிலு,ம் கூட, தாம் இன்னும் உயர்வுமிக்கச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை அவர்தம் உள்ளத்தில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 1940ம் ஆண்டில் பாதுகாவலர் முன்னோடிகளுக்கான அழைப்பை விடுத்த போது திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் முன்னெழுந்தார். அப்பொழுது அவருக்கு வயது எழுபது! அவர்தம் உடல் நிலையும் மிகவும் மோசமாகியது. தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நகரில் அப்பொழுதுதான் பஹாய் சமயம் உதயமாகிவந்தது. அங்கு முன்ணோடியாகச் செல்வதற்கு அவர் முன்னே முந்தார். அதனைப் பாராட்டி பாதுகாவலர் தந்தி அனுப்பினார். அர்ஜெண்டினா நாட்டு தலைநகராகிய புவெனோஸ் ஏரிஸ் நகரை அடைந்ததும் (1940ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி) அந்த அம்மையார் மாரடைப்பால் காலமானார். அவர் ஓர் உயிர்த்தியாகியின் மரணத்தை அடைந்ததாக பாதுகாவலர் குறிப்பிட்டார். அதோடு அந்த அம்மையாரின் மரணம் பற்றி பாதுகாவலர் ஈரான் நாட்டின் தேசிய சபைக்குத் தெரிவித்தபோது, “விண்னுலகின் தெய்விக ஆன்மாக்களை கூட அந்த அம்மையாரிடம் இருந்து நல்லாசிகளை நாடுகின்றன” எனக் குறிப்பிட்டார். ஆகவே திருமதி மே மேகஸ்வெல் அவர்களின் வாழ்வு அளமானது, பஹாய் சமய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படக் கூடியது.

திருமதி மே மேக்ஸ்வெல் காலமானபோது, பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் தந்தை திரு வில்லியம் சதார்லாந்து மேக்ஸ்வெல் அவர்கட்கு தந்தி அனுப்பி அவரை ஹைபா நகரில் வந்து குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களும் ஹைபா நகரில் வந்து குடியேறினார். அப்போதெல்லாம் பாதுகாவலரின் உறவினர்கள் பாதுகாவலருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். திரு வில்லியம் மேக்ஸ்வெல் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தது பாதுகாவலருக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவர் கட்டிடக் கலைஞாராக இருந்தது மிகவும் வசதியாயிற்று. அப்துல் பஹா அவர்கள் புனித பாப் அவர்களின் கல்லறையைக் கட்டி முடிந்தார். அதற்கு அழகிய கோபுரத்தை எழுப்பும் பணி பாதுகாவலரின் மீது வீழ்ந்தது. திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்ததால், அவர் பாதுகாவலருடன் கலத்துகொண்டு பல கட்டிட வரைபடங்களை உருவாக்கினார். இறுதியில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் படி உருவாக்கப்பட்டதுதான் இன்று நாம் காண்கின்ற பாப் அவர்களின் புனித கல்லறையின் கோபுரம்.

திரு வில்லியம் அவர்களின் உடல் நலம் திடிறென்று பாதிப்புற்றபோது அவர் இறந்துவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 1951ம் ஆண்டில் அவரை பாதுகாவலர் சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் ன்ெறார். அவர் உடல் நலம் தேறினார். ஆண்டில் அவரை மீண்டும் அங்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கிருந்து அவரை பாதுகாவலர் கேனடா நாட்டுக்கு அனுப்பிவைத்தார். உறவினர்களைக் கண்டு ஆறுதல் அடைவதற்காக. அப்போது அவர்தம் உடல் நிலை இன்னும் மோசமாகியது. அப்பொழுதுதான் பாதுகாவலர் திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களை தெய்வச்சமயத் திருக்கரமாக நியமிதார். 1915ம் ஆண்டில் மார்ச் மாதம் 25ம் நாளில் அவர் காலமானார்.

1953ம் ஆண்டில் ருஹியா கானும் சிக்காகோ நகருக்கு சென்று கண்டங்களுக்கு இடையில்லான மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கேனடா நாட்டில் மொண்ட்ரீல் புறப்பட்டார். ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை கேனடா நாட்டு தேசிய சபையின் சொத்தாக எழுதிவைக்க முன்பே ஆசைப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை ருஹியா கானும் செய்தார். கேனடவுக்கு அப்துல் பஹா சென்ற போது அவர் சென்று விஜயம் செய்த ஒரே இல்லம் அவர்களின் இல்லம் தான்! தன் தந்தையின் கல்லறைக்கு ருஹியா கானும் சென்றார். அப்போது பாதுகாவலர் ருஹியாா கானும் அவர்கட்கு தந்தி அனுப்பி, திரு வில்லியம் அவர்களின் கல்லறையில் பஹாய்கள் ஒன்றுகூடி நினைவாஞ்சாலி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புனித கல்லறையில் இருந்து கொண்டுபோன பூக்களையும் அங்கு வைக்கச் சொன்னார். தம் சார்பாக நீல நிற பூக்களில் தலை சிறந்தவற்றை நூறு டாலருக்கு வாங்கி கல்லறையின் மீது வைக்கப்படிச் சொன்னார். (நீல நிறம் திரு வில்லியம் சதர்லாந்து அவர்கட்கு பிடித்த கலர் என பாதுகாவலருக்கத் தெரியும்) கல்லறையில் அவறைப் பாராட்டும் வார்த்தைகளைச் ஒதுக்குபடி கூறி, அந்த வார்த்தைகளையும் பாதுகாவலர் தெரிவித்தார். அங்கு பஹாய்கள் கட்டுகின்ற தேதியையும் நேரத்தையும் தந்தியில் தெரிவித்தால், அப்பொழுது தாமும் புனித கல்லறையில் அவருக்காக பிரார்த்தனை கூறுவதாகவும் பாதுகாவலர் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகையினால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் சமயத்தில் சாதாரண மக்கள் அல்லர்! ருஹியா கானும் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சமயத்தில் பஹாய் சமய வரலாறு வாழும் காலம் வளர வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இப்படியான உயர்வுமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் நம் மதிப்புக்குரிய பாதுகாவலருக்குத் துணைவி ஆனார்கள்.

இங்கு நாம் இன்னும் சில ஒற்றுமைகளைக் காணலாம். பாதுகாவலர் பிறந்த நாள் மார்ச் மாதம் 1ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தாயார் காலமானதும் மார்ச் மாதம் 1ம் நாள்தான். பாதுகாவலர் திருமணம் செய்த நாள் மார்ச் மாதம் 25ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தந்தை காலமனதும் மார்ச் மாதம் 25ம் நாள்தான். இவ்வாறான ஒற்றுமைகள் வேறெங்கும் கண்டதுண்டா?

பாதுகாவலருக்கு உதவியாக

அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலருக்கு துணைவி மட்டுமல்ல. அவர் பாதுகாவலருக்கு செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டினார். 1951ம் ஆண்டில் பாதுகாவலர் அனைத்துலக பஹாய் பேராவையை நியமித்தார். இந்தப் பேரவைதான் வருங்கால (1963) உலக நீதி மன்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.1952ம் ஆண்டில் இந்தப் பேரவையின் அங்கத்துவத்தை அவர் விரிவுபடுத்தினர். அதன் படி அவர் அமாத்துல் பஹா அவர்களையும் ஓர் அங்கத்தினராகவும், தமக்கும் அந்த அனைத்துலக பஹாய்ப் பேரவைக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார். 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரமாகிய வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் (அமர்த்துல் பஹாவின் தந்தை) காலமானர். அவருக்கு பதிலாக பாதுகாவலர் அமாத்துல் பஹா அவர்களை சமயத் திருக்கரமாக நியமித்தார்.

அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் உள்ள பஹாய் கோவிலுக்கு அடிக்கல்லை நாட்டியவர் அப்துல் பஹா. இது நடந்தது 1912ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி. 1933 ஆண்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வேளையில் அந்தக் கோயிலருகே வந்து பிரார்த்தனைகள் கூறியவர் ருஹியா கானும் அவர்கள். 1953 ஆண்டு மே மாதம் 2ம் தேதி முழுமைப் பெற்ற அந்தக் கோவில் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவுக்கு பாதுகாவலர் அவர்களே நேரில் வர நினைத்ததுண்டு. ஆனால் ஏராளமான வேலையின் பளுவின் காரணமாக அவரால் வர இயலவில்லை. அதனால் தம்மைப் பிரதிநிதிக்குமாறு பாதுகாவலர் தம் அன்பிற்குரிய துணைவியார் அமாத்துல் பஹா அவர்களை அனுப்பிவைத்தார். அப்துல் பஹா அடிக்கல் நாட்டிய கோவிலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தவர் அமாத்துல் பஹா அவர்கள்.

