Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2020

டக்லஸ் மார்ட்டின், 1927-2020


__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான டக்லஸ் மார்ட்டின், செப்டம்பர் 28, 2020 அன்று கனடாவின் டொராண்டோ நகரில் காலமானார். அவருக்கு 93 வயது.

உலக நீதிமன்றம் அனைத்து தேசிய ஆன்மீக சபைகளுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியுள்ளது.

* * *

துக்ககரமான இதயங்கள் ஏற்கனவே துக்கத்தில் மூழ்கியுள்ளன. நாங்கள் மிகவும் நேசித்த, மிகவும் பாராட்டப்பட்ட முன்னாள் சகாவான டக்ளஸ் மார்ட்டின் மறைவை அறிவிக்கிறோம். ஓர் இளைஞராக பஹாவுல்லாவின் சமயத்தைத் தழுவிய அவர், பல தசாப்தங்களாக சிறப்பான சேவையில் தனது வாழ்க்கையைக் கடவுளின் சமயத்திற்காக அர்ப்பணித்தார். ஈரான் நாட்டில் பஹாய் சமூகத்தைத் தீவிரமாகப் பாதுகாப்பது உட்பட, அவரது பொது வழங்கல்களில் இருந்ததைப் போலவே, சமயத்தைத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் முன்வைப்பதற்காக அவர் பெற்ற சிறந்த ஆற்றல்கள் அவரது அறிவார்ந்த எழுத்துக்களில் பிரகாசித்தன. சமயத்தின் நிர்வாகத்தில் சுமைமிகுந்த பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளை இந்தப் பணிகளில் பெரும்பாலானவற்றையும் அவர் மேற்கொண்டார். கனடாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினராகக் கழித்த கால் நூற்றாண்டும் இதில் அடங்கும். அவ்வேளை பெரும்பான்மையாக அவர் அதன் செயலாளராக இருந்தார். வரலாறு சார்ந்த மகத்தான சக்திகளைப் பற்றிய அவரது பிரகாசமான அறிவாற்றல் மற்றும் அசாதாரணமான புரிதல், அவரது வலிமையான வெளிப்படுத்தும் சக்திகளுடன் இணைந்து, பஹாய் அனைத்துலக சமூகத்தின் மக்கள் தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநராக அவர் கழித்த ஆண்டுகளின் போது மிகவும் வெளிப்படையாக இருந்துடன், பன்னிரண்டு ஆண்டுகள் அவர் உலக நீதிமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான முன்னோடியாகவும் இருந்தது. உறுதியான, சாதுர்யமான, மற்றும் கூரிய நுண்ணறிவால் ஆசீர்வதிக்கப்பட்ட அவரது இழப்பு ஆழமாக உணரப்படும்.

இப்போது தமது அன்பு மனைவி எலிசபெத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ள அன்பார்ந்த டக்லஸ், அப்ஹா இராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படவும், அவருடைய ஒளிரும் ஆத்மா உயர்விலுள்ள எல்லையற்ற பகுதிகளில் நித்தியமாக மேம்பாடு காணக்கூடும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நண்பர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் விதம் ஒவ்வொரு வழிபாட்டு இல்லத்திலும் வழிபாடுகள் உட்பட அஞ்சலிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துமாறு அழைக்கப்படுகிறார்கள்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1455/

Read Full Post »


பஹாய் உலக மையம் – சில மாதங்களுக்கு முன்பு ‘அப்துல்-பஹா நினைவாலயத்திற்கான வடிவமைப்பு கருத்துரு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் இப்போது போடப்பட்டு, கட்டுமானம் ஒரு புதிய கட்டத்தை நெருங்கியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே இந்த திட்டம் தொடர்வதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான சுகாதார நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பான அப்துல்-பஹா நினவாலயத்தின் வடிவமைப்பு கருத்துருவின் அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்டிடத்தின் அடித்தலங்கள் நிறுவப்பட்டு, கட்டுமானம் ஒரு புதிய கட்டத்தை அணுகிக்கொண்டிக்கின்றது.

கடந்த மாதங்களில் ஆழமான நிலத்தடி தூண்களால் ஆதரிக்கப்படும் நிலையான அஸ்திவாரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் கான்கிரீட் ஊற்றப்பட்டு, 2,900 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தளமேடை சமீபத்தில் தளத்தின் மையத்தில் போடப்பட்டது. இது மத்திய அடித்தல பணிகளை நிறைவு செய்தது.

ஒரே இரவில் கான்கிரீட் ஊற்றப்பட்டு, 2,900 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தளமேடை சமீபத்தில் தளத்தின் மையத்தில் போடப்பட்டது. இது மத்திய அடித்தல பணிகளை நிறைவு செய்தது.

தளத்தின் பரந்த வட்டத்திற்குள், சரிவான தோட்டங்களுக்கு அடித்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவை சுற்றிவரும் பாதையிலிருந்து உயர்ந்து, ‘அப்துல்-பஹாவின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் இடத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

கட்டுமானத்தின் இறுதி கட்டங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கான பல்கூறான செயல்முறை இப்போது நிறைவடைந்துள்ளது. நினைவாலயத்தின் வடிவமைப்பைச் செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது மைய கட்டமைப்பை அடிவாரத்திற்கும் அஸ்திவாரத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதிக்கிறது.

கட்டுமானத்தின் இறுதி கட்டங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கான பல்கூறான செயல்முறை இப்போது நிறைவடைந்துள்ளது. நினைவாலயத்தின் வடிவமைப்பைச் செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது மைய கட்டமைப்பை அடிவாரத்திற்கும் அஸ்திவாரத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதிக்கிறது.
தளத்தின் பரந்த வட்டத்திற்குள், சரிவான தோட்டங்களுக்கு அடித்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவை சுற்றிவரும் பாதையிலிருந்து உயர்ந்து, ‘அப்துல்-பஹாவின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் இடத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முக்கியமான முயற்சியை மேற்கொள்வதில் பஹாய் உலகம் ‘அப்துல்-பா’வின் உதாரணத்திலிருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது.

அக்காநகரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், ‘அப்துல்-பஹா கார்மல் மலையில் ஒரு பொருத்தமான நினைவாலயத்தின் கட்டுமானத்தை வழிநடத்தினார். இந்த சன்னதி, இறுதியில் பாப் பெருமானார் திருவுடலின் நிரந்தர ஓய்விடமாக இருக்கும்.

“அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லும், அதற்குச் செல்லும் சாலையின் ஒவ்வொரு கல்லும், எல்லையற்ற கண்ணீருடனும் பெரும் செலவிலும் எழுப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன,” என அப்துல்-பஹா குறிப்பிட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முக்கியமான முயற்சியை மேற்கொள்வதில் பஹாய் உலகம் ‘அப்துல்-பா’வின் உதாரணத்திலிருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1454/

Read Full Post »


__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


பஹாய் உலகமையம் – உலக நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான திரு ஃபர்ஸாம் அர்பாப், 25 செப்டம்பர் 2020’இல் ஐக்கிய அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் காலமானார். அவருக்கு 78 வயது.

திரு ஃபர்ஸாம் அர்பாப்

உலக நீதிமன்றம் பின்வரும் செய்தியை எல்லா தேசிய ஆன்மீக சபைகளுக்கும் அனுப்பியுள்ளது.

*  *  *

சோகவயப்பட்ட இதயங்களுடன் எங்கள் முன்னாள் சகா, எங்கள் அன்புக்குரிய சகோதரர் ஃபர்ஸாம் அர்பாப் திடீரென காலமான துக்கத்தில் நாங்கள் ஆழ்ந்துள்ளோம். இந்த செய்தி எங்களுக்குப் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூர்மையான சிந்தனை, அன்பான இதயம், துடிப்புமிகு ஆவி ஆகியவை பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டை நோக்கி எப்போதுமே திரும்பியிருந்தும், முழு மக்கள் தொகையினரிடையே கல்விச் செயல்முறையின் மூலம், ஆன்மீக மற்றும் அறிவுசார் திறனை வளர்க்க முடியும் என்பது குறித்து அதிலிருந்து நுண்ணறிவுகள் பெறவும் முற்பட்டிருந்தன. இரான் நாட்டில் பிறந்த இவர், ஐக்கிய அமெரிக்காவில் பயின்று, கொலம்பியா நாட்டில் ஒரு முன்னோடியாக இருந்தார். அவருக்கு இருந்த சிறந்த ஆற்றல்கள், பௌதீக அறிவியலில் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கைக்கு அவருக்கு பொருத்தமானவையாக இருந்தபோதும், இறைவன் திருவிருப்பம் வேறு விதமாக இருந்தது. மாறாக, அவரது கடுமையான அறிவியல் பயிற்சி, சமயத்தின் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆன்மீக மற்றும் சமூக தன்மைமாற்றம், மனிதகுலம் சமயத்திற்குள் பிரவேசித்தல் இரண்டையும் எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றிய பஹாய் திருவாக்குகளில் உள்ள உண்மைகள் தொடர்ச்சியான முயற்சியின் மூலமே அவற்றை அடைய முடியும் எனக் கோருகின்றன என்பதை அவர் உணர்ந்தார்; இம்மாமுனைவில் அவரது முழு வாழ்க்கையின் அர்ப்பணம் முழுமையானது மற்றும் நிலையானது. கொலம்பியாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினராகவும், ஒரு கண்ட ஆலோசகராகவும், அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினராகவும், இறுதியாக இரண்டு தசாப்தங்களாக உலக நீதிமன்ற உறுப்பினராகவும் இருந்த அவரது காலம் முழுவதும், கடவுளின் குழந்தைகள் அனைவரின் திறனாற்றலில், குறிப்பாக இளைஞர்களின் திறனாற்றலில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அவரது சமய சேவையின் முக்கிய அடையாளமாக இருந்தது.  எப்போதும் நுண்ணறிவுடனும், எப்போதும் விவேகமாகவும், எப்போதும் ஆன்மீக மெய்ம்மையுடன் இணைந்திருக்கும், அசாதாரன பார்வை கொண்ட இந்த மனிதர், அறிவியல் உண்மைக்கும் உண்மையான சமயத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தார்.  

அவரது அருமை மனைவி ஸோனா, அன்பார்ந்த மகன் போல் (Paul), மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கும், எதிர்பாரா இந்த இழப்புக்காக நாங்கள் எங்களின் உளமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கடவுளின் நித்திய இராஜ்யங்களுக்குள் தனது பயணத்தை ஆரம்பிக்கும் இந்த ஒளிபெற்ற ஆன்மாவின் மேம்பாட்டிற்காக நாங்கள் புனித நினைவாலயங்களில் பிரார்த்திப்போம். அவ்வான்மா அதன் தெய்வீக இல்லத்திற்குள் அன்புடன் வரவேற்கப்படுமாக. இந்த மிகுந்த அன்புக்கினிய புகழ்வாய்ந்த ஆன்மாவின் மறைவைக் குறிக்க, சூழ்நிலைகள் அனுமதிக்கும் வகையில் அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள், வழிபாட்டு இல்லங்கள் உட்பட, எல்லா பஹாய் சமூகங்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1453/

Read Full Post »

வியொலெட் ஹாக்கே, 1928–2020


__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


பஹாய் உலக மையம் – அனைத்துலக போதனை மையத்தின் முன்னாள் உறுப்பினரான வியொலிட் ஹாக்கே, செப்டம்பர் 24, 2020 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் காலமானார். அவருக்கு 92 வயது.

உலக நீதிமன்றம் அனைத்து தேசிய ஆன்மீக சபைகளுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியுள்ளது.

வியொலெட் ஹாக்கே

***

மிகவும் நேசிக்கப்பட்ட வியொலெட் ஹக்கே காலமாகியுள்ளார் எனும் செய்தி எங்களைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சமயத்தின் ஆரம்பகால வரலாறு வரை அதன் வேர்கள் செல்லும் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த அவர், பல தசாப்தங்களாக கடவுள் சமயத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். முதலில் தமது சொந்த ஈரான் நாட்டிலும், பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அவர் சேவை செய்துள்ளார். முன்னோடியாக இருக்கும்போது, ​​அல்லது துணை வாரிய உறுப்பினராக இருந்த காலத்தில், அல்லது ஆஸ்திரேலியாவில் ஒரு கண்டத்துவ ஆலோசகராக இருந்தபோதும், குறிப்பாக அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினராக பணியாற்றிய பத்து ஆண்டுகளில், அவரது துணிச்சலான மனப்பான்மையும் போதிப்பதற்கான பிரகாசமான ஆர்வமும் அவர் நண்பர்களை, குறிப்பாக இளைஞர்களை அணிதிரட்டியதற்கு ஆதாரமாக இருந்தன. எப்போதும் ஊக்குவிப்பை வழங்கி வந்தார்; மற்றும், இதயங்களில் பஹாவுல்லாவின் அன்பெனும் சுடரை ஏற்றிவைத்தார். அசாதாரண மீள்ச்சித்திறம், பற்றுறுதி, மற்றும் தவறாத கருணை, பராமரிக்கும் உணர்வு மற்றும் உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றை ஒன்றுகலக்கும் இயல்பை வியொலெட் பெற்றிருந்தார். கடைசிவரை, அவர் கடவுள் சேவைக்கே தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்

