

22 மார்ச் 2025
BIC பிரஸ்ஸல்ஸ் — பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் (BIC) ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கொள்கைகள் மற்றும் இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கான சமூக அணுகுமுறைகளைத் தெரிவிக்கும் பல கொள்கைகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் இனவெறி எதிர்ப்பு மூலோபாயத்தை நோக்கி” என்னும் தலைப்பிலான அறிக்கை, அதன் முதல் இனவெறி எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டம் 2020-2025 தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் இனவெறி எதிர்ப்பு முயற்சிகளின் அடுத்த கட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. அந்தத் திட்டம் 2020-இல் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் உலகளாவிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இனவெறி சமூக முன்னேற்றத்திற்கான மிக அழுத்தமான தடைகளில் ஒன்றாக இருப்பதால், BIC அறிக்கை மிகவும் அடிப்படையான மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. “மனிதகுலம் பிரிக்க முடியாதது என்னும் கொள்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளாமல், எதேச்சதிகாரமான மற்றும் கற்பனையான பிளவுகள் — ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ — தொடர்ந்து சமூகத்தின் துண்டுபடுதலை மேலும் ஆழப்படுத்திடும்,” என அறிக்கை கூறுகிறது.
முற்றிலும் தண்டனைக்குரிய நடவடிக்கைகள், அவசியமானாலும், அது இனவெறிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யாது என அது மேலும் கூறுகிறது.
பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தைச் சேர்ந்த ரேச்சல் பயானி, செய்திச் சேவையுடனான உரையாடலில், நீடித்த மாற்றத்திற்கு சட்டக் கட்டமைப்பை விட மேலும் அதிகமாகத் தேவைப்படும் என விளக்கினார். “மனிதகுலத்தின் பகிரப்பட்ட அடையாளத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கும் தன்மைமாறும் கொள்கைகள் தேவை — இதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவை.”
கவனக்குறைவாக, தற்போதுள்ள பிளவுகளை ஆழப்படுத்தக்கூடிய மிகைப்படுத்தப்பட்ட மொழிவுகளுக்கு எதிராக அறிக்கை எச்சரிக்கிறது, மற்றும் உலகளாவிய பங்கேற்பு, சமூக ஒத்துழைப்பு மற்றும் மனிதகுலம் அனைவருக்கும் அர்ப்பணிப்பை வளர்க்கும் கல்வி அணுகுமுறைகள் உட்பட, பயனுள்ள இனவெறி எதிர்ப்பு மூலோபாயத்தின் பல முக்கிய பரிமாணங்களை மாற்றுக் கொள்கைகளுக்கான தேவை, கோடிட்டுக் காட்டுகிறது.
உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் அனுபவங்களிலிருந்து, சமூக ஒற்றுமையைப் பேணி வளர்ப்பதற்கான முயற்சிகளில் அண்டைப்புறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என திருமதி பயானி குறிப்பிட்டார்.
“ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்கும் சேவை செய்யும் ஒரு பொதுவான இலக்கில் பணியாற்றுவதற்காக மக்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களில் ஒன்றிணைந்தால், அது இணைவதற்கும், ஒருவர் மற்றவரின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், நம்புகையின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இயற்கையான வாய்ப்புகளை உருவாக்குகிறது,” என அவர் கூறினார். “இந்த வகையான நோக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் நமது பகிரப்பட்ட மானிடம் பற்றிய ஆழமான புரிதல் வேரூண்றிட முடியும்.”
மாற்றத்திற்கான விணையூக்கிகளாக இளைஞர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்த தன்மைமாறும் செயல்முறை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எவ்வாறு ஈடுபடுத்த வேண்டும் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. “மாற்றத்திற்கான முகவர்களாக இருப்பதற்கும், இந்த முயற்சிகளை வழிநடத்துவதற்கும் அவர்களின் உள்ளார்ந்த திறன் முழுமையாகப் பேணி வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என அது கூறுகிறது. “அடித்தட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களிடையே புதிய உறவுகளைப் பேணி வளர்ப்பதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் முன்னணியில் இருக்க வேண்டும். போதுமான அளவு ஆதரவளிக்கப்படும் போது, இளைஞர்கள் மக்களை ஒன்றிணைத்து, ஒழுங்கமைத்து, முழு சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடும் குறிப்பிடத்தக்க திறனாற்றலைக் கொண்டுள்ளனர்.”
இந்தத் திறனைப் பேணி வளர்த்தல் என்பது குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்படும் இடங்களில் அவை அர்த்தமுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதாகும் என திருமதி பயானி மேலும் வலியுறுத்தினார். “ஐரோப்பாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பலதரப்பட்ட இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மிகவும் முக்கியம் — ஒவ்வோர் இளைஞனும், தனது பின்புலத்தைப் பொருட்படுத்தாமல், தாங்கள் சொந்தமுள்ளோர் என உணர்கின்றனர், அத்துடன் நியாயமான மற்றும் ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தீவிரமாகப் பங்களித்திட முடியும்,” என அவர் கூறினார்.
இங்கே பார்க்கக்கூடிய இந்த அறிக்கை, சமூக நல்லிணக்கம் பற்றிய உரையாடலுக்குப் பங்களிப்பதற்கான BIC-யின் தொடர்ச்சியான முயற்சிகளின் மீது நிர்மாணிக்கின்றது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1786/













