Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆன்மா’ Category


(தற்காலிக மொழிபெயர்ப்பு)

திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு குறித்து ஒரு பஹாய் அன்பருக்கு அப்துல்-பஹா வழங்கிய அறிவுரை
22 டிசம்பர் 1918
ஹைஃபா

…நீர் …திரும்பிச் செல்லவிருக்கின்றதனால், நீர் (திருமணத்தில் ஈடுபட்டு) ஒரு மனைவியை அடைவது பற்றி சிந்திக்க வேண்டும். உமது அறிவாற்றல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வீராக. அவள் விவேகம், அறிவுக்கூர்மை, பூரணத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஓர் சின்னமாக இருத்தல் வேண்டும். அவள் உமது வாழ்வு குறித்த பிரச்சினைகள் அனைத்திலும் அக்கறை கொண்டவளாக இருக்கவேண்டும்; உமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உமது தோழியாகவும் துணைவியாகவும் இருக்க வேண்டும். அவள் இரக்கம், கனிவான உள்ளம், மற்றும் மகிழ்ச்சி மிக்கவளாகவும், குணத்தில் களிப்பு மிகுந்தவளாகவும் இருக்க வேண்டும். பிறகு, நீர் அவளுடைய மகிழ்ச்சிக்காக உம்மை அர்ப்பணித்து, அவளை ஒரு பேரொளிமிக்க ஆன்மீக அன்பைக் கொண்டு அன்பு செலுத்திட வேண்டும்.

happycouple

ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்குமுன், அப்பெண் தனது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உற்ற தோழியாக இருப்பாளாவென தெளிவாகவும் தீவிரமாகவும் சிந்திக்க வேண்டும். இது ஒரு தற்காலிக விஷயமல்ல. அவள், (ஒரு கணவன்) தனது வாழ்நாள் முழுவதும் சேர்ந்துவாழ வேண்டிய ஓர் ஆன்மா; அவள் அவனது துணைவியாகவும் அவனது அந்தரங்கமான நம்பிக்கைக்குறியவளாகவும் இருப்பாள்; ஆதலால், நாளுக்கு நாள் அவர்களின் அன்பும் அவர்களுக்கிடையிலான பிணைப்பும் அதிகரித்திட வேண்டும்.

ஒரு கணவனையும் மனைவியையும் இணைக்கின்ற அதிபெரும் பந்தம் நம்பிக்கையும் விசுவாசமுமாகும். இருவரும் அவர்களுக்கிடையில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசத்தையும் கடைப்பிடித்து, அவர்களுக்கிடையில் பொறாமையின் எந்த சுவடும் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில், இது விஷம் போல் அன்பின் அடித்தலத்தையே பாழாக்கிவிடும்.

கணவனும் மனைவியும், தங்களின் அறிவு, திறன்கள், செல்வங்கள், பட்டங்கள், உடல்கள், ஆன்மாக்கள் அனைத்தையும் முதலில் பஹாவுல்லாவுக்கும், பிறகு ஒருவருக்கு ஒருவரும் அர்ப்பணித்துக்கொள்ளவும் வேண்டும். அவர்களின் எண்ணங்கள் மேன்மையாகவும், இலட்சியங்கள் பிரகாசமாகவும், உள்ளங்கள் ஆன்மீகமாகுவம், ஆன்மாக்கள் மெய்ம்மைச் சூரியனின் கதிர்கள் உதயமாகும் இடங்களாக இருக்க வேண்டும். மாறுதல்மிக்க இவ்வாழ்வின் நிலையற்ற மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் காரண்தினால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் கொள்ளக்கூடாது. அவர்களின் உள்ளங்கள் விசாலமாக, இப்பிரபஞ்சத்தைப் போன்று விசாலமாக இருக்க வேண்டும்; ஏனெனில், மக்கள் சுிறு துளியைக் கூட பெருவெள்ளமாக ஆக்கிடக்கூடியவர்கள். மேலும், ஏதோ ஒரு சூழ்நிலை இருவருக்கிடையிலும் அதிருப்தியை தோற்றுவிக்குமானால், அதை அவர்களின் உள்ளங்களில் வைத்திருக்கக்கூடாது, மாறாக, அதன் உண்மையான இயல்பை ஒருவருக்கு ஒருவர் விளக்கிக்கொண்டு, முடிந்த விரைவில் அதை அகற்றிடவும் முயல வேண்டும். அவர்கள், போறாமை, பாசாங்குத்தனத்திற்குப் பதிலாக, தோழமையையும், நட்புறவையும் விரும்ப வேண்டும்; அவர்கள் இரண்டு தூய கண்ணாடிகளைப் போன்று அன்பும், அழகுமுடைய விண்மீன்களின் ஒளியை ஒருவருக்கு ஒருவர் பிரதிபலித்திட வேண்டும்.

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உங்களின் மேன்மையான மற்றும் தெய்வீகமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் எந்த இரகசியங்களும் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். உங்கள் இல்லத்தை ஓய்வுக்கும், அமைதிக்குமான அடைக்கலமாக்குங்கள். விருந்தோம்பிகளாக இருந்து, நண்பர்களுக்கும் அந்நியர்களும் உங்கள் இல்லத்தின் கதவுகள் திறந்திருக்குமாறு செய்ய வேண்டும். எல்லாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று, அவர்கள் என் (அப்துல்-பஹாவின்) இல்லத்தில் இருப்பது போன்று உணரவேண்டும்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் கடவுள் உறுவாக்கியுள்ள ஐக்கியம் மற்றும் நல்லிணக்கமானது, இவ்வுலகில் ஐக்கியத்திற்கு அவற்றை விட மேலான ஒரு தளம் கிடையாது. உங்கள் ஐக்கியமெனும் விருட்சத்திற்கு அன்பு, வாஞ்சை எனும் நீரைக் கொண்டு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சிட வேண்டும்; அதனால், அவ்விருட்சம் எல்லா காலங்களிலும் பச்சையாகவும், பசுமையாகவும் இருந்து, நாடுகளின் நிவாரணத்திற்கு இனிய கனிகளை ஈன்றிடும்.