அவரது கணவர் ரோடெரிக் மற்றும் அவரது மகள் சூஸன் இருவருக்கும் ​​எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, வயலட்டின் ஒளிரும் ஆத்மாவின் முன்னேற்றத்திற்காகவும், மர்ம உலகின் ஒளிக் கடலில் மூழ்கும்போது புனித வாசலில் எங்கள் பிரார்த்தனைகள் குறித்தும் உறுதியளிக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் போது, அவரது சார்பாக அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1452/

Read Full Post »


பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) ஐ.நா.’வுடன் 75 வருடங்களைக் குறிக்கின்றது, நியாயமான உலகளாவிய முறை ஒன்றை எதிர்ப்பார்க்கின்றது


21 செப்டம்பர் 2020


BIC நியூ யார்க் — ஐநா அதன் 75’வது வருடத்தை அடைந்துள்ள வேளை, பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) அந்த நிகழ்வைக் குறிக்க ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எண்ணிலடங்கா சவால்களுக்கிடையில் ஐ.நா. நிலைத்து வந்தும், உலகளாவிய நிர்வாகம் குறித்த மானிடத்தின் முதல் தீவிர முயற்சியான, League of Nations’இன் 25 வருடகாலத்தை இதுவரை மும்மடங்கு மிஞ்சி உள்ளதும், மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதனை என BIC கூறுகிறது.

ஐநா’வின் 75’வது வருடத்தைக் குறிக்க, பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) “ஒரு பொருத்தமான நிர்வாகம்: மானிடமும் ஒரு நியாயமான உலகளாவிய முறையை நோக்கிய பாதையும்,” எனும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மானிடம் தற்போதைய நமது தீவிர சவால்களை எதிர்கொள்ளவும் வரும் வருடங்களில் மேம்பாட்டுக்கான மகத்தான வாய்ப்புகளை பற்றிக்கொள்ளவும் வேண்டுமானால் உலகளாவிய ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை அந்த அறிக்கை வலியுறுத்துகின்றது.

மனித குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்வது; எல்லார் மீதும் ஓர் உண்மையான அக்கறை, வேறுபாடு இல்லாமல்; நாடுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ளும் திறன், மற்றும் பின்னடைவுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளை கற்றல் செயல்முறையின் தவிர்க்க முடியாத அம்சங்களாக மனப்பூர்வத்துடன் ஏற்றுக்கொள்வது; மற்றும், லௌகீக மேம்பாடு ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான நனவுடனான முயற்சி ஆகியன உட்பட, நீடித்த, உலகளாவிய அமைதியை நோக்கிய ஓர் இயக்கத்திற்குத் தேவையான கூறுகளை அது ஆராய்கிறது.

“கடந்த காலங்களில் மதிப்பிடப்படாத அளவீடுகளில் இன்று ஒத்துழைப்பு சாத்தியமாகின்றது. இது, முன்னேற்றத்திற்கான இணையற்ற வாய்ப்புகளைத் திறக்கிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. “நாடுகளின் சமூகத்தின் முன் உள்ள பணி… சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரத்தின் இயந்திரங்கள் பெருகிய முறையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை நோக்கி செலுத்தப்படுவதை உறுதி செய்வதாகும்.”

BIC, தனது அறிக்கையில், சர்வதேச சமூகம் தன்னை எவ்வாறு சிறப்பாக ஒழுங்கமைக்க முடியும் என்பது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்கத் தொடங்குவதற்கு ஒரு தக்க தருணமாக இதைக் கருதுவதுடன், மேலும் கருத்தில் கொள்ளத் தகுதியான பல முன்முயற்சிகளையும் புதுமைகளையும் அது பரிந்துரைக்கின்றது. எடுத்துக்காட்டாக, கொள்கைகள் எவ்வாறு தலைமுறைகளை பாதிக்கக்கூடும் என்பதற்கான எதிர்கால விவகாரங்கள் குறித்த கருத்துகளை ஸ்தாபனமயமாக்கும் ஓர் உலகப் பேரவை, மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கான ஆயத்தம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, அல்லது கல்வி அல்லது வேலைவாய்ப்புகளுக்கான எதிர்காலம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு கவனம் செலுத்துதல்.

“ஒரு பொருத்தமான நிர்வாகம்: மானிடமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்ற தலைப்பில், இந்த அறிக்கை ஐ.நா. பொதுச் சபையின் 75’வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் வெளியிடப்படுகிறது. இது இன்று ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் அனுப்பப்பட்டது.

உலகளாவிய சுகாதார நெருக்கடி மனிதகுலத்தின் ஒன்றுக்கொன்று சார்ந்தமைப் பற்றி ஆழமான மதிப்புணர்வைத் தூண்டியுள்ள ஒரு நேரத்தில், இந்த ஆண்டுவிழா சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் ஐ.நா.வுக்கு செய்யக்கூடிய சீர்திருத்தங்களின் பங்கு பற்றிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்த விவாதங்களுக்கு BIC அளிக்கும் பல பங்களிப்புகளில் இந்த அறிக்கையும் ஒன்றாகும். அடுத்த மாதம் ஐ.நா. அதிகாரிகளுடனும் தூதர்களுடன் ஓர் இணையதள கூட்டத்தில் அந்த அறிக்கையிலுள்ள ஆழ்ந்த கருப்பொருள்கள் பற்றிய அதன் ஆய்வை BIC தொடரும்.

