Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உடல்நலம்’ Category


தமது “மருத்துவருக்கான நிருபத்தில்” (https://goo.gl/gyBjMb) பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

 • மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.
 • ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.
 • வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…

இந்த அறிவுரைகளின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் காண்போம்:

AlimentaryCanal01_eவயிற்றுக்கோளாறுகளால் அவதியுறாத மனிதர்கள் கிடையாது என நாம் அறுதியிட்டுக் கூறலாம். எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு நேரத்தில் வயிற்று வலி, நெஞ்செரிவு, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படுகினறனர். இவற்றுக்குக் காரணமென்ன?

எந்நேரத்திலும், வயிற்றிலும் சரி குடல் சார்ந்த உணவுப்பாதையில் பலவிதமான கிருமிகள் வாசம் செய்கின்றன. இவை நல்ல கிருமிகள் எனவும் கெட்டகிருமிகள் எனவும் பிரிக்கப்படுகின்றன. கெட்ட கிருமிகளின் வகையில் e-coli என அழைக்கப்படும் கிருமிகள் உள்ளன. இத்தகைய கிருமிகள் ஒரு குறிப்பி்டட அளவு ஜீரணத்திற்கு அவசியமே. இக்கிருமியும் பல வகைப்படும். வயிற்றில் இவற்றன் அளவு தேவைக்கு மேல் அதிகரித்திடும் போது, வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படலாம். இக்கிருமிகள் குடலில் அதிகரிக்கும் போது அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பிறகு பார்க்கலாம். இந்த இ-கோலி கிருமி, பெரும்பாலும் மலத்தின் (faeces) மூலமாகப் பரவுகின்றது. சில இடங்களில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் வீட்டிலேயே குழிகள் வெட்டப்பட்டு கழிவுநீர் தேக்கப்படுகின்றது. குழி நிறையும் போது கழிவுநீர் அகற்றப்படுகின்றது. அதே வேளை நீர்ப்பாசனம் இ்ல்லாத இடங்களில் கிணறுகள் வெட்டப்படுகின்றன. அத்தகைய கிணறுகள் கழிவுநீர்க் குழிகளிலிருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்திலாவது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத போது இ-கோலி கிருமிகள் கிணற்று நீரில் கலக்கப்படும் ஆபத்து உள்ளது. அத்தகைய நீரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்துவது ஆபத்தானது. சிலருக்கு அது பழகியிருக்கும், ஆனால் பழக்கமில்லதோர் வயிற்றுப்போக்கை எதிர்நோக்க நேரிடும். மிகவும் வினோதமாக, சிறு குடலில் ஏற்படும் கிருமிகளின் அதிகரிப்பு, உடல் பருமனை அதிகரிக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.

நம்மில் பலர் உணவு உண்பதை அவசியமாகவின்றி, அதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசிக்காவிட்டாலும் அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படியே உணவு அருந்தினாலும், வயிற்றில் சிறிதும் இடைவெளியின்றி அருந்துவோரும் இருக்கின்றனர். இதன் விளைவு என்ன? நெஞ்செரிப்பு, வயிற்று உப்பிசம், வாயுப் பிரச்சினை, மலம் மிகவும் மென்மையாக வெளிவருதல், தூக்கமின்மை போன்றவற்றை உடனடி பிரச்சினைகளாகவும், உடல் பருமன் அதிகரித்தல், இருதய நோய் ஆகியவற்றை காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளாகவும் குறிப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணுவதற்குப் பதிலாக பசியெடுக்கும் போதெல்லாம் சிறிதளவு உணவை, ஒரு நாளுக்கு நான்கு அல்லது ஐந்துமுறை உண்ணுவது சிறந்ததாகும்.

சரி, பசியெடுத்து உணவு அருந்துவதனால் என்ன நன்மை? பசியெடுக்கும் போது, வயிறு உணவை ஏற்பதற்குத் தன்னை தயார் செய்து கொள்வது முதன்மையான ஓர் அம்சமாகும். உடல் முழுவதுமே இந்தச் செயல்முறைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கின்றது. வயிற்றில் ஜீரணத்திற்கான திரவங்கள் சுரக்கின்றன. உணவு நன்கு அரைக்கப்பட்டு உமிழ்நீர் கலந்து விழுங்கப்படும் போது ஆகாரம் சீராக ஜீரணிக்கப்படுகின்றது. உமிழ் நீரில் ‘டாயலின்’ (ptyalin) போன்ற என்ஸைம் அல்லது ‘நொதி’ உள்ளது. இது மாவுச் சத்தையும், கொழுப்புச் சத்தையும் கரைத்திட உதவுகின்றது. ஆகவே, உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும்.

இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம் யாதெனில், நன்கு பசியெடுத்துச் சாப்பிடும் போது, தேவைக்கும் அதிகமாக உண்ணும் ஆபத்து உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். முக்கால் வயிறு உணவு உண்ணும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உண்ணும்போது, செரிமானத்திற்கான திரவங்கள் நன்கு உணவில் கலந்து ஜீரணம் சுமுகமாக நடைபெறுகின்றது. உணவு வயிற்றில் புளித்துப் போவது தவிர்க்கப்படுகின்றது, வாயு தொல்லையும் இல்லை.

பலவகை உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்பதும் சரியல்ல. இது ஜீரண சுரப்பிகளை அழுத்தத்திற்குள்ளாக்குகின்றது. ஒரே வித உணவு உண்ணும் போது சுரப்பிகளிலிருந்து பலவித என்ஸைம்கள் சுரப்பது தவிர்க்கப்படுகின்றது. இறைச்சி வகைகளையும் தாவர வகைகளையும் ஒன்றாக உண்பதற்குப் பதிலாக, மாமிசத்தை மாவு அல்லது கார்போஹைடிரேட் வகையோடு அல்லது தாவர உணவை கார்போஹைடிரேட் வகையோடு உண்ணுவது நலம் பயக்கும்.

அடுத்து, உணவு உண்டபின் சுமார் அரை மணிநேரத்திற்கு நீர் அருந்தாமல் இருக்க வேண்டும். இது ஜீரண திரவங்கள் நீர்த்திடுவதைத் தவிர்க்கின்றது. இதன் தொடர்பில், நீர்மமான உணவு வகைகள் முதலில் உட்டொள்ளப்பட்ட பிறகே திண்ம உணவு வகைகள் உட்கொள்ளப்பட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் உணவு உண்பதற்கு முன்பே சாப்பிடுவது நன்று. இது அப்பழங்கள் வயிற்றில் நொதித்திடுவது அல்லது புளித்திடுவதையும் அதன் பயனான வாயு பிரச்சினையை தவிர்க்கின்றது. உறங்கச் சென்ற பின் நீர் அருந்துவதும் நல்லதல்ல. விழித்திருக்கும் போது இல்லாத பல செயல்முறைகள் தூங்கும் போது செயல்பாட்டிலுள்ளன. தூங்கச் சென்றபின் நீர் அருந்துவது இச்செயல்முறைகளைக் கெடுக்கின்றது.

ஆகவே, ஆரோக்கியமான முறையில் உணவை உட்கொண்டு உடல் நலத்தைப் பேணுவோமாக.

(அடுத்த கட்டுரையில் இ-கோலி கிருமிகளை எவ்வாறு அளவோடு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதைப் பார்ப்போம்)
Advertisements

Read Full Post »


நன்றி: http://authoritynutrition.com/9-reasons-to-avoid-sugar/

உணவு மற்றும் பாணங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை நவீன உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்ற ஒரு தனி மோசமான கூட்டுப் பொருளாகும்.

சர்க்கரையைத் தவிர்ப்பதற்கான ஒன்பது தலையாய காரணங்கள்

 1. கலக்கப்படும் சர்க்கரை பெரும் அளவிலான ஃபுருக்டோஸை (fructose) வழங்குகின்றது

சர்க்கரை குலுகோஸ், ஃபுருக்டோஸ் ஆகியவற்றின் சமபங்கினால் ஆனது. குலுக்கோஸ் உடலின் எல்லா உயிரணுக்களாலும் எளிதில் ஜீரனிக்கப்பட்டுவிடும். உண்ணும் உணவில் இது கிடைக்கவில்லையெனில் நமது உடல் அதை புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்திலிருந்து உருவாக்கிக்கொள்ளும்.

ஃபுருக்டோஸ் நமது செயல்பாட்டிற்கு எவ்வைகையிலும் தேவைப்படாத ஒன்றாகும்.

ஃபுருக்டோஸை ஜீரணிக்கக்கூடிய ஒரே உருப்பு நமது ஈரல் மட்டுமே. ஈரலுக்குள் பேரளவு ஃபுருக்டோஸ் சீனி செல்லும்போது – அங்கு ஏற்கனவே கிலைக்கோஜன் நிறைந்துள்ளதால் – பெரும்பாலான ஃபுருக்டோஸ் கொழுப்புச் சத்தமாக மாற்றப்படுகிறது.