பாதுகாலரின் மறைவுக்கும் பின்

1957ம் ஆண்டில் மதிப்புக்குரிய பாதுகாவலர் திடீரெனக் காலமானார். அப்பொழுது உலக நீதி மன்றம் இன்னும் அமைக்கப்படவில்லை. 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்படும் நாள் வரைக்கும் சமயம் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அப்பொழுது 26 தெய்வச் சமயத் திருக்கரங்கள் கையொப்பமிட, 9 தெய்வ சமயத் திருக்கரங்கள் “பஹாய் உலக சமயத்தின் காப்பாளர்கள்” என நியமிக்கப்பட்டனர். உலக நீதி மன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இந்த 9 தெய்வ சமயத் திருக்கரங்களும் புனித நிலையத்தில் தங்கி சமயத்தைப் பாதுகாத்து, பணியாற்றிவருவதே அவர்களின் பணியாகும். அந்த ஒன்பது பேர்களில் அமர்த்துல் பஹா அவர்களும் அடங்கினார். அதோடு பாதுகாவலர் 1953ம் ஆண்டில் பத்தாண்டு உலக அறப்போரை (உலகப் போதனைத் திட்டம்) தொடக்கிவைத்தார். அது 1963ம் ஆண்டில் முடிவுற வேண்டும். ஆனால் அவர் பாதிக் காலக்கட்டத்தில், அதாவது 1957ல் காலமாகிவிட்டார். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்கின்ற பெரும் பொறுப்பும் இந்தக் காப்பாளர்களின் தோள்மீது வீழ்ந்தது.

1960ம் ஆண்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கேனடா நாட்டுக்கும் ஒரு விரிவான பாயணத்தை மேற்கொண்டு அந்த சமூகத்தினருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.

1958ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது, அங்கு எழுப்பப்படவிருந்த வழி பாட்டு இல்லத்திற்கு அடிக்கல்லை நாட்டினார். 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்பிரிக்க கண்டத்தின் அன்னைக் கோவில் உகான்டாவில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபுர்வமாகத் திறந்துவைப்பதற்காக அமர்த்துல் பஹா மீண்டும் ஆப்பிரிக்கா சென்றார். அதன் பின்னர் அவர் ஆப்பிரிக்காவில் மக்கள் அணிஅணியாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளுக்கும் சென்றார்.

1961 ஆண்டு ஆகஸ்டு – செப்டப்பர் மாதங்களில் அமாத்துல் பஹா தென்கிழக்காசிய பயணத்தை மேற்கொண்டு சிங்கை, மலாயா வந்துள்ளார். 1961 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா கண்டத்தின் அன்னைக் கோவில் சிட்நியில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பதற்காகவும் அமர்த்துல் பஹா அங்கு சென்றார். பின்னர் ஆஸ்திரேலியா, மற்றும் நியூ சீலாந்து நாடுகளின் பஹாய் சமூகங்களைக் கண்டு வந்தார்.

பாதுகாவலர் செய்த பெரும் பணிகளில் ஒன்று புனித நிலத்தில் பழம் பொருள் காப்பகத்தை ஏற்படுத்துவதாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக அவர் மறைந்துவிட்டார். அந்த மாபெறும் பணியை நிறைவு செய்வதில் அமாத்துல் பஹா அயராது உழைத்தார். 1962ம் ஆண்டுக்குள்ளாக அது பூர்த்தி செய்யப்பட்டால், புனித யாத்திரைக்கு வருவோருக்கு பலனாக இருக்கும் என்று கருதி அதனை நிறைவு செய்வதில் மும்முரமாகச் செயல்பட்டார்.

1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது. பாதுகாவலர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை புனித நிலத்தில் தங்கி சமயத்திற்கு உதவியாக இருக்கும்படிச் செய்தார். அதுபோலவே, உலக நீதி மன்றத்திற்கு ஆலோசனைகளைக் கூறி உதவுவதற்காக, உலக நீதி மன்றம் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமித்து அவர்களை புனித நிலத்தில் தங்க வைத்தது. இம்முறையும் அந்த ஐவரில் அமாத்துல் பஹா அவர்களும் அடங்கினார்.

உலக உலா

1992ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக மாநாட்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்தார். பாதுகாவலர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் ருஹியா கானும் அவர்களிடம் திடீரென இவ்வாறு கேட்டாராம் “நான் இறந்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” அதற்கு ருஹியா கானும் அவர்கள் அழுதவாறு “அதன் பின் நானும் மூச்சு விட விரும்பவில்லை” என்றராம். அப்போழுது தம் மரணத்திற்குப் பின்னால் ருஹியா கானும் உலகம் முழுதும் சென்று பஹாய்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என பாதுகாவலர் கேட்டுக்கொணடார். 1957ம் ஆண்டில் பாதுகாவலர் மரணமடைந்து, பிறகு 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது முதற்கொண்டு தம் கடைசி காலம் வரைக்கும் அமாத்துல் பஹா அவர்கள் உலகை வலம் வந்தார். 1957ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் கூட அமாத்துல் பஹா உலகில் சில பாகங்களுக்குச் சென்றுவந்ததுண்டு. ஆனாலும் அவர் புனித நிலத்தில் தங்கி சமயப் பணிகளை கவனிக்கவேண்டிய சுமைகளைத் தாங்கியதன் காரணமாக அவர் சுதந்திரமாக உலகம் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை. உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட பின்புதான் அவர் ஏராளமான உலகப் பயணங்களை மேற்கொண்டு பஹாய்களைக் கண்டு உற்சாகம் வழங்கியதோடு, பஹாய் அல்லாதவர்களுக்கும் சமயத்தைக் கொடுத்தார். கடைசி 35 ஆண்டுகளில் அவர் 185 நாடுகளுக்குச் சென்று சாதனைப் புரிந்தார். Ñற்ற உலகர் தகைவர்கள்கூட. இத்தனை நாடுகளைச் சென்றடைந்திருப்பாரா என்பது சந்தேகமே.

அமாத்துல் பஹாவின் பயணங்களில் முக்கியமான ஒன்று இந்திய துணை கண்டத்திற்கு அவர் விஜயம் செய்ததாகும். 1964ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமார்த்துல் பஹா அவர்கள் இந்தியணீவுக்கு வந்து ஒன்பது மாதகாலமாக இந்தியா முழுதும் பயணத்தை மேற்கொண்டார். மொத்தம் 55,000 மைல்கள் பயணம் செய்து 70க்கும் கூடுதலான கிராமங்களுக்கு விஜயம் செய்தார். விமானம், கார், ஜீப், படகு மற்றும் கால் நடையாகவும் அவர் பயணத்தை மேற்கொண்டு பழங்குடு மக்களில் இருந்த மேட்டுக்குடி மக்கள் வரைக்கும் சென்று சமயத்தைப் சோதித்தார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து எவரும் கூட இதுநாள் வரைக்கும் இப்படி யொரு சூறாவளிப் பயணத்தை இந்தியாவில் மேற்கொண்டதில்லை எனலாம்.

1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அமாத்துல் பஹா இலங்கைக்குச் சென்றார். அங்கு தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஏப்ரல் 23 முதல் 28 வரைக்கும் அமாத்துல் பஹா மலேசியாவில் இருந்தார். மலேசியாவின் தேசிய ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் பேராளர் மாநாட்டில் அவர் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தாய்லாந்தின் தேசிய பேராளர் மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வதற்காகச் பாங்காக் சென்றார். அங்கிருந்து மீண்டும் மே மாதம் 7ம் நாள் இந்தியாவுக்குத் திரும்பி தம் சுறவளிப் பயணத்தை தொடர்ந்தார். 1964ம் ஆண்டு ஜீலை மாதம் 4ம் நாள் ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய் தொழுகை இல்லத்தை ஜெர்மனி நாட்டின் பிரங்க் பர்ட் நகரில் அதிகாரபூவமாகத் திறந்துவைத்தார்.