மூலாதாரம்:https://news.bahai.org/story/1451/

Read Full Post »


சமீபத்திய “பஹாய் உலகம்” கட்டுரைகள் பொருளாதார நீதி, இன ஒற்றுமை, சமூக நிர்மாணிப்பு ஆகியவற்றை ஆராய்கின்றன


17 செப்டம்பர் 2020


பஹாய் உலக மையம்–இன்று, பஹாய் உலகம் இணையத்தளம் மானிடத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் பொருத்தமான கருப்பொருள்கள் மீதான மூன்று புதிய கட்டுரைகளை பிரசுரித்துள்ளது.

“சமூகமும் கூட்டு நடவடிக்கையும்” எனும் கட்டுரை மனிதகுல ஒருமையின் அடித்தலத்தில் அமைந்த ஒரு புதுவித சமூகத்தை நிர்மாணிப்பதற்கான மக்கள் குழுமங்களின் நம்பிக்கையார்ந்த முயற்சிகளை வர்ணிப்பதுடன் அந்த முயற்சிகளுக்கு வழிகாட்டும்  தொலைநோக்கு மற்றும் செயல்முறையை ஆராய்கின்றது.

மானிட நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் பொருத்தமான கருப்பொருள்களில் அமைந்த மூன்று புதிய கட்டுரைகளை பஹாய் உலகம் இணையத்தளம் பிரசுரித்துள்ளது.

இனம் சார்ந்த அநீதி எனும் நீண்டகால கொள்ளைநோயைக் கடந்து செல்வது “இன ஒற்றுமைக்கான இடம்சார் உத்திகள்” என்ற கட்டுரையின் பொருளாகும். இது பஹாய் கல்வித் திட்டங்கள் மற்றும் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் தன்மை மற்றும் அணுகுமுறைகளை ஆராய்வதுடன், அண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களின் சூழலில், மனிதகுல சேவைக்கான திறனை உயர்த்திட முயல்கிறது.

சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களுக்கும் மிகவும் ஏழ்மையான உறுப்பினர்களுக்கும் இடையில் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள் “பொருளாதார நீதி சாத்தியமா?” என்ற கட்டுரையின் பொருளாகும். கட்டுரை உலகின் தற்போதைய பொருளாதார நிலையை ஆராய்வதுடன் நியாயமானதும் மனிதகுலம் அனைவருக்கும் பயனளிக்கூடிய ஒரு பொருளாதார முறைமையை நிர்மானிப்பதற்கான மகத்தான சவாலில் பஹாய் கோட்பாடுகளின் தாக்கங்களை ஆராய்கிறது.

The Bahá’í World website makes available a selection of thoughtful essays and long-form articles on a range of subjects of interest to the wider public, conveying advancements in Bahá’í thought and action and reflecting the Faith’s purpose in the world.

பஹாய் உலகம் இணையத்தளம், பரந்த சமூகத்தினருக்கு ஆர்வத்தைத் தூண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் பயனளிக்கும் பல கருப்பொருள்களிலான நீண்ட கட்டுரைகளையும் வழங்குகிறது. அக்கட்டுரைகள், பஹாய் சிந்தனை மற்றும் செயல் சார்ந்த மேம்பாடுகளை வழங்குவதுடன், உலகில் (பஹாய்) சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.

புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு மின்னஞ்சல் சந்தா உள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1450/

Read Full Post »


பலகலைக்கழக மாணவர்கள் சமுதாய மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்

__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


பஹாய் உலக நிலையம் – உறுதியின்மை மேலோங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், உலகம் எத்திசையில் செல்கிறது, அதில் அவர்களின் நிலை என்ன என்பன போன்ற குறிப்பான பல கேள்விகளை இளைஞர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இத்தகைய கேள்விகளை கடந்துவர உதவுவதற்காக, உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகம் (ISGP) குவிந்த கவன உரையாடல்களில் ஒன்றிணைவதற்கான தளங்களை அவர்களுக்காக உருவாக்கி வருகிறது.

உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகத்தால் ஊக்குவிக்கப்படும் ஒன்றுகூடல்களில் சமுதாய மாற்றம் மற்றும் தொற்றுநோய் குறித்த கேள்விகளை உலகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கெனடா நாட்டின் பங்கேற்பாளர் ஒருவர்: “ஒற்றுமை, நீதி போன்ற, பொருத்தமான ஆன்மீக கருத்தாக்கங்களை அடையாளங் காண்பதன் மூலம், தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பிரதிபலித்தடவும் புதிய முன்னோக்குகளைப் பெறவும் எங்களின் உரையாடல்கள் எங்களுக்கு உதவி வருகின்றன.”

பெரும்பாலும், இணையதளத்தில் நடைபெறும் இந்த ஒன்றுகூடல்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ISGP வழங்கும் ஒரு நான்கு வருட கருத்தரங்கு திட்டத்திற்கு நிரப்பமாக செயல்படுகின்றன.  தற்போது நிலவும் தொற்றுநோய் மற்றும் தற்போது சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சியின் அடிப்படையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட பல கருத்தாக்கங்களை இந்த ஒன்றுகூடல்களில் மறு ஆய்வு செய்கின்றனர்.

“தற்போதைய நிலைமைகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்விற்கு தெளிவை வரவழைத்த கருத்துக்களில் ஒன்று பஹாய் போதனைகளிலிருந்து வருகிறது, இது மனிதகுலம் அதன் கூட்டு முதிர்ச்சியை அடைகிறது, அப்போது அதன் அத்தியாவசிய ஒற்றுமை அங்கீகரிக்கப்படும் மற்றும் புதிய சமூக கட்டமைப்புகள் வடிவம் பெறும்.  முதிர்ச்சியை நோக்கிய இந்த இயக்கம் சிதைவு, ஒருங்கிணைப்பு எனும் இரு செயல்முறைகளையும் உள்ளடக்கியது.  ஆனால் நாம் காண்பதெல்லாம் சிதைவு என்றால், நமக்கு ஒரு துல்லியமான காட்சி கிடைக்காது, மற்றும் ஒரு  நம்பிக்கையற்ற நிலையே எஞ்சியிருக்கும்.  எவ்வளவு நுட்பமானதாயினும், இந்தக் கலந்துரையாடல்களின் மூலம் முன்னேற்றத்தை அடையாளங்காணவும் சமூகத்திற்கு நாம் பங்களிக்கக்கூடிய வழிகளைப் பற்றி சிந்திக்கவும் கற்றுக்கொள்கிறோம், ”என்கிறார் பிரான்சிலிருந்து ஒரு பங்கேற்பாளர்.  