பெரும்பாலான மேற்கத்திய நோய்களுக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆனால் இது பழவகைகளை உள்ளடக்கவில்லை, ஏனெனில் பழங்கள் இயற்கயான உணவு மற்றும் அவற்றுள் வைட்டமீன்கள், தாதுப்பொருட்கள், நிறைய நீர் உள்ளன. அவற்றை அளவுக்கு அதிகமாக உண்பதும் முடியாத ஒன்றாகும்.

 1. சர்க்கரையில் வைட்டமீன்களோ தாதுப்பொருட்களோ கிடையாது (வெற்றுக் கலோரிகள் மட்டுமே)

image001

பெரும்பாலான சர்க்கரை நிறைந்த உணவுகளில் ஊட்டச்சத்து மிகவும் குறைவே

 1. சர்க்கரை ஈரலில் கொழுப்புச் சத்துப் படிதலை ஏற்படுத்துகின்றது.

image002

 1. சர்க்கரை உங்கள் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளுக்கு தீங்குவிளைவிக்கிறது

image003
சர்க்கரை உங்கள் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை அதிகமாக்கி, உடல் பருமனை அதிகமாக்குகின்றது.

 1. சர்கரை இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது.

image004
அளவுக்கதிகமாக சர்க்கரையை (அதாவது ஃபுருக்டோஸ்) உண்பது உடல் பருமனையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்துகின்றது. இது ஃபுருக்டோஸ் ஏற்படுத்து இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகின்றது.

 1. சர்க்கரை மேற்கத்திய வியாதிகளுக்கான சூழலை அதிகரிக்கின்றது.

image005

 • உடல் பருமன்
 • நீரிழிவு நோய்
 • இருதய நோய்
 1. சர்க்கரை ஒழுங்கான தெவிட்டலை ஏற்படுத்துவதில்லை.

image006

அளவுக்கதிகமாகச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது (அதாவது ஃபுருக்டோஸ்) மேலும் அதிகமாக உண்ணும் ஆவலையே ஏற்படுத்தும்.

 1. சர்க்கரை ஒருவகை போதைபொருளாகும்.

image007

போதை பொருள்களை உட்கொள்ளும்போது அவை உடலில் டோப்பமைன் (dopamine) எனும் ஒரு வகை இரசாயனப் பொருளை மூளையில் வெளியாக்குகின்றன. இது போதை பொருளை உட்கொள்வோரில் ஓர் இன்ப உணர்வை உருவாக்குகின்ற. சர்க்கரைக்கும் இதே இயல்பு உண்டு மற்றும் இது சர்க்கரை அடிமைத்தனத்திற்கு வழி கோலும்.

 1. சர்க்கை லெப்டின் (Leptin) எனப்படும் ஒரு வகை ஹார்மோன் (hormone) எதிர்ப்பை உண்டாக்குகின்றது.

image008

லெப்டின் ஹார்மோன் உடலிலுள்ள கொழுப்பு உயிரணுக்களால் வெளிப்படுத்தப்படுகின்றது. கொழுப்புச் சத்து அதிகமாகும் போது இந்த ஹார்மோனை கொழுப்பு உயிரணுக்கள் வெளிப்படுத்துகின்றன. அதாவது உணவு உண்டது போதும் நிறுத்த வேண்டுமென மூளைக்கு அறிவிக்கப்படுகின்றது. சர்க்கரையிலுள்ள ஃபுருக்டோஸ் இந்த லெப்டின் ஹார்மோன் எதிர்ப்புக்கு வழிவகுத்து உடலில் கொழுப்புச் சத்தை அதிகமாக்கி உடல் எடையைக் கூட்டுகின்றது.

Read Full Post »


நன்றி: http://interesting-facts.info/2013/05/after-reading-this-youll-never-look-at-a-banana-in-the-same-way-again/

இதைப் படித்தபின் வாழைப்பழத்தை எப்போதும் போலு பார்க்கமாட்டீர்கள்

bannana

வாழைப்பழத்தில் மூன்று இயல்பான சர்க்கரை வகைகள் உள்ளன – சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் குலுக்கோஸ். இவற்றோடு நார் சத்தும் சேர்ந்துள்ளது. இப்பழம் நமது உடலுக்கு உடனடியானதும், சீரானதும், போதுமான அளவிலும் சக்தியளிக்கவல்லது.

விளையாட்டு வீரர்களிடையே இப்பழம் பிரபலமாக இருப்பதற்கு இதுவொரு காரணமாகும். ஒரு பழம் மட்டுமே சுமார் 90 நிமிடத்திற்கான ஆற்றலை வழங்குகிறது.