சுருங்கக் கூறின், உங்கள் இல்லம் அப்ஹா சுவர்க்கத்தின் ஒரு பிம்பமாகுமளவு நீங்கள் இருவரும் அத்தகையதொரு வாழ்க்கை வாழ்திட வேண்டும்; அதனால் அங்கு விரவேசிக்கும் எவரும் தூய்மை மற்றும் சுத்தத்தின் சாரத்தை அங்கு உணர்ந்து: “இதுவே அன்பெனும் இல்லம், இதுவே அன்பெனும் மாளிகை, இதுவே அன்பெனும் கூடு, இதுவே அன்பெனும் பூங்கா,” என தம்மையறியாமல் கூவிடுவார்களாக. நீங்கள் இருவரும், அன்பு மற்றும் மகிழ்ச்சி எனும் பாடல்களால் சுற்றுப்புறத்தை நிறப்பிடும், இனிய கீதமிசைக்கும் இரண்டு பறவைகள் போன்று, வாழ்க்கை எனும் மரத்தின் அதி உயர்ந்த கிளைகளின்  மீதமர்ந்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்த அளவு, உங்களின் ஆன்மீக உயிருருவின் மையத்தில், உங்கள் விழிப்புணர்வின் நடு மையத்தில், உங்கள் அன்பின் அடித்தலத்தை அமைத்திட முயல வேண்டும். அந்த அன்பின் அடித்தலம் சிறிதளவு கூட அசைந்திடுவதை அனுமதியாதீர்கள்.

பிறகு கடவுள் உங்களுக்கு அழகிய குழந்தைச் செல்வங்களை அருளும் போது, அவர்கள் தெய்வீக ரோஜாவனத்தின் அமரபுஷ்பங்களாக, இலட்சிய சுவர்க்கத்தின் இராப்பாடிகளாகவும், மானிட உலகின் ஊழியர்களாகவும், ஜீவவிருட்சத்தின் கனகளாகவும் ஆகிட, அவர்களின் கல்வியிலும் பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்.

Card with wedding rings and two doves

நீங்கள் வாழ்ந்திடும் விதத்தினால், பிறர் உங்களை உதாரனமாக எடுத்துக்கொண்டு:  “அன்புடனும், வயப்பட்டும், நல்லிணக்கத்துடனும் ஒரே கூட்டில் வாழும் இரண்டு வெண்புறாக்களைப் போன்று அவர்கள் வாழ்வதைப் பாருங்கள். ஒருவருக்கொருவர் மீதான அன்புக்காகவே ஆதியிலிருந்து இவர்களின் உயிருருக்களின் சாராம்சத்தை கடவுள் உருவாக்கியுள்ளார் என்றே தோன்றுகிறது,” என அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலை நிலவிடும் போதும், இத்தகைய இலட்சியங்கள் மேலோங்கிடும் போதும், நீங்கள் நித்திய வாழ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொண்டுள்ளீர், மெய்ம்மை  எனும் நீரூற்றிலிருந்து ஆழப்பருகியுள்ளீர், பேரொளி எனும் சுவர்க்கத்தில் தெய்வீக மர்மங்கள் எனும் அமரபுஷ்பங்களை சேகரித்திட உங்கள் வாழ்நாள்களை அர்ப்பணித்துள்ளீர்.

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சுவர்க்கத்தின் காதலர்களாகவும், தெய்வீக அன்பர்களாகவும் இருந்திடுக.
உங்கள் வாழ்க்கையை அன்பெனும் சுவர்க்கத்தில் கழித்திடுக.
அன்பெனும் விருட்சத்தில் இலைகள் நிறைந்த கிளைகளின் மீது உங்கள் கூட்டைக் கட்டுக.
அன்பெனும் தெளிவான விண்வெளியில் உயரப் பறந்திடுக.
அன்பெனும் கரைகளில்லா கடலில் நீந்திடுக.
அன்பெனும் நிந்திய ரோஜாவனத்தில் நடந்திடுக.
அன்பெனும் சூரியனின் பிரகாசித்திடும் கதிர்களினூடே இயங்கிடுக.
அன்பெனும் பாதையில் நிலையாகவும் பற்றுறுதியோடும் இருந்திடுக.
அன்பெனும் மலர்களின் இனிய நறுமணத்தினால் உங்கள் நாசிகளை சுகந்தமாக்கிக்கொள்க.
அன்பெனும் இராகங்களினால் ஆன்மாவை பரவசமாக்கிக்கொள்க.
அன்பெனும் மதுரசத்தினால் போதைகொண்டிடுக.
அன்பெனும் அமுதத்தை ஆழப்பருகிடுக.
உங்கள் இலட்சியங்கள் அன்பெனும் பூச்சென்டாகவும், உங்கள் உரையாடல்கள் அன்பெனும் சமுத்திரத்தின் வெண்முத்துகளாகவும் இருந்திடட்டுமாக.

(அப்துல்-பஹா, ஓர் உரையிலிருந்து, டிசம்பர் 22, 1918, ஹைஃபா; Star of the West, vol. 11, no. 1, மார்ச் 21, 1920)

Advertisements

Read Full Post »