தென் ஆப்பிரிக்க ஒன்றுகூடல் ஒன்றில் பங்கேற்கும் இளைஞர்கள்

அவர்கள் எந்த நாட்டில் வசித்தாலும், சுகாதார நெருக்கடி பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது சகாக்களுக்கும் தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

பிரான்சில் இருந்து ஒரு பங்கேற்பாளர் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு நல்ல குடிமகனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும்,‘ சமூக ஒப்பந்தம் ’பற்றிய கருத்துகளையும் பலர் மறுபரிசீலனை செய்கிறார்கள். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது மட்டும் போதாது. நமது அத்தியாவசிய ஒற்றுமையை உணர்ந்து இதை நனவாக்கும் செயல் மிகவும் மகத்தான ஒன்றைக் குறிக்கிறது.”

“சுகாதார நெருக்கடி நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது, அத்துடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் அனைவரும் செலுத்த வேண்டிய பொறுப்பை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது” என்று ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாணவர் இவ்வாறு கூறுகிறார்: “மனிதகுலத்தின் உயிர்மமான ஒற்றுமை, மனித ஆத்மாவின் மேன்மை, தங்களின் சொந்த உள்ளார்ந்த சாத்தியங்களை மேம்படுத்தவும் தங்களின் சமுதாயத்திற்குப் பங்களிக்கவுமான தனிநபரின் இரு மடங்கு தார்மீக நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கருக்கோள்கள் தேவைப்படுகின்றன.

இத்தகைய கலந்துரையாடல்கள் அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையிலான உறவை பங்கேற்பாளர்கள் மேலும் ஆராய்வதற்கு வழிவகுக்கிறது, குறிப்பாக, வளர்ச்சியுற்று வரும் அறிவு மற்றும் நடைமுறை முறைமைகள், அறிவியலும் சமயமும்  தப்பெண்ணங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற்கும் மனித முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும்.

ISGP கருத்தரங்கில் பிரேஸில் நாட்டு இளைஞர்கள்

பிரேசிலில் இருந்து ஒரு பங்கேற்பாளர் இவ்வாறு கூறுகிறார்:  “வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான குழப்பம் விளைவிக்கும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. உலகை ஆய்வு செய்வதற்கான ஒரு வழிமுறையாக அறிவியலைப் பயன்படுத்தினால், மெய்மையைப் பற்றிய முடிவுகளை எட்டக்கூடிய முறைகள் மற்றும் கருவிகளைப் புரிந்துகொள்வோம்.  தொற்றுநோய்களின் போது இன்னும் மோசமாகிவிட்ட பொருளாதார சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நீதி மற்றும் மனிதகுலத்திற்கிடையிலான இடைத்தொடர்பு போன்ற ஆன்மீகக் கொள்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்ள சமயம் நமக்கு உதவுகிறது.”

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (CAR) வழிநடத்துனர் ஒருவர், எவ்வாறு பங்கேற்பாளர்கள் தங்களின் சமூகங்களுக்கு சுகாதார நெருக்கடி குறித்து நம்பகமான தகவலை வழங்கிட முயல்கின்றனர் என்பதை விவரிக்கின்றார்.

“தொற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் அறிவியல், சமயம் ஆகிய இரண்டாலும் வழிநடத்தப்படும் ஒற்றுமையான நடவடிக்கை தேவை. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தொற்றுநோயைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்வது, புதிய தகவல்களை எடைபோடுவதற்கு ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்வது ஆகியவற்றின் மூலம் குழப்பம், நம்பிக்கையின்மை, தப்பெண்ணம் ஆகிய மக்களின் சிந்தனையைக் குழப்புகின்ற மற்றும் குழப்பத்தை பரப்புகின்ற தவறான தகவல்களை அகற்றுவதன் மூலம் நம் குடும்பங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் உதவ, விஞ்ஞானத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.. அதே சமயம், பஹாய் போதனைகளில் ஆராயப்பட்ட ஆன்மீகக் கருத்துக்களால் நாம் வழிநடத்தப்படுகிறோம், குறிப்பாக ஒட்டுமொத்த மானிடமும் ஒரே உடலாக இருக்கின்றது எனும் புரிதல் மற்றும் ஒரு தேசத்தை பாதிக்கும் எதுவுமே மற்ற தேசத்தையும் பாதிக்கும்.”

ISGP ஒன்றுகூடலில் ஜோர்டான் நாட்டு இளைஞர்கள்

கூட்டங்களில், தற்போதைய சுகாதார நெருக்கடியைப் பற்றி விவாதிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது தேவையான எச்சரிக்கையையும் விவேகத்தையும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். “தொற்றுநோயைப் பற்றிய இணைய உரையாடல்கள் தன்மையில் முற்போக்கானவையாகவும் சமூகத்தின் தன்மைமாற்றத்துடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமானதாகவும் தோன்றுகின்றன” என்று இந்தியாவிலிருந்து ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார். “ஆனால் அவற்றில் சிலவற்றில் ஆழ்ந்த பாகுபாடான அரசியல் அடித்தளங்கள் உள்ளன, அவை விரைவாக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் மிகவும் ஆவேசமான விவாதங்களாக கட்டவிழக்கக்கூடும்.”

இந்தியாவில் இருந்து மற்றொரு பங்கேற்பாளர் கூறுகிறார்; “எங்கள் சமுதாய மெய்ம்மை நிலையை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் ஒரு மொழியை, நம்பிக்கை மற்றும் சாத்தியங்களுடன் ஒன்றிணைத்து, எங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்தும் விதம், தொற்றுநோய்களின் போது இன்னும் முக்கியமாகின்றது.”

இந்த கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் யோசனைகளை பல்கலைக்கழக மாணவர்கள் பிரதிபலிக்கையில், அவர்களும் சக மாணவர்களுடனும் மற்றும் பிறருடனும் பங்கேற்கக் கூடிய தங்களைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான உரையாடல்களை அவர்கள் அடையாளம் காண்கின்றனர். அதாவது சமூகத்தில் சமயத்தின் பங்கு, சிறார்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுசார் மற்றும் தார்மீக கல்வி, இளைஞர்கள், மற்றும் உண்மையான செழிப்பின் லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணங்கள் போன்றவை.