ஆனால், இப்பழம் சக்தி மட்டுமே வழங்கிடாமல் வேறு வகைகளிலும் நமக்கு உதவி செய்கிறது. பல நோய்களுக்கு நிவாரணியாக இது பயன்படுகிறது.

உளச்சோர்வு:

உளர்சோர்வுக்கு ஆளான பலர் ஒரு வாழைப்பழத்தை உண்டபின் சற்று சோர்வு நீங்கக் கண்டதாகக் கூறியுள்ளனர். வாழைப்பழத்தில் டிரிப்டோபேன் (tryptophan) எனும் ஒரு வகை புரதச் சத்து உள்ளது. இச்சத்தை உடல் செரோடோனின் (serotonin) ஆக மாற்றுகிறது மற்றும் இந்த செரோடொனின் நம்மை மன ஓய்வுறச் செய்தும் (relax) மனநிலையை மேம்படுத்திடவும் செய்தும் பொதுவாக மகிழ்ச்சியை உருவாக்குகின்றது.

மாதவிடாய்:

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அதிலுள்ள B6 வைட்டமின் உடல் குலுகோஸ் அளவைக் கட்டுப்படுத்தி மனநிலையை மேம்படுத்துகிறது.

இரத்த சோகை:

வாழையில் காணப்படும் அதிக  அளவான இரும்புச் சத்து உடலில் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகமாக்கி சோகையைக் குறைக்கின்றது.

இரத்த அழுத்தம்:

வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்து அதிகமாகவும் உப்புச்சத்து குறைவாகவும் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஏதுவாகின்றது. மேலும் இதன் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாத நோய்களுக்கு வாழைப்பழத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மூளை ஆற்றல்:

இப்பழத்தைச் சாப்பிடுவது மாணவர்களை விழிப்புணர்வோடு இருக்கச் செய்து கற்றலை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கல்:

வாழைப்பழத்தில் நார் சத்து அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கலைக் குறைப்பதற்கு உதவுகின்றது.

ஹேங்கோவர் (hangover):

மது அருந்துவோர், சற்று அதிகமாக அருந்திவிட்டால், காலையில் தலைவலியோடு எழுவது இயல்பாகும். வாழைப்பழ milkshake செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், அது வயிற்றைச் சுத்தம் செய்து, உடல் குலுக்கோஸ் அளவை மேம்படுத்துகிறது மேலும் பால் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கின்றது.

நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல்:

வாழைப்பழத்திற்கு இயல்பான அமிலமுரிவு சக்தியுள்ளது, ஆகவே நெஞ்செரிச்சல் காணும்போது ஒரு பழத்தைச் சாப்பிடுவது நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவும்.

காலை வாந்தி (morning sickness):

வாழைப்பழத்தை உண்பது இரத்தத்தின் சீனிச் சத்தை அதிகரித்து புதிதாக கர்ப்பம்தரித்துள்ள பெண்கள் இந்நோயிலிருந்து நிவாரணம் காண வழிவகுக்கின்றது.

கொசுக்கடி:

வாழைபழத் தோலின் உட்புறத்தை கொசு கடித்த இடத்தில் தடவுவது எரிச்சலையும் அரிப்பையும் குறைக்க உதவுகிறது.

நரம்பு உளைச்சல்:

வாழையில் உள்ள வைட்டமின் B சத்து நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்த உதவுகிறது

வயிற்றுப் புண்:

அதன் மென்மைத்தன்மையின் காரணமாக வயிற்றுக் கோளாறுகளுக்கு வாழைப்பழமே உகந்ததாகும். குலைவலியுள்ளோர் பயமின்றி சாப்பிடக்கூடிய ஒரே பழம் வாழைப்பழமாகும். வயிற்றில் அமிலத்தை குறைத்து எரிச்சலைப் போக்குகின்றது.

உடல் உஷ்ணத்தை குறைக்கின்றது:

குறிப்பாக கர்ப்பவதிகள் இப்பழத்தைச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணமும் மன உலைச்சலும் குறைகின்றன. குழந்தைகளும் குறைந்த உஷ்ணத்தோடு பிறக்கவும் இது வழிசெய்வதாக தாய்லாந்து நாட்டினர் நம்புகி்றனர்.

வாழைப்பழத்திற்கு ஆப்பிள் பழத்தைவிட நான்கு மடங்கு புரதச் சத்தைக் கொண்டுள்ளது, இரண்டு மடங்கு மாவுச்சத்து, மூன்று மடங்கு ஃபோஸ்பரஸ் (phosphorus), ஐந்து மடங்கு வைட்டமின் A மற்றும் இரும்புச் சத்து, இரண்டு மடங்கு பிற வைட்டமின்களும் தாதுக்களும். பொட்டாஸிய சத்தும் இதில் அதிகமாக இருக்கின்றது. ஆகவே தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது இன்றியமையாததாகும்.