19-ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவ சமயத்தினரிடையே மட்டுமல்லாது, இஸ்லாமியரிடையிலும் கூட 1844-ஆம் ஆண்டில் இயேசுநாதர் அவதரிக்கவிருக்கின்றார் எனும் நம்பிக்கை பரவலாக நிலவியிருந்தது. முக்கியமாக, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த (1782-1849) வில்லியம் மில்லர் என்பவர் கி.பி.1844-இல் இயேசுநாதரின் மறுவருகை கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக நம்பினார். அவரைப் பின்பற்றியோர் பன்மடங்கானவர். அதே போன்று மத்திய கிழக்கிலும் ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) இயேசு நாதர் மறுபடியும் தோன்றுவார் என சுன்னப் பிரிவினரிடையிலும், 12-வது இமாமாகிய இமாம் மஹதி உலகில் தோன்றப்போகின்றார் எனும் நம்பிக்கை ஷியா வர்க்கத்தினரிடையிலும் நிலவியது. ஆனால், அவரவர் புனித வேதங்களில் இந்த 1844-ஆம் ஆண்டு ஸ்பஷ்டமாக கூறப்படவில்லை. மறைமுகமான வார்த்தைகளிலேயே கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பழைய ஏற்பாடு தானியேலின் நூலில், புனிதஸ்தலம் எப்பொழுது பரிசுத்தமாகும் என்பது குறித்து, அது 2300 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் எனும் தீர்க்கதரிசனம் உள்ளது. இங்கு ‘நாள்’ எனக் குறிப்பிடப்படுவது, விவிலிய திருநூலின்படி ஒரு நாள் என்பது ஒரு வருடமாகும். ஆகவே புனிதஸ்தலம் 2300 வருடங்களுக்குப் பிறகு புனிதப்படுத்தப்படும் என்பது அர்த்தமாகும். ஆனால், இந்த 2300 வருடங்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பதைப் பார்க்கையி்ல், அது கி.மு.457-இல் ஆரம்பித்தது. அதாவது புனிதஸ்தலத்தை மறுசீரமைக்கும்படி அர்டிஷேர் விடுத்த மூன்றாவது ஆணையிலிருந்து ஆரம்பித்தது. கி.மு. 457-லிவிருந்து கி.பி. 1844 வரை சரியாக 2300 வருடங்கள் உள்ளன. இதையெல்லாம் மேலும் ஆழமாக விவரிப்பதற்கு இங்கு இடமோ நேரமோ போதாது. சுருங்கக் கூறின் கி.பி.1844 எல்லா சமயங்களுக்கும் ஒரு முக்கியமான, தீர்க்கதரிசனங்களுக்கு உட்பட்ட ஓர் ஆண்டாகும். இதன் அடிப்படையில், இந்து சமயத்தில் இந்த 1844-ஆம் ஆண்டு ஏதாவது ஒரு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்போம்.

worship1

உலகளாவிய எதிர்ப்பார்ப்பு

கிருஷ்னரின் வின்னேற்றத்திற்கும், கலியுகத்தின் ஆரம்பத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. அதாவது, புராணங்களின் கூற்றுப்படி, கிருஷ்னர் உலக வாழ்வை நீத்த பிறகே கலியுகம் பிறந்தது. கலியுகத்தின் ஆரம்பம் சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின் போது ஆரம்பித்ததாக சில வானசாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர். உண்மையில் இந்து சமய புனிதநாள்கள் எல்லாமே கிரக சேர்க்கைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு கலியுகம் எப்போது முடிவுறும் என்பதை, மகாபாரதத்தை எழுதிய பராசர முனிவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

யதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி|
ஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்||
சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.
ஸ்ரீ விஷ்ணுபுரானம்(4-24-102)

அதே போன்று, கலியுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதைப் பார்க்கும் போது, அது சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின்படி கி.மு.3104-இல் ஆரம்பித்ததென வானசாஸ்திர மற்றும் கணித வல்லுனரான K.D. அபியங்கர் கூறுகின்றார்.

According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)

பொதுவாக கலியுகம் கி.மு.3102-இல் கிருஷ்னரின் மறைவோடு ஆரம்பித்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும், இது இன்னமும் சர்ச்சைக்குறிய ஒரு விஷயமாகவே இருக்கின்றத. கிருஷ்னரின் மறைவுக்குப் பிறகு என்பது 3104-ஆகவும் இருக்கலாம் அல்லவா. ஒரு வல்லுனர் எனும் முறையில் அபியங்கரின் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டு வேறு சில அடிப்படையான விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.

கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதில் இதுவரையிலும் சுமார் 5000 வருடங்களே கழிந்துள்ளன என கூறப்படுகின்றது. இந்த 4,32,000 ஆண்டுகளுக்குப் பிறகே கிருஷ்னர் கல்கி அவதாரமாக தோற்றமளிப்பார் என நம்பப்படுகின்றது. உண்மையில், இன்று உலகைப் பார்க்கையில், கிருஷ்னர் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு தோன்றுவதனால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றே படுகின்றது; உலகம் அத்தகைய மோசமான, விஷ்ணு புராணத்தில் கூறுப்பட்டுள்ள மோசமான, நிலையில் இன்று இருக்கின்றது. இந்த 4,32,000 வருடங்கள் எங்கிருந்த வந்தன மற்றும் கலியுகத்திற்கு 4000 வருடங்களே என்பதற்கான விளக்கத்தை இதே வலைப்பதிவின் <https://goo.gl/VJkFA8&gt; -இல் காண்க.)

கலியுகத்திற்கு 4800 வருடங்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டோமானால், இந்த 1844-ஆம் ஆண்டு இதில் எங்கு வருகின்றது?

புனித வேதங்களிலும், புராணங்களிலும் வருடங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள் வெளிப்படையான மொழிகளில் கூறப்படவில்லை. அந்தந்த காலத்தின் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது, அக்கால மக்கள் அறிந்திராத சில வருங்கால நிகழ்வுகளின் அடிப்படையில் அக்காலத்து ம்ககளுக்கு சில விவரங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, கலியுகத்தின் முடிவில் கிருஷ்னர் கல்கியாக அவதரிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. சரி, கலியுகம் எப்பொழுது முடிவுற்றது என்பதைப் பார்ப்போம்?

கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பதை ஏற்றுக் கொண்டோமானால், இந்த 4800 வருடங்கள் கி.மு. 3104 கி.பி. 1696-லேயே முடிவுற்றிருக்கவேண்டும். ஆனால், 1844-ஆம் வருடம் இதில் எங்கும் வரவில்லை. இதை எப்படி விளக்குவது?

சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு தற்போது வழக்கிலிருக்கும் 365.242 நாள்களைக்கொண்ட சூர்வ வருடங்களோடு 354.367 நாள்களைக் கொண்ட சந்திர வருடமும் வழக்கில் இருந்தது, இன்றும் பிரபலமாகவுள்ள விக்கிரம ஆண்டின் வருடப்பிறப்பு, சில மாற்றங்களுடன் இந்த சந்திர வருடத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. (அதே போன்று கிருஷ்ன சம்வத்சரமும் சந்திர வருடத்தையே பின்பற்றி வருகின்றது.) சந்திர வருடத்தை சூரிய வருடத்திற்கு இணையாக்குவதற்காக, சந்திர வருடம் சூரிய வருடத்தைவிட பத்து நாள்கள் குறைவானது என்பதன் காரணமாக சந்திர நாள்காட்டிக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, 30 நாள்கள் கொண்ட ஒரு மாதம் சேர்க்கப்படுகின்றது.

