இன்று உலகை உலக்கி வரும் பிரச்சினைகளுள் பொருளாதாரப் பிரச்சினை முன்நிற்கின்றது. வேலை இழந்தவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கையும் தாண்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இதை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வித சீர்கேடுகள் எதனால் ஏற்படுகின்றன? ஒரு முறை ஏற்பட்டதென்றால் அது எதேச்சையாக நேர்ந்தது என கூறலாம். ஆனால், இது அடிக்கடி ஏற்படுகிறது. இதன் விளைவாக சமூகத்தில் பல சீர்கேடுகள் விளைகின்றன. வேலை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்? திருட்டுகள் நடக்க ஆரம்பித்துவிடும். தற்கொலைகள் கூட நிகழலாம்.

பொருளாதார வீழ்ச்சியின் ஒரு விளைவு!

உணவுப் பொருளுக்காக காத்திருப்போர்
இதற்கு முன்பு ஏற்பட்டிறாத இந்த பொருளாதார நெருக்கடியும், அது மறைமுகமாக உருவாக்கியுள்ள சமூகச் சீர்கேடும், மனித இயல்பு குறித்த பெரும் தவறான கருத்துணர்வு ஒன்றை (conception) ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடப்பிலுள்ள அமைப்புமுறைகள் மனிதர்களுள் ஊக்கவிக்கும் செயல்பாடுகளின் தர அளவுகள் பற்றாதவை மட்டுமல்ல, பார்க்கப்போனால் உலக நிலவரங்களுக்கு முன் அவை பெரும்பாலும் பொருத்தமற்றவையாகவும் காணப்படுகின்றன. சமுதாயத்தை மேம்படுத்துவதானது வெறும் லெளகீக நிலைகளின் மேம்பாட்டிற்கும் அப்பால் உயர்வான குறிக்கோள் ஒன்றை கண்டு கொண்டால் ஒழிய, அது இந்த இலக்குகளைக் கூட அடையத் தவறிவிடும் என நமக்கு எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இக் குறிக்கோள் தொடர்முறையாக மாறிவரும் பொருளாதார காட்சிநிலை மற்றும் மானிட சமுதாயத்தின்மீது “மேம்பட்ட” எனவும் “மேம்படாத” எனவும் செயற்கையாக சுமத்தப்பட்டிருக்கும் வகுப்புமுறைகளினும் உயர்வான வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்கள் மற்றும் ஊக்குவிப்புமுறைகளிலும் காணப்படவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு: http://bci.org/prsamy