Read Full Post »


இப்பழம் கீமோ தெராப்பி எனும் இராஸயன சிகிச்சை முறையைவிட 10000 மடங்கு அதிக சக்தியுடன் புற்று நோய் அல்லது புற்று அணுக்களைக் கொல்ல வல்லது.

soursop

ஆங்கிலத்தில் Sour Sop பழம் அல்லது Graviola மரத்தின் பழமான இது ஒரு வகை சீத்தா பழமாகும். இது ஓர் அற்புதமான புற்று நோய் கொல்லியாகும். கீமோ அல்லது இரஸாயன சிகிச்சையைவிட 10,000 மடங்கு அதிக சக்தியுடன் இயங்கவல்லது.

நாம் இது பற்றி ஏன் இன்னமும் அறியாது இருக்கின்றோம்? பல பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளான புற்றுநோய் ஆய்விற்காக செலவளித்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக இப்பழத்தின் முக்கிய அம்சங்களை செயற்கையாக வெளியிட முயன்றுகொண்டிருக்கின்றன, அதனால்தான்.

ஆகவே, இதுபற்றி நீங்கள் இப்போது அறிந்துள்ளதால் உங்களுக்குத் தெரிந்தோருக்கு இப்பழத்தைப் பற்றி அறிவிக்கலாம். நீங்களும் அவ்வப்போது இப்பழத்தை உண்ணவோ அதன் இரசத்தைப் பருகியோ வரலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த இதன் சுவை பருகுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். முற்றிலும் இயற்கையானதால் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. உங்கள் தோட்டத்தில் இப்பழமரத்தை நீங்களும் நட்டுவைக்கலாம்.

இப்பழமரத்தின் பிற பாகங்களுக்கும் பல பயன்கள் உண்டு.

மேற்கொண்டு விவரங்களுக்கு “Graviola fruit” என கூகிள் செய்யவும்

Read Full Post »


Nigella_Sativa_Seed

இவ்விதை பண்டைய எகிப்து நாட்டில் பயிரடப்பட்டும் சுமார் 3.300 ஆண்டுகளுக்கு முன் மரணமுற்ற துத்தான்காமுன் (Tutankhamun) எனும் ஃபேரோவின் (அரசனின்) கல்லறைக்குள் இவ்விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் காணப்பட்டுமுள்ளது.

உண்பதற்கு சிறிது சீரகத்தைப் போன்றும் பெரும்பாலும் ஓம விதைகளின் சுவையையும் இவ்விதை கொண்டுள்ளது.

அரபு மொழியில் இதற்கு “அருள் நிறைந்த விதை” எனும் பெயரும் உண்டு. முகம்மது நபியவர்களால் மரணத்தைத் தவிர மற்றெல்லாவற்றிற்குமான நிவாரணம் எனப் புகழப்பட்ட இந்த எளிய விதை பெரும் ஆற்றலை அதனில் உள்ளடக்கியுள்ளது.

Nigella Sativa எனும் பெயரைக் கொண்ட இவ்விதைகள் காலங்காலமாக அவற்றின் குணப்படுத்தும் ஆற்றலுக்குப் பெயர்போனவையாக இருந்துள்ளன.

இவ்விதைகளின் குணப்படுத்தும் ஆற்றல் உயிர்மருத்துவ (Biomedic) ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு அது விவரம் குறித்த 450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. இவ்விதையின் சக்தி குறித்த மேலோட்டமான விவரங்களைப் பார்ப்போம்:

MRSA (methicillin-resistant Staphylococcus aureus) எனப்படும் ஒருவிதமான, பல கிருமிநாசினிகளுக்கு உட்படாத, கிருமியை அழிக்கும் சக்தியை கருஞ்சீரகம் உள்ளடக்கியுள்ளது.

மனிதர்கள் உட்கொள்ளும் பலவிதமான இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறிவிடுகின்றன. கருஞ்சீரகம் இவ்விதமான விஷங்களிலிருந்து உடலைக் குணப்படுத்துகின்றது.

சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம்(pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.

வலி நிவாரணி, கிருமிநாசினி; அழற்சி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுறையீரல் அடைப்பைப் போக்கவல்லது, கல்லீரலைப் பாதுகாக்கின்றது, நீரிழிவை எதிர்க்கின்றது, சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது, புற்றுநோய்க்கான காரணிகளைத் தடுக்கும் சக்தியுடையது.