ஏற்கனவே கூறியுள்ளபடி, தீர்க்கதரிசனங்கள் உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாத, மறைமுகமான மொழிகளிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி கி.மு. 1844-ஆம் ஆண்டையும் பராசர முனிவர் இந்த கலியுக வருடங்களில் எங்கோ மறைத்து வைத்திருக்கின்றாரோ என்னவோ. குடைந்து பார்ப்போமே.

images-2

விடிவெள்ளி

கி.மு. 3104 பிப்ரவரி 7-ம் தேதியிலிருந்து கி.பி.1844, பிப்ரவரி 7-ஆம் தேதி வரை சரியாக 4947 வருடங்கள் உள்ளன. பஹாய் சமயம் ஆரம்பித்த 23 மே 1844 வரை 0.29 வருடங்களை இதில் சேர்த்துக் கொள்வோம். மூன்று சந்திர வருடங்களுக்கு ஒரு முறை வரும் தன்னிச்சையாக மனிதர்களால் இடைச் செருகப்படும் 30 நாள்கள் கொண்ட அந்த ஒரு மாதத்தை விட்டுவிட்டு இந்த 4947.29 வருடங்களை முழு சந்திர வருடங்களாகக் கொண்டு அவற்றை வழக்கில் தற்போது இருக்கும் சூரிய வருடங்களாக ஓர் எண்ணிக்கை முறையில் மாற்றிப் பார்ப்போம்:

சந்திர வருடத்திற்குச் சரியாக 354.367 நாள்கள் உள்ளன.
சூரிய வருடத்திற்குச் சரியாக 365.242 நாள்கள் உள்ளன

4947.29 வருடங்களை சந்திர வருடங்களாகக் கொண்டு அதை சூரிய வருடங்களாக மாற்றுவோமானால் அது பின்வருமாறு இருக்கும்:

4947.29 x 354.367)/365.242=4799.986 அல்லது 4800 சூர்ய வருடங்கள்.

அல்லது மாற்று கணிப்பு (reverse calculation) செய்து கலி யுகம் எப்போது ஆரம்பித்தது என பார்ப்போம். அதாவது 1844-லிருந்து பின்னோக்கி 4800 சூர்ய வருடங்களை சந்திர வருடங்களாக மாற்றுவோம். அதாவது: [(4800 x 365.242) / 354.367] – 1843.4 = 3103.905 அல்லது கிமு 3104 ஆகின்றது.

பஹாய் சமயம் கி.பி.1844-இல் மே மாதம் 23-ஆம் தேதி தோற்றம் கண்டது. பாப் அல்லது ‘திருவாசல்’ என்பார் எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே எனவும், தனக்குப் பின் தோன்றவிருக்கும் மற்றொரு அவதாரத்திற்கு (பஹாவுல்லா) தாம் ஒரு முன்னோடி எனவும் அறிவித்தார். (bahai.org)

அதாவது, கி.பி. 1844-உடன் கலியுகம் மறைந்து சத்திய யுகம் ஆரம்பித்துவிட்டது. கல்கி விஷ்ணு யாஷா அவதரித்து விட்டார். பாரசீக சொல்லான பஹாவுல்லா எனும் திருநாமத்தை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்போமானால் அது ‘விஷ்ணு யாஷா’ என்றே வரும், அதாவது ‘கடவுளின் பேரொளி’ அல்லது ‘கடவுளின் ஜோதி’

lotus_temple

புது டில்லியிலுள்ள ‘Lotus Temple’ எனப்படும் கமலாலயம்

பஹாய் சமயத்தைப் பற்றியும், இன்று உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் மனிதகுலத்திற்காக ஆற்றி வரும் சேவைகள் குறித்தும் அறிந்துகொள்ள பின்வரும் இணையதளத்தை நாடவும்:

http://www.bahai.org

Read Full Post »


கிருஷ்னர் யார் எனும் கேள்விக்குப் பலவிதமான பதில்கள் கிடைக்கும். பஹாய்களைப் பொறுத்த வரை அவர் கடவுளின் ஓர் அவதாரம். ஆபிரஹாம், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது, பாப், பஹாவுல்லா ஆகியோரின் வரிசையில், ஆரம்பத்தில் வந்தோர்களுள் அவரும் ஒருவர். அவர் கடவுளுள் அல்ல, அதே சமயம் சாதாரன மனிதரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் உன்னத நிலையில் உள்ளவர். அவர் காலத்தில், அவரை அறிந்தவர்கள் கடவுளை அறிந்தவர்கள், அவரை எதிர்த்தோர் கடவுளையே எதிர்த்தோர்.

————————————————————————–

வாட்ஸ்ஆப்பில் நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தது. அவருக்கு நன்றி.

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
———————————————
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், “உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்

Krishna_Arjuna_Gita

என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

“பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?”என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: “கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.’
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் – துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ‘;துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். “உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்”
என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.

“துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,’ நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ‘ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி…ஹரி…அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

“அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?”
என்றார் உத்தவர்.

“கேள்” என்றான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! “அவனின்றி ஓர்
அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

அதுதான் பகவானின் மேன்மை

Read Full Post »


குழந்தைகளின் மனதில் கடவுள் பயத்தை ஏற்படுத்து வேண்டும் என பஹாய் புனிதவாசகங்கள் கூறுகின்றன:

ஆதாலால், ஒரு தோட்டக்காரன் தனது இளஞ் செடிகளைப் பேணுவது போன்று, தாய்மார்களும் தங்களின் சிறார்களைப் பராமரித்திட வேண்டும். அவர்கள் இரவு பகலாக, தங்களின் பிள்ளைகளுள் நம்பிக்கையுறுதி, மெய்யுறுதி ஆகியவற்றையும், கடவுள் பயத்தையும், உலகங்களின் அன்பரின் மீதான அன்பையும், எல்லா நல்லியல்புகளையும், பண்புகளையும் நிறுவிட முயல வேண்டும்.  (அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் உரைப்பகுதிகளின் தேர்வுகள், பக். 125)

கடவுள் பயம் என்பது, தவறு செய்தால் கடவுள் தண்டித்து விடுவார் என்பதல்ல. மாறாக, தவறு செய்தால் கடவுளின் அன்பை இழந்துவிடுவோம் எனும் பயமே இங்கு வலியுறுத்தப்படுகின்றது. அதே போன்று, குழந்தைகளுக்கு பெற்றோர்களின் மீதும் அதே விதமான, தவறு செய்தால் பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோம் எனும் பயம் இருக்கவேண்டும். அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பது பழமொழி, ஆனாலும் இது திரிந்து வந்துள்ள, தவறான அர்த்தம் வழங்கப்பட்ட ஒரு பழமொழியாகும்.