உலகம் முழுதும் உள்ள 6 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்ற சமூகங்களை அவர் இயன்றவரைக்கும் சென்று கண்டுவந்தார். குறிப்பாக பழங்குடி மக்களை பஹாய் சமூகத்திற்கு ஈர்ப்பதிலும், அவர்கட்கு உற்சாகம் வழங்கவதிலும் அமாத்துல் பஹா வசேஷமான கவனம் செலுத்தினார். அவர் தென் அமெரிக்காவின் நாடுகளான பேரு, பொலிவியா, சுரிநாம், குயானா மற்றும் பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுக்கு சமயத்தைப் போதித்தார். அதனை ஒரு செய்திப்படமாகத் தயாரித்து அதற்கு “தி கிரீன்லைட் எக்ஸ் பெடிஷன்” என்று பெயர் சூட்டினர். அவர் சென்ற மேற்குறிப்பிட்ட நாடுகள் முன்னேடியாகச் செல்வதற்கு மிகவும் சிரமமான இடங்களாகும். இருந்தும் வயதான காலத்தில், உடல் வலு குறைந்த வேளையிலும் அவர் அப்பயணத்தை மேற் கொண்டார். தம்மால் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றால் வாலிபர்களாலும் இயலும் என்பதுவும் அப்பயணத்தின் செய்தியாகும். ஆறுமாத காலத்திற்கு நீடித்த இக்கடும் பயணத்தை ஒரு திரைப்படமாக அவர் தயாரித்துள்ளார். இதன் வழியாக தாம் ஒரு தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எனவும் நிரூபித்தார். இத்திரைப்படம் பிகவும் பிரமாதமாக அமையவே, அது உலகின் பல நாட்டு தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக 1990ம் ஆண்டில் அது சீனர்களின் கேண்டனீஸ் பாஷையில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவின் தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை குறைந்தது 5 மில்லியன் சீனர்கள் கண்டுள்ளனர்.

1986ம் ஆண்டில் இந்திய நாட்டின் புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தை அவர் அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். 1992ம் ஆண்டிலே நியூ யார்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது பஹாய் உலக மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரநிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

உலகத் தலைவர்களைச் சந்த்தார்
வேறு எந்த பஹாய் அன்பரும் செய்திடாத அளவுக்கு பஹாய் சமயத்தை அவர் உயர்மட்ட மக்களுக்குக் கொண்டு சென்றார். சீன நாட்டு பேராசிக்கு அவர் சமயத்தைக் கொண்டுச் சன்றுள்ளார். சீனாவுக்கு அவர் நான்கு முறை சென்றுள்ளார். 1985ம் ஆண்டில் உலக அமைதிக்கான வாக்குறுதி, எனும் அறிக்கை உலக நீதி மன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் அமர்த்துல் பஹா அவர்கள் அதனை ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். இந்திய பிதமர் இந்திரா காந்தி, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் பேரரசர் ஹெய்ல் செலாஸ்சீ, அர்ஜெண்டினா நாட்டு ஜனதிபதி கார்லோஸ் மெனம், ஜெமாய்க்கா நாட்டின் பிரதமர் எட்வார்ட் சீகா, ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர் ஜாவியர் பெரேஃஜ் டெ செல்லர், ரோமானியா நாட்டின் இளவரசி ஹெலினா முதலியோரை அமாத்துல் பஹா கண்டு சமயத்தை வழங்கியுள்ளார். சோவியட் யூனியன் நாடுகளுக்கு 1993ம் ஆண்டு நீண்ட காலம் பயணம் மேற் கொண்டு சேவை செய்துள்ளார்.

பிற சேவைகள்
இன்னும் பல சர்வ தேசக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிலிப் அவர்களோடு ஓரே மேடையில் தோன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பாதுகாப்பதில் அமாத்துல் பஹா தம்மை ஈடுபடுத்திக் கொன்டார். அதனால் உலகலாவில் இயற்கைப் பாதுகாப்பு நிதி நிறவனத்தின் செயல் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் அவர் தமது ஆதரவை வழங்கியுள்ளார். 1988ம் ஆண்டில் லண்டன் மாநகரின் “சயோன் ஹவுஸ் ” என்ற இடத்தில் அந்த நிறுவனத்திற்கான நிதி திரட்டும் விழாவில் சொற்பொழிவாற்றினார். அதோடு “ரிலிஜின் அண்டு கன்சர் வேஷன் ” என்ற பெரும் பணியைத் தொடங்கிவைத்தார். தமது தந்தை ஒரு கட்டிடக் கலைஞர். அந்த தாக்கம் அமாத்துல் பஹா மீதும் இருந்தது. அவருக்கு கலைகளின் மீது இயற்கையான ஆர்வம் இருந்தது. இதனால் பஹாய் சமயத்துடன் தொடர்புடைய பல பழைய கட்டிடங்களை புதுப்பித்து அழகுபடுத்துவதில் தம் உழைப்பைக் கொடுத்தார்.

எழுதிய நூல்கள்

அமாத்துல் பஹா அவர்கள் பல துறைகளில் துலங்கியவர், சிறந்த புலமைப்பெற்றவர். மெக்கில் பல்கலைக்கழகப் பட்டதாரியும் கூட. அவர் பன்மொழிப் புலமைப் பெற்றவரும் கூட,ஆங்கிலம், பாரசீகம், பிரஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசி எழுதும் வல்லமைப் பெற்றவர் அவர். சிறந்த எழுத்தாளர் என்பதோடு பேச்சாளரும் கூட. அவர் நான்கு முக்கியமான நூல்களை இயற்றியுள்ளார்.

1. “பிரிஸ்கிருப்ஷன் ஃபார் லிவிங்” (வாழ்வதற்கான அறிவுரைகள்) என்ற நூல், இது ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டு எவ்வாறு வாழ்வது என்பதற்கு வழிகாட்டுகின்ற நூலாகும். நல்ல பஹாய் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.

2. பாதுகாவலர் 1957ம் ஆண்டில் காலமான பின்னர் சோகத்தில் மூழ்கியிருந்த அமாத்துல் பஹா தம் கைப்பட எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு இது.

3. “தி பிரைஸ்லஸ் பேர்ல்” ( விலைமதிப்பில்லா முத்து) – ( 1969 ) என்ற நூலில் ஷோகி எபெண்டி பற்றிய ஒரு முழுமையான வடிவத்தை அவர் நமக்குத் தருகிறார். பாதுகாவலர் எக்காலத்திலும் தம்மைப் பற்றி வெளிச்சம் போட்டுக்கொண்டதில்லை. மற்றவர்களின் சாதனைகளை அவர் நமக்குக் காட்டுவார், தம் சொந்த சாதனைகளை அவர் மறைத்துவிடுவார். இன்று உலக பஹாய்களுக்கு பாதுகாவலரின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, மகிழ்வு, சாதனை, வேதனை போன்ற எண்ணற்ற அம்சங்கள் தெரியவந்ததற்குக் காரணம் அமதுல் பஹா இயற்றிய “தி பிரைஸ்லஸ் பேர்ல்” என்ற நூல்தான். 20 ஆண்டு காலத்திற்கு அவரோடு வாழ்ந்த அமாத்துல் பஹா தான் அவரைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர். இந்த நூல் பஹாய்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ” பஹாய் சமயத்தின் பாதுகாவலர் 1988 ” என்ற இன்னொரு நூலையும் தொடர்ச்சி நூலாக அவர் எழுதியுள்ளார்.

4. தி டிசையர் ஆஃப் தி வொர்ல்டு ( உலகின் ஆவாலுக்குரியவர்) -( 1982 ) என்ற பொருளில் ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்த நூல் பஹாவுல்லாவின் பண்புகள், தன்மைகள்,குணங்கள், மற்றும் நாமங்களை எடுத்து விளக்குகின்ற நூலாகும். இந்த நூலை வாசிப்பதன் வழியாக நாம் பஹாவுல்லாவைப் புரிந்துகொள்ளவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நூல் ஒரு வகையில், தியானம் செய்வதற்காக எழுதப்பட்டுள்ளது.

5. “மினிஸ்ட்ரி ஆப் தி கஸ்டோடியன்ஸ்” ( காப்பாளர்களின் பதவிக்காலம்) – (1992) என்ற நூல் முக்கியமான நூலாகும். இந்த நூலுக்கு அமாத்துல் பஹா அவர்கள் ஒரு முன்னுரை வாழங்கியுள்ளார். இது பாதுகாவலர் காலமாகிய 1957ம் ஆண்டு முதல் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட 1963ம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் புனித நிலத்தில் உள்ள தெய்வ சமயத் திருக்கரங்கள் உலகுக்கு அனுப்பிய செய்திகளின் தொகுப்பாகும்.