இரண்டாந் தர நீரிழிவிற்கு சுமார் இரண்டு கிராம் கருஞ்சீரகம் உட்கொள்வது காலைவேளை குலுக்கோஸ் அளவை குறைக்கின்றது.

பெரும்பாலானோர் வயிற்றில் காணப்படும் (Helicobacter Pylori) எனப்படும் கிருமிகளை இது அழிக்கக்கூடியது.

காக்காய் வலிப்புக்கு கருஞ்சீரகத்தை நீராக்கி குடிப்பது அவ்வித வலிப்பைப் பெரிதும் குறைக்கின்றது.

ஆஸ்துமாவின் வேகத்தைக் குறைக்கவல்லது. இதற்கு இவ்விதைகளை வேகவைத்து அந்த நீரைப் பருகலாம்.

பெருங்குடல் புற்று நோயின் பெருக்கத்தை குறைக்கின்றது.

போதைப் பொருட்களுக்கு ஆளானவர்களை குணப்படுத்துவதற்கு இவ்விதை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலவிதமான நோய்களுக்கு இவ்விதை பயன்படுகின்றது.

இயற்கை தன்னுள் இத்தகைய பல பொருள்களை உள்ளடக்கியுள்ளது. மனிதர்கள் காலங்காலமாக அவற்றைப் பயன்படு்த்தியும் வந்துள்ளனர். ஆனால், அல்லோபதி மருத்துவமுறையின் பிரவேசம் அத்தகைய இயற்கை வைத்தியமுறைகளை பின்தள்ளியுள்ளது. இப்போது சிறிது சிறிதாக மனிதர்கள் இயற்கைமுறையிலான வைத்தியத்தின் சிறப்பை உணர ஆரம்பித்து பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

கருஞ்சீரகத்தின் ஆற்றல் குறித்த மேலும் அதிகமான தகவல்களுக்கு தயவு செய்து (nigella sativa) என கூகல் (google) தேடல் செய்து சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்.

Read Full Post »


கட்டுரையாளர் டாக்டர் சிந்த்தியா ஜெயசூரியா

மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும். ஆனாலும், இது மருத்துவ ஆய்வுகள் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தபோதும் இக்கிழங்கில் மிகைப்பட கிடைக்கும் ஒரு வைட்டமினான பி17 புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றது என கூறப்படுகிறது. நான் மூத்திரப்பை புற்று நோயால் அவதிபட்டு அதிலிருந்து நிவாரணம் பெற பி17 வைட்டமினின் பயனைப் பற்றி ஆய்வு செய்தது மட்டுமின்றி மரவள்ளியை முறையாக பயன்படு்த்தி நான் நல்ல நிவாரணம் கண்டுள்ளேன். ஆனால், நான் முதலில் பல நாடுகளில் புற்றுநோய்க்கு ‘கீமோதெராப்பியை’ விரும்பாத பலர் ‘ஏப்ரிகோட்’ எனப்படும் ஒருவகை பழக்கொட்டையை சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். இந்த ஏப்ரிகோட்டைச் சாப்பிடும் மக்களை புற்றுநோய் பீடிப்பதில்லை என்பதும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள ஒன்றாகும். இதைத் தொடர்ந்து என் ஆய்வின் மூலம் ஏப்ரிகோட்டில் உள்ள அதே மருத்துவ சத்து மரவள்ளியிலும் உள்ளதென்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டு மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என் கதை பின்வருமாறு:

நான் புற்றநோயால் அவதிப்பட்டதால், நான் உண்ணும் உணவு வகைகளில் பி17 வைட்டமின் உள்ள  உணவுவகைகள் குறித்து தெரிந்துகொள்ள முற்பட்டேன். இன்டர்னெட்டில் உலவி பி17 வைட்டமின் மரவள்ளியில் நிறைய இருப்பதைத் தெரிந்துகொண்டேன். பிறகு, ஒரு நாளைக்கு குறைந்தது 10 கிராம் என மூன்று வேளை மரவள்ளியைச் சாப்பிட்டுவந்தேன்.

மூத்திரப்பையில் எனக்குப் புற்றநோய் கண்டிருந்தது. ஒரு மாதகாலம் கிழங்கை உண்டு வந்தபிறகு என் மூத்திரப்பையை சோதனை செய்வதற்கு மருத்துவ நிலையம் சென்றேன். என்னை சோதித்தவர் முன்பு எனக்கு வைத்தியம் செய்த அதே சர்ஜன் ஆவார். என் மூத்திரப்பை முற்றிலும் சுத்தமாகவும் மாமூல் நிலைக்குத் திரும்பியுள்ளதையும் கண்டு அவர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். “பையோப்ஸி” செய்வதற்கு இடமில்லை” என அவர் கூறினார்.