ஒரு குழந்தையை அடிப்பதோ, தரக்குறைவாகத் திட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை, எனெனில் அடி மற்றும் தகாத வார்த்தைகளுக்கு ஒரு குழந்தை  உட்படுத்தப்பட்டால், அதன் நடத்தை முற்றாக நெறிபிறழ்வுக்கு ஆளாகிடும். (அப்துல்-பஹா, திரட்டுகளின் திரட்டு, தொகுப்பு 1, பக். 289-290)

இதே கருப்பொருளில் பின்வரும் கட்டுரையைப் பார்ப்போம்:

ஏன் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று தெரியுமா?

By: Aruna Saravanan Updated: Friday, November 27, 2015, 18:32 [IST]

http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-punishments-for-kids-don-t-work-009869-009869-009870.html

தண்டனைகள் குழந்தைகளை திருத்துமா? குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த கேள்வி வந்திருக்கும். பிள்ளைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்து அவர்களை கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றொர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தண்டனை. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பேச்சை கேட்காத பிள்ளையை திருத்துகின்றேன் பேர்வழி என்று அதிக தண்டனைகள் வழங்கினால் உங்கள் பேச்சை இன்று வேண்டுமானால் கேட்பார்கள். ஆனால் பிற்காலத்தில் உங்களைப் பற்றிய தப்பான கருத்தும், தண்டனையின் வலியும் வடுவாக அவர்கள் இதயத்தில் பதிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

கடவுளை வேண்டி பெற்றெடுக்கும் பிள்ளையை வளர்க்கும் போது மட்டும் பொறுமை எங்கே போய் விடுகின்றது என்று தான் தெரியவில்லை. இன்று மரம் செடி கொடிகளுக்கெல்லாம் உயிர் இருக்கின்றது என்று பேசும் நாம் நம் உயிரை கொடுத்து பெற்ற குழந்தைகளை வளர்க்க தெரியாமல் தவிக்கின்றோம். இதை செய்யாதே அதை செய்யாதே என்று கூறி எதற்கு எடுத்தாலும் தண்டனை வழங்கி சித்திரவதை செய்கின்றோம். இதில் கவலை என்னவென்றால் நாம் செய்வது தவறு என்று கூட தெரியாமல் இதை செய்வதுதான்.

ஆகையால் தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு அறிவுரைகளால் திருத்துவதையும், வளர்ப்பதையும் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும். சரியாக சிந்திக்க தெரியாத பெற்றோர்கள் அமைதியாகவும், அன்புடனும், மிகுந்த பொறுமையுடனும் கண்டிக்கப்பட வேண்டிய பிள்ளைகளை அடக்கு முறையில் தண்டனை கொடுத்து தீய வழியில் அவர்கள் செல்ல தூண்டுகின்றார்கள்.

ஏன் தண்டனைகள் சரிபட்டு வராது என்று பார்ப்போம் குழந்தைகளுக்குத் தண்டனை வேண்டாம் ஏன் தெரியுமா? தண்டனைகள் கசப்புணர்வை வளர்க்கும்.  குழந்தையை அடித்து பல வித தண்டனைகள் வழங்கினால் உங்கள் குழந்தைகள் உங்களை முன்புபோல் நேசிப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? கண்டிப்பாக இல்லை. உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். பின் என் குழந்தை என் மீது அன்பாகவே இல்லை என்றால் பயன் இல்லை. அன்பை கொடுத்துதான் அன்பை பெற வேண்டும். கொஞ்சம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுங்கள் போதும் புரிந்து கொள்வார்கள். தண்டனை குழந்தைகளுக்குப் பெற்றோர்களை எதிர்க்க சொல்லி தரும்.

சில குழந்தைகள் தண்டனைகளை ஆரம்ப காலத்தில் பொறுத்து கொள்வார்கள். ஆனால் போக போக அதுவே வெறுப்பாக மாறி பெற்றோர்களை எதிர்க்கும் அளவிற்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் அவர்களால் வீட்டிற்கு மட்டுமில்லை நாட்டிற்கும் தொல்லையே. சமுதாயத்தில் ஆபத்தான காரியங்களை செய்ய அவர்கள் முனைந்து விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் பெற்றோர்களே.

தண்டனை பயத்தை அதிகரிக்கும்.  தண்டனைகளைத் தாங்கி வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பயந்த சுபாவம் அடைவார்கள் என்று ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. இதனால் எப்பொழுதும் பயத்துடனே காணப்படும் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். இதனால் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தண்டனை தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும்.  தாழ்வு மனப்பான்மை கொண்ட பல குழந்தைகள் சிறு வயதில் அதிக தண்டனைகளை அனுபவித்தவர்கள். குழந்தைகள் செய்யும் சிறிய தவறுக்கு பெரிய அளவில் தண்டனை கொடுக்கும் பெற்றோர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். மேலும் வாழ்வில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கூட தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

ஆகவே, அன்பை கொண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டும். அடக்கு முறை கொண்டால் நீங்கள் பெற போவது, யானை தன் தலையில் தானே மண்ணை வார்த்தது போல் தான் ஆகும். என்ன புரிந்ததா?