அவரின் எண்ண அலைகள்

அமாத்துல் பஹா அவர்கள் ஆற்றிய உரைகளிலும். எழுதிய நூல்களிலும் நமக்காக அவர் நிறைய அறிவுரைகளைக் கூறியுள்ளார், பல அருமையான கதைகளையும் உவமைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவை யாவுமே அவரின் தெளிவான, வளமான சிந்தனைக்கு, அவை எடுத்துக்காட்டாகின்றன. எதனையும் சிக்கலின்றி தெளிவாகச் சிந்தித்து, அதனைச் சித்தரிக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவரின் எண்ண அலைகளில் சில வருமாறு:
இந்திய கிராமவாசிகள் :

கிராமவாசிகள் யாவரும் இந்தியாவில் உள்ள சமயம் எனும் மாபெறும் மரத்தின் ஊட்டமளிக்கப்படவேண்டிய வேர்களுக்குச் சமமானவர்கள். நாம் அவர்கள் மீது கவனம் காண்பித்து அவர்கட்கு தெய்வீகப் போதனைகளைக் கொடுக்கவேண்டும்.

பஹாய் போதனைகள் :

பஹாய் போதகர்களாக எவருமே உருவாக்கப்பட்டவரல்லர். நாம் பாட்டுக்கு வெளியே சென்று போதிக்க வேண்டும். மற்றவை யாவும் பின் தொடர்ந்து, அதன் பிறகு ஒரு போதகர் தோன்றுகிறார். அவர் பிரார்த்தனை கூறிவிட்டு முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.

காலம் :

நமக்குப் போதுமான நேரம் இருக்கிறது என நாம் எண்ணவே கூடாது. நேரம் இருந்தாலும் வாய்ப்பு நிரந்தரமாக நழுவிவிடக்கூடும். போதிப்பதற்கு அங்கே போதிய காலம் இல்லை. நேரம் இருக்கும் போதே சந்தர்ப்பத்தை அதிசிறப்புடன் பயிர் செய்ய வேண்டும்.

கல்வயறிவற்றவர்கள் :

அறியாமையில் உள்ளவர்கள் எனவும், எழுத்தறிவற்றவர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள் எதோ புதிதான ஒன்றுக்காக பசியோடு காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக பசியோடு உள்ளனர். அவர்கட்டு நாம் தெய்வீகத் தீணியைக் கொடுக்காவிட்டால் அவர்கள் லௌகீக இயக்கங்களோடு ஒட்டிக்கொள்வார்கள்.

கிராமிய மனிதர்களின் மனங்கள் :

பெரும்பாலான மனிதர்களின் மனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தெய்வீகப் பொழிவுகளைப் பெறுவதற்காக தயார்படுத்தப்பட வேண்டும். ஆனால் கிராமிய மனிதர்களின் மனங்கள் பற்றுகளில் இருந்து விடுபட்டுள்ளதோடு, போதனைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயராக உள்ளன.

சேவையில் போட்டிகள் :

கடவுளின் சமயம் என்ற சேவையில் நாம் ஒருவருக்கொருவர் போட்டி இடுவோம். நீங்கள் எழுந்தால், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

பாதுகாவலரின் மகிழ்ச்சி :

அவருக்கு 20 ஆண்டுகள் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற காலத்தில், அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது கடவுளின் சமயத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி ஒன்று தான். அவருடைய கடைசி அண்டுகளில் பாதுகாவலருக்கு உயிர் மூச்சாக இருந்தது, அவரைத் தொடர்ந்து இயங்கும்படிச் செய்தது எல்லாம் பத்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி, கடவுளின் சமயத்தின் விஸ்தரிப்பு; ஆகியவைதாம். அடிப்படையில் போதனைத் துறையில் பெற்ற வெற்றிகளே அவருக்கு மகிழ்ச்சியூட்டின.

இரண்டு தரப்பினரின் கடமைகள் :

உலகில் இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் சரிசமமாக இயங்கவேண்டும். கடவுளின் தீர்க்கதரிசி தோன்றும் போது, அவருடைய நாமத்தை பற்றி கேள்விப்பபடுவதும் அவரை ஏற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மக்கள் தீர்க்கதரிசியின் நாமத்தைக் கேள்விப்படவில்லையானால் அது பஹாய்களின் தவறாகும். அதுபோல் கேள்விப்பட்ட பின்பு அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தனிப்பட்ட மனிதர்களின் தவறாகும்.

அறிவும் நம்பிக்கையும் :

சமயம் பற்றிய அறி நம்பிக்கை ஆகிய இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும். நாம் அவற்றை ஒன்றுகலக்கக் கூடாது. நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். அதோடு நாம் படிப்படியாக சேகரிப்பதுதான் அறிவு

ஆன்மீகப் பயிற்சி :

உடல் நலத்தில் குறை இருக்கும் போது நாம் அதனை நிவர்த்தி செய்வதற்காக தேகப் பயிற்சி செய்கிறோம். அது போல் நம்மிடம் இல்லாத பண்புகளை நாம் பயிற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்து முடிப்பதற்கான பலத்தை இறைவன் நமக்குக் கொடுக்காமல் ஒரு காரியத்தை அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். உலக மக்கள் தங்களின் நடத்தைகள், தங்களின் சிந்தனைகளை, தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும்படி கடவுள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பலத்தை அவர்கட்டு அவர் வழங்குவார்.

மற்றவர்களுக்கு உதவுவதானால் :

மற்றவர்களின் துன்பங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்களின் சிரமங்கள் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு உதவுவதற்கான முதல் படியாகும். சகிப்பின்மை எந்த பிரச்சினைகளையும் தீர்காது : நாம் விவேகமுள்ள மருத்துவரைப்போல், நோயைக் கண்டுபிடிப்பதற்காக, அறிகுறிகள் என்னவேன்று செவிமடுக்கவேண்டும்.

தாராளகுணம் படைத்ாேதர்

தாராள குணம் என்பது அனைவரும் நாடுகின்ற இன்னொரு மனிதப் பண்பாகும். ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாகக் கூரின், பணக்காரர்கள் அல்லது வசதியுடையோரைக் காட்டிலும் ஏழைகளே அதிக தாராள குணம் படைத்தவர்களாக உள்ளனர்.

முகபாவனை :

கடுகடுப்பான பகைமைக் கொண்ட கோபம் கொண்ட முகங்களைக் கொண்ட மனிதர்களை நீங்கள் விரும்முவதுண்டா? அநேகமாக விரும்பமாட்டீர்கள். ஆகையினால் உங்கள் சொந்த முகங்களை அப்படியெல்லாம் வைத்துக் கொண்டுஉங்கள் சக மனிதர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

நாவின் வன்மை :

மனிதப் பிறவிகளின் நாக்குகள் மிகவும் பலமான ஆயுதங்களாகும். நாக்குகளினால் தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தேசங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் பேச்சு என்பது மனிதனின் மாபெறும் சாதனைகளில் ஒன்றாகும் ; அப்படி இருந்தும் கூட, இரண்டு முனையுள்ள வாளைப்போல் அது இரண்டு பக்கமும் வெட்ட முடியும். இவ்வளவு பலம் கொண்ட ஆயுதத்தை நன்மைக்கோ அல்லது திமைக்கோ பயன்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மரணமும் அடக்கமும்

யார் எப்பொழுது, எங்கே தம் உயிரைத் துறப்பார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அமர்த்துல் பஹா அவர்கள் உலகில் 185 நாடுகளுக்கு மேல் சென்று சமயத்திற்காக சேவை செய்துள்ளளார். வெளிநாட்டுக்குப் போகும் போதெல்லாம் தாம் அங்கேயே உயிரைத் துறந்து அந்த நிலைத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என அமாத்துல் பஹாவின் உள் மனது ஏங்கியதுண்டு. ஆனால் இறைவனின் விருப்பம் வேறு விதமாக இருந்துவிட்டது. கடைசி ஒரு வருடமாக (1999) ருஹியா கானும் அவர்களின் உடல் நலம் சரியில்லாததால் அவர் புனித நிலத்தை விட்டு வெளியேறவே முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார். முன்பெல்லாம் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பஹாய்களையும் மற்ற வருகையாளர்களையும் அமாத்துல் பஹா வரவேற்றுப் பேசி உபசரித்ததுண்டு. ஆனால் கடைசிக் காலத்தில் இவ்வாறு மற்றவர்களைப் பார்ப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார். 1998ம் ஆண்டில் தடைபெற்ற அனைத்துலகப் பேராளர் மாநாட்டில் மேடையில் தோன்றினார், ஆனால் அதுவும் கூட மற்றவர்கள் அவரை மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது அபூர்வம், அல்லது கிடையாது என்றகுவிட்டது.