மரவள்ளியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நான் சிறிது நலமடைந்தும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் பார்ப்பதற்கு நலமாக இருப்பதையும் கண்டார்கள்.

மூத்திரப்பையின் சோதனை முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என் நாட்டிலுள்ள புற்றுநோயாளிகளின் பயனுக்காக என் கதையைப் பகிரங்கமாக பிரசுரித்தேன்.

இதற்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான் மூத்திரப் பை சோதனைகளுக்கு அதே மருத்துவரிடம் சென்று வருகிறேன் மற்றும் ஒவ்வொரு முறையும் அது சுத்தமாகவே இருக்கின்றது. நான் இதுவரை மரவள்ளியைத் தவிர மருந்து ஏதும் உட்கொண்டதில்லை.

இந்த பி17 வைட்டமின் எப்படி செயல்படுகிறது என்பதை சற்று எளிமையாக விளக்கிட முற்படுகிறேன். பி17 வைட்டமினின் மருத்துவப் பெயர் ‘அமிக்டலீன்/Amygdaline’ ஆகும். புற்று நோய் உயிரனுக்கள் முதிர்ச்சியடையாத அனுக்களாகும் மற்றும் சாதாரன உயிரனுக்களில் உள்ள ‘என்ஸைம்களுக்கு’ மாறாக புற்றணுக்களில் உள்ள என்ஸைம்கள் வேறுபட்ட ‘என்ஸைம்களாகும்’.

பி17 வைட்டமின் சாதாரன என்ஸைம்களுடன் இணையும்போது அது 3 விதமான சர்க்கரைகளாக பிரிகின்றது, ஆனால் அது புற்றணுக்களுடன் இணையும் போது அது 1 சர்க்கரை, 1 பென்ஸால்டிஹைட் மற்றுமற் 1 ஹைட்ரோஸையனிக் அமிலமாக பிரிவுறுகிறது. என்ன நடைபெறுகின்றதென்றால் ஹைட்ரோஸையனிக் அமிலமானது உள்ளுக்குள்ளாகவே புற்றணுக்களைக் கொன்றுவிடுகிறது.

மற்றவர்களின் அனுபவங்கள்

என்னுடைய முதல் கட்டுரை பிரசுரமானதிலிருந்து புற்றுநோயால் அவதியுறும் பலர் மரவள்ளி குறித்த தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்:

திரு … புரோஸ்டேட் புற்றுநோயால் அவதியுறுபவர். அவர் மனைவி அரசாங்க பொது மருத்துவமனைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றவராவார். திருமதி … என் கட்டரையைப் படித்துவிட்டு மரவள்ளி வைத்தியத்தை செய்து பார்க்க முடிவெடுத்தார். அதற்கான காரணம், பெரியவரின் மருத்துவத்திற்கான மருந்துகளின் செலவு அவர்களின் பொருளாதார தகுதியை பெரிதும் மீறியதாக இருந்ததே ஆகும்.

ஆரம்பத்தில் அப்பெரியவர் மருத்துவநிலைய மருந்துகளை உட்கொண்ட போதிலும் அவை அவரை மேலும் நோயுறச் செய்தமையால் அவற்றை சிறிது நாள்களுக்குப் பிறகு தவிர்த்துவிட்டார். இதன் பிறகு பெரியவரின் மனைவியும் மகளும் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்தத் தீர்மானித்தனர். இதன் பிறகு பெரியவர் மரவள்ளிக்கிழங்கை பயன்படு்த்த ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர் நலமடைவதற்கான அடையாளங்கள் தோன்றின. ஒரு மாதம் சென்ற பிறகு மருத்துவநிலையம் சென்று சோதனை செய்து சோதனையின் முடிவை தமது ‘ஒன்கோலோஜிஸ்டிடம்’ கொண்டு சென்றனர்.

புற்றுநோய் கண்டறியப்பட்டபோது அவரின் PSA சோதனை முடிவுகள் 280-290 ஆக இருந்தது, ஆனால் மரவள்ளி உட்கொண்ட ஒரு மாத காலத்தில் இதே சோதனை முடிவுகள் 5.89 ஆக இறங்கியிருந்தது. இப்பெரியவர் அச்சோதனை முடிவுகளை என்னிடம் கொண்டுவந்து காண்பித்தார். இன்றும் அவர் புற்றுநோய்க்கான அடையாளங்கள் ஏதுமின்றி இருக்கின்றார் மற்றும் என்னிடம் அடிக்கடி தொடர்புகொண்டு தமது சுகத்தையும் தெரியப்படுத்திவருகிறார்.