மாறுபட்ட சமூக தளங்களில் பொது சொல்லாடல்களுக்குப் பங்களிப்பதன் மதிப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில், சமூக மட்டத்தில் சமூக மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை பங்கேற்பாளர்கள் பார்க்கிறார்கள்.

“நம்மில் எவரேனும் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பது மிகவும் பலக்கியமான ஒரு விஷயமாகும்” என்று ரஷ்ய பங்கேற்பாளர் ஒருவர் கூறுகிறார். எவ்வாறாயினும், ஓர் அண்டை அல்லது கிராம மட்டத்தில் மற்றும் அவர்களின் தொழில்களுக்குள் ஒன்றாகச் செயல்படும் மக்களின் முயற்சிகள் மூலம் மாற்றத்தை நாம் காணலாம். இந்த மட்டங்களில் சேவை மற்றும் ஒத்துழைப்பு பற்றி நாம் கற்றுக்கொள்ளலாம். ”

“ஒரு சவால் என்னவென்றால், பல நகர அண்டைப்புறங்கள் ஒரு சிறிய நகரத்தின் அளவைப் போலவே பெரியவை. ஆனால் தொற்றுநோய் நம் இடத்தை சுருக்கி, நம் அண்டையர்களை ஒரு புதிய பார்வையோடு பார்க்க வைத்துள்ளது. மாடிகளில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, சிறிய அளவிலான சமூக வாழ்க்கை எப்படி இருக்க முடியும் என்பதையும், வெவ்வேறு அமைப்புகளில் ஒற்றுமை எவ்வாறு நிர்மாணிக்கப்பட முடியும் என்பதையும் பற்றி நமக்கு ஒரு நுண்காட்சியை அளித்துள்ளது.”

கெனடா, மற்றும் உலகம் முழுவதும், இளைஞர்கள் தங்களி ISGP கருத்தரங்கு உபகரணங்களை தொடர்ந்து கற்பதற்கு தொடரான ஒன்றுகூடல்கள் நிகழ்கின்றன.

இந்த கலந்துரையாடல்கள் பங்கேற்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றன; சமுதாயத்தின் சிதைவு சக்திகளின் மனச்சோர்வை ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்க்கவும், மனிதகுலத்தை ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கித் தூண்டும் ஒருங்கிணைப்பு சக்திகளுடன் அவர்கள் எவ்வாறு தங்கள் முயற்சிகளை இணைவாக்க முடியும் என்பதைப் பார்க்கவும் அக்கலந்துரையாடல்கள் உதவுகின்றன.

இந்த உரையாடல்களில் ஈடுபட்டுள்ள பலரின் உணர்வுகளை எதிரொலிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார்: “இது ‘இயல்புநிலை’ என்று அழைக்கப்படும் ஒரு காலத்திற்குத் திரும்புவதற்காக காத்திருந்து, நேரத்தை நழுவவிடுவதற்கான ஒரு தருணம் அல்ல. “இந்த காலகட்டத்தில் ஆக்கபூர்வமாக பங்களிக்க விரும்பினால் நிறையவே செய்ய வேண்டியிருக்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1449/

Read Full Post »


“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு”: இணைய ABS மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்

__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


டல்லாஸ், ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில், வட அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து, இவ்வருடம் மெய்நிகராக ஏற்பாடு செய்யப்பட்ட பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் (ABS) வருட மாநாட்டில் 3,000’ற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனர்.

ஆரம்பத்தில் டெக்சஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, பொது சுகாதார நெருக்கடியின் விளைவாக முற்றிலும் மறு வடிவமைக்கப்பட வேண்டியதாயிற்று. பொதுவாக மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும் அந்த நிகழ்ச்சி, இரண்டு வாரங்களுக்கு நடைபெற்றது.

“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு” என்பது இவ்வருட கருப்பொருளாகும். வழங்கல்களும் கலந்துரையாடல்களும் உலகிற்கான தொற்றுநோயின் தாக்கங்கள், அறிவியல் மற்றும் புறநிலை உண்மைகள், சமுதாய தன்மைமாற்றத்தில் ஊடகத்தின் பங்கு போன்றவை உட்பட, பஹாய் போதனைகளின் அடிப்படையில் வெவ்வேறு பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தின.

“இணையதள மாநாட்டுக்கான நிலைமாற்றமானது, பங்கேற்பாளர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறோம் எனும் உணர்வைப் பெறவும், உபகரணங்களையும் அமர்வுகளையும் அடைவதற்கான கருவிகளைப் பெற்றிருப்பதையும், அவர்களின் பங்கேற்பு தேவைப்படுகிறது மற்றும் மதிக்கப்படுகின்றது என்பதை உறுதிசெய்திடவும் சங்கம் அதன் அணுகுமுறையை மறுசிந்தனை செய்திடத் தூண்டியது,” என சங்க நிர்வாகக் குழு செயலாளரான ஜூலியா பெர்ஜர் கூறுகிறார்.

“திறனாய்வை அடுத்து ஆக்கபூர்வ ஈடுபாடு” என்பது இவ்வருட கருப்பொருளாகும். வழங்கல்களும் கலந்துரையாடல்களும் உலகிற்கான தொற்றுநோயின் தாக்கங்கள், அறிவியல் மற்றும் புறநிலை உண்மைகள், சமுதாய தன்மைமாற்றத்தில் ஊடகத்தின் பங்கு போன்றவை உட்பட, பஹாய் போதனைகளின் அடிப்படையில் வெவ்வேறு பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தின.

இவ்வருடம் மெய்நிகராக ஏற்பாடு செய்யப்பட்ட பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் (ABS) வருட மாநாட்டிற்கு வட அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து 3,000’ற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனர்.

சமுதாயமானது பல்வேறு இண பின்னணிகளைக் கொண்ட அதன் உறுப்பினர்களிடையே நல்லிணக்கமும் நீதியும் நிறைந்த உறவுகளின்பால் எவ்வாறு மேம்பாடு காணலாம் என்பது குறித்த கேள்வி கலந்துரையாடல்களின் முன்னணியில் இருந்தது. மனிதகுல ஒருமை குறித்த கோட்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்கான, ஆக்ககர செயல்பாட்டின் அடித்தலத்தில் வீற்றிருக்கும் அஸ்திவார கருத்தாக்கங்களை மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர்

பெரும்பாலும் போட்டி, எதிர்ப்பு, பிரிவினை, உயர்ந்தமை எனும் முறையில் கண்ணுறப்படும், ஆதிக்கம் செலுத்துதலுக்கான ஒரு வழியாக அதிகாரம் குறித்த தற்போது பரவலாக நிலவும் கருக்கோள்கள் எவ்வாறு இன நீதி குறித்த சொல்லாடலை வடிவமைக்க முடியும் மற்றும் இத்தகைய கருக்கோள்கள் அதிகாரம் குறித்த புதிய கருத்துகளின்படி எவ்வாறு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது ஆய்விற்கான ஒரு பகுதியாக இருந்தது.