தண்டனைகள் பயன்தருவதில்லை: ஆங்கிலத்தில்

மேலும் படிக்க: http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-punishments-for-kids-don-t-work-009869-009869-009870.html

Read Full Post »


புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன்

http://www.perfectz.net/2014/10/the-man-who-spit-in-buddhas-face.html

புத்தர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதன் அங்கே வந்து புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தான்.

buddha

புத்தர் அதைத் துடைத்துவிட்டு, “அடுத்தது என்ன” என்று அம்மனிதனைக் கேட்டார். அந்த மனிதன் குழப்பமடைந்தான். ஒருவர் முகத்தில் எச்சிலைத் துப்பினால், “அடுத்து என்ன (செய்யப்போகின்றாய்)” என அம்மனிதர் கேட்பார் என அம்மனிதன் எதிர்ப்பார்க்கவே இல்லை. இம்மாதிரி ஓர் அனுபவத்தை அம்மனிதன் பெற்றதில்லை. அவன் பலரை இவ்வாறு அவமதித்துள்ளான், அவர்களும் ஆத்திரம் அடைந்து, எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். அல்லது, கோழைகளாகவோ, பலவீனமானவர்களாகவோ இருந்தவர்கள், புன்னகைத்தும், அம்மனிதனைக்கு ஏதாவது கையூட்டல் வழங்கி அவரைச் சாந்தப்படுத்திடவும் முயலுவர். ஆனால், புத்தரோ அவ்விருவரைப் போன்றும் இல்லாது, ஆத்திரமடையவோ, புண்படவோ, கோழைத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. ஆனால், சர்வ சாதாரணமாக “அடுத்து என்ன” என்று கேட்கின்றார். அவரிடமிருந்து எவ்வித எதிர்ச்செயலும் இல்லை.

ஆனால், புத்தரின் சீடர்கள் ஆத்திரமடைந்தனர். புத்தரின் நெருங்கிய சீடரான ஆனந்தர், “இது அத்துமீறிய செயல். இதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இம்மனிதன் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையெனில், எல்லாருமே இவ்விதமாக நடந்துகொள்வர்!” என்றார்

அதற்கு புத்தர், “நீர் சற்று பேசாமல் இரும். இம்மனிதன் என்னைப் புண்படுத்தவில்லை. அவன் புதியவன், அந்நியன். அவன் மக்களிடமிருந்து என்னைப் பற்றி ஏதாவது செவிமடுத்திருக்க வேண்டும், அல்லது இம்மனிதன் ஒரு நாஸ்திகனாகவோ, மக்களை அவர்களின் பாதையிலிருந்து வழிதவறச்செய்யவோ, ஒரு புரட்சியாளனாகவோ, குழப்பவாதியாகவோ இருக்கலாம். அவன் என்னப் பற்றிய ஒரு கருத்தையோ ஓர் எண்ணத்தையோ உருவாக்கிக்கொண்டிருக்கலாம். அவன் என் முகத்தில் எச்சிலை உமிழவில்லை, அவன் என்னப் பற்றி கொண்டிருந்த தன் கருத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். ஏனெனில், அவனுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை, ஆகவே அவன் என் முகத்தின் மீது எவ்வாறு எச்சிலை உமிழ்ந்திருக்க முடியும்.

“இதைப் பற்றி நீர் ஆழச் சித்திப்பீரானால், அம்மனிதன் தன் உள்ளத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை, மற்றும் இந்த மனிதன் கூறுவதற்கு வேறு ஏதாவது இருக்கக்கூடும், ஏனெனில் ஒன்றைக் கூறுவதற்கு இது ஒரு வழியாகும். எச்சிலை உமிழ்வதும் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பற்கான ஒரு வழியாகும். ஆழ்ந்த அன்பு, கடுங்கோபம், வெறுப்பு, பிரார்த்தனை ஆகியவற்றின்றபோது மொழி செயலற்றதாகிவிடும். அவ்வேளை எதையாவது செயலில் செய்தாக வேண்டும். கோபப்படும்போது, கடுங்கோபத்துடன் இருக்கும் போது, ஒருவரை அடித்துவிடுகின்றோம், அவர் மீது எச்சிலை உமிழ்கின்றோம், அதன் மூலமாக ஒரு விஷயத்தைத் தெரிவிக்கின்றோம். அவனை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவன் ஏதோ ஒன்றைச் சொல்ல விரும்புகின்றான், அதனால்தான் “அடுத்து என்ன” என்று வினவுகின்றேன்.

அந்த மனிதன் மேலும் குழப்பமடைந்தான்! புத்தர் தமது சீடரான ஆனந்தரிடம், “நான் உம்மால்தான் புண்ப்பட்டுள்ளேன், ஏனெனில் உமக்கு என்னைத் தெரியும், நீர் என்னோடு பல வருடங்கள் வாழ்ந்துள்ளீர், இருந்தும் நீர் ஏன் கோபம்கொள்கின்றீர்,” எனக் கூறினார்.

புரியாமலும், குழப்பத்துடனும் அம்மனிதன் இல்லம் திரும்பினான். அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஒரு புத்தரை ஒரு முறை பார்த்தவுடன், முன்பு தூங்கியது போன்று தூங்கவே முடியாது, சிரமமாகிவிடும். அம்மனிதனுக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தினால் அவன் மீண்டும் மீண்டும் அவஸ்தைக்குள்ளானான். என்ன நடந்தது என அவனால் தனக்குத் தானே விளக்கம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவன் உடல் முழுவதும் நடுங்கியது, வியர்வை அவன் போர்வையை நனைத்தது. அத்தகைய ஒரு மனிதனை அவன் தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை; அவன் மனதை, அவன் (வாழ்க்கை)மாதிரியை, அவன் கடந்தகாலம் முழுவதையும் புத்தர் முற்றாகச் சிதைத்துவிட்டிருந்தார்,

அடுத்த நாள் அம்மனிதன் மீண்டும் புத்தரிடம் சென்றான். புத்தரின் கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்தான். “அடுத்து என்ன?” என புத்தர் மீண்டும் கேட்டார். “வார்த்தைகளால் சொல்ல முடியாததைச் சொல்வதற்கு இதுவும் ஒரு வழியாகும். நீர் வந்து என் பாதங்களைத் தொட்டபொழுது, சாதாரணமாகச் சொல்ல முடியாத ஒன்றை நீர் என்னிடம் சொல்கின்றீர்; அதற்கு வார்த்தைகள் போதாதவை; அது வார்த்தைகளுக்குள் அடங்காது.” “ஆனந்தா, இம்மனிதன் இங்கு மீண்டும் வந்துள்ளான், அவன் ஏதோ ஒன்றச் சொல்கின்றான். இம்மனிதன் ஆழ்ந்த உணர்வுகள் உடையவன்,” என்றார்.

அம்மனிதன் புத்தரைப் பார்த்து, “நான் நேற்று நடந்துகொண்ட விதத்திற்கு என்னை மன்னியுங்கள்,” என்றான்.