கடைசி ஒரு வருடமாக அமாத்துல் பஹா நடமாட முடியாமல் போய்விட்டது. அவர் கீழே விழுந்திடவே, அவரின் முதுகில் காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் படுத்த படுக்கையாகக் காலத்தை ஓட்டினார். அவரை கவனிப்பதற்கு என உலக நீதி மன்றம் ஒரு தாதியை ஏற்பாடு செய்துதிருந்து. அவருக்குப் பக்கத் துணையாக இருந்ததவர் அவருடைய நீண்ட காலத்து தோழியாகிய திருமதி வைலட் நக்ஜவனி. இந்த அம்மையார் உலக நீதி மன்ற அங்கத்தினர் திரு அலி நக்ஜாவானி அவர்கிளின் துணைவியார். 1964ம் ஆண்டிலே அமாத்துல் பஹா இந்திய நாட்டுக்கு நீண்ட காலம் விஜயம் செய்தபோது அவரோடு உடன் பயணம் செய்தவர் திருமதி அலி நக்ஜவனி, “அமாத்துல் பஹாவின் இந்திய விஜயம்” என்ற பெயரில் ஒரு நாலை எழுதி அந்தப் பயண அணுபவங்களை விவரித்தவர் இந்த திருமதி அலி நக்ஜவனி.

ஆகையினால், தாம் வெளிநாட்டில் அடக்கம் செய்யப்படவேண்டும் என அமாத்துல் பஹா விரும்பினாலும்கூட, அது சாத்தியமாகாதபடி, கடைசிக் காலத்தில் அவர் நாட்டை விட்டே வெளியேறமுடியாதபடியான சூழ்நிலை உண்டாகிவிட்டது. அவர் புனித நிலத்தில்தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாயிற்றே! அது பேரன்புக்குரிய பாதுகவலரின் விருப்பமும் கூட என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நமது பாதுகாவலர் “பூமியில் ஆண்டவனின் அடையாளம்” என்றிருக்கும் போது அவருக்குத் வருங்காலத்தைக் கூறக்கூடிய வல்லமை இல்லாமலா போய்விடும்.?

காலமானார்
ஜனவரி மாதம் 18ம் நாள் நள்ளிரவைத் தாண்டிய அதிகாலை நேரத்தில் (19ல்) அமர்த்துல் பஹா அவர்கள் கடைசி மூச்சை விட்டார். இந்த துக்கச் செய்தி உலக நீதி மண்றத்தின் அங்கத்தினகட்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிகாலை மூன்று மணிக்கு உலக நீதி மன்றத்தின் கூட்டச் சபையில் ஒன்றுகூடினார். அவர்கள் கலந்தாலோசித்த முதல் விஷயம் அமாத்துல் பஹாவை எங்கு அடக்கம் செய்வது என்பதாகும். கார்மல் மலைமீதுள்ள அந்த ஞாபகார்த்த பூங்காக்களில் புனித பாப், அப்துல் பஹா, பஹாவுல்லாவின் துனைவியார் நவ்வாப், பஹாவூல்லாவின் புதல்வி பஹியா கானும் பஹாவுல்லாவின் புதல்வர் மிர்சா மிஹிடி, மற்றும் அப்துல் பஹாவின் துனைவியார் முனிரி கானும் ஆகியோரின் நல்லுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் அடக்கம் செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட அவர்கள் பாவரும் வேறு ஸ்தானங்களைக் கொண்டவர்கள் என்பதனால் அமாத்துல் பஹாவை அங்கு அடக்கம் செய்ய இயலாது. அதே வேளையில் ஹைபா நகரில் உள்ள பொது மயானத்திலும் அடக்கம் செய்யும் அளவுக்கு அமாத்துல் பஹா சாதாரண மனிதரல்லர். இந்த நேரத்தில்தான் பாதுகாவலர் உயிரோடு இருந்தபோது அவர் சொன்ன குறிப்பு உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

அப்துல் பஹா காலமானது முதற்கொண்டு பாதுகாவலரும் பஹியா கானும் அவர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தில் தங்கிவந்தனர். பஹியா கானும் காலமாகியபின்னர் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களை மணந்தார். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் இல்லதில்தான் வாழ்ந்தனர். அப்பொழுது அப்துல் பஹாவின் இல்லத்திற்கு எதிர்புறத்தில் உள்ள ஒரு காலி நிலத்தை பாதுகாவலர் விலைக்கு வாங்கினார். ஒரு நாள் பாதுகாவலர் அந்த நிலத்தை அமாத்துல் பஹாவிடம் காண்பித்து, “அதோ,அதுதான் உன்னுடைய பூங்கா” என்று கோடி காட்டினார். அதன் உள் அர்த்தம் அப்பொழுது அமாத்துல் பஹாவுக்குத் தெரியவில்லை. அதுபோல் பாதுகாவலர் பல விஷயங்களை அமாத்துல் பஹாவிடம் கோடிக்காட்டியுள்ளார். அவை யாவும் பிற்காலத்தில் நடந்தேறியுள்ளன. அத்தகைய கூற்றுகளையும் குறிப்புகளையும் நாம் அமாத்துல் பஹா எழுதிய பிரைஸ்லஸ் பேர்ல் ( விலைமதிப்பில்லா முத்து ) என்ற நூலில் காணலாம்.

ஆகவே பாதுகாவலர் சொன்ன அந்தக் கருத்து உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்ததும் பாதுகாவலர் வாங்கிய அந்தக் காலி நிலத்தில் அமாத்துல் பஹாவை அடக்கம் செய்திட உலக நீதி மன்றம் முடிவெடுத்தது, அந்த நிலம் பாதுகாவலர் காலாமாகிப் பனனெடுங்காலமாகவே அப்படியே இருந்து விட்டது. அங்கு மரங்கள் அடர்த்தியா வளர்ந்திடவே பலரின் பாார்வை அந்த நிலத்தின்மீது பாயக்கிடையாது. ஆனால் அமாத்துல் பஹா காலமானபோதுதான் அந்த நிலத்தின் முக்கியத்துவமே புரியவந்தது. ஆகையினால் பாதுகாவலர் அமர்த்துல் பஹா அவர்களை விட்டுப் பிரிவதற்கு முன்னபே அமாத்துல் பஹாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், அவர் உயிர் துறந்துள்ளார்.

19ம் தேதி அதிகாலையின் கிழக்கு வெளுத்து கதிரவன் உதிர்பதற்கு முன்பே அமாத்துல் பஹாவின் அடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக நீதி மன்றம் செய்துமுடித்துவிட்டது. வேலைகள் மள மளவென்று ஆரம்பிக்கப்பட்டன. 23ம் நாள் பிற்பகல் 2.00 மணிக்கு அன்னவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. அதனால் உலக நீதி மன்றம் சில கட்டளைகளைப் பிறப்பித்தது. முதலாவதாக அமாத்துல் பஹா மறைந்த இல்லத்திற்கு பஹாய்கள் யாரும் போகக்கூடாது என்பதாகும். குறிப்பாக புனித யாத்திரைக்கு வந்துள்ளவர்கள் அங்கு போக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் புனித நிலத்தில் கூடுதல் காலத்திற்கு தங்கி அமாத்துல் பஹாவின் சவ அடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. புனித யாத்திரைக்கு வந்தவர்கள் யாத்திரையொடு திரும்பியாக வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமாத்துல் பஹாவின் நல்லுடலுக்காக ஒரு பஹாய் அன்பர் ஒரு விசேஷமான சவப்பெட்டியை உருவாக்கினார். அது தரமான தேவதாரு மரத்தல் இருந்து உருவாக்கப்பட்ட சவப்பெட்டியாகும். அமாத்துல் பஹாவின் நல்லுடல் அனுள்ளே கிடத்தப்பட்டு காற்று போகாதபடி முத்றை இடப்பட்டது. அதனால் அவரின் முகத்தைக் காண்பதற்கான வாய்ப்பில்லாமல் மூடப்பட்டிருந்தது. மறுபக்கம் மயானத்தில் புதை குழிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உலகில் உள்ள தேசிய ஆன்மீக சபைகளை உலக நீதி மன்றம் தொடர்பு கொண்டு அவை தலா இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டது. பல தேசிய சபைகளும் அவ்வாறு பிரதிநிதிகளை அனுப்பின. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து அப்போது தேசிய அங்கத்துவம் வகிக்காத இருவர் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அந்த இருவரும் தேசியா சபையின் பிரநிதிகளாக இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமா என அந்த சபை கேட்டதற்கு உலக நீதி மன்றம் மறுத்துவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் உள்ளநாட்டு பத்திரிகைகளிலும் பொது தொடர்புச் சாதானங்களிலும் அமாத்துல் பஹாவின் மறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. உலகம் முழுதும் இருந்து பல பஹாய் அன்பர்களும் விமான நிலையத்தில் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர்.