மாநாட்டில் கிளாரிமோன்ட் மெக்கென்னா கல்லூரியின் பேராசிரியரான டெரிக் ஸ்மித் வழங்கிய ஒரு விளக்கக்காட்சி, அமெரிக்க பஹாய் சமூகத்தின், குறிப்பாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், நாட்டில் இன சமத்துவத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பங்களித்த அனுபவத்தின் மீது கவனம் செலுத்தியது. டாக்டர் ஸ்மித் கூறுகிறார்: “இனவாதத்தால் மோசமாக சிதைந்த ஒரு அமெரிக்க சூழலில் இன ஒற்றுமையை வளர்ப்பதற்கான அவர்களின் முயற்சியில், கருப்பின பஹாய்கள் ஒற்றுமை, அன்பு, சேவை ஆகிய மனித ஆன்மாவின் சக்திகளை ஈர்ப்பதன் மூலம் போட்டிமுறைகளையும் முரண்பாடுகளையும் தவிர்த்து வருகின்றனர். இவை நுட்பமான சக்திகள், ஆனால் அவை ஆழமாக தன்மைமாற்றம் செய்யக்கூடியவை. ‘கட்டவிழ்த்தல்,’ ‘ஊக்குவித்தல்,’ ‘வாய்காலிடுதல்,’ ‘வழிகாட்டுதல்,’ மற்றும் ‘உதவிடுதல்’ போன்ற சொற்களுடன் தொடர்புடைய இந்த வகையான சக்தியை விவரிக்கவும் பேசவும் உதவும் முன்னோக்குகளையும் மொழியையும் பஹாய் போதனைகளில் காண்கிறோம்.”

சென்ற வருடம் எடுக்கப்பட்ட படம். சங்கத்தின் நோக்கம், மக்கள் பஹாய் போதனைகளை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட துறைகளில் மானிடத்தின் முன்னோக்குகளுடன் அவற்றைத் தொடர்புறச் செய்து, மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அவற்றைப் பயன்படுத்த முயலுதல் ஆகியவையே.

மக்கள் பஹாய் போதனைகளை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட துறைகளில் மானிடத்தின் முன்னோக்குகளுடன் அவற்றைத் தொடர்புறச் செய்து, மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அவற்றைப் பயன்படுத்த முயலுதல் ஆகியவையே சங்கத்தின் நோக்கம்.

இந்த ஆண்டு சூழ்நிலைகளுக்கு  ஏதுவாக, மாநாட்டிற்கு முந்தைய வாரங்களில் ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையில் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தொடர்புடைய இலக்கியங்களுடன் ஈடுபடவும் ஒன்றாக ஆலோசிக்கவும். 20’க்கும் மேற்பட்ட “வாசிப்புக் குழுக்கள்” உருவாக்கப்பட்டன. இந்த விவாதங்களின் மூலம் பெறப்பட்ட நுண்ணறிவுகள் மாநாட்டு நிகழ்ச்சி மற்றும் வழங்கல்களுடன் பிணைக்கப்பட்டன.

“கற்றலின் ஒரு முக்கிய கூறு, புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு சூழலில் வெவ்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதாகும்” என்று சங்கத்தின் கூட்டு முயற்சிகளுக்கான குழுவின் செல்வி அடைக்கலம் கூறுகிறார். “வாசிப்புக் குழுக்கள் போன்ற நீடித்த முன்முயற்சிகள் வெவ்வேறு ஒழுக்கங்கள் மற்றும் தொழில்முறை துறைகளில் சில அடிப்படை அனுமானங்களை அடையாளம் காணவும் மறுபரிசீலனை செய்யவும் தேவையான ஆழமான, கடுமையான மற்றும் தொடர்ச்சியான விவாதத்தை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.”

இவ்வருட ABS மாநாட்டின் மற்றோர் சிறப்பம்சமாக, ஒரு திரைப்பட விழாவாகும். அதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் சமகால கருப்பொருள்கள் மீதான பஹாய் முன்னோக்குகளை ஆராயும் படைப்புகளை வழங்கினர்.

இவ்வருட ABS மாநாட்டின் மற்றோர் சிறப்பம்சமாக, ஒரு திரைப்பட விழாவாகும். அதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் சமகால கருப்பொருள்கள் மீதான பஹாய் முன்னோக்குகளை ஆராயும் படைப்புகளை வழங்கினர்.

“திருவிழா அமைப்பாளர்களில் ஒருவரான அமெலியா டைசன் கூறுகிறார்:  திரைப்பட தயாரிப்பாளர்களையும் பிறரையும் சமுதாயத்தில் ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் பங்கு, எடுத்துரைக்கப்படும் கதைகளின் தாக்கங்கள்,  மனித இயல்பு பற்றியும் இவ்வுலகில் நமது ஸ்தானம் ஆகியன பற்றி அவை கூறுகின்றவை குறித்து விமர்சன ரீதியாக சிந்திக்க வைப்பதற்கு முழு விழாவும் ஒழுங்கமைப்பது எங்கள் அணுகுமுறையாக இருந்தது.”

சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டு அமர்வுகளின் பதிவுகள் ABS இணையப் பக்கம் வழி விரைவில் கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1448/

Read Full Post »


தொற்றுநோய் காலத்தில் சமூகத்திற்கான தனித்துவமான பங்கை சுகாதார வல்லுநர்கள் காண்கின்றனர்

__________________________________________________________________________________________________________________

26 ஜனவரி 2021


ஜுபர்ட்டன், தென் ஆப்பிரிக்கா – மருத்துவர்கள், தாதியாளர்கள், மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் கொரோனா தொற்றிலிருந்து உலகம் முழுவதுமுள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அயராமல் உழைத்து வருகின்றனர். இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் ஒரு வலுவான சமூகத்தின் பங்கு குறித்த சில நடைமுறையான உதாரணங்களை எடுத்துக்காட்டுவதற்கு, பஹாய் உலக செய்தி சேவை இத்துறையில் பணிபுரிந்து வரும் சில பஹாய்களிடம் தொடர்புகொண்டது.

சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள பஹாய்கள், தொற்றுநோயைக் கையாள்வதில் வலுவான சமூக உறவுகள், ஆன்மீக நல்வாழ்வு மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் பங்கைப் பற்றிய தங்கள் அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில், சுகாதார நெருக்கடியிலிருந்து எழும் பல்வேறு தேவைகளுக்கான விடையிறுப்புக்கு சமூகத்தின் வலிமையைப் பெறுவதற்காக ஜூபெர்ட்டன் நகரில் அவர் இயக்கும் ஒரு கிளினிக்கின் சமீபத்திய முயற்சிகளை சினா பரஸ்தரன் விவரிக்கிறார். “அவர்களுடைய சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கான ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது என்பது உணரப்படும்போது புதிய சாத்தியங்கள் வெளிப்படுகின்றன.”

கொரொனா தொற்றிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளோரின் உதவியுடன், பிறருடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய மக்களின் இணையதள வலையமைப்பு ஒன்றை பரஸ்தரனும் அவரது சக ஊழியர்களும் உருவாக்கியுள்ளனர்.  இந்த வலையமைப்பு தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் லேசான கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கவும், அவர்களின் மருத்துவம் சாரா கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உதவுகிறது.

தென்னாப்பிரிக்காவின் சொவெட்டோவில் உள்ள ஓர் இளைஞர் குழு, வெளிப்புற வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்கிறது, அதே நேரத்தில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. நாட்டில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் பஹாய்கள் சுகாதார நெருக்கடியிலிருந்து எழும் பல்வேறு தேவைகளுக்கு விடையிறுத்திட சமூகத்தின் பலத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்தியாவின் இந்தூரில் உள்ள மூத்த மருத்துவ அதிகாரியான பிரகாஷ் கௌஷல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். “நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஓர் ஆதரவான சூழலை உருவாக்குவதில் ஒரு சமூகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இது ஒன்றாகப் பிரார்த்திப்பதன் மூலமாகவும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலமாகவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு சில உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் இருக்கலாம். குடும்பத்தினருக்கும் நோயாளிக்கும் சமூகத்திலிருந்து அன்பு தேவைப்படும் நேரம் இது. இது அவர்களின் ஊக்கத்தை உயர்த்தி, அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளால் அவர்களைச் சூழ்ந்து கொள்வதன் மூலம் அமைதி, நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நோயை எதிர்கொள்ள உதவுகிறது.”

தொற்றுநோய் ஆரம்பத்தில், அமெரிக்காவின் கேன்சஸ் நகரத்தின் ஐக்கிய அமெரிக்க மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரான நாசிம் அஹ்மதியே, கோரொனா நச்சுயிரி அதிகரித்து வரும் நிகழ்வுகளைக் கொண்ட அண்டைப்புறவாசிகளுக்கு உதவும் பொருட்டு பல ஆண்டுகால சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் மூலம் பேணப்பட்ட நெருக்கமான நட்புகள், எவ்வாறு வாய்க்காலிடப்படலாம் என்பதை உணர்ந்துள்ளார்.

டாக்டர் அஹ்மதியேவும் மற்றவர்களும் முக்கிய தேவையாக உள்ள ஒன்றைப் பூர்த்தி செய்வதற்காக வள ஆதாரங்களை விரைவாக திரட்டினர்–இந்த அண்டைப்புறத்தில் பொதுவாக பேசப்படும் மொழியில் கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை மொழிபெயர்ப்பது மற்றும் பரப்புதல். மிக அண்மையில், இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி — அதே நேரத்தில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு — இந்த அண்டைப்புறத்தில் வசிப்பவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வழிவகுத்தனர்.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில், உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, உள்ளூர் வளங்களைத் திரட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் கலந்துரையாடல் தளங்களின் ஒரு வரிசைக்கு வழிவகுத்தன — அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளை — இந்த அண்டைப்புறத்தில் வசிப்பவர்கள் சமூக உறுப்பினர்களுக்கான முககவசங்களின் உற்பத்தி உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கவும் முடிந்துள்ளது..

இந்த சுகாதார வல்லுநர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் அவர்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் மன சோர்வையும் பார்க்காமல், ஆன்மீக மெய்மையின் நனவுநிலை எவ்வாறு ஆற்றல் மற்றும் வலிமையின் பரந்த களஞ்சியத்தின் பயனைத் பெற அனுமதிக்கிறது என்பதை விவரிக்கின்றனர். பிரிட்டோரியாவில் ஒரு நோய்வெடிப்பை நிர்வகிக்க வேண்டிய ஒரு தென்னாப்பிரிக்க மருத்துவமனையின் மயக்கமருந்து நிபுணரான கோகோமொட்சோ மாபிலேன், பிரார்த்திப்பதற்கும் பஹாய் போதனைகளில் காணப்படும் ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி பிரதிபலிப்பதற்கும் மற்றவர்களுடன் சேர்ந்துகொள்வது அவருக்கும் அவரது சகாக்களுக்கும் இதுபோன்ற கடினமான நேரங்களை நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் கடப்பதற்கு உதவியுள்ளது என்று விளக்குகிறார்.

“கோவிட்-19 பற்றிய விஷயம் என்னவென்றால், அது மக்களை தனிமைப்படுத்துகிறது” என்று டாக்டர் மாபிலேன் கூறுகிறார். “ஒரு சமூகத்தின் அங்கமாக இருப்பதும் மற்றவர்களிடமிருந்து ஆதரவு பெறுவதும் அவசியம். நண்பர்களுடன் நான் கொள்ளும் இணையதள வழிபாடுகள் துக்க காலங்களில் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை மாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கும், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியையும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் காணும் பிற வழிகளுக்கும் என் மனதைத் திறக்கின்றது. மறு நாள், மேலும் அதிகமான நோயாளிகளுக்கு சேவையாற்றுவதற்காக இவ்வாறுதான் இல்லம் திரும்பிச் சென்று மீண்டும் முழுமையடைகிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1447/

Read Full Post »