“மன்னிப்பா?” என்றார் புத்தர். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே அம்மனிதன் நானில்லை. கங்கையின் நீர் வழிந்து கொண்டே இருக்கின்றது. அகவே, அது அதே கங்கையல்ல. ஒவ்வொரு மனிதனும் ஓர் ஆறைப் போன்றவன். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே மனிதன் இன்று இங்கு இல்லை. நான் உருவத்தில்தான் அம்மனிதனைப் போன்று இருக்கின்றேன், ஆனால் நான் அதே மனிதனல்ல; இந்த இருபத்து நான்கு மணிகளில் நிறையவே நடந்துள்ளது! ஆறு நிறையவே வழிந்தோடியுள்ளது. ஆகவே, நான் உன்னை மன்னிக்க முடியாது ஏனெனில், உன்மேல் எனக்கு எந்த மனவறுத்தமும் கிடையாது.

“நீயும் ஒரு புதிய மனிதன். நேற்று இங்கு வந்த மனிதன் நீரல்ல; அந்த மனிதன் ஆத்திரத்துடன் இருந்தான், எச்சிலை உமிழ்ந்தான், ஆனால் நீரோ என் கால்களில் விழுந்து வணங்குகின்றீர், என் கால்களைத் தொடுகின்றீர். ஆகவே, நீர் அதே மனிதனாக எவ்வாறு இருக்க முடியும்? நீர் அதே மனிதனல்ல, ஆகவே அந்த நிகழ்ச்சியை நாம் மறந்துவிடுவோம்.அந்த இரண்டு மனிதர்களும், எச்சிலை உமிழ்ந்தவரும், உமிழப்பட்டவரும் இனி கிடையாது. நெருங்கி வா. நாம் வேறு எதைப் பற்றியாவது பேசுவோம்.

Read Full Post »


மரணத்திற்குப் பின் வாழ்வு உள்ளதா?

ஆக்கம்: ஸ்டீவன் பான்கார்ஸல்

வரலாற்றுக் காலம் முதல் மறுமைவாழ்வு என்பது எண்ணிலடங்கா மக்களின் அனுபவமாக இருந்தும், அவர்கள் அவ்வாறு மரணமுற்றப்பின் மீண்டும் இம்மைக்குத் திரும்பி தங்களின் கதைகளைக் கூறியும் உள்ளனர். அவ்வாறான அனுபவங்களுள், 25 வருட கால அனுபவம் பெற்ற ஹார்வார்ட் பயிற்சி பெற்ற நரம்பியல் மருத்துவரான டாக். எபன் அலெக்ஸான்டரின் அனுபவம் மிகவும்  குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. இது வெறும் சித்தபிரமை என ஒதுக்கித்தள்ளப்பட முடியாத ஓர் அனுபவமாக இருக்கின்றது. எவ்வாறு அவரது மறுமைவாழ்வு சகலவித ஆறிவியல் விளக்கங்களுக்கும் எதிர்மாறாக உள்ளது என்பதைக் காண்பதற்கு முன், அவரது அனுபவத்தைச் சற்று ஆராய்வோம்.

தமது அனுபவத்திற்கு முன்பாக, பௌதீகமல்லாத (வஸ்துவல்லாத) ஓர் ஆவி உள்ளது என்பதை அவர் நம்பவில்லை. மேற்கத்திய மருத்துவப் பள்ளிகளில் பயின்றும், பிரபஞ்சம் குறித்த லௌகீகவாதத்தில் ஆழ்ந்திருந்த சக மருத்துவர்களால் சூழப்பட்டுமிருந்த அவர், ஆன்மா குறித்த ஒரு கருத்து நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றென எண்ணினார். பெரும்பாலான “சந்தேகவாதிகள்” போன்று மறுமை வாழ்வு குறித்த கதைகளைச் சித்தபிரமைகள் அல்லது மனித கற்பனையில் உதித்தவதை எனவும் நம்பினார்.

கிருமிகளால் தோற்றுவிக்கப்பட்ட கடுமையான மூளைக் காய்ச்சலால் ஏழு நாள்கள் நினைவற்ற நிலையில் கிடந்த பிறகு அவர் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். மறுமைவாழ்வு எனத் தெரிந்த ஒன்றினூடே அவர் ஓர் ஓளியார்ந்த பயணத்தை அனுபவித்தார். அவ்வேளை, தெய்வீகமானவையும் தெய்வீகமற்றவையுமான உலகங்களினூடே அவர் பயணித்தார்.

தமது உடலுக்குத் திரும்பி, எதிர்ப்பார்புகளுக்கு மாறாக வியக்கத்தக்க வகையில் நோயிலிருந்து குணமாகி, “சுவர்க்கத்தின் சான்று” எனும் நியூ யார்க் டைம்ஸின் #1 சிறந்த விற்பனை நூலை எழுதினார். டாக். அலெக்ஸான்டர், இம்மை வாழ்வென்பது நமது ஆன்மா பரிணமித்து வளர்ச்சியுறுவதற்கு உதவிடும் ஒரு சோதனை மட்டுமே என்பதை உறுதிப்படுத்துகின்றார். அன்பினாலும் கருணையினாலும் செயல்படுவதன் மூலமாகவே நாம் அதில் வெற்றி காண முடியும். அவர் மேலும் குறிப்பிடும் சில விஷயங்கள் பின்வருமாறு.

மறுமை வாழ்வு குறித்த அனுபவம் அத்தகைய “மெய்ம்மை” பொருந்தியதாகவும் விரிவானதாகவும் இருந்ததானது, இவ்வுலகில் ஒரு மனிதனாக வாழ்ந்திடும் அனுபவமானது, ஒப்பீட்டல் ஒரு செயற்கையான கனவு போன்று இருந்தது.

மறுமை உலகின் இழையமைப்பு தூய அன்பாகும். மறுமையில் அன்பின் ஆதிக்கம் அத்தகைய மகத்தானதாக இருந்ததானது, அங்கு தீமையின் பொதுவான பிரசன்னம் நுண்ணிய அளவே ஆகும். பிரபஞ்சத்தை அறியவேண்டுமானால், அன்பை அறிய வேண்டும்.