இதே போன்று வேறு சிலரும் மரவள்ளிக்கிழங்கு வைத்தியத்தினால் தங்கள் புற்றுநோயிலிருந்து நிவாரணம் கண்டு வருகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மருத்துவ செலவுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் என்னோடு தொடர்பு கொண்டு தங்கள் உடல்நலன் குறித்து பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இதுவரை எந்த மருந்து உற்பத்தியாளர்களும் மரவள்ளியிலுள்ள பி17 வைட்டமின் குறித்து எந்த ஆய்வும் செய்திட முன்வரவில்லை. செய்துபார்த்தால்தான் என்ன? பொருளாதாரம் குறைவாக உள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்குமே. இருந்தபோதும், இவ்வைத்தியத்திற்காக மரவள்ளிக்கிழங்கை தேர்வு செய்யும்போது பின்வரும் ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்:

அ. மரவள்ளி அப்போதுதான் அறுவடை செய்யப்பட்டிருக்கவேண்டும்.

ஆ கிழங்கை வேகவைக்கும்போது பாத்திரம் மூடப்படாமல் இருக்க வேண்டும். இது கிழங்கில் உள்ள சில வஸ்துக்கள் ஆவியாக வெளிப்பட உதவும்.

இ. கிழங்கை அதிக நீர் ஊற்றி வேகவைக்கவேண்டும். வெந்தவுடன் அதிகப்பட்ட நீரை வடித்துவிடவேண்டும்.

ஈ. மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு குறைந்தது எட்டு மணிநேரத்திற்கு சுக்கு அல்லது இஞ்சி சேர்ந்த எந்த பொருளையும் உட்கொள்ளப்படக்கூடாது.

Read Full Post »


கறிவேப்பிலையின் பயன்கள்

தென்னிந்திய சமையல்முறைகளில் கறிவேப்பிலையென்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆனால், பொதுவாகவே சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்துவிட்டே உணவை உண்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். ஏன்?

கறிவேப்பிலைக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அது ஜீரணத்திற்கான என்ஸைம்களைத் (enzymes) தூண்டிச் சுரக்கவைக்கின்றது மற்றும் இதனால் உணவு விரைவாக ஜீரணமாகின்றது. உணவு உண்டபின் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயமும் கறிவேப்பிலை இலைகள் சிலவும் கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லதாகும்.

– வாந்தி மற்றும் அஜீரணத்திற்கு நல்ல நிவாரணியாகும். கறிவேப்பிலைச் சாற்றில், சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சர்க்கரையும் கலந்து குடிக்கவும்.

– உடல் பருமன் குறைய தினசரி கறிவேப்பிலை இலைகள் சிலவற்றை மென்று சாப்பிடவும்.

– கறிவேப்பிலை கண்பார்வையைத் தெளிவாக்கும், ஆகவே உணவு உண்ணும்போது கறிவேப்பிலையைத் தூக்கியெறிந்துவிட வேண்டாம். கறிவேப்பிலை கண்களில் காட்டராக்டை (cataract) தடுக்கின்றது.

– முடியின் வளர்ச்சிக்கும் நிறத்திற்கும் கறிவேப்பிலை நல்லதாகும். அதை அப்படிய சாப்பிடுவது சிரமமாக இருந்தால் இப்போது கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைத் தூளை வாங்கி தோசை அல்லது சாதத்துடன் உண்ணலாம். கறிவேப்பிலையை நீங்கள் வீட்டிலேயே தூள் செய்து உண்ணலாம், அது முடியில் நறை விழுவதைத் தடுக்கும்.

– அல்லது நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகளைக் கலந்து அடுப்பில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை தலையில் தேய்ப்பது முடியை நலமாக வைத்திருக்க உதவும்.

கறிவேப்பிலை குறித்த உடல்நல குறிப்புகளுள் இவை சில மட்டுமே. கறிவேப்பிலையை இப்போதிருந்தே உணவில் கலந்து சாப்பிடுங்கள்.

– கறிவேப்பிலை மரம் வீட்டருகே இல்லாதவர்கள் கடையில் வாங்கும் கறிவேப்பிலை இலைகளை உருவி ஈரமில்லாமல் ஒரு பிலாஸ்டிப் டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியின் உறையறைக்குள் வைத்து அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இலைகள் நீண்ட நாள்களுக்கு வாசம் போகாமல் இருக்கும்.

Read Full Post »

Older Posts »