பிப்ரவரி மாதம் 23ம் நாளன்று அமாத்துல் பஹாவின் நல்லுடலை அடக்கம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு புனித நிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அமாத்துல் பஹா காலமானது பிப்ரவரி மாதம் 19ம் நாளன்று. அதற்கு சில நாட்கள் முன்பு வரைக்கும் புனித நிலத்தில் உஷ்ணம் அதிகமாக இருந்தது, ஊரே காய்ந்து கொண்டிருந்தது, மழை வர வேண்டும், வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தும் வேண்டியும் கொண்டிருந்தனர். அமாத்துல் பஹா காலமாகிய 19ம் நாளன்று மக்கள் எதிர்பார்த்த அந்த மழை பெய்தது. ஊரும் குளிர்ந்தது, மக்களின் உள்ளமும் குளிர்ந்தது. அந்த வகையில் அமாத்துல் பஹாவின் மறைவு நாளில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 23ம் நாள் பிற்பகள் 2.00 மணிக்கு அமாத்துல் பஹாவுக்கான இறுதி மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி சம்பவம் நடைபெறுவதாக இருந்தது. அன்றும் கூட மழை லேசாகத் தூறிக்கொண்டுதான் இருந்தது. அப்துல் பஹாவின் இல்லத்திற்கு முன்னால் உள்ள சாலையில் நண்பர்கள் கூடத்தொடங்கினார்கள். பலரும் குடைகளைப் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தனர். கார்மல் மலைக்கு மேலே கார்மேகங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே ஒரே அமைதியாக இருந்தது. புனித நிலத்தில் பணிபுரிகின்ற பஹாய்கள் வருகைத் தந்தவர்களை வரவேற்று தக்க இடங்களுக்கு அழைத்துச்சென்றனர்.

மணி இரண்டை நெருங்கும் போது சில கார்கள் அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே வந்து நின்றன. அவற்றில் இருந்து தெய்வச் சமயத் திருக்கரங்களாகிய திரு புருட்டான் மற்றும் டாக்டர் அலி வர்கா ஆகியயோர் இறங்கினார். அமாத்துல் பஹா ருஹியா கானும் காலமானதோடு இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே வாழும் தெய்வ சமயத் திருக்கரங்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் வீட்டின் முன்னே உள்ள பாதையில் நடந்து படிக்கட்டிகளில் ஏறி முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அந்தப் பாதையின் இரண்டு ஓரங்களிலும் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த இருவறையும் தொடந்து உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள், கண்ட ஆலோசகர்கள் இன்னும் அழைக்கப்பட்ட விசேஷமான பிரமுகர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தினுல் நுழைந்தனர். அந்த வீட்டில்தான் ருஹியா கானும் அவர்களின் நல்லுடல் மூடப்பட்ட சவப்பெட்டியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களும் அழைக்கப்பட்டவர்களும் பஹாய் உலக மையத்தின் ஊழியர்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பூங்காக்களில் குழுமி இருந்தனர்.

சரியாக மணி இரண்டுக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக வேண்டும். தீடிரென்டு தூறல் நின்றது, மேகம் கலைந்தது, வானம் தெளிந்தது, சூரிய ஒளி படர்ந்து. நிகழ்ச்சி ஆரம்பமானது.. உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர் திரு யான் சேம்பல் அவர்கள், அமாத்துல் பஹாவின் மறைவைப் பற்றி உலக பஹாய்களுகு உலக நீதி மன்றம் அனுப்பிய செய்தியை வாசித்தார். கடந்த சில தினங்களாக அடாத மழையின் காரணமாக பறவைகளும் பாடுவதை நிறுத்துக் கொண்டன. எண்ணே ஆச்சரியம்! உலக நீதி மன்றத்தின் கடிதம் வாசிக்கப்பட்ட வேளையில் பக்கத்து பூங்காக்களின் மரங்களில் இருந்து பறவைகளும் பாடத் தொடங்கின! அந்த கடிதம் வாசிக்கப்பட்டு முடிந்ததும், ஆறு பிரார்த்தனைகளிள் ஓதப்பட்டு புனித வாசகங்கள் வாசிக்கப்பட்டன. ஒளி பெருக்கிக் கருவிகள் அந்தப் புனித வாசங்களை அப்துல் பஹாவின் இல்லத்திலும் பக்கத்துப் பூங்காக்களிலும் கொண்டு சேர்த்தன. உயிர் துறந்தவர்களுக்கான பிரார்த்தனை கூறி முடிக்கப்பட்டதும், உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள் அந்த சவப்பெட்டியை சுமந்து கொண்டு அப்துல் பஹாவின் இல்லத்தின் வெளி வாசலில் கொண்டு போய் வைத்தனர். அங்கிருந்து வேறு அறுவர் அந்த சவப் பெட்டியை சுமந்து கொண்டு, சாலைக்கு மறு பக்கம் இருந்த புதைகுழியின் அருகே வைத்தனர். அந்த ஆறுவரும் உலகின் பல்வேறு நிறங்களைப் பிறநிதித்த பஹாய்கள்.

கடந்த நான்கு நாட்களாக அமாத்துல் பஹாவுக்கான சவக்குழியை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. புனித நிலத்தில் ஒரு பழக்கம் உண்டு.சவக்குழியைத் தோண்டி, குழியின் அடியிலும் நான்கு ஓரங்களிலும் சிமென்டு பூசுவார்கள். சவப்பெட்டி உள்ளே இறக்கப்பட்டவுடன் சிமெண்டினால் செய்யப்பட்ட தட்டையான மூடியினால் சவக்குழியை மூடி விடுவார்கள். அமாத்துல் பஹாவுக்கும் அவ்வாறான புதை குழிதான் உருவாக்கப்பட்டிருந்தது. அன்னவரின் சவக் குழியின் ஓரங்களில் ரோஜா மலர்கள் பொறுத்தப்பட்டன. உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வந்த நுாற்றுக்கணக்கான பூக்கூடைகள் அருகில் அழகுற அடுக்குவைக்கப்பட்டிருந்தன. அதனால் அந்த இடமே இடுகாடு போல காட்சித் தராமல் நந்தவனம் போல கோலம் கொண்டது.. சவப் பெட்டியின் மீதும் ஏராளமான ரோஜாப் பூக்கள் அடுக்கிவைக்கப்பட்டன. சவக் குழியின் அருகே மூன்று பிரார்த்தனைகள் கூறப்பட்டன. இத்துடன் மொத்தம் ஒன்பது பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அதன் பின்பு அமாத்துல் பஹாவின் நல்லுடலைத் தாங்கிய சவப் பெட்டி புதை குழியினுள் இறக்கப்பட்டது. உலக நீதி மன்றத்தின் மதிப்புமிகு அங்கத்தினர்களும் இன்னும் உயிர் வாழும் இரண்டு தெய்வச் சமயத் திருக்கரங்களும் இன்னும் பலரும் கண்ணீர் பெருக்கெடுக்க சோர்ந்த முகத்தோடு இருந்தனர். சவப் பெட்டி இறக்கப்படும் வரைக்கும் தூறாமல் இருந்த வானம், சவப் பெட்டி இறக்கபடும் வேளையில் மீண்டும் தூறி, தன் கண்ணீர்த் துளிகளையும் காணிக்கையாகச் செலுத்தியது. இந்த முறை பலமாகவே மழை பெய்தது. சவப் பெட்டி இறக்கப்பட்டதும், அக்குழியின் மேலே தட்டையான சிமென்டு மூடிகள் போட்டு மூடப்பட்டது. அங்கு வந்திருதவர்கள் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்தினார். வருகைத் தந்தவர்கள் மழையைப் பொருட்படுத்தாமல், பூக்கூடையில் இருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து சவக்குழியின் மீது வைத்தனர். அங்கு ஒரு மலர் மலையே உருவாகியது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடமே காலியாகியது.. அங்கிருந்து பார்த்தால் ஹைபா வளைகுடாவுக்கு மேலே வானவில் தன் வண்ணக் கோலத்தைக் காட்டியது. லண்டனில் பாதுகாவலர் அடக்கம் செய்யப்பட்ட போதும் இது போலத்தான் மழை பெய்துள்ளது. அப்படி ஒரு பொருத்தம்.

மறுநாள் புனித நிலத்தில் இன்னெரு அதிசயம். வானம் தெளிவாகியது. சூரியன் சுத்தமான ஒளி வீசியது. ஓரு புது பொலிவும் உற்சாகமும் புனித நிலத்தில் குடிகொண்டது! ‘என் உதவியாளர் “என் கேடயம்,” “நான் சுமந்துள்ள கடினமான பணிகளை நான் மேற்கொண்டபோது என் அயாரத ஒத்துழைப்பாளர்.” என்றெல்லாம் பாதுகாவலரினால் அழைக்கப்பட்டவர் இந்த அமாத்துல் பஹா. 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரம் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்ட அவரின் நல்லுடல் இன்று புனித நிலத்தில் பாதுகாவலரினால் தேர்தெடுக்கப்பட்ட தனி நிலத்தில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துள்ளது.

முடிவாக
அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களின் வழ்க்கை மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். பாதுகாவலரினால் மிகவும் போற்றப்பட்டவர்கள் அமாத்துல் பஹாவின் பெற்றோர்கள். அப்துல் பஹா பிரார்த்தனை கூறி, அதன் வழி பிறந்தவர் தான் ருஹியா கானும். அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலரின் துணைவி என்ற முறையிலும், தெய்வ சமயத் திருக்கரம் என்ற முறையிலும், பேச்சாளர் என்ற முறையிலும், நாடாகமாந்தர் என்ற முறையிலும் எழுத்ாளர் என்ற முறையிலும், போதகர் என்ற முறையிலும்,படத்தயாரிப்பாளர் என்ற முறையிலும், இன்னும் ஒரு பஹாய் சேவகி என்ற முறையிலும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்தார். தாம் தொட்ட துறைகள் யாவுமே துலங்கிடும் வண்ணம் அவர் சேவை செய்தார். சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைக்கும், 90 வயது வரை வாழ்ந்து மூன்ற தலைமுறையினரும் முக்காலமும் நினைவில் வைக்கவல்ல வாழ்க்கையை வாங்கினார். பாதுகாவலர் லண்டனில் 1957ல் காலமான பின்பு 1958ம் ஆண்டில் அவருக்கான கல்லறையை அமாத்துல் பஹா எழுப்பினார். அமாத்துல் பஹா காலமான போதும் பாதுகாவலர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிலத்தில் தான் அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டார். அப்படி ஓர் ஆன்மீக பந்தம் அவர்களுக்கு இடையில்! அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னாலும் கூட, அவர் விட்டுச் சென்ற சேவைகளின் வழியாக, அவர் வாழ்ந்துக் காட்டிய உதாரணங்களின் வழியாக அவர் என்னெற்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

முழு பதிவையும் வாசிக்க »


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்
நினைவோவியங்கள்

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்

இம்மை நீத்து அதி உயர்ந்த தொடுவானத்திற்கு ஏகிய இறை சமயத்தின் திருக்கரங்களில் ஜிநாப்-இ-இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் ஒருவராவார்.

மற்றொருவர் ஜிநாப்-இ-நபில்-இ-அக்பர் ஆவார். மற்றும் பலரில் ஜிநாப்-இ-முல்லா அலி-அக்பரும் ஜிநாப்-இ-ஷெய்க் முஹம்மட்-ரிடாய்-இ-யாஸ்டியும் ஆவர். மேலும், பலரிடையே, வணக்கத்திற்குறிய உயிர்த் தியாகியான, அகா மிர்சா வர்காவும் வீற்றிருந்தார்.

இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் மெய்யாகவே தமது வாழ்வின் ஆரம்பத்திலிருந்து தமது இறுதி சீமுச்சு வரை தேவரின் சேவகனாகவே இருந்தார். இளமைக் காலத்தில், இவர் காலஞ் சென்ற சிய்யித் காசிம் அவர்களின் வட்டத்தில் சேர்ந்துகொன்டு அவரது சீடர்களில் ஒருவரானார்.

பாரசீகத்தில் தமது தூய்மையான வாழ்விற்கு பெயர் பெற்றவர் இவர், புனிதர் முல்லா சாடிக் எனும் புகழும் எய்தினார். ஆசிர்வதிக்கப்பட்டவர் இவர், திறண்வாய்ந்தவர், கற்றவர், பெரும் மதிப்பும் பெற்றவர் எனத் திகழ்ந்தார்.

குராசானின் மக்கள் இவர்பால் அதிகமாய் பற்று கொண்டார்கள், ஏனெனில் இவர் ஒரு சிறந்த பண்டிதரும் மத குருக்களில் ஒப்பற்றவரும் தனிச்சிறப்பு பெற்றவருமாவார்.

சமயத்தின் போதகராக, தனக்கு செவிசாய்ப்போர் எல்லோரையும் வெகு சுலபமாக வென்றிடும் அளவிற்கு இவர் அத்துனை சொல்லாற்றலாலும், அத்துனை சக்தியோடும் உரை நிகழ்த்துவார்.

பக்தாத்திற்கு வந்து பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்த பிறகு, ஒரு நாள் ஆண்கள் வசிக்கும் அறையின் வாசலில், ஒரு சிறு தோட்டத்தின் அருகே அவர் அமர்ந்திருந்தார்.

நான் மேலே அந்த வாசலை முன்னோக்கிய வன்னம் இருக்கும் அறைகள் ஒன்றில் இருந்தோன். அத் தருணம், பத்-ஆலி ஷாவின்யீ பேரனான, ஒரு பாரசீக இளவரசர் வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த இளவரசர் இவரைக் கேட்டார், *நீங்கள் யார்?* என. *இந்த இல்லத்தின் ஒரு சேவகனாவேன் நான்*. இவ் வாசலைக் காத்திருக்கும் காவலர்களில் ஒருவன் நான் என இஸ்முல்லா பதில் அளித்தார்.

நான் மேலே இருந்து செவிமடுத்துக்கொண்டிருக்க, கீழே இவர் சமயத்தைப் போதிக்கத் துவங்கினார். அந்த இளவரசரோ ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்- ஆயினும், கால் மணி நேரத்திற்குள், சாந்தமாகவும் மரியாதையுடனும், ஜிநாப்-இ-இஸ்முல்லா அவரை அமைதி பெறச்செய்துவிட்டார்.

இவர் சொன்னதை அந்த இளவரசர் மிக்க கோபத்தோடு மறுத்தபிறகு, தனது முகம் தன் கோபத்தை வெகு தௌவீவாக பிரதிபலித்துவிட்ட பிறகு, இப்பொழுது அவரது கோபம் புன்னகைகளாய் மாறின, இஸ்முல்லாவை சந்தித்ததிலும் அவர் உரைத்தவற்றை செவிமடுத்ததிலும் இளவரசர் அதிகபட்சமான மனதிருப்தியினை தெரிவித்தார்.

இவர் எப்பொழுதுமே கலகலப்புடனும் ஆனந்தத்துடனும் போதிப்பார், மற்றும் தான் பேசுபவர் எத்துனை ஆவேசமான கோபத்தை தன்பால் செலுத்திட்ட போதும் இவர் சாந்தத்துடனும் ஏற்கக்கூடிய நகைச்சுவையோடும் பதிலளிப்பார்.

இவரது போதனை முறை தனிச்சிறப்பு வாய்ந்தது. இவர் மெய்யாகவே, இறைவனின் நாமமாகிய இஸ்முல்லாவே, இது அவரது புகழின் காரணமாக அல்ல, மாறாக, இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆன்மா என்பதினாலேயே ஆகும்.

இஸ்முல்லா அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய மரபுக்கூற்றுகளை மனனம் செய்திருந்தார் மற்றும் ஷேய்க் அஹ்மத் சிய்யித் காசிம் அவர்களின் போதனைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் ஷீராசில், சமயத்தின் ஆரம்ப காலத்தில் அதன் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு விரைவில் அவ்வாராகவே பரவலான புகழும் பெற்றார்.

இவர் வௌவீப்படையாகவும் அச்சமின்றியும் போதித்ததன் காரணமாக, அவர்கள் இவர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி நகரத்தில் உள்ள சாலைவழிகளிலும் சந்தைவழிகளிலும் இழுத்துச் சென்றனர். அந்த நிலையிலுங்யீ கூட, சாந்தமாகவும் நகைத்துக்கொண்டும், இவர் மக்களோடு பேசிய வன்னமிருந்தார்.

அவர் இணங்கவில்லை@ அவர் ணியீபசுவதை தடுக்கவும் முடியவில்லை.. அவரை அவர்கள் விடுவித்தவுடன் அவர் ஷீராஸை விட்டு குஃராசானுக்குச் சென்றார், அங்குங் கூட சமயத்தைப் பரப்பத் துவங்கினார், அதன் பிறகு அவர் தபார்சி கோட்டையை நோக்கிய பயணத்தை பாபுல்-பாப் அவர்களுடன் துவங்கினார்.

அங்கு இவர் தியாகத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுடன் ஒருவாராகி கொடுமையான துன்பங்களைத் தாங்கினார். அந்தக் கோட்டையில் அவரைக் கைதியாக்கி அவர்கள் மசிந்தரானின் தலைவர்களிடம், ஆங்காங்கே அவரை இழுத்துச் செல்ல, ஒப்படைத்துவிட்டு இறுதியில் அந்த மாநகரத்தின் ஒரு வட்டாரத்தில் கொல்லப்படுவதற்காக ஒப்படைத்தனர்.

சங்கிலியால் கட்டப்பட்டு, நியமிக்கப்பட்ட இடத்திற்கு இஸ்முல்லா கொண்டுவரப்பட்ட போது, நடு இரவில் அவரை சிறையிலிருந்து விடுவித்து ஒரு ஆபத்தில்லா இடத்திற்குக் கொண்டுச்செல்ல இறைவன் ஒருவரது மனதைத் தூண்டிவிட்டார். நடுங்கச்செய்யும் இந்த சோதனைகள் முழுவதிலும் அவர் தம் நம்பிக்கையில் உறுதியாகவே இருந்தார்.

உதாரணமாக, எதிரிகள் எப்படி அந்த கோட்டையைச் சுற்றி தாக்கினர் என்றும், தங்களது பீரங்கிகளிலிருந்து தொடர்ச்சியாக குண்டுகளைக் கொட்டிக் கொன்டிருந்தனரென்றும் சிந்தித்துப்பாருங்கள். நம்பிக்கையாளர்கள், இஸ்முல்லா உட்பட, பதினெட்டு நாட்களுக்கு உணவின்றி இருந்தனர்.

தங்களது காலனிகளின் தோல்களை உன்டு வாழ்ந்தனர். அதுவும்கூட விரைவில் தீர்ந்துவிட்டது, பிறகு அவர்களுக்குத் தண்ணீரைத் தவிர வேரெதுவும் இல்லை. காலையில் ஒரு மிடர் நீரை அவர்கள் அருந்தி விட்டு பசியோடும் கலைப்போடும் கோட்டையில் கிடந்தனர்.

ஆயினும், தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் உடனே குதித்தெழுந்து நிற்பர்யீ, மற்றும் எதிரிகளின் முன்னே அற்புதமான அஞ்சாமையையும் தாக்குதல்களின்பால் திகைக்க வைக்கும் தற்காப்பையும் காண்பித்து, எதிரிகளை கோட்டைச் சுவர்களிலிருந்து பின் ஓடச்செய்தனர்.

பசிக் கொடுமை பாதினெட்டு நாட்கள் நீடித்தது. இது ஒரு மோசமான சோதனையாய் ஆயிற்று. ஆரம்பமாக, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரம் இருந்தனர், எதிரிகளினால் தாக்கப்பட்டும் தடுக்கப்பட்டும் இருந்தனர், மேலும் அவர்கள் பசியினால் வாடியுமிருந்தனர் – அதற்கும் மேலாக எதிரிப் படையின் திடீர்த் தாக்குதல்களும், குண்டுகள் மழை போல் பொழிந்து கோட்டையின் மத்தியில் விழுந்த வன்னமுமாக இருந்தது.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் அசையாத நம்பிக்கையும் பொறுமையும் கொள்வது முற்றிலும் சிரமமானது, அத்தகையதொரு கொடூரமான சேதனைகளைத் தாங்கிடுவது காணக்கிடைக்காத ஒர் அற்புதச் செயலாகும்.

தாக்குதல்களில் இஸ்முல்லா தளரவில்லை. விடுதலை பெற்றவுடன், இவர் முன்பைவிட வெகு பரவலாக போதித்தார். ஒவ்வொரு உயிர் சீமுச்சையும் இவர் மக்களை இறைவனது இராச்சியத்திற்கு அழைப்பதற்கென்றே செலவிட்டார்.

:ராக்கில் இவர் பஹாவுல்லாவின் சந்நிதானத்தை அடையும் வாய்ப்பினைப் பெற்றார், மறுபடியும் அதி பெரும் சிறையில் அவரிடமிருந்து கருணையையும் தயையையும் பேற்றார்.

இவர் ஒரு அலைமோதிடும் கடலைப்போலவும், உயரப் பறந்திடும் இராஜாளியைப் போலவும் திகழ்ந்தார். இவரது வதனம் பிரகாசித்தது, இவரது நா சொல்வன்மை கொன்டிருந்தது, இவரது ஊக்கமும் உறுதியும் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. இவர் தன் உதடுகளை போதிப்பதற்கெனத் திறந்தபொழுது, ஆதாரங்கள் பொழிந்திடும் – இவர் ஓதவோ அல்லது பிரார்த்தனைச் செய்யவோ செய்தாரேயானால், அவரது கண்கள் மேகங்களைப் போல் கண்ணீரைப் பொழிந்திடும்.

இவரது முகம் பிரகாசமாகவும், வாழ்க்கை ஆன்மீகமாகவும், அறிவு கற்றதும் ஓதாது இயல்பானதாகவும் இருந்தது. அவரது ஆர்வம், உலகின்பால் பற்றின்மை, இறைவனின் மீதுள்ள பக்தியும் அச்சமும் யாவும் தெய்வீகமானது.

இஸ்முல்லாவின் கல்லறை ஹமாதானில் உள்ளது. அதிகமான நிருபங்கள், அவர் இறந்த பிறகு ஒரு விசேஷ நினைவு நிருபம் உட்பட, பஹாவுல்லாவின் அதி உயரிய எழுதுகோலினால் அவருக்காக வௌவீப்படுத்தப்பட்டுள்ளன. இவர் ஒரு அதி பெரும் மனிதராவார், எல்லா வகையிலும் சிறந்தவராவார்.

அத்தகைய சிறப்பான ஜீவன்கள் இப்போது உலகைவிட்டுச் சென்றுவிட்டன. நல்ல வேலை, அவர்கள் பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்யீகு பிறகு நிகழ்ந்த பெருஞ்சோகங்களை – அந்த கோடுரமான பேரிடர்களை – காண இன்னும் இருந்திட வில்லை – ஏனெனில் உறுதியாக ஊன்றப் பட்டிருக்கும் மலைகள் கூட இவைகளால் ஆடி நடுங்கிடக் கூடும், ஊயர்ந்த சிகரமிட்டிருக்கும் மலைகளும் குன்றிடக்குடும்.

மெய்யாகவே இவர், இறைவனின் பெயரான இஸ்முல்லாவே. இவரது கல்லரையை வலம் வருபவரும், அந்த அடக்க ஸ்தலத்தின் மன்னைக் கொன்டு தன்னை ஆசிபெறச் செய்கிறவுரும்யீ பலனடைவார். அப்ஹா இராஜியத்தில் இவர்பால் போற்றுதலும் புகழும் சேரட்டுமாக.

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »

Follow

Get every new post delivered to your Inbox.