மறுமையுலகில் தொடர்புகள் அனைத்தும் தொலையுணர்வு (டெலிபதி) மூலமாகவே நடைபெறுகின்றன. வார்த்தைகள் அங்கு தேவைப்படாது அல்லது ஒருவரின் தன்னகத்திற்கும் அவரைச் சுற்றி நடப்பவற்றிற்கும் இடையில் பிரிவு என்பது கிடையாது. மனதில் தோன்றும் கேள்விகள் யாவும் டெலிபதி மூலமாகவே பதிலளிக்கப்படும்.

ஆன்மீக உலகு குறித்த பிறர் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார் என வினவப்பட்டபோது, நீங்கள் விலைமதிப்பற்றவர், நீங்கள் கற்பனையே செய்திட முடியாத அளவிற்கு எல்லையற்ற அன்பு செலுத்தப்படுகின்றீர்கள். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள், தனியாக விடப்படுவதில்லை. கடவுளின் நிபந்தனையற்ற, முழுநிறைவான அன்பு எந்த ஆன்மாவையுமே புறக்கணிப்பதில்லை.

சந்தேகமின்றி அன்பே அனைத்திற்கும் அடித்தலமாகும். அது ஓர் அருவமான, ஆழங்காண முடியாத அன்பல்ல. ஆனால், அது தினசரி எல்லாரும் அறிந்த, ஒருவர் தமது மனைவியை அல்லது கணவனை, குழந்தையை, அல்லது செல்லப்பிராணியைப் பார்க்கும் போது ஏற்படும் அன்பாகும். அதன் தூய வடிவத்தில், அதிசக்திமிகு தோற்றத்தில், அது பொறாமையோ தன்னலமோ அற்ற, நிபந்தனையற்ற அன்பாகும்.

மெய்ம்மைகளுள் எல்லாம் இதுவே மெய்ம்மையும், இருக்கக்கூடிய, இனி இருக்கப்போகும் அனைத்தின் மையத்திலும் வாழ்ந்தும் சுவாசிக்கவும் செய்யும் அறிந்திடவே முடியாத பேரொளி மிக்க உண்மைகளுளெல்லாம் உண்மையாகும். அதை அறிந்துகொள்ளாத எவருமே, தாம் யார் என்பது குறித்த துல்லியமான புரிந்துகொள்ளலை அடையவே முடியாது, மற்றும் தமது செய்கைகளில் அதை வெளிப்படுத்திடவும் முடியாது.

இப்போது நம்பகத்தன்மை குறித்து சிறிது பேசுவோம். பிறர் அனுபவித்த “மரண வாசல் அனுபவத்திற்கும்” இந்த அனுபவத்திற்கும் என்ன குறிப்பிடத்தகும் வேறுபாடு? கடுமையான மூளைக் காய்ச்சலினால் அவர் நினைவிழந்திருக்கையில், எபன் மூளையின் நவ-புறனிப் பகுதி, முற்றிலும் செயல்பாடு இழந்திருந்தது. ஆகவே, அவர் இந்த அனுபவத்தை அடைந்தார் என்பதற்கான அறிவியல் ரீதியான விவரம் கிடையாது. பொருண்மையாக, அவர் தமது நூலில், மரண வாசல் அனுபவத்திற்கு வழங்கப்படும் நடைமுறையான விளக்கங்களுக்கு தமது அனுபவத்தை ஒட்டி ஒன்பது வெவ்வேறு மறுப்புரைகளை வழங்குகிறார்.

மேற்கொண்டு விவரத்திற்கு: http://www.spiritscienceandmetaphysics.com/harvard-neurosurgeon-confirms-the-afterlife-exists/#sthash.5hx1Qfpo.dpuf

Read Full Post »


லூயிஸா மற்றும் லூயி கிரெகரி

லூயி கிரெகரி, லூயிஸா மேத்யூஸ் தம்பதியினர்

பஹாவுல்லா வெளிப்படுத்திய பஹாய் சமயம் மனிதகுல ஒருமையை மையமாகக் கொண்டது. அதன் தொடர்பில் பஹாய்கள் மனிதர்களை ஒரே குடும்பத்தினர் எனக் கருதுவதால் நிறம், மொழி, சமயம் போன்றவற்றின் அடிப்டையில் மனிதர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவது கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானதாகும் என நம்புகின்றனர்.

ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க ஆணாகிய லூயி கிரெகரி, ஒரு பிரிட்டிஷ் பெண்மணியான லூயிஸா மேத்யூஸ், இருவரும் பஹாய் சமய நம்பிக்கையாளர்களாவர். பஹாய் சமயம் ஒற்றுமையை மையமாகக் கொண்ட ஒரு சமயமாகும். இவர்கள் இருவரும் புனித நிலத்திற்குப் புணித யாத்திரை செல்லும் போது எகிப்து நாட்டில் 1911ல் சந்தித்துக் கொண்டனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் இனவெறி தீவிரமாக இருந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பொது மக்களின் வரவேற்பைப் பெறவில்லை.  “மனிதகுல ஒருமை” என்பது பஹாய் சமயத்தின் மையக் கோட்பாடாக இருந்தபோதிலும், வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வந்த பஹாய் சமயத்தவர்கள் பலர் அப்போது மிகவும் பரவலாக இருந்த இனப் பாகுபாடு குறித்த மனப்பாங்கையே இன்னமும் கொண்டிருந்தனர்.

பஹாய் சமயத்தின் தலைவராக விளங்கிய அப்துல்-பஹா கலப்புத் திருமணத்திற்கு வழங்கிய தீவிர ஆதரவோடு, லூயி, லூயிஸா இருவரும் நியூ யார்க் நகரில் 1912ல் மணந்து கொண்டு அதன் மூலம் முதல் பஹாய் கலப்பினத் தம்பதியராகினர். லூயி கிரெகரி ஐக்கிய அமெரிக்காவிலும் அதே வேளை பஹாய் சமூகத்திலும் இன ஒற்றுமைக்கான மிகவும் தீவிரமான ஆதரவாளரானார். அவரது திருமணமே அவரது சமய நம்பிக்கையின் மிகவும் தனிச்சிறப்பான ஒரு வெளிப்பாடாக விளங்கியது. பன்மடங்கான தடைகளுக்கிடையே, 1951ல் லூயி கிரெகரியின் மரணம் வரை அத்தம்பதியினர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்து இனப்பாகுபாடு குறி்த்த மூட நம்பி்க்கைக்கு எதிரான ஓர் உதாரணமாகத் திகழ்ந்தனர்.

Read Full Post »

Older